Published:Updated:

மூக்கு நீண்ட குருவி - புத்தக விமர்சனம்

மூக்கு நீண்ட குருவி - புத்தக விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மூக்கு நீண்ட குருவி - புத்தக விமர்சனம்

யுவா

த்தனை சூப்பர் ஹீரோஸ் வந்தாலும், சுட்டிகளின் சூப்பர் ஸ்டார்ஸ் எப்பவுமே அனிமல்ஸ்தான் இல்லையா?

‘ஒரு காட்டுல ஒரு நரி’ என ஆரம்பிச்சாலே, கவனம் முழுக்க கதை சொல்றவங்க பக்கம் போயிடும். விலங்குகளின் கதைகள், திரைப்படங்கள் எப்பவுமே மெகா ஹிட். இந்தப் புத்தகத்தின் ஆசிரியரும் அதையேதான், ‘குழந்தைகள் அனைவரும் விலங்குகளின் உலகத்தைத் தங்கள் உலகமாக நினைக்கிறார்கள்’ எனச் சொல்றார். இந்தத் தொகுப்பின் 11 கதைகளிலும் அணில், குரங்கு, தேவாங்கு, எறும்பு, வண்ணத்துப்பூச்சி, குருவி எனக் குட்டி குட்டி க்யூட் உயிரினங்களே ஹீரோக்களாக வர்றாங்க. கதையின் நடையும் கருத்துகளும் அறிவுரைகளாக இல்லாமல் அழகா இருக்கு.

மூக்கு நீண்ட குருவி - புத்தக விமர்சனம்

பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் சறுக்கு மரத்தில் விளையாட ஆசைப்பட்ட ஓர் அணில்குஞ்சு, கடைசியில் விளையாடும் இடம் எதிர்பாராத அழகு திருப்பம். ஓர் உயிரின் உணவு உரிமையைப் பறிக்காத (மூக்கு நீண்ட குருவி) கதையின் முடிவு அருமை. முள் தைத்ததில் அட்டகாசம் செய்யும் சிங்கம், சின்னப் பொண்ணுக்கு யோசனை சொல்லும் புத்திசாலி தேவாங்கு என எல்லாக் கதைகளுமே படிக்கப் படிக்க காட்டுக்குள் இழுத்துட்டுப் போகுது. ஒவ்வொரு கதைக்கும் பல ஓவியங்களை வரைந்து இன்னும் அழகுச் சேர்த்திருக்கிறார், ஓவியர் டி.என்.இராஜன். அவருக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மூக்கு நீண்ட குருவி - புத்தக விமர்சனம்

மூக்கு நீண்ட குருவி

ஆசிரியர்: கன்னிக்கோவில் இராஜா

விலை: ரூ. 50

வானம் பதிப்பகம்
M 22, 6-வது அவின்யூ
அழகாபுரி நகர்
ராமாபுரம்
சென்னை - 600089