Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்
சொல்வனம்

அதிகாரத்தின் நிழல்

வே
றென்ன வேண்டும் பிரபு
உங்கள் அக்குள் வாசனையை
எங்கள் உடலெங்கும் படரவிட்டிருக்கிறோம்.

உங்கள் காலணிகளை எங்கள்
மகுடமாக்கிக்கொண்டோம்.

உதிர்ந்த உங்கள் ரோமங்களின்
வரலாறைப் புகழுகின்றோம்.

உங்கள் உதடுகள்
வெளியேற்றியதெல்லாம்
வேதங்கள் ஆக்கினோம்.

கிழிந்த உங்கள் உள்ளாடைகளை
சங்கத்தின் கொடியாக்கினோம்.

உங்கள் நிழற்படத்தைத்தான்
தொழுதுகொள்கிறோம்.

நீங்கள் பார்க்காத
நேரங்களில் மட்டுமே
எங்கள் திசையில் அதிகாரம்
குடியேறிவிடுகிறது.

நீங்கள் ஊருலகத்தைச் சுற்றுவதையெல்லாம்
திரையில் காட்டி வளர்ச்சி என்று
புளகாங்கிதமடைகின்றோம்

நீங்களே ஆக்கலும் அழித்தலும்.

பாருங்கள் பிரபு
நாங்கள்
சுதந்திரமானவர்கள்தான்
உங்கள் அடிமைகள் என்பதைத் தவிர
வேறென்ன வேண்டும் பிரபு.

- ஆலங்குடி வெள்ளைச்சாமி

சொல்வனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்பாவும் மழையும்

தெ
ற்காய்ப் போகும் முன்
வடக்கேயுள்ள வயற்காட்டில்
ஒரு வெள்ளாமையைப்
பார்த்திடவேண்டுமென்கிறார்
எண்பது வயதில் அப்பா.
உழவோட்ட ஆளில்லாது
கறம்பாய் போட்டிருந்த நிலத்தை
வந்த வகையில் லாபமென
வங்கிக்கணக்கில் வரவேற்றிக்கொண்டார்
வாய்க்காங்கரையோர நிலத்து மாமா.
வாங்கிப்போட்டு
புதுநகராய் பரிமளித்த பின்னரும்
ஆங்காங்கே எட்டிப்பார்க்குது கருவேலம்.
புறவழிச்சாலையென்ற பெயரில்
புதுநகரெல்லாம் அடிமாட்டு விலைக்கு
அரசாங்கம் ஆக்கிரமிக்க
பதறிக்கொண்டே பசியாறுகின்றதோர்
கூட்டம்.
அடை மழைக்காலத்தில் பிறந்து
அதே அடை மழைக்காலத்தில்
கல்யாணமும் நடந்ததாய்ச்
சொல்லி மகிழும் அப்பா
புழுங்கலரிசியை நானள்ளித் தின்னும்போது
ஓரமாய் புன்னகைப்பார்.
எதேச்சையாய்
‘குடை ரிப்பேர் பண்றதே...’ எனத்
தெருவில் யாரோ ஒருவர்
குரலெழுப்பிச் செல்ல
குதூகலித்து எழுகின்றார்
பெருமழையை ஏந்தத் தயாராகும்
நிலமென அப்பா.
துளிர்க்கும் விதையென அப்பா
எழுவதைப் பார்த்து
வான்குடையின் பொத்தல்கள்
இன்னும் விரியத் தொடங்குகின்றன.

- தமிழ்த்தென்றல்

ஓவியங்கள்: ரமணன்