காக்கைமை

எப்போதாவது பித்ருக்களுக்கு விருந்து அழைப்பு வரும்
மீதிப்பொழுதுகளில் யாசகம் கேட்டு வாசலிலிருந்து
வெறும் வயிற்றோடு திரும்புவார்கள்

கூடில்லாமல் தெருக்களில் அலைவார்கள்.
நாதியற்றவர்களாய் விரைவு சாலையில் செத்துக்கிடப்பார்கள்

தலையில் பித்ருக்கள் அர்ச்சதை தூவுவதை
எச்சம் என்று வாய் கூசாமல் தூற்றுகிறார்கள்

பசிக்குக் கண்டதைக் கொத்தி உயிர்த்திருக்கும்
திருட்டுப்பட்டம் சுமந்து கல்லடிபடும்
கட்டிவைத்து கொலையும் செய்யப்படுவார்கள்

இதை எழுதிக்கொண்டிருந்தபோது
காகமொன்று முள்ளெடுத்துப் பறந்துபோனது
இதை நீங்கள் வாசிக்கும்போதும்
இப்படி நிகழலாம்
அல்லது அப்படியும் நிகழலாம்

- பூர்ணா ஏசுதாஸ்

வளையல் துண்டுகள்

அம்மாவின்
உடைந்த வளையல் துண்டுகளை
ஒன்றுவிடாமல் சேகரித்து
விளையாடும் பொருளாய்ப்
பத்திரப்படுத்துகிறது
குடிசைவாசியின் குழந்தை.
கைகளுக்குள் எடுத்து வைத்து
குலுக்கும் கணங்களில்
அசரீரியாய்
அம்மாவின் குரலைக் கேட்கிறது.
தரையில் பரப்பி
தன் பெயரெழுதிப் பார்க்கிறது.
ஓவியத்தாளில் பென்சில் தீற்றிய
சித்திரக் கோடுகளின்
கறுப்பு நிறத்தின் மேல் பொருத்தி
வானவில் துண்டுகளென
வண்ணமாக்கிப் பார்க்கிறது.
தன்னையொத்த குழந்தைகளிடம்
அவரவர் அம்மாவின்
வளையல் துண்டுகளைச் சேகரிக்கும்
ஆசையைத் தூண்டிவிடுகிறது.
ஓய்ந்து உறங்கும்போதும்
விடாமல் விரட்டிப் போய்
அக்குழந்தையின் கனவையடைந்து
அதனோடு
விளையாட்டைத் தொடர்கின்றன
அவ்வளையல் துண்டுகள்.

- தமிழ்த்தென்றல்

ஒலிபெயர்ப்பாளர்

ஒரு முதுவேனிற்காலத்தின்
மயங்கிய மாலைப்பொழுது
கொஞ்சும் பேச்சும்
மலர்ந்த புன்னகையும் கொண்டு
அவ்விடத்தை நிறைக்கிறாள்
ஒரு குட்டி தேவதை.
கேட்கும் ஓசைகளைத்
தன் குரலில்
ஒலிபெயர்க்கத் தொடங்குகிறாள்
கூவும் குயில், கத்தும் கன்றுக்குட்டி
ஒலிக்கும் மணியோசை,
குரைக்கும் நாய் எனத் தொடங்கி
பூ பூவேய் எனக் கூவத்தொடங்குகிறாள்
பொங்கும் உற்சாகத்தை
எங்கும் அள்ளித்தெளித்தபடி
பறக்க எத்தனிக்கிறாள்
காக்கையின் பின்
கா.. கா...வெனக் கரைந்தபடி...

- நீர்முகில்

வேரறுந்த காட்டுச் செடி

வாசலில் நின்றுகொண்டோ
அமர்ந்துகொண்டோ இருக்கும்
வாட்ச்மேனுக்கு
முன்பொரு காலத்தில்
கொஞ்சம் நிலமிருந்தது

மீசையற்ற அவர் முகத்தில்
காட்டுச்செடி போல
அடர்ந்த மீசை பழங்கதை

வெடித்த நிலத்தில் வடித்த நீரை
போத்தலில் அடைத்துக்கொண்டு
தூக்கம் வருகையிலெல்லாம்
குடித்துக்கொள்கிறார்

பேச்சற்ற நிலைகுத்திய
பார்வையில் இப்போதெல்லாம்
யாரிடமும் பேசுவதில்லை

கூனிக்குறுகி கார்க்காரர்களை
வணக்கமிடும்போது
விழும் பத்தோ இருபதோ
ஒரு நல்ல வாட்ச்மேனை
உருவாக்கியிருக்கிறது

இதுபற்றி ஒரு நாளும் யாரிடமும்
சொல்லிவிடாத அவர்
ஊருக்குச் செல்லும் நாளில்
முன்புபோல
தலைவியை அதட்டுவதுமட்டும் இல்லை..!

- கவிஜி

ஓவியங்கள்: ரமணன்

காக்கைமை

எப்போதாவது பித்ருக்களுக்கு விருந்து அழைப்பு வரும்
மீதிப்பொழுதுகளில் யாசகம் கேட்டு வாசலிலிருந்து
வெறும் வயிற்றோடு திரும்புவார்கள்

கூடில்லாமல் தெருக்களில் அலைவார்கள்.
நாதியற்றவர்களாய் விரைவு சாலையில் செத்துக்கிடப்பார்கள்

தலையில் பித்ருக்கள் அர்ச்சதை தூவுவதை
எச்சம் என்று வாய் கூசாமல் தூற்றுகிறார்கள்

பசிக்குக் கண்டதைக் கொத்தி உயிர்த்திருக்கும்
திருட்டுப்பட்டம் சுமந்து கல்லடிபடும்
கட்டிவைத்து கொலையும் செய்யப்படுவார்கள்

இதை எழுதிக்கொண்டிருந்தபோது
காகமொன்று முள்ளெடுத்துப் பறந்துபோனது
இதை நீங்கள் வாசிக்கும்போதும்
இப்படி நிகழலாம்
அல்லது அப்படியும் நிகழலாம்

- பூர்ணா ஏசுதாஸ்

வளையல் துண்டுகள்

அம்மாவின்
உடைந்த வளையல் துண்டுகளை
ஒன்றுவிடாமல் சேகரித்து
விளையாடும் பொருளாய்ப்
பத்திரப்படுத்துகிறது
குடிசைவாசியின் குழந்தை.
கைகளுக்குள் எடுத்து வைத்து
குலுக்கும் கணங்களில்
அசரீரியாய்
அம்மாவின் குரலைக் கேட்கிறது.
தரையில் பரப்பி
தன் பெயரெழுதிப் பார்க்கிறது.
ஓவியத்தாளில் பென்சில் தீற்றிய
சித்திரக் கோடுகளின்
கறுப்பு நிறத்தின் மேல் பொருத்தி
வானவில் துண்டுகளென
வண்ணமாக்கிப் பார்க்கிறது.
தன்னையொத்த குழந்தைகளிடம்
அவரவர் அம்மாவின்
வளையல் துண்டுகளைச் சேகரிக்கும்
ஆசையைத் தூண்டிவிடுகிறது.
ஓய்ந்து உறங்கும்போதும்
விடாமல் விரட்டிப் போய்
அக்குழந்தையின் கனவையடைந்து
அதனோடு
விளையாட்டைத் தொடர்கின்றன
அவ்வளையல் துண்டுகள்.

- தமிழ்த்தென்றல்

ஒலிபெயர்ப்பாளர்

ஒரு முதுவேனிற்காலத்தின்
மயங்கிய மாலைப்பொழுது
கொஞ்சும் பேச்சும்
மலர்ந்த புன்னகையும் கொண்டு
அவ்விடத்தை நிறைக்கிறாள்
ஒரு குட்டி தேவதை.
கேட்கும் ஓசைகளைத்
தன் குரலில்
ஒலிபெயர்க்கத் தொடங்குகிறாள்
கூவும் குயில், கத்தும் கன்றுக்குட்டி
ஒலிக்கும் மணியோசை,
குரைக்கும் நாய் எனத் தொடங்கி
பூ பூவேய் எனக் கூவத்தொடங்குகிறாள்
பொங்கும் உற்சாகத்தை
எங்கும் அள்ளித்தெளித்தபடி
பறக்க எத்தனிக்கிறாள்
காக்கையின் பின்
கா.. கா...வெனக் கரைந்தபடி...

- நீர்முகில்

வேரறுந்த காட்டுச் செடி

வாசலில் நின்றுகொண்டோ
அமர்ந்துகொண்டோ இருக்கும்
வாட்ச்மேனுக்கு
முன்பொரு காலத்தில்
கொஞ்சம் நிலமிருந்தது

மீசையற்ற அவர் முகத்தில்
காட்டுச்செடி போல
அடர்ந்த மீசை பழங்கதை

வெடித்த நிலத்தில் வடித்த நீரை
போத்தலில் அடைத்துக்கொண்டு
தூக்கம் வருகையிலெல்லாம்
குடித்துக்கொள்கிறார்

பேச்சற்ற நிலைகுத்திய
பார்வையில் இப்போதெல்லாம்
யாரிடமும் பேசுவதில்லை

கூனிக்குறுகி கார்க்காரர்களை
வணக்கமிடும்போது
விழும் பத்தோ இருபதோ
ஒரு நல்ல வாட்ச்மேனை
உருவாக்கியிருக்கிறது

இதுபற்றி ஒரு நாளும் யாரிடமும்
சொல்லிவிடாத அவர்
ஊருக்குச் செல்லும் நாளில்
முன்புபோல
தலைவியை அதட்டுவதுமட்டும் இல்லை..!

- கவிஜி

ஓவியங்கள்: ரமணன்