Published:Updated:

ஜெ? - ஸ்லோ பாய்சன்... அடுத்த வாரிசு... ஆஸ்திக்கு அதிபதி...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜெ? - ஸ்லோ பாய்சன்... அடுத்த வாரிசு... ஆஸ்திக்கு அதிபதி...
ஜெ? - ஸ்லோ பாய்சன்... அடுத்த வாரிசு... ஆஸ்திக்கு அதிபதி...

ஜெ? - ஸ்லோ பாய்சன்... அடுத்த வாரிசு... ஆஸ்திக்கு அதிபதி...

பிரீமியம் ஸ்டோரி

ஜெயலலிதா மறைந்து இன்றுடன் இரு ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் இன்னமும் தனது விசாரணையை முடிக்கவில்லை. கட்சி விவகாரங்களும் முடிவுக்கு வரவில்லை. இரண்டு ஆண்டுகள் முடிந்தும் எல்லாமே கேள்விகளாகவே இருக்கின்றன. இந்த நிலையில், அ.ம.மு.க கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான தினகரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஜெ? - ஸ்லோ பாய்சன்... அடுத்த வாரிசு... ஆஸ்திக்கு அதிபதி...

“ஜெயலலிதாவுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்ததாகப் பரபரப்பு கிளம்பியதே?”

“ஆயிரம் வதந்திகளைக் கிளப்புகிறார்கள்; அதையெல்லாம் ஆணையம் விசாரிக்கிறது. எல்லாமே உண்மைக்குப் புறம்பான தகவல்கள். அவர் எப்படி மாரடைப்பால் இறந்தார் என்பதை ஆணையத்திடம் அப்போலோ டாக்டர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். எங்களின் பொதுச்செயலாளர் சசிகலாமீது ஏதேதோ குற்றச்சாட்டுகளை எல்லாம் முன்வைத்தார்கள். எதுவுமே உண்மையில்லை என்பது ஊர்ஜிதமாகி விட்டது. பொய்களுக்கு நீண்டகாலம் உயிர் இருக்காது.”

“ஜெயலலிதா தனது கடைசிக் காலத்தில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்தவுடன் அரசியலுக்கு முழுக்குப் போடத் தயாராக இருந்தார் என்றும் ஒரு தகவல் வெளியானதே?”

“அதைச் சொன்னவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். ஜெயலலிதாவின் கடைசிக் காலத்தில், நான் அவருடன் இல்லை. 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, எங்களைக் கட்சியைவிட்டு நீக்கிய பின்பு ஐந்து ஆண்டுகளாக நான் அவரைச் சந்திக்கவே இல்லை. கடைசியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பே, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 25-ல் அவரைப் பார்த்தேன். இப்படி அவர் யாரிடம் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை.”

“ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார், ஆஸ்திகளுக்கு அதிபதி யார் என்ற கேள்வியும் அதிகமாகக் கேட்கப்படுகிறதே?”

“சொத்துகளுக்கு யார் வாரிசு என்று தெரியவில்லை; அவர் உயில் எதுவும் எழுதி வைத்ததாகவும் தெரியவில்லை. அவர் தனக்கு அரசியல் வாரிசாகவும் யாரையும் அறிவிக்கவில்லை.”

ஜெ? - ஸ்லோ பாய்சன்... அடுத்த வாரிசு... ஆஸ்திக்கு அதிபதி...

“ ‘ஜெயலலிதாவின் கணக்கில் வராத பணம் முழுவதும், சசிகலாவின் உறவினர்களிடம்தான் இருக்கிறது’ என்றும் ஒரு தரப்பினர் பேசுகிறார்களே?”

“இப்படிக் கேட்பதெல்லாம் பத்திரிகை தர்மமே கிடையாது. நாங்கள் அரசியலுக்கு வந்த நாளிலிருந்தே எங்களைப் பற்றித் தவறான தகவலைத்தான் எழுதுகிறீர்கள். இதுவும் முழுக்க முழுக்கப் பொய்யான குற்றச்சாட்டு. ஜெயலலிதா சம்பந்தப்பட்ட எந்தப் பொருளும், உடைமையும் சசிகலா விடமோ, அவரின் உறவினர்களிடமோ கிடையாது.”

“சசிகலா பரோலில் வரப்போவதாகச் சொல்கிறார்களே... ஏதாவது விசேஷமான காரணங்கள் இருக்கின்றனவா?”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை சிறைக்குச் சென்று அவரைப் பார்ப்போம். இப்போது அவருக்கு உடல் நிலை சரியில்லை. அவர் உடல் நலம் சரியான பின்பே பார்க்க முடியும் என்று சொன்னார்கள். விரைவில் சென்று பார்ப்போம் என்று நினைக்கிறேன்.”

“சசிகலாவைச் சந்தித்துவிட்டு, நீங்கள் வெளியேவந்து சொல்வதெல்லாம் பொய் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?”

“சசிகலாவைப் பார்த்துவிட்டு, நான் எந்த விஷயத்தையும் வெளியே வந்து சொல்வதில்லையே. நான் அவரை என் சித்தியாகத்தான் பார்த்துவிட்டு வருகிறேன். ஏதாவது அரசியல் விஷயம் இருந்தால் மட்டும் சொல்லிவிட்டு வருவேன்.”

- ஆர்.பி
அட்டை ஓவியம்: ஹாசிப்கான்
ஓவியம்: பாரதிராஜா

ஜெ? - ஸ்லோ பாய்சன்... அடுத்த வாரிசு... ஆஸ்திக்கு அதிபதி...

“அ.தி.மு.க-வை வழிநடத்த ஒருவர் வருவார்...”

ஜெ
யலலிதாவுக்கான உடைகளை வடிவமைப்பது முதல் அவருக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்துக் கொடுப்பது என, அனைத்தையும் செய்துகொடுத்தவர், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா. ஜெயலலிதாவின் இறுதிக்காரியங்களையும் முன்னின்று செய்தவர். ஜெயலலிதா மறைந்து இரண்டாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, கிருஷ்ணப்ரியாவிடம் பேசினோம்.

“அரசியலிலிருந்து ஜெயலலிதா ஒய்வுபெற விரும்பியதாகச் சொல்லப்படும் சில கருத்துகள் ஏற்புடையதல்ல. பெண் என்பதாலும், அரசியல் காழ்ப்பு உணர்ச்சியாலும் அவர் அவமானப்படுத்தப்பட்டபோது, சில சமயங்களில் அவ்வாறு அவர் நினைத்திருக்கிறார். ஆனால், அதீத மனவலிமையால் அந்த எண்ணங்களிலிருந்து மீண்டுவந்து மக்கள் பணி செய்தார். எனக்குத் தெரிந்தவரை அம்மாவின் சொத்துக்குச் சட்டப்பூர்வமான வாரிசு என்று யாரையும் அவர், வைத்துவிட்டுச் செல்லவில்லை. அவருடைய சொத்து தமிழ்நாட்டு நலனுக்குப் பயன்படுத்தப்பட்டால், மிகவும் மகிழ்ச்சி. சசிகலாவை ஒரு வழக்கில் நேரடியாக ஆஜராகச் சொல்லியுள்ளனர். அதற்காக பரோலில் வரவுள்ளார். ‘சசிகலாவை தினகரன் மட்டுமே அடிக்கடி சந்திக்கிறார்’ என்கிற செய்தி வருகிறது. உண்மையில் தினகரனால், அவருக்கே உண்மையானவராக இருக்க முடியாதபோது, இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை எப்படி இருக்கும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. ஜெயலலிதாவிடம் இருந்த கணக்கில் வராத  பணம், சசிகலா உறவினர்களாகிய எங்களிடம் இருப்பதாகச் சொல்லப்படுவதே சித்தரிப்புதான். அம்மாவின் அரசியல் வாரிசு யார் என்பதற்குப் போட்டி நடப்பதாகச் சொல்லப்படுவது உண்மையல்ல. எம்.ஜி.ஆர் தன் அரசியல் வாரிசு என யாரையும் சொல்லவில்லை. அம்மாவும் யாரையும் சுட்டிக்காட்டவில்லை. புரட்சித் தலைவரின் வாரிசாக மக்களாலும், கழகத்தாலும் அம்மா உருவாக்கப்பட்டார். அதுபோலவே, இப்போது அ.தி.மு.க-வை வழிநடத்த ஒருவர் சுயம்புவாக உருவாக்கப்படுவார்” என்கிறார் தெளிவான குரலில்.

- அ.சையது அபுதாஹிர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு