ராகவிக்குத் தனக்கு எது பிடிக்காதுன்னே சொல்லத் தெரியாது. சொல்லப்போனா எதைப் பாத்தாலும் பிடிச்சுடும். ரெண்டு விதந்தான். ஒண்ணு கொஞ்சமா பிடிக்கும். இல்லேன்னா ஒரேயடியா பிடிச்சுப்போயிடும். ராகவி சென்னைக்கு வந்து செட்டில் ஆகி வருஷம் முப்பதுக்கு மேல ஆச்சு. அவளோட ரெண்டாவது மகன் இப்ப படிக்கறது எட்டாம் வகுப்பு. ராகவி சென்னைக்கு மொதல்ல வந்தது, அவ எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான்.

சேர்ந்தது லேடி எம்.சி.டி.எம் ஸ்கூல்ல. அதுக்கு முன்னாடி, அப்புறம்னு ராகவி எத்தனையோ ஸ்கூல், காலேஜ் படிச்சிருந்தாலும், சென்னைக்கு வந்ததும் சேர்ந்த மொதல் ஸ்கூலுங்கறதால இந்த ஸ்கூல் மட்டும் அப்பப்ப ராகவி நினைவுல போகும், வரும். இந்த ஸ்கூல்ல அவ படிச்சது பத்தாவது வரைக்கும்.

2

மத்தவங்களுக்கு யாரையாவது பிடிச்சிருந்தா சென்சார் எதுவும் இல்லாம ராகவிக்கு அவங்களை ரெடிமேடா பிடிச்சுடும். அப்படித்தான் அவளுக்கு கமலைப் பிடிக்க ஆரம்பிச்சது.

அது சரி...

கமல் யாரு?

சின்ன வயசுலேருந்து கூட படிச்ச பையனா கமல்?

இல்ல...

சேர்ந்து விளையாடின பக்கத்து வீட்டுப்பையனா கமல்?

இல்ல.

எப்பவாது போற தோழி வீட்டுல அவ கண்ணுல அடிக்கடிபட்ட தோழியோட அழகான அண்ணனா கமல்?

ம்ஹூம்.

மாமாபையனா?

இல்ல.

அத்தை பையனா?

கடவுளே! அதெல்லாம் எதுவும் இல்ல.

கமல் யாரு?

ஐய்யோ கமலைத் தெரியாதா?

அந்த கமலேதான்.

சாட்சாத் அந்த நடிகர் கமல்ஹாஸன்தான்.

அப்ப தலைப்புல வர்ற கவிதா யாரு?

நடிகையா?

எந்த சினிமால…?

ச்ச...ச்ச... சினிமால்லாம் இல்ல. கவிதா சென்னையில ராகவிகூட எட்டாவதுலேருந்து பத்தாவது வரைக்கும் ஒரே வகுப்புல சேந்து படிச்சவ. இப்பப் புரிஞ்சுருக்குமே.

கவிதாவுக்கு கமல் பிடிக்கும். அதனால ராகவிக்கும் கமலைப் பிடிக்கும்.

கவிதாவுக்கு கமலஹாசனை இத்தனை அத்தனை இல்ல. எத்தனை எத்தனையோ பிடிக்கும். ராகவிக்கு கமலை கொஞ்சமா பிடிக்கும்.

3

ஸ்லேட்டு பைத்தியம், பட்டுப்பாவாடை பைத்தியம், ட்ரெயின் பைத்தியமெல்லாம் ராகவி பாத்திருக்கா. இந்த கமல் பயித்தியம் மட்டும் புதுசா இருந்தது. அவ தோழிகள் எல்லாரும் கவிதாவை அப்படித்தான் கூப்பிட்டாங்க. கொஞ்ச நாள்ளயே ராகவிக்கு ஏன்னு புரிஞ்சுபோச்சு. கவிதா, கமலோட ரசிகை. வகுப்புல நிறைய பேர் கவிதாவோட ரசிகைகள். தினம் ஒரு தடவையாவது கவிதா கமல் பத்திப் பேசியே தீருவா.

வகுப்புல டேபிள் மேல ஏறி கவிதா ஒக்காந்த உடனே, அவளை சுத்தி ஆறு, ஏழு பேர், அவளோட நெருங்கின தோழிகள் பெஞ்சுல ஒக்காந்து கவிதா பேச ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயே கன்னத்துல கைவெச்சு கேக்க ரெடியாயிடுவாங்க. ராகவியும் மத்த சிலரும் அவங்கவங்க இடத்துல இருந்தபடியே. எப்பவும் முழுக்கதையெல்லாம் கவிதா சொல்ல மாட்டா. ஒரு அறிமுகம் மட்டும் குடுப்பா. அப்புறம் அவளை ரொம்ப கவர்ந்த சீன், கமல் வர்ற சீனாத்தான் சொல்லுவா.

கவிதா, அதுவும் எத்தனை விமரிசையா சொல்லுவா தெரியுமா? கதை எப்படியோ அதை அப்படி அப்படியே அழகழகா எங்கெங்கேயோ நகர்த்திக்கொண்டுபோய், எத்தனையோ விதவிதமா கமல் வர்ற சீன்களை அடுத்தடுத்து நெனச்சு நெனச்சுப் பாத்து, தன் முக பாவத்தை கொறச்சுக் கூட்டி, கமல் முக பாவங்களை ஏத்தி இறக்கி ஜோடனை பண்ணி பண்ணிச் சொல்லுவா.

சாந்துப்பொட்டு வச்ச நெத்தியை விரிச்சு சுருக்கி, மை வச்ச கண்ணைப் பெரிசாக்கி, உருட்டி, மேல கீழ பாத்து சொல்லுவா. ரெண்டு கையையும் தூக்கி, வேகமா ஆட்டி அசைச்சு, முன்னாடி, பின்னாடி அப்பப்ப ஒத்தைப் பின்னல் போக வர சொல்லுவா. கமல் பேசற வசனத்தை அப்படியே பேசுவா. படத்துல கமல் சிரிக்கறாப்பலயே அதே டைமிங்ல ஹஹ… ஹஹா… ஹஹஹான்னு சிரிப்பா. கமலோட நடை, உடை, நிறம், ஹேர்ஸ்டைல், கையில கட்டுற வாட்ச், டை, ஷூன்னு, ஒண்ணுவிடாம உருகி உருகி வர்ணிப்பா. படத்துலயே ஹிரோயினுக்கு ரோல் கம்மியாதான் இருக்கும். கவிதா அதைக் கணிசமா கொறச்சுடுவா. படத்துல கமல் பேசறதைவிட கதை சொல்லும்போது கவிதா ஜாஸ்தி இங்கிலீஷ் பேசுவா.

4

பத்தாவது படிக்கும்போது ஒருநாள், ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்துலேருந்து கவிதா மூணாவது தடவையா அந்த ‘நத்திங்’ சீன் சொல்லப்போறான்னு அன்னிக்கு கார்த்தாலயே வகுப்பு முழுக்க நியூஸ் பரவிடுச்சு. ராகவிக்கு ஒக்கார எடம் தூரமாத்தான் கெடச்சது.

ரசிச்சு ரசிச்சு அப்படியே ‘சிகப்பு ரோஜாக்கள்’ கமல் மாதிரி ‘நத்திங்’ சொல்றது அலுக்கவே அலுக்காதா கவிதாவுக்கு? கவிதா சீனை சொல்றா.

கவிதா: ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்துல ஸ்ரீதேவிக்கும் கமலுக்கும் கல்யாணம் ஆனப்பறம், கமல் ஸ்ரீதேவிகிட்ட கோவப்படற சீன். ஸ்ரீதேவி கமல்கிட்ட திரும்பத் திரும்ப கேள்வி கேப்பாங்க. கமலுக்கு கோவமா வரும்.

(கவிதாவுக்கும்தான்)

ஸ்ரீதேவி கமல்கிட்ட முதல் கேள்வி கேப்பாங்க – ‘ஆமா ஆபீஸிலேருந்து போன் வந்ததும் அவசரமா போனீங்களே என்ன விஷயம்?’

அதுக்கு கமலோட பதில் - ‘நத்திங்.’

ஸ்ரீதேவியோட ரெண்டாவது கேள்வி – ‘இல்ல ஃபோன்ல பேசும்போதே உங்க ஃபேஸ் ஏதோ மாதிரி இருந்துச்சே, என்னன்னு சொல்லுங்க?’’

கமல் பதில் - ‘நத்திங்.’

ஸ்ரீதேவி மூணாவது கேள்வி – ‘என்னன்னு சொல்லுங்க?’

கமல் பதில் – லேசா மாடுலேஷன் மாத்தி அதே ‘நத்திங்’.

கவிதாவும் கமல் மாதிரியே.

நாலாவது கேள்வி – ‘எங்கிட்ட என்னமோ மறைக்கிறீங்க என்னன்னு சொல்லுங்க?’

கமல் பதில் - கோபமும் குரலும் நடுங்க ‘நத்திங்.’

ஸ்ரீதேவியோட அஞ்சாவது கேள்வி – ‘நா உங்க மனைவி எங்கிட்ட..?’

கமல் பதில் - நாலு முறை ‘நத்திங்’ ‘நத்திங்’ ‘நத்திங்’ ‘நத்திங்’ ஒவ்வொரு நத்திங்குக்கும் ஸ்ரீதேவி மிரண்டுபோற அளவுக்கு கமலுக்கு கோவமும் ஏறும், குரலும் அலறும்.

கவிதாவுக்கும்தான்.

அதுலயும் அந்தக் கடைசி `நத்திங்’கை கத்திகிட்டே கமல் டேபிள் கண்ணாடியில எதோ கிறுக்குவார். கேமரா கண்ணாடிக்குப் போகும். பாத்தா N O T H I N G னு அதுல எழுதி இருக்கும். அந்த சீன்ல அது கமலோட ஒன்பதாவது ‘நத்திங்.’

அந்த சீன்ல அது கவிதாவோட இருபத்தி ஏழாவது `நத்திங்’.

5

கவிதா சொன்ன நிறைய படங்களோட சீன் ராகவிக்கு ஞாபகம் இருந்தாலும், மனசுல ஸ்ட்ராங்கா பதிஞ்சது ரெண்டு படங்கள்.

ஒண்ணு, இப்ப சொன்ன `சிகப்பு ரோஜாக்கள்’ - இன்னொண்ணு, அநியாயத்துக்குப் பேரே ஞாபகம் இல்ல. சினிமா பேரை ராகவி மறந்துட்டாளா இல்ல கவிதா சொல்லவே இல்லையா? சொல்லியிருப்பா.... அப்ப படம் பேரு?... வந்து… இல்ல... ம்ம்... ஹூம்... ஹீரோயின் யாரு?

அந்த ரெண்டு சினிமா படத்துக்கும் கவிதா சொன்ன அறிமுகம், சீனெல்லாம் விவரமா ஞாபகம் இருக்கு. அதுவும் அந்த ‘பேர் தெரியாத சினிமா’ சீன் இருக்கே, அது ராகவி மனசுக்குள்ள திரும்பத் திரும்ப வந்தபடி போனபடி இருக்கும். ஏன் அப்படி?

6

கவிதாவும் ராகவியும் ஒரே பத்தாம் வகுப்புதான். கவிதா மட்டும் எப்படி `சிகப்பு ரோஜாக்கள்’ பாத்தா? ராகவி வீட்டுல சினிமா பாக்க லேசுல பர்மிஷனே கெடைக்காது. அம்மா எப்ப எந்த சினிமாவுக்கு கிளம்பினாலும் போகும்போது ‘அது A சர்ட்டிஃபிகேட் படம்’ னு பொதுவா சொல்லிட்டு ராகவியைக் கூட்டிட்டே போக மாட்டாங்க.

என்ன இப்ப கெட்டுப்போச்சு? அப்புறந்தான் சேத்து வச்சு சினிமா பாத்தாச்சே?

ஸ்கூல்லேருந்து வீட்டுக்குப் போகும்போது ராகவி பல நாள், கவிதா, கவிதாவோட நெருங்கின தோழிகள் போற அதே பஸ்ல போயிருக்கா. மேடவாக்கம் உமா தியேட்டர் ஸ்டாப் வரும்போது, கவிதா லேசா தலைய சாய்ச்சு பஸ்ஸுக்கு வெளியில யாரையோ பாப்பா. அவ தோழிகளும் பாப்பாங்க. உடனே கவிதாவும் அவ தோழிகளும் ஒருத்தரை ஒருத்தர் பாத்து ‘கிளுக் கிளுக்’னு சிரிப்பாங்க. ராகவிக்கு போகப் போகத்தான் புரிஞ்சது அவங்க பாத்தது அங்க ஸ்மார்ட்டா நிக்கற ஒரு பையனன்னு. அதுவும் எந்த மாதிரி ஸ்மார்ட்? ‘கமல் ஸ்மார்ட்’. பேன்ட், ஷர்ட், ஹேர் ஸ்டைல், உயரம், நிறம் வெயிட், அழகு எல்லாமே தூரத்துலேருந்து பாக்கும்போது கிட்டத்தட்ட கமல் மாதிரி! அது திண்ணை கமலஹாஸனாம். அதானே? இல்லாட்டா கவிதாவுக்கு என்ன வந்தது? கண்டவங்கள அவ பாப்பானேன்?

அன்னிக்கு ராகவிக்கு பத்தாவது பப்ளிக் எக்ஸாம் முடிஞ்சு கடைசி நாள். இந்த ஸ்கூல்லயும் கடைசி நாள் ஆச்சே, எல்லார்கிட்டயும் சொல்லிக்கலாம்னு பாத்தா, வீட்டுக்கு கிளம்பாம கவிதா மட்டும் டேபிள் மேல ஏறி ஒக்காந்திருக்கா. என்ன நடக்கும்னு தெரியாதா? உடனே அவளை சுத்தி கதை கேக்க ஒரு கூட்டம் ரெடி.

கவிதா கதை பேச ஆரம்பிக்கறா.

கவிதா: “இது நான் சமீபத்துல பாத்த கமல் படம்---------------------------------------”.

பரீட்சையை வச்சுகிட்டா? அது சரி. அவளுக்கென்ன? சும்மா கமல் கமல்னு பேப்பர்ல எழுதினாலும் 100 மார்க் வாங்கிடுவா.

7

கவிதா: நான் சொல்லப்போறது படத்துலயே ரொம்ப திரில்லிங் சீன். கமல் ஹீரோயினை மீட் பண்ற சீன். அதுவும் ஒரு ஃபாரின் ட்ரிப்பும்போது.

கமல் இஸ் எ பிஸினஸ் மேன். மில்லியனேர்…பில்லியனேர். முக்கால்வாசி படத்துல பிளாக் கோட் சூட்தான். வெரி வெரி ஸ்மார்ட். தலை முடி போன படம் அளவுக்கு லாங் இல்ல. ஷார்ட்டும் இல்ல. பட் கரெக்ட். அடிக்கடி பத்து இல்ல இருபது பேரோட பிஸினஸ் மீட்டிங். கமல் பேசிட்டார்னா மீட்டிங் ஓவர். பிஸினஸ் டீல் எதானாலும் ஒன்லி அண்ட் ஒன்லி சக்சஸ். அடிக்கடி ஃப்ளைட்ல ஃபாரின் ட்ராவல். இதுக்கு நடுவுல வில்லன்களை வேற டிஷ்யூம்... டிஷ்யூம். ஒரு ஏர்போர்ட் பைட் சீன் வரும் பாரு! கமல் அதுல... அதை விடு…. சீனுக்கு வர்றேன்.

கமல் ஃப்ளைட்ல ஒக்காந்திருக்கார். பக்கத்துல அந்த ஹீரோயின். அவங்களை அதுக்கு முன்னால பாத்ததே இல்ல கமல். ஒக்காரும்போது ஒரு `ஹல்லோ’ அவ்ளோதான். கமல் ஹி இஸ் எ ஜென்டில்மேன். அப்புறம் பேச்சே இல்ல. இவங்க மட்டும் இல்ல மொத்த ஃப்ளைட்லயும் யாருமே பேசல. ஏன்? எப்படிப் பேச முடியும்? ஏன்னா துப்பாக்கி முனையில ஃப்ளைட் ஹைஜாக். ‘அய்யோ’ னு அலறல் சத்தம். தன்னால ஏதாவது பண்ண முடியுமான்னு பாக்கறார் கமல். உடனே சான்ஸ் வருது. ஒரு ஆறு வயசு கொழந்தையை காலால ஒதைக்கற வில்லனைப் பிடிச்சு அவன் வயித்துல கமல் ஒர்ரே குத்து. வில்லன் கீழ விழறான்.

வாயைப் பொளந்ததைத் தவிர மத்தபடி கதை கேக்கற கவிதாவோட தோழிகள் ஒருத்தரும் அசையல..

ஹீரோயின் தனியாதான் ட்ராவல் பண்றாங்க. கமல் அதெல்லாம் கவனிக்கல.

எல்லாரும் விழுந்து எழுந்து, அப்புறம் ஒரு முன்பின் தெரியாத ஃபாரெஸ்ட் லொகேஷன்ல ஃப்ளைட் லேண்ட் ஆகுது. பைலட், க்ரூ, பாசஞ்சர்ஸ் எல்லாருமா 96 பேர். வில்லன்கள் எல்லாம் கையில பெரிய துப்பாக்கியோட. ஒரு வில்லன் விடாம அத்தனை வில்லன் மூக்கும் வெரல் அளவு நீளம். ஏதோ புரியாத பாஷை பேசறாங்க. கத்தறவங்க வாயிலெல்லாம் ப்ளாஸ்டர். கமல்கிட்ட குத்து வாங்கின வில்லன் இருக்கானே அவந்தான் ஒரு பளபள கறுப்புக் கயிறால ஒவ்வொருத்தரையா கட்டிப்போடறான். அவன் கண்ணு கமலை தேடிட்டே இருக்கு. கமலைப் பாத்துடறான்.

ஒடனே அந்த வில்லன் கமலையும் ஹீரோயினையும் சேத்து கட்றான். அதுவும் எப்படி? முதல்ல ஒவ்வொருத்தரா அவங்கங்க ரெண்டு கையையும் பின்னாடி வச்சு கட்றான். அப்புறம் முதுகும் முதுகும் பாத்த மாதிரி அவங்களை நிக்கவச்சு, ஒரு பெரிய கயத்தால குறுக்கும் நெடுக்குமா அவங்களை ஒண்ணா கட்டிட்டு, கமலப் பாத்து அந்த மூக்கன் கோணலா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு வேகமா கமல் வயித்துல குத்து குத்துவான் பாரு. கமல் வலி தாங்காம துடிப்பார். ரெண்டு பேரையும் சேத்து எக்குதப்பா கட்டி போட்டுருக்கே. குத்தின வேகத்துல தான் விழாம இருக்கறதுக்காக ஹீரோயின் தன் வெயிட்டை அப்படியே கமல் மேல சாய்ப்பாங்க.

இங்கதான் ஹீரோ அண்ட் ஹீரோயின் மீட்டிங் பாயிண்ட்... இப்ப கமல் மேல கேமரா. கமல் ஹீரோயின்கிட்ட சொல்லுவாரு. ‘பயத்தை மொகத்துல காமிக்காதீங்க. கண்ட்ரோல் யுயர்ஸெல்ஃப். இப்ப அந்த கேமரா மெல்ல நகர்ந்து ஹீரோயினுக்கு க்ளோஸ் அப். கமல், `ஏன்டா அவங்க கிட்ட பேச்சு கொடுத்தோம்’னு வருத்தப்படற அளவுக்கு அவங்க பேசுவாங்க. அடுத்த சில நிமிஷம் பக்கத்தில வில்லன்கள் யாருமில்ல. சவுரியமாப் போச்சு!

8

ஹீரோயின் பேசறாங்க: அவன் மூக்கை ஒடைச்சு எடுத்தா என்ன? கோவமா வருது. எங்கம்மா சின்ன வயசுல நெறய கதை சொல்லுவாங்க. அழுதா ஒரு கதை. கோச்சுக்கிட்டா ஒரு கதை. பயந்தா ஒரு கதை. நம்பள கட்டிப்போட்ட அந்த முரடனோட மூக்கைப் பாத்த ஒடனே ‘கொக்கு மூக்கு’ கதைதான் ஞாபகம் வருது. சொல்லட்டா? காதுல விழுதா?

9

கவிதா: இதோ இந்த எடத்துலேருந்து கமலுக்கு மட்டும்தான் கேமரா. ஹீரோயின் கதை சொல்ற குரல் மட்டும்தான் நமக்கு கேக்கும். அவங்க கதை சொல்லி முடிக்கறவரை அந்த ரெண்டு நிமிஷம் முழுக்க, சட்டு சட்டுனு கமலோட விதவிதமான முகபாவம். கமல் மொகத்துல ஆரம்பத்துல ‘என்னடா இந்த பொண்ணு நேரம் புரியாம கதை கிதைன்னுட்டு’ அப்டீங்கற மாதிரி ஒரு பயம் கலந்த எக்ஸ்ப்ரஷன். அப்புறம் கமல் முகத்துல லேசா கோபம். அடுத்தது ‘இந்த ஹைஜாக்கை விட கொடுமைடா இது’ங்கற மாதிரி முகத்துல ஒரு வேதனை. பாதி கதைக்கப்புறம், கமல் கதையில மூழ்கி கதைக்கு ஏத்த மாதிரி ரசிக்கற முகபாவம். பின்ன? ஹீரோயினாச்சே சொல்றது.

10

ஹீரோயின் கதை சொல்றாங்க - எங்க வீட்டு பக்கத்துல ஒரு கொளம் இருந்ததாம். என் பாட்டி தெனம் அந்த கொளத்துக்கு போய் அதுல இருக்குற ஒவ்வொரு மீனையும் பாப்பாங்களாம். அதுகூட பேசுவாங்களாம். நெஜம்மாதான். அதுலயும் அந்த மஞ்சள் மீனை பாட்டிக்கு ரொம்பப் பிடிக்குமாம். அங்க ஒரு கொக்கு தெனம் வருமாம். கொக்குக்கு மூக்கு கொஞ்சம் கூடுதல் நீளமாம். பாட்டி மெதுவா கொக்குகூடவும் பேச ஆரம்பிச்சாங்களாம். பாட்டியை கொக்குக்குப் பிடிச்சு போச்சாம். கொக்கு மீன் திங்கறது மட்டும் பாட்டிக்கு பிடிக்காதாம். அது ஒவ்வொரு மீனா பாத்து கொத்தி தின்னும்போது, பாட்டி பொறுக்காம சத்தம் போடுவாங்களாம். கொக்கு திரும்பி பாட்டியைப் பாக்குமாம். போயிடுமாம். இப்படி தினம் வர்ற அந்த கொக்கு ஒரு நாள் பாட்டிக்கு ரொம்பப் பிடிச்ச அந்த மஞ்சள் மீனை படக்னு கொத்தி முழுங்கிடுச்சாம். பாட்டிக்கு ரொம்ப வருத்தமாப் போய் அழுதுட்டாங்களாம். கொக்கு பாட்டியையே பாத்துதாம். அப்புறம் போயிடுச்சாம். கொக்கு ரெண்டு நாள் வரவேயில்லையாம். பாட்டிக்கு மனசே சரியில்லையாம். மூணாவது நாள் கொளத்துக்கு வந்த கொக்கு பாட்டிய பாத்துதாம். கொக்கைப் பாத்த பாட்டிக்கு ஒரே ஷாக்… கொக்கோட மூக்கு மொனை...

11

கவிதா: கதையை ஹீரோயின் முழுசா சொல்லி முடிப்பாங்க. ஆனா நான் இங்க கொக்கு ( மூக்கு மொனையோட ) கதையை கட் பண்ணிட்டு நம்ம சீனோட முடிவுக்கு வர்றேன்.

எந்த மாதிரி நேரத்துலயும் கொஞ்சமும் பயப்படாம துப்பாக்கி முனைல கதை சொல்ற ஹீரோயினை நெனச்சா...? இல்ல அவங்க சொன்ன கதையை நெனச்சான்னு தெரியல. ஹீரோயின் கடைசிவரி சொல்லி கதையை முடிக்கும்போது, கமல் கண்ணு ஓரமா தண்ணி. அங்கதான் கேமரா மெதுவா கமல் மேலேருந்து நகருது. அதுக்குப் போட்டியா ஒரு மூக்கு வில்லனும் அங்க வந்து நிக்கவும் சரியா இருக்கு. அவன் அவசரமா கமல் ஹீரோயின் ரெண்டு பேரையும் சேத்து கட்டின ஒரு கயத்தை மட்டும் அவுத்துட்டு, ஹீரோயினைத் தள்ளிட்டு, கமலை எங்கியோ இழுத்துட்டு போறான். இங்க சீன் முடியுது.

12

ராகவிக்கு தவிப்பு தாங்கல. கவிதா சீனை சொல்லி முடிச்சுட்டு, வீட்டுக்குக் கெளம்பி போயாச்சு. பின்ன? முழுசா கதையை எப்ப கவிதா சொல்லியிருக்கா? அடுத்த வருஷம் எல்லாரும் ஸ்கூல் மாத்தி போறதால, கமல் படத்தோட பேர், கொக்கு கதை, ஹீரோயினும், கமலும் எப்படி தப்பிக்கறாங்க? அப்புறம் கமல் ஹீரோயினை எங்க, எப்ப மீட் பண்ணுவார்? இப்படி இத்தனை சீன் எந்த மாடுலேஷன்லயும் மேற்கொண்டு தெரிஞ்சுக்க வாய்ப்பே இல்ல. கவிதாவோட நெருங்கிப் பழகாம ரொம்ப தப்பு பண்ணிட்டு இப்ப வருத்தப்பட்டா? கவிதா சொன்னது, சொல்லாததுன்னு அப்புறமா ஓரளவுக்கு பல கமல் படங்களை தியேட்டர்லயோ, டிவிடிலயோ எப்படியோ ராகவி பாத்துட்டா. அந்த ஒரு ‘பேர் தெரியாத சினிமா’வைத்தவிர. வீட்ல, வெளில கொஞ்சம் பேர்கிட்ட கதையை சொல்லி கேட்டும் பாத்தாச்சு. கேட்டவங்க பலரும் சொன்னது இதான். ‘கதை நல்லாருக்கே. அட இது எந்த கமல் படம்? ஹீரோயின் யாரு? நான் பாக்கலையே?’ (இல்ல... ‘பஞ்சதந்திரம்’ இல்ல.)

13

எல்லாம் சரி. வருஷங்கள் பல ஆச்சே. இப்ப கவிதா? அன்னிக்கு மாதிரியே இன்னிக்கும் கவிதாவுக்கு கமல் பிடிக்குமா? கவிதா கமல் படங்களை இன்னும் விடாம பாத்துட்டு இருப்பாளா? சரி... பாத்துட்டு சீனை யார்கிட்ட சொல்லுவா? கணவர், குழந்தைகள், தோழிகள்? மாமியார்? பக்கத்து வீடு? எதிர் வீடு? அந்த ‘நத்திங்’ சீனை திரும்பவும் எத்தனை தடவ சொல்லியிருப்பா? கணக்குவெச்சுக்க முடியாத தடவைகள்?

14

கவிதா சொல்லி எத்தனையோ கமல் சீனெல்லாம் ராகவி கேட்டிருக்கா. ஆனா, அவ சொன்ன அந்த ‘பேர் தெரியாத சினிமா’ல வந்த அந்த ஹைஜாக் சீன்ல மட்டும்தான் கமலுக்கு வசனமே இல்ல. ஹீரோயினுக்குதான் நிறைய... அப்படிப்பட்ட ஒரு சீனை கவிதா ஸ்கூல் கடைசி நாள் அன்னிக்கு சொல்வானேன்? அப்படீன்னா உண்மையில அந்த சீன்? அப்ப அந்த ஹீரோயின்?

எது அப்படியிருந்தாலும் ராகவி தொடர்ந்து கமல் படங்களை பாத்துட்டுதான் இருக்கா. சமீபத்துல வந்த புது ரிலீஸ் `தூங்காவனம்’ வரைக்கும். மனசுல பதிஞ்ச கவிதா சொன்ன அந்த சீன், அது கமலோட ஏதாவது ஒரு புது படத்துலகூட வர வாய்ப்பிருக்கும்னு ராகவிக்கு தீவிரமா ஒரு நெனப்பு.

தொடர்ந்து பாக்கற கமல் படங்கள்ல அந்த பேர் தெரியாத படத்தோட சீனை மட்டும்தான் தேடறாளா ராகவி?

இல்ல. சீனை மட்டும் இல்ல… ஹீரோயினையும் சேத்துதான் தேடறா!

இந்தக் கதை முடிகிறது; கமல் கதைகள் தொடரும்.