Published:Updated:

விதைநெல் இல்லாமலா? - கவிதைகள்

விதைநெல் இல்லாமலா? - கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
விதைநெல் இல்லாமலா? - கவிதைகள்

அபராஜிதா - ஓவியம்: ஹாசிப்கான்

விதைநெல் இல்லாமலா? - கவிதைகள்

அபராஜிதா - ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
விதைநெல் இல்லாமலா? - கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
விதைநெல் இல்லாமலா? - கவிதைகள்

ரவாயில்லை பாலு சார்
உடம்பு
பரவாயில்லை

மனசு
பரவாயில்லை

வீடு
பரவாயில்லை

தொழில்
பரவாயில்லை

பல விஷயங்களும்
பரவாயில்லாமல்தாம்

பரவாயில்லை பாலு சார்
பரவாயில்லை.

விதைநெல் இல்லாமலா? - கவிதைகள்

ண்டியிட
வைக்கிறார்கள்
எப்படியாவது
மண்டியிட வைத்துவிடுகிறார்கள்
மண்டியிட்டுக்கொண்டே இருக்கவேண்டுமென
எதிர்பார்க்கிறார்கள்
மண்டியிட்டு மண்டியிட்டு
மனம் தளர்ந்துபோயிற்று
மண்டியிட்டதெல்லாம்
போதுமென்றிருக்கிறது
மண்டியிட்டுக்கொண்டே கழிகிறது
காலம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘நல்ல தமிழ் எழுதுவது எப்படி?’
படித்திருக்கிறான்தான்

‘முரசொலி’யில் முதல் பக்கம் தொடங்கும்
கலைஞர் உரை தப்பாது

யாப்பருங்கலக்காரிகை, நன்னூல்
பயின்றிருக்கிறான்தான்
பரணி, பிள்ளைத்தமிழ்
பாடமாகவே
சீரிய கவிதை
சொல்லித் தந்து வந்ததில்லை
எங்கே இருக்கிறது
தாமிரவருணியின் ஊற்றுக்கண்.

ண்ணதாசன் பாதிப்பு
உண்டுதான்
ரா.பி.சேதுப்பிள்ளை பாதிப்பும்
இருக்கிறதுதான்
அண்ணா, கலைஞர் மேடைப்பேச்சும்
செல்வாக்கு செலுத்தாமலில்லை
ஞானக்கூத்தன், சி.மணி, பசுவய்யா
எல்லோருமே இருக்கிறார்கள்தாம்
தாமிரவருணித் தண்ணீர்
திருநெல்வேலி ஊர்
நெல்லையப்பர் கோயில்
எல்லாத் தாக்கமும்
மழை பொழியலாம்
மண் சாரம் கொண்டிருக்க வேண்டும்
விதைநெல் இல்லாமலா..?  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism