புல்லுக்காக நெல்லுச் சுமை

மொளக்குச்சியில் வளர்ந்த கயிற்றின் நுனி எருது
வண்டிச் சக்கரம்போல் நிலத்தை மேய்ந்திருந்தது

திமிலை எடுப்பாகவும்
தசைகள் ஒரு பீஸ்கூட அதிகமாகாமலும் பார்த்துக்கொண்டது

நெருக்கி அடுக்கப்பட்ட மூட்டைகளை
நாக்கில் நுரை பொங்க இழுக்கப் பழக்கப்பட்டிருந்தது

லாடம் பெயர்ந்து ரத்தம்
ஊற்றிய போதும்
வண்டியை இழுத்து வீடு சேர்த்தது

சாட்டைவிழுந்த தடங்களும், அதன் நுனி ஆணிக் காயங்களும்
முதுகிலும் தொடையிலும்
கழுத்துத் தழும்பில் சிலுவை போன்ற வண்டியின் நுனி
பொருத்தப்படுகையில்
சிலுவைப் பாதை ஆரம்பமாகிறது

புல்லுக்காக நெல்லு சுமக்கும் வரலாறு
இன்னும் திருத்தி எழுதப்படாமலே

மேய்ச்சல் நிலத்தில் அவிழ்த்து விடப்படுகையில்
கொம்பு அரும்பிய கன்றுக்கு முட்டுப்பழக்குகிறது எருது.

- பூர்ணா ஏசுதாஸ்

உருண்டைக்கு உள்ளேயும் வெளியேயும் உலகம்

கண்ணாடிக் குடுவையில் நீந்தும்
ஒற்றை மீனுக்கு
சீஸாதான் உலகம்
அதில் நிறைந்திருக்கும் நீர்தான் கடல்

தொகுப்பக வீட்டில்
மின்விளக்குகள் எரிந்தால் பகலெனவும்
அணைந்திருந்தால் இரவெனவும் நினைக்கும் மீனுக்கு
வானம் இல்லை
சூரியன் இல்லை
நிலா இல்லை
நட்சத்திரங்கள் இல்லை

மீனுக்கு ஒரேயொரு நண்பன்
குடுவையைச் சுற்றிக் கண்களை நீந்தவிடும் வெள்ளைப் பூனை
மியாவ் என்றால் தண்ணீரைச் சிலுப்பி
உள்ளே ஒரு வட்டமடிக்கும்
ஒவ்வொரு மியாவும் மீனுக்கு மற்றொரு வட்டம்
ஒவ்வொரு வட்டமும் பூனைக்கு உலகம்

ஒரு மியாவில் தன் உலகத்தைச் சுற்ற விட்டுப் பார்க்கிறது பூனை
அதே மியாவில் தன் உலகத்தைச் சுற்றிப்பார்க்கிறது மீன்

உள்ளே வெளியே என இரண்டு வெவ்வேறு உலகங்கள்
வட்டப்பாதையில் உருள்கின்றன
இடையில் அசையாமல் இருக்கும் கண்ணாடிக்குடுவை
மீனுக்கும் பூனைக்கும் உலக உருண்டை.

- வலங்கைமான் நூர்தீன்

மனச்சாவி

புறக்கணிப்பின் மொழி பதிலற்ற மௌனம் என்பதை அறியாத சிறுமியா நீ
தொடர்ந்து ஒலிக்கும் ஒரு பெயர்
நீ கவனிக்கப்பட ஏதுமில்லாத ஒருத்தி என்ற உண்மையை உணர்த்தும் வேளையில் உள்தாளிட்டு
கழுத்தில் சுருக்கிட்டுக்கொள்பவளின்
மனச்சாவி தோட்டத்துப் புல்தரையில்
சத்தமேதுமின்றி வீசப்படுகிறது...

- தேவசீமா