Published:Updated:

"கலையை காசாகப் பார்க்காதீர்கள்!"

"கலையை காசாகப் பார்க்காதீர்கள்!"

''ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், மன நலம் பாதிக்கப்பட்டோருக்கு இலவச பெயின்டிங் வகுப்பு எடுக்கத் தயாராக உள்ளேன். அவர்களை வரவேற்கிறேன்'' என்கிறார் மீனாட்சி. நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம் பிரதான சாலையில் உள்ள இவருடைய 'ஃப்யூஸ் ஆஃப் ஹார்ட்’ என்கிற ஓவிய பயிற்சிப் பள்ளி, ஏரியாவில் ஏகப் பிரபலம்.

"கலையை காசாகப் பார்க்காதீர்கள்!"
##~##

''சிறு வயதில் இருந்தே ஓவியம்னா பிரியம். விருதுநகரில் தனலட்சுமி என்பவரிடம் இரண்டு வருடங்கள், சென்னையில் பாலாஜி சீனிவாசன் என்பவரிடம் எட்டு வருடங்கள் ஓவியம் கற்று இருக்கிறேன். தொடர்ந்து அப்டேட் செய்தும் வருகிறேன். ஓவியம் வரைபவளாக நான் எந்த அளவுக்குச் சந்தோஷப்படுகிறேனோ அதே அளவு மகிழ்ச்சியை மற்றவர்களுக்குக் கடத்தும் ஊடகமாக இந்தப் பள்ளியை நடத்துவதிலும் மகிழ்ச்சி எனக்கு.

தமிழக பாணி ஓவியங்கள் மட்டும் அல்லாது பல்வேறு மாநில பாணிகளில் ஓவியங்கள் வரையக் கற்றுத்தருகிறோம்.  இங்கு ஆறு வயது தொடங்கி 60 வயதுவரை மாணவர்கள் இருக்கிறார்கள். அனபில்லா என்ற பிரெஞ்சுப் பெண்மணி, பழங்குடி இன கொந்து ஓவியக் கலையைக் கற்றுக்கொள்ள வந்தார். 'நீங்களே யோசிச்சு ஒரு அசைன்மென்ட் பண்ணிட்டு வாங்க’னு சொன்னேன். அடுத்த வகுப்புக்கு வரும்போது புள்ளிகள், கோடுகளால் அழகான கலர்ஃபுல் ஈஃபில் டவர் வரைந்து வந்து அசத்தினார்.

"கலையை காசாகப் பார்க்காதீர்கள்!"

சாஃப்ட்வேர் துறையில் வேலை செய்பவர்கள் அக்ரலிக், மதுபானி, வாட்டர் கலர் ஓவியங்களைக் கற்கவருகிறார்கள். 'தியானம் செய்வதில் கிடைக்கும் திருப்தி ஓவியம் வரைவதிலும் கிடைக்கிறது’ என்பார்கள். அதே போல் இன்றைய குழந்தைகளின் அறிவாற்றலும் ஆர்வமும் என்னை வியக்கவைக்கிறது.

ஒருமுறை பத்ம சேஷாத்ரி பள்ளி கோடைக் கால வகுப்பில், 'நீங்க இந்த பூமியை எப்படியெல்லாம் காப்பாற்றுவீங்க என்பதுதான் கான்செப்ட். அதுக்குத் தகுந்த மாதிரி நாளைக்கு ஓவியம் வரைஞ்சிட்டு வாங்க’னு சொன்னேன். பூமியைத் தாயாகவும் அந்தப் பூமியின் வயிற்றில் உயிரினங்களைக் குழந்தையாகவும் வரைந்து, அந்தத் தாயைச் சுற்றி தண்ணீர், காற்று மாசுபடுவது, மரத்தை வெட்டுவது, எரிப்பது போன்ற நிகழ்வுகளையும் அதைப் பார்த்து பூமி மாதா அழுதபடி தன் வயிற்றைப் பிடித்து இருப்பதாகவும் கற்பனையுடன் ஒரு மாணவன் வரைந்து இருந்த ஓவியம் என்னைப் பிரமிக்கவைத்தது.

"கலையை காசாகப் பார்க்காதீர்கள்!"

கலை என்பதையும் தாண்டி அனிமேஷன், உள் அலங்காரம், இல்லஸ்ட்ரேஷன், கண்காட்சிகள் எனக் கைநிறையப் பணம் சம்பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது, ஓவியத் துறை. ஓவியம் மட்டும் அல்ல; எந்தக் கலையையும் 'பணம் சம்பாதிக்கும்’ என்ற நோக்கத்தில் மட்டுமே கற்காதீர்கள். அது முழுமையான ஞானத்தை உருவாக்காது'' என்கிறார் மீனாட்சி.

"கலையை காசாகப் பார்க்காதீர்கள்!"

- ரமா ஆல்பர்ட்
படங்கள்: கே.கார்த்திகேயன்

அடுத்த கட்டுரைக்கு