எளிய சொற்களின் சிசு அது.
அன்பான சொற்களின் சிசு.
வலிதான சொற்களின் சிசு.
சுடர்கிற சத்யத்தின் சிசு.
ஒரு முந்நூறு ஆண்டுகள்முன்
ஒளியிழந்த நக்ஷத்திரம்
நேற்று என் முற்றத்தில்
சிதறிச் சென்றிருந்த சொல் அது.
மூன்று தலைமுறைகள் முன்பு - தன்
முற்றத்தில் என் ஓட்டன் அதனைக் கண்டெடுத்தார் - பின்பென்
பூட்டனும் அதனைக் கண்டெடுத்தார்.
என் தாத்தாவும்.
என் அப்பாவும்.
நேற்று நானும்.
ஐந்து தலைமுறைகள் கண்டுவந்த அச்சொல்
கற்ப நிகற்ப ஒளிவருடம் கடந்து வந்த அச்சொல்
களைப்பான களைப்பான களைப்பாக
துயரான துயரான துயராக
ஓர் அறிமுகப் புன்னகையில் ஆசுவாசம்கொண்ட பின்பு
அழகான அழகான அழகாக
மகிழ்வான மகிழ்வான மகிழ்வாக
செறிவான செறிவான செறிவாக
மிக எளிதான அன்பில்செய் உயிரானது.
அண்டப் பெருவெளியினது விநோதங்களில் மறைந்திருந்து
மீண்டொரு நாள் நீ வெளிவரவும்கூடும் என் அன்பான தாரகையே.
அதுவரையிலும்
உன் இறுதிச் சொல்லுக்குச் சொந்தக்காரி
அகலிருவிசும்பின் மீனில் நான் ஒருத்தி.

ஒரு மழை நல்லது என் தனிமைக்கு.
மென்சாரல் வேண்டாம்
சிறுவெயில் வேண்டாம்
வானவில் வேண்டாம்
வெறும் மழை
வெறும் மழை
வெறும் மழை - இந்தக்
கார் பருவத்தின் முதல் துளிக்குக்
காத்திருக்குதென் தோட்டம்.
முல்லை பூத்தாயிற்று இதோ...
முதுவேனில் வரையிலும்
பேசத் தவித்திருந்து
சேர்த்துவைத்த சொற்களெல்லாம்
பேசி வா சடசடவென.
என் தோட்டத்து மாதுளம் மொட்டின்
நுனியினில் தங்கி
அதன் மோனத்தை
அருந்திட -
கடுகி வா பெருமழையே...
என் தனிமைக்கு நல்லை நீ!

அவற்றில் பல
முதன்மழை பார்க்கும்
மிக மிகச் சிறிய புறாக்கள்.
பிள்ளைக் குறும்பைக் கைவிட
இன்னும் சிலமணி நேர அவகாசம்கொண்ட
சின்னஞ் சிறிய புறாக்கள்.
சிதாரைகளைத் தானியமணிகளெனக்
கொத்தத் துரத்தி
சிறகு நனைய ஓடி
அன்னையின் கழுத்தருகே
ஒடுங்குகிற குஞ்சுப்புறாக்கள்.
ஓயாமல் மொணமொணத்துக்கொண்டு
பதறிப் பதறிச் சிறகை உதறிக்கொண்டு
புறாக்களுக்கு என்னவோ மழையோடு கோபம்.
துடிக்கும் மணிக்கழுத்தை
அடிக்கடி அடிக்கடி திருப்பி
இறகுகள் கோதிக்கொள்ளும்
அவற்றினில் ஒன்றையள்ளி
என் கைகளின் வெம்மையைப் பகிர்ந்திடும்பொழுது
நிறைவெய்தட்டும் இந்நாள்.
மழையான மழையாகச் சீறியடிக்கிறதிம்மாலை.

எளிய சொற்களின் சிசு அது.
அன்பான சொற்களின் சிசு.
வலிதான சொற்களின் சிசு.
சுடர்கிற சத்யத்தின் சிசு.
ஒரு முந்நூறு ஆண்டுகள்முன்
ஒளியிழந்த நக்ஷத்திரம்
நேற்று என் முற்றத்தில்
சிதறிச் சென்றிருந்த சொல் அது.
மூன்று தலைமுறைகள் முன்பு - தன்
முற்றத்தில் என் ஓட்டன் அதனைக் கண்டெடுத்தார் - பின்பென்
பூட்டனும் அதனைக் கண்டெடுத்தார்.
என் தாத்தாவும்.
என் அப்பாவும்.
நேற்று நானும்.
ஐந்து தலைமுறைகள் கண்டுவந்த அச்சொல்
கற்ப நிகற்ப ஒளிவருடம் கடந்து வந்த அச்சொல்
களைப்பான களைப்பான களைப்பாக
துயரான துயரான துயராக
ஓர் அறிமுகப் புன்னகையில் ஆசுவாசம்கொண்ட பின்பு
அழகான அழகான அழகாக
மகிழ்வான மகிழ்வான மகிழ்வாக
செறிவான செறிவான செறிவாக
மிக எளிதான அன்பில்செய் உயிரானது.
அண்டப் பெருவெளியினது விநோதங்களில் மறைந்திருந்து
மீண்டொரு நாள் நீ வெளிவரவும்கூடும் என் அன்பான தாரகையே.
அதுவரையிலும்
உன் இறுதிச் சொல்லுக்குச் சொந்தக்காரி
அகலிருவிசும்பின் மீனில் நான் ஒருத்தி.

ஒரு மழை நல்லது என் தனிமைக்கு.
மென்சாரல் வேண்டாம்
சிறுவெயில் வேண்டாம்
வானவில் வேண்டாம்
வெறும் மழை
வெறும் மழை
வெறும் மழை - இந்தக்
கார் பருவத்தின் முதல் துளிக்குக்
காத்திருக்குதென் தோட்டம்.
முல்லை பூத்தாயிற்று இதோ...
முதுவேனில் வரையிலும்
பேசத் தவித்திருந்து
சேர்த்துவைத்த சொற்களெல்லாம்
பேசி வா சடசடவென.
என் தோட்டத்து மாதுளம் மொட்டின்
நுனியினில் தங்கி
அதன் மோனத்தை
அருந்திட -
கடுகி வா பெருமழையே...
என் தனிமைக்கு நல்லை நீ!

அவற்றில் பல
முதன்மழை பார்க்கும்
மிக மிகச் சிறிய புறாக்கள்.
பிள்ளைக் குறும்பைக் கைவிட
இன்னும் சிலமணி நேர அவகாசம்கொண்ட
சின்னஞ் சிறிய புறாக்கள்.
சிதாரைகளைத் தானியமணிகளெனக்
கொத்தத் துரத்தி
சிறகு நனைய ஓடி
அன்னையின் கழுத்தருகே
ஒடுங்குகிற குஞ்சுப்புறாக்கள்.
ஓயாமல் மொணமொணத்துக்கொண்டு
பதறிப் பதறிச் சிறகை உதறிக்கொண்டு
புறாக்களுக்கு என்னவோ மழையோடு கோபம்.
துடிக்கும் மணிக்கழுத்தை
அடிக்கடி அடிக்கடி திருப்பி
இறகுகள் கோதிக்கொள்ளும்
அவற்றினில் ஒன்றையள்ளி
என் கைகளின் வெம்மையைப் பகிர்ந்திடும்பொழுது
நிறைவெய்தட்டும் இந்நாள்.
மழையான மழையாகச் சீறியடிக்கிறதிம்மாலை.