பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

நட்சத்திரப் பாட்டிகள்

தை சொல்லும் பாட்டிகள்
வாய்க்காத பிள்ளைகள்
ஒதுக்கப்பட்ட தனியறையில்
கைப்பேசியில் விளையாடுகிறார்கள்.

சலித்த பொழுதில்
ஆளுயர டெடிபியரைக் கட்டிக்கொண்டு
கதை சொல்கிறார்கள்.

வெயிலோடு சினேகம் கொண்டு
வெளியில் சுதந்திரமாய் விளையாடும்
சக தோழர்களின்
உற்சாகக் குரல்களைக் கேட்டமாத்திரத்தில்
ஓட்டுக்குள் நத்தையெனச் சுருங்குகிறார்கள்.

தோட்டத்தில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
இவர்கள் நெஞ்சங்களிலும்
கொஞ்சம் மகிழ்ச்சி வண்ணத்தை
மிருதுவாய்த் தடவிவிட்டுப் போகின்றன.

இரவு மொட்டைமாடியில்
வானத்தை வெறித்தபடி
பரிதாபமாய்ப் பார்த்துப்
படியிறங்கும் அவர்களின்
ஏக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு
நிலவு இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு
இறங்கிவரும் நட்சத்திரப் பாட்டிகள்
கனவில் தங்கள் மடியமர்த்திக்
கதை சொல்லத் தொடங்குகிறார்கள்.

 - தமிழ்த்தென்றல்

மழைப் பறவை

ழையில் நனையத்துடிக்கும்
இந்த மனசுக்குக் குடையென்றும்
குடையில் ஒதுங்க நினைக்கும்
இந்த உடலுக்கு மழை என்றும்
பெயர் வைத்திருக்கிறேன்.

திடீர் மழையாய் வந்து நிற்கிறாய்
வானவில்லைப்போல வண்ணக்குடையுமாகிறாய்

குடையில் நனைந்த நான்
மழையைப் பிடித்துக்கொள்கிறேன்

ஒரு மழைப்பறைவையைப்போல
ஈரம் சிலுப்பிப் பறக்கப்போகுமெனக்கு
பரந்த வானமாகப்போகிறாய்.

- வலங்கைமான் நூர்தீன்

நிர்மலம்

றவையை
வரைந்து அழிக்கிறது குழந்தை
அழிகிறது வானம்!

- தக் ஷன், தஞ்சை

காகிதக்காடு

திக
கிளைகள் கொண்ட
அந்தக் கடையில்
நிறைய
பிளாஸ்டிக் குருவிகள்.

- அரவிந்தன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு