இடைவெளி

எம் மக்களின் முன்னால்
எல்லாம் இருந்தன
கண் திறந்தால் எல்லாம் மறைந்தன
கண் மூடினால் எல்லாம் துலங்கின
கரம் நீட்டினால் தொலைவு சென்றன
அண்டை வீட்டின் முற்றத்தில் பூத்த
நட்சத்திரப் பூக்களும்
கைகளால் எட்டிப்பிடிக்க முடியா
மாயவெளியில் திளைத்தன
எல்லாம் இருந்தன
எம் மக்களின் முன்னால்.

மண்
மண்ணிற்கு அடியில் இருந்தென்றாலும்
எழுந்து வருவோம்
நம்மீது விரிந்துகிடக்கும்
இருள் உறைந்த காலத்தை உதறித் திமிறி
மண்ணிற்கு அடியில் இருந்தென்றாலும்
எழுந்து வருவோம் எழுந்து வந்து
நாம் எட்டி உதைக்கவேண்டியதெல்லாம்
தனக்கேயான அந்த ஒரு கதவின்
தாழிட்ட முதுகினையே
பூமிக்குள் மீண்டும் வரும் அவ்வழியாகவே
எழுந்து வருவோம்.

பகல்

தீராத்துயரத்தின் கடற்கரையில்
எழுந்து நிற்கும்
ஒரு கலங்கரை விளக்கினால் மட்டுமே
சூரியன்வரை காண முடிகிறது.

கதவு

பகலும் இரவுமாய்த் திறக்கின்ற
வானத்தின் கதவுகளின் வழியாக
அவள் உடலில் உதிர்ந்து வீழ்ந்த
ஒரு நட்சத்திரம்
தன் யானையின் கால்கொண்டு
மனதின் நூறாயிரம் கதவுகளைப்
பெயர்த்தெடுத்த அந்த அந்திமாலை முதல்
வெளிச்சொல்ல இயலா அற்புதங்களை
உடலில் சுமக்கும் பெண்ணானாள் அவள்.

சொற்கள்

கீழே சிதறிக்கிடந்த ஒவ்வொரு நெல்லையும்
ஊசியால் குத்திச் சேகரித்த இவ்வாழ்வில்
யான் கண்டதெல்லாம்
பொன்மணிகளே
செரிக்கவும் இயலாது
தொலைக்கவும் முடியாது
நினைவில் அசையும் அந்த நெற்கதிர்களிடமே
திருப்பி அளிக்கவும் முடியாது
தவிட்டைச் சலித்து ஊதிக் கண்டடைந்த
அந்தப் பொன்மணிகள் எல்லாம்
சொற்களின் சொற்களே.

இடைவெளி

எம் மக்களின் முன்னால்
எல்லாம் இருந்தன
கண் திறந்தால் எல்லாம் மறைந்தன
கண் மூடினால் எல்லாம் துலங்கின
கரம் நீட்டினால் தொலைவு சென்றன
அண்டை வீட்டின் முற்றத்தில் பூத்த
நட்சத்திரப் பூக்களும்
கைகளால் எட்டிப்பிடிக்க முடியா
மாயவெளியில் திளைத்தன
எல்லாம் இருந்தன
எம் மக்களின் முன்னால்.

மண்
மண்ணிற்கு அடியில் இருந்தென்றாலும்
எழுந்து வருவோம்
நம்மீது விரிந்துகிடக்கும்
இருள் உறைந்த காலத்தை உதறித் திமிறி
மண்ணிற்கு அடியில் இருந்தென்றாலும்
எழுந்து வருவோம் எழுந்து வந்து
நாம் எட்டி உதைக்கவேண்டியதெல்லாம்
தனக்கேயான அந்த ஒரு கதவின்
தாழிட்ட முதுகினையே
பூமிக்குள் மீண்டும் வரும் அவ்வழியாகவே
எழுந்து வருவோம்.

பகல்

தீராத்துயரத்தின் கடற்கரையில்
எழுந்து நிற்கும்
ஒரு கலங்கரை விளக்கினால் மட்டுமே
சூரியன்வரை காண முடிகிறது.

கதவு

பகலும் இரவுமாய்த் திறக்கின்ற
வானத்தின் கதவுகளின் வழியாக
அவள் உடலில் உதிர்ந்து வீழ்ந்த
ஒரு நட்சத்திரம்
தன் யானையின் கால்கொண்டு
மனதின் நூறாயிரம் கதவுகளைப்
பெயர்த்தெடுத்த அந்த அந்திமாலை முதல்
வெளிச்சொல்ல இயலா அற்புதங்களை
உடலில் சுமக்கும் பெண்ணானாள் அவள்.

சொற்கள்

கீழே சிதறிக்கிடந்த ஒவ்வொரு நெல்லையும்
ஊசியால் குத்திச் சேகரித்த இவ்வாழ்வில்
யான் கண்டதெல்லாம்
பொன்மணிகளே
செரிக்கவும் இயலாது
தொலைக்கவும் முடியாது
நினைவில் அசையும் அந்த நெற்கதிர்களிடமே
திருப்பி அளிக்கவும் முடியாது
தவிட்டைச் சலித்து ஊதிக் கண்டடைந்த
அந்தப் பொன்மணிகள் எல்லாம்
சொற்களின் சொற்களே.