தொடர்கள்
Published:Updated:

தற்கொலைக் கடிதங்களுக்கு ஒற்று பார்ப்பவள்

தற்கொலைக் கடிதங்களுக்கு ஒற்று பார்ப்பவள்
பிரீமியம் ஸ்டோரி
News
தற்கொலைக் கடிதங்களுக்கு ஒற்று பார்ப்பவள்

தேவசீமா

ச்சியிலிருந்து
ஓசைபடாமல் சுழன்று சுழன்று
தரை தொடும் ஒரு மலரினைப்போல்
இருக்கட்டும் அவளின் தற்கொலை
விடுதலை
அவனாய் அதுவாய் வெளியாய்
மாற எத்தனம்கொண்டே இருக்கிறாள் அவள்
எத்தனை பேர் இருந்தும்
ஒரு கீறல்கூட இல்லை கண்ணாடியின் மீது
அது நொறுங்கிய ஓசை
யார் காதுக்கும் இல்லை என்பதை அறிவாள்
நொறுவல்களின்மேல் நடந்தே
அடைந்தாள் வெள்ளை நிற விடிமோட்சங்களை
துரோகங்கள் இழைக்கப்படுவதல்ல
ஏற்றுக்கொள்ளப்படுவது
என நம்பும் அவளின்
கடைசி அலைபேசி அழைப்பையாவது
நீங்கள் எடுத்திருக்கலாம்.

தற்கொலைக் கடிதங்களுக்கு ஒற்று பார்ப்பவள்

புறக்கணிப்பின் மொழி
பதிலற்ற மௌனம் என்பதை
அறியாத சிறுமியா நீ
தொடர்ந்து ஒலிக்கும் ஒரு பெயர்
நீ கவனிக்கப்பட ஏதுமில்லாத ஒருத்தி
என்ற உண்மையை உணர்த்தும் வேளையில்
உள்தாளிட்டு
கழுத்தில் சுருக்கிட்டுக்கொள்பவளின்
மனச்சாவி
தோட்டத்துப் புல்தரையில்
சத்தமேதுமின்றி வீசப்படுகிறது...