தொடர்கள்
Published:Updated:

ஹேப்பி இன்று முதல் ஹேப்பி

ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
பிரீமியம் ஸ்டோரி
News
ஹேப்பி இன்று முதல் ஹேப்பி

காலத்தச்சன், ஓவியம் : மணிவண்ணன்

ஹேப்பி இன்று முதல் ஹேப்பி

நெஞ்சில் பழமரம் நடு
பறவைகள் வந்து பாடுமென்றான் கீழைத்தேய ஞானி
நம்பி நட்ட மறுகணம்
அடிமரமதிர்ந்தது

கொழுந்துதிர
பூவுதிர
பிஞ்சுதிர
தாடைதாண்டி காது நீண்ட ததாகதன்
நெஞ்சிலறைந்தபடி எழுந்தோடினான்
வீட்டின் மென்னிவரை
அதிகரிக்கத் தொடங்கியது சருகுக்கடல்
புகைபோக்கியின் வழியே
ஜூட்விட்டாள் மனைமாட்சியொழுகும் மாதரசி
தாள்படகேறித் தப்பியோடின குழந்தைகள்
நாய்வேடம் தரித்த தர்மதேவதையும்
விட்டேன் சவாரியென வெளிக்கிட்டது

ஹேப்பி இன்று முதல் ஹேப்பி

மரமென்று ஒன்றிருந்தால்
ஓயாமல் கிளை உலுக்கும்
பித்தேறிய மந்தியும்
அண்டும்தானே

பித்தேறிய மந்தியுடன் ஃபிரண்ட்ஷிப் வைத்துக்கொண்டால்
அன்றாடம் என் வாழ்வில்
இன்பம்தானே.

ஹேப்பி இன்று முதல் ஹேப்பி

சிறிய இடைவேளைக்குப் பிறகு

ரவமற்ற புதர் முடுக்கில்
அன்றலர்ந்த பூவுடம்பில்
சுற்றிய துகில் கிழித்து
நிசிநாய்கள் குதறிவைக்க
ஒரு கண்ணைக் குடைந்து
மறுகண்ணில் வெளியேறும்
செவ்வெறும்பு நிரல் வரிசை…
இழவு சொன்ன வேதவல்லி
விளம்பர இடைவேளைக்குப் பிறகு
விரிவாகப் பார்க்கலாமென்றாள்
பார்ப்பதற்குமுன்
மறவாமல் உன்
இதழ் விளிம்பில் ஒட்டியிருக்கும்
துணுக்குச் சதையை
துடைத்துக்கொள் வேதவல்லி.