எனக்குத் திருமணமாகி சரியாக ஒரு வாரம் கழித்து, ஆனந்த விகடனில் எனது புகைப்படத்தோடு என் காதல் கவிதை பிரசுரமாகியிருந்தது.

என் புத்தம் புது மனைவி நந்தினியிடம் காண்பிப்பதற்காக ஆவலோடு சமையலறைக்குச் சென்றேன். அடுப்பில் பாலை வைத்திருந்த நந்தினியை அப்படியே பின்னாலிருந்து இறுகக் கட்டிப்பிடிக்க… அவள், “அய்யோ… உங்கம்மா வந்துடப்போறாங்க” என்று சிணுங்கினாள்.

“அம்மா தெருவுல காய்கறி வாங்கிட்டி ருக்காங்க” என்று அப்படியே அணைத்தபடி விகடனைப் பிரித்துக் காண்பித்தேன். “ஐ… உங்க போட்டோ” என்று வேகமாக புத்தகத்தை வாங்கி, எனது புகைப்படத்தைப் பார்த்தாள். திரும்பி என் முகத்தை ஒரு முறை பார்த்தாள். அவள் முகத்தில் பெருமை பொங்கி வழிந்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சட்டென்று முகத்தை மாற்றிக்கொண்டு, “அந்த காபித்தூள எடுங்க” என்று பேச்சை மாற்றினாள். மனைவிகள் அவ்வளவு எளிதில் கணவர்களின் வெற்றிகளை அங்கீகரிக்கமாட்டார்கள்.

தமிழில் காதல் கவிதை உலகில், எனக்கென்று ஒரு தனிப்பெயர் உள்ளது. ஒரு பிரபல வார இதழில், நான் ஆறு மாதங்கள் எழுதிய காதல் கவிதைத் தொடர் சூப்பர் ஹிட்டாக… நாளது தேதியில் தமிழின் முன்னணி காதல் கவிஞர்களில் ஒருவன் நான். இது வரையிலும் ஆறு புத்தகங்கள் வந்திருக்கின்றன. அந்தப் புத்தகங்களுக்கு இளைய தலைமுறை வாசகர்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருக்கிறது.

நந்தினி புத்தகத்தை மூட, “கவிதைய படிக்கல?” என்றேன்.

“அய்யோ… எனக்கு கவிதைல்லாம் படிச்சா, தூக்கம் தூக்கமா வரும்” என்று கூறியவள், திடீரென்று வாயைப் பொத்திக்கொண்டு, “ஆ… என்று கத்தினாள்.

“ஏய்… என்னாச்சு?”

“யாரோ எங்கயோ என்னைத் திட்டுறாங்க… என்றாள்.

“என்ன உளர்ற?”

“நாக்கக் கடிச்சுக்கிட்டேன். நம்ம திடீர்னு நாக்கக் கடிச்சுக்கிட்டா, யாரோ நம்மள திட்டுறாங்கன்னு அர்த்தம்” என்ற என் ப்ளஸ் டூ பெயில் கிராமத்து மனைவியை உற்றுப் பார்த்தேன். இவளை அழைத்துக்கொண்டு போய், சென்னையில் தனிக்குடித்தனம் வைக்கவேண்டும் என்று நினைத்தபோது கவலையாக இருந்தது. இருந்தாலும் அவளுடைய குழந்தைத்தனத்தை ரசித்தபடி, “இந்த மாதிரி நம்பிக்கைல்லாம் உனக்கு இருக்கா?’’ என்றேன்.

“பின்ன… உங்க வீடு மாதிரியா?”

“ஏன், எங்க வீட்டுல என்ன?”

“உங்கம்மா காலைல எந்திரிச்சவுடனே, நிலைவாசக்கதவத் திறக்காம, கொல்லைக் கதவத் திறந்து, டாய்லெட் போய்ட்டு வந்து, அப்புறம்தான் நிலைவாசக்கதவத் திறக்குறாங்க.”

“அதனால என்ன?”

“ம்… காலைல நிலைவாசக் கதவத் திறந்து வைக்கிறப்ப லட்சுமி வருவா?”

“எந்த லட்சுமி?”

“ம்… செல்வத்தின் அதிபதி லட்சுமி. அப்ப நீங்க கொல்லக் கதவ திறந்து வச்சிருந்தா, லட்சுமி வீட்டுல தங்கமாட்டா. கொல்ல வாசல் வழியா வெளிய போயிடுவா. அதனால எங்க வீட்டுல முதல்ல நிலைவாசக்கதவத் திறந்துட்டு, அப்புறம்தான் கொல்லக் கதவத் திறப்போம்” என்றாள். ஆனால் நந்தினியின் வீட்டில் இருக்கும் வசதிகளைப் பார்த்தால், அப்படி ஒன்றும் லட்சுமி அவர்கள் வீட்டில் நீண்ட நாள்கள் தங்கியதாகத் தெரியவில்லை.

அன்றிரவு நானும், நந்தினியும் படுக்கையறையில் சிரித்து, முத்தமிட்டு, அணைத்து… வியர்த்து… ஓய்ந்தபோது… இரவு மணி ஒன்று. எனது நெஞ்சில் சாய்ந்திருந்த நந்தினியின் நெற்றிக்குங்குமம் வியர்வையில் லேசாகக் கரைந்திருந்தது. நான் என் சுண்டுவிரலால் அந்த ஈரக்குங்குமத்தை இழுத்து மூக்கு வழியே வந்து, விரலை உதட்டில் நிறுத்தியபோது அவள் நறுக்கென்று என் விரலைக் கடிக்க… நான், “ஆ… என்று கத்தினேன்.

சிரித்தபடி நந்தினி, “ஆமாம்… நீங்க காதல் கவிதைங்க மட்டும்தான் எழுதுவீங்களாமே…” என்றாள். அவள் உதட்டில் தீற்றலாய் ஒட்டிக்கொண்டிருந்த குங்குமச் சிவப்பை ரசித்தபடி, “யாரு சொன்னா?” என்றேன்.

“என் ஃப்ரெண்டு திவ்யா. அவ உங்க கவிதைல்லாம் படிச்சிருக்காளாம்” என்றவள் நிமிர்ந்து தலைமுடியை உதறிக் கொண்டை போட்டபடி, “நீங்க எப்ப கவிதை எழுத ஆரம்பிச்சீங்க?” என்றாள்.

“பத்தாவது படிக்கிறப்ப. முதல்ல சினிமாப் பாட்டு மெட்டுக்கெல்லாம் நானே சொந்தமா பாட்டு எழுதுவேன். பசங்க நல்லாருக்குன்னு ஏத்திவிட்டானுங்க. அப்படியே கவிதைல இறங்கிட்டேன். அந்த வயசுல, பொம்பளன்னா பெரிய போதைல்ல? அதனால பொம்பளைங்க அழக வர்ணிச்சுக் கவிதை எழுத ஆரம்பிச்சேன். அப்படியே இதுவரைக்கும் கொண்டு வந்து விட்டுருச்சு. ஆனா ஒரு விஷயம் தெரியுமா? அப்படி கவிதைல்லாம் எழுதலன்னா, உன்னைக் கல்யாணம் பண்ணியிருப்பனான்னு தெரியல.”

“ஏன்?”

“நான் கவிதை எழுதுறப்ப, சும்மா மொட்டையா ஒரு பொண்ண வர்ணிச்சு எழுதமாட்டேன். எனக்குன்னு ஒரு காதலி இருக்கிறதா கற்பனை பண்ணிப்பேன். அவளுக்குக் கற்பனையா ஒரு பேர் வச்சு, முதல் வரில அந்தப் பேர எழுதிட்டுதான் கவிதை எழுதுவேன். அப்படி என்னோட கற்பனைக் காதலிகள்ல, ரெண்டாவது பொண்ணு பேரு நந்தினி… ” என்றவுடன் அவள் என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

“நிஜமாவா சொல்றீங்க?”

“ஆமாம்… எனக்கு இப்ப கல்யாணத்துல இன்ட்ரஸ்ட்டே இல்ல. வேண்டாம்னுதான் சொல்லிட்டிருந்தேன். அப்பதான் அம்மா உன் பேரச் சொன்னாங்க. எனக்கு பயங்கர சர்ப்ரைஸ்… நான் வரிஞ்சு வரிஞ்சு கற்பனையா எழுதின பேருல ஒரு பொண்ணு. இது கடவுள் விதிச்சதுன்னு மனசுல தோணுச்சு.”

“ஏன்?”

“ஏன்னா…” என்ற நான் ஒரு விநாடி தயங்கினேன். அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டிருந்த விஷயம்தான். இருந்தாலும் யோசனையாக இருந்தது. தயக்கத்துடன், “உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நீ எப்படி எடுத்துப்பன்னு தெரியல…”

“பரவால்ல… சொல்லுங்க.”

“ஆக்சுவலா ரெண்டாவதாதான் உன் பேரு. அதுக்கு முன்னாடி கார்த்திகாங்கிற கற்பனைப் பொண்ணு பேர வச்சு எழுதிட்டிருந்தேன். ஆனா அந்தக் கவிதைங்க எழுதுன பீரியட்ல அப்படி யாரையும் பாக்கவே இல்ல. அப்புறம் மெட்ராஸ்ல வேலைல சேர்ந்தப்ப ஆபீஸ்ல கார்த்திகாவ பார்த்தேன்…” என்றுவிட்டு சில விநாடிகள் அவள் முகத்தைப் பார்த்தேன். பிறகு, “நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணோம்…” என்றவுடன் அவள் முகம் அழுவது போல் மாறியது.

நந்தினியின் கண்கள் கலங்க, “நிறைய காதல் கவிதைங்க எழுதுவீங்கன்னு சொன்னப்பவே நினைச்சேன்… இப்படி எதாச்சும் தலைல குண்டப் போடுவீங்கன்னு…” என்று வேகமாக எழுந்தாள். அப்படியே அவளை இழுத்து, “ஏய்… நான் நினைச்சிருந்தா இதை மறைச்சிருக்கலாம். உன்கிட்ட உண்மையா இருக்கணும்னு தோணுச்சு. அதான் சொல்றேன்” என்றேன்.

“அந்தப் பொண்ண ஏன் கல்யாணம் பண்ணிக்கல?” என்றாள் அவள் கண்களைத் துடைத்தபடி.

“அவ… பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணு. அவங்க வீட்டுல ஒத்துக்கல. வேற ஒருத்தனோட கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க…” என்றவுடன் அவள் நிமிர்ந்து என் கண்களைப் பார்த்து, “இப்பவும் அவள நினைச்சுப்பீங்களா?” என்றபோது அழுதுவிட்டாள்.

“சீ… அதெல்லாம் ஏழெட்டு வருஷம் பழைய கதை…” என்ற நான் அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி, “இப்ப… இப்படி தேவதை மாதிரி எனக்கு ஒரு பொண்ணு கிடைச்சிருக்கு. அவள நினைப்பனா?” என்று கூறிய பிறகும், அவள் தொடர்ந்து அழுதாள். நான், “ஏய்… அழாத…” என்றபடி அவளை இறுக அணைக்க… அவள் தொடர்ந்து அழுதாள். நான் மேலும் இறுக அணைத்து ஆறுதல் கூற… ஒரு கட்டத்தில் அழுகை நின்று …………

எல்லா ஊடல்களும் கடைசியில் கூடலில்தானே முடியும்!

மறுநாள் காலை நந்தினி தலைக்குக் குளித்திருந்தாள். கூந்தலை முன்னால் போட்டுக்கொண்டு, கூந்தல் நுனியிலிருந்து ஈரம் சொட்டச் சொட்ட அழகாக வந்து நின்றாள். இழுத்து அவளை இறுக்கிக்கொண்டேன். அவள் தனது கூந்தல் நுனியை என் கன்னத்தில் வைத்து இழுத்துக் கோலம் போட… கன்னம் சில்லென்றது. சட்டென்று என்னிடமிருந்து விலகிய நந்தினி, “ஆமாம்… ரெண்டு பொண்ணுங்க பேர வச்சுதான் கவிதை எழுதினீங்களா? இல்ல… இன்னும் நிறைய பொண்ணுங்க பேர வச்சு கவிதை எழுதியிருக்கீங்களா?” என்றாள்.

“நிறைய பொண்ணுல்லாம் இல்ல. மொத்தம் மூணு பொண்ணு பேர வச்சு எழுதினேன். அவ்வளவுதான். அப்புறம் பேர்லாம் வைக்காமலே எழுத ஆரம்பிச்சுட்டேன்” என்றவுடன் நந்தினியின் முகத்தில் ஒரு மாற்றம். வேகமாக, “அந்த மூணாவது பொண்ணு பேரு என்ன?” என்றாள்.

“பூஜா. ஏன் கேக்குற?” என்றேன்.

“அப்பாடா… எங்க என் தங்கச்சி பேரு… இல்ல… என் ஃப்ரெண்டுங்க பேரு யாரையாச்சும் சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன். உங்க ஆபீஸ்ல யாராச்சும் பூஜான்னு இருக்காங்களா?”

நான் சிரித்துக்கொண்டே, “இல்ல…” என்றேன். அவள் முகத்தில் நிம்மதியுடன், “மெட்ராஸ்ல வீடு பாக்க ஆரம்பிச்சிட்டீங்களா?” என்றாள்.

“இல்ல… லீவு முடிஞ்சு போயிதான் பாக்கணும்.”

“தெற்கு பாத்த வீடு வேண்டாம்.”

“ஏய்… மெட்ராஸ்ல வீடு கிடைக்கிறதே பெரும்பாடு. இதுல இந்த கண்டிஷன் எல்லாம் போட்டா சாமான்யமா வீடு கிடைக்காது…”

“ம்ஹ்ம்… தெக்கு பாத்த வீடுன்னா நான் வரவே மாட்டேன்” என்று பிடிவாதமாக இருக்க… நான் ஒப்புக்கொண்டேன். கடைசியில் எப்போதும் மனைவிகள்தான் ஜெயிக்கிறார்கள்.

ஒரு மாத கால தேடலுக்குப் பிறகு, கே.கே. நகரில், கிழக்கு பார்த்த ஒரு வீட்டைப் பார்த்தேன். தனி வீடு. கீழே ஹவுஸ் ஓனர். நாங்கள் மாடியில். தினமும் பைக்கில் அலுவலகம் போய், புதுமனைவி சமைத்த சுமாரான உணவை, ‘சூப்பர்’ என்று கூசாமல் பொய் சொல்லி சாப்பிட்டு, சீக்கிரம் வீட்டுக்கு வந்து, சீக்கிரம் படுத்து, தாமதமாக எழுந்து, என் மனைவி கர்ப்பமாகி… ஏழு மாதம் வரை எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

அன்று மாலை, அந்தப் பிரபல வார இதழின் உதவி ஆசிரியரிடமிருந்து போன்.

“வினோத்… அடுத்த வாரம் வேலன்டைன் டே ஸ்பெஷல் இஷ்யூ போடுறோம். எல்லாப் பக்கத்துலயும் உங்க கவிதை வருது” என்றார். “எல்லாப் பக்கத்துலயுமா?” என்று உற்சாகத்தில் கூவினேன்.

“ஆமாம்… ஒவ்வொரு கவிதையும் பத்து லைனுக்கு மேல போகாம பாத்துக்குங்க.”

“ஓகே சார்…’’ என்று மகிழ்ச்சியுடன் போனை வைத்துவிட்டு நந்தினியிடம் விஷயத்தைச் சொன்னேன். அவள் வழக்கம்போல், “எவ்வளவு பணம் தருவாங்க?” என்றபோது காலிங்பெல் அடித்தது.

நான் கதவைத் திறந்தேன். வெளியே ஹவுஸ் ஓனரம்மா நின்றுகொண்டிருந்தார். பின்னால் புன்னகையுடன் ஓர் இளம் பெண். அந்த இளம் பெண்ணை முதல் பார்வையில் அழகி என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ஈரம் பளபளக்கும், உணர்வுபூர்வமான அந்த அகன்ற கண்களையும், உதட்டிலிருந்து இல்லாமல், உள்ளத்திலிருந்து சிரிக்கும் அந்த மனப்பூர்வமான புன்னகையையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் ‘அழகி’ என்று சொல்லிவிடலாம்.

நந்தினி, “உள்ள வாங்கம்மா…” என்றுகூற… வீட்டுக்காரம்மா உள்ளே வந்தார். பின்னால் திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்து, “வா பூஜா…” என்று கூற… எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. வேகமாகத் திரும்பி நந்தினியைப் பார்த்தேன். முகம் வெளுத்துப்போயிருந்த நந்தினி, “பூஜாவா?” என்று கிட்டத்தட்ட கத்திவிட்டாள்.

வீட்டுக்காரம்மா, “ஏன் கேக்குறீங்க?” என்றார் கண்களில் குழப்பத்துடன். நந்தினி சமாளித்துக்கொண்டு, ‘இல்ல… அந்தப் பேரு எனக்கு ரொம்பப் பிடிக்கும். வாங்க…’’ என்றாள்.

எனக்கு உள்ளுக்குள் ஒரே பரபரப்பு. என் கவிதைப் பெண்கள் எல்லாம் வரிசையாக உயிர்பெற்று வருவதைப் பார்த்தால், நிச்சயம் அதில் ஏதோ விஷயம் இருக்கிறது. சே… இது மட்டும் முன்பே தெரிந்திருந்தால் நடிகைகள் அதிதி ராவ், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் பெயர்களில் எல்லாம் கவிதை எழுதியிருப்பேன்.

உள்ளே வந்து அவர்கள் அமர… அந்தப் பெண் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

வீட்டுக்காரம்மா, “இது என் தங்கச்சி பொண்ணு. ஊரு தஞ்சாவூர். இங்க ஐடி கம்பெனில வேல கிடைச்சு, .இன்னைக்கிதான் ஜாயின் பண்ணா. இங்கதான் தங்கியிருக்கா. காலைலயே உங்களப் பாத்துட்டு, இவர எங்கயோ பாத்த மாதிரி இருக்குன்னு சொல்லிட்டிருக்கா.”

இப்போது பூஜா, “நேர்ல பாத்ததில்ல… ஆனா முகம் ரொம்ப ஃபெமிலியரா இருக்கு. நீங்க டிவி விவாத நிகழ்ச்சிகள்ல வருவீங்களா?”

“இல்ல. ஆனா ஒரே ஒரு இன்ட்டர்வியூ கொடுத்திருக்கேன். நீங்க புக்ஸ்லாம் வாசிப்பீங்களா?” என்றேன்.

“ம்… எல்லா மேகஸினும் படிப்பேன்”

“கவிதைல்லாம் வாசிப்பீங்களா?”

“ம்… கவிதைன்னா… அதுவும் காதல் கவிதைன்னா எனக்கு உசுரு…” என்றவள் சட்டென்று முகம் மலர்ந்து, சார், “நீங்க கவிஞர் வினோத்குமார்தானே…” என்றாள். நான் சந்தோஷத்துடன், “ஆமாம்…” என்றேன். அவ்வளவுதான். அவள் வேகமாக எழுந்து பயங்கரப் பரவசத்துடன், “ஓ மை காட்… கவிஞர் வினோத்குமாரா? அய்யோ… கடவுளே… இது நிஜம்தானே… என்று சிறுகுழந்தைபோல் கையில் கிள்ளிப் பார்த்துக்கொண்டாள். பெண்கள் வளர்ந்த பிறகும், ஆண்களின் முன்னால் எப்போதும் சிறுவயதுப் பெண்கள் போலவே நடந்துகொள்ள விருப்பப்படுவார்கள்.

நான் நந்தினியைப் பெருமையுடன் பார்த்தபடி, “உக்காருங்க… என் புக்ஸெல்லாம் படிச்சிருக்கீங்களா?”

“உங்க ஆறு புக்கும் படிச்சிருக்கேன். அதுல உங்க போட்டோவ பாத்துருக்கேன். அய்யோ… ஐ ஜஸ்ட் கான்ட் பிலீவ் இட். இப்ப நான் என்னோட ஃபேவரைட் பொயட் வினோத்குமார் முன்னாடி உக்காந்தா பேசிக்கிட்டிருக்கேன்? கடவுளே… எனக்கு என்ன பண்றதுன்னே புரியலையே…” என்று நான்கு ஜோதிகா போல் முகத்தில் ரியாக்ஷன் காட்ட… நந்தினி எங்களையே முறைத்துக்கொண்டிருந்தாள்.

“என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேரு உங்க ஃபேன்…’’ என்று தொடங்கிய அந்த உரையாடல் அரை மணி நேரம் நீண்டது.

அவர்கள் சென்ற பிறகு வேகமாகக் கதவைச் சாத்திய நந்தினி, “எதுக்கு அவ்ளோ நேரம் அவள்ட்ட பேசுனீங்க?” என்றாள்.

“ஏய்… என் கவிதைங்களோட ரசிகை அவள். அதுக்கு ஒரு மரியாதை கொடுக்க வேணாமா?”

“அதுக்கு ஏன் அப்படிச் சிரிச்சுச் சிரிச்சுப் பேசணும்? அவ உங்க சுமாரான ஜோக்குக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கிறா. நீங்க… அவளோட மொக்கை ஜோக்குக்குக்கூட சிரிக்கிறீங்க… வாசப்படி வரைக்கும் போய் வழியனுப்பி வைக்கிறீங்க. என்ன இருந்தாலும் ஆம்பள சபலபுத்தி விடுமா?”

“சீ… பைத்தியம் மாதிரி பேசாத.”

“எனக்குத் தெரியும். முத ராத்திரியன்னிக்கு நீங்க கமலஹாசன ரொம்பப் பிடிக்கும்னு சொன்னப்பவே. நான் சந்தேகப்பட்டேன். அப்படியே ஆயிடுச்சு.”

“ஏய்… இதுக்கு ஏன்டி கமல எல்லாம் இழுக்குற?”

“கமல விடுங்க. நம்ம மெட்ராஸுக்குக் குடி வந்த புதுசுல, ஒரு எழுத்தாளர் சாவுக்குப் போய்ட்டு வந்து, அவருக்குக்கூட ரெண்டு சம்சாரம்னு சொன்னீங்களே… யாரு அவரு?”

“பாலகுமாரன்…”

“ம்… அவுரு எழுத்துன்னா உங்களுக்குப் பைத்தியம்னீங்க. அவ்ளோ ஏன்? போன மாசம் டிவில இன்டர்வியூ கொடுத்தப்பகூட, பிடிச்ச டைரக்டர் பாலுமகேந்திரான்னீங்க. என்னைக்காச்சும் நீங்க, ஒரு பொண்டாட்டியோட குடும்பம் நடத்துற ஆம்பளய பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்கீங்களா?” என்றாள் அதிரடியாக. இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், நான் சில விநாடிகள் பாக்யராஜ்போல் திருதிருவென்று விழித்தேன். சில விநாடிகள் அமைதிக்குப் பிறகு, “அய்யோ… இப்ப என்னை என்ன பண்ணச் சொல்ற?” என்று சரண்டர் ஆனேன்.

“உங்க முதல் ரெண்டு கவிதைப் பொண்ணுங்களும், உங்க வாழ்க்கைல காதலியா, மனைவியா வந்துட்டாங்க. இப்ப மூணாவது பொண்ணு, உங்க சின்ன வீடா வந்துருமோன்னு பயமா இருக்கு.”

இதைக் கேட்டபோது உள்ளுக்குள் சற்று கிளுகிளுப்பாக இருந்தாலும், “என் மேல நம்பிக்கையில்லையா நந்தினி?” என்றேன்.

“அப்பன்னா… நான் சொல்றபடி செய்ங்க. அந்தப் பொண்ணுகிட்ட அதிகமா பேச்சு வச்சுக்காதீங்க.”

“அவ்ளோதான, விடு…’’ என்று அப்போதைக்கு சண்டையை முடித்து வைத்தேன்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, கதவு தட்டப்பட்டபோது நான் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தேன். தனது ஏழு மாத வயிற்றைத் தூக்கிக்கொண்டு நந்தினி மெதுவாக நடந்து சென்று கதவைத் திறக்க… வெளியே பூஜா.

“ஸாரி… உங்கள சன்டேல தொந்தரவு பண்றேன்…’’

“பரவால்ல… வா… வாங்க…” என்று இயந்திரம்போல் சிரித்துக்கொண்டு வரவேற்றாள் நந்தினி. உள்ளே நுழைந்த பூஜா, ஒரு பெரிய பளபளப்பான பேனாவை எடுத்து நீட்டியபடி, “ஒரு மகா கவிஞனுக்கு ஒரு எளிய வாசகியோட கிஃப்ட்…” என்று நாடகத்தனமாகக் கூறி அளிக்க… எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. உடனே நந்தினி என் புல்லரிப்பை நிறுத்தும் விதமாக, “அவரு பேப்பர்ல எழுதமாட்டாரு. கம்ப்யூட்டர்லதான் எழுதுவாரு” என்றவுடன் பூஜாவின் முகம் மாறியது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, “பரவால்ல… எழுத்தாளருக்கு பேனாதான் கிஃப்ட் கொடுக்கணும்” என்றாள்.

பேனாவை வாங்கிப் பார்த்த நான், “அய்யோ… விஸ்கான்டியா? பயங்கர காஸ்ட்லியா இருக்குமே…” என்று கூற… “ஆமாம்… செவன் தௌசன்ட் ருப்பீஸ்…” என்றாள் பூஜா.

“ஏழாயிரம் ரூபாயா? ஆத்தி…” என்று நந்தினி மலைத்துப்போனாள். பூஜா நந்தினியை உற்றுப் பார்த்தபடி, “உங்க ஹஸ்பெண்டுக்கு விலைமதிப்பே கிடையாதுங்க. உண்மையச் சொல்லணும்னா உங்களப் பாத்தா பொறாமையா இருக்குங்க” என்று கூற… நந்தினியின் முகத்தில் டென்ஷன் ஏறியது. பிறகு பூஜா என்னிடம் ஒரு சிறிய டைரியை நீட்டி, “சார்… எனக்கு ஒரு ஆசை… நான் வாங்கித் தந்த பேனாவுல நீங்க இதுல ஒரு கவிதை எழுதித் தரணும்” என்றாள்.

“அய்யோ… நான் காதல் கவிதைதாங்க எழுதுவேன்…”

“பரவால்ல… எழுதித் தாங்க. ப்ளீஸ்… உங்க ஒய்ஃபை நினைச்சுக்கிட்டு எழுதித் தாங்க” என்றவுடன் நான் நந்தினியைப் பார்த்தேன். நந்தினியைப் பார்த்தால் கவிதை வரவில்லை. அவள் கண்களிலிருந்து நெருப்புதான் வந்தது. இருந்தாலும் நந்தினியைப் பார்த்துக்கொண்டே யோசித்தேன்.

வார்த்தைகளே இல்லாத
கவிதை இருக்கிறதா
என்றாள் நந்தினி.
கண்ணாடியில் அவள் முகத்தைக்
காண்பித்தேன்.

என்று எழுதிவிட்டு பூஜாவிடம் டைரியை நீட்டினேன். பூஜா அதை வாங்குவதற்குள், குறுக்கே கையை நீட்டி டைரியை வாங்கிய நந்தினி, அந்தக் கவிதையைப் படித்துவிட்டு பூஜாவிடம் தந்தாள். பூஜா, “வாவ்… ஒரே நிமிஷத்துல ஒன்டர்ஃபுல் கவிதை. ஐ சிம்ப்ளி லவ் திஸ்…” என்ற பூஜா மேலும் ஒரு நிமிடம் என்னைப் புகழ்ந்துவிட்டுதான் கிளம்பினாள். வாசலருகில் சென்ற பூஜா நந்தினியைப் பார்த்து, “இது எத்தனாவது மாசம்?” என்றாள்.

“ஏழாவது மாசம்” என்றாள் நந்தினி.

“பிரசவத்துக்கு ஊருக்குத்தானே போவீங்க…’’

“ஆமாம். ஏன் கேக்குறீங்க?”

“சும்மாதான் கேட்டேன். பை…” என்று கூறிவிட்டு பூஜா சென்றாள்.

வேகமாக என்னை நோக்கி வந்த நந்தினி, “போச்சு… எல்லாம் போச்சு” என்றாள்.

நான் கடுப்புடன், “என்ன போச்சு?” என்றேன்.

“அவ பிரசவத்துக்கு ஊருக்குத்தானே போவீங்கங்கறா. நான் வேற அடுத்த மாசம் பிரசவத்துக்குப் போயிடுவேன். அவ வேற உங்க மேல பைத்தியமா இருக்கா. என்னமோ நடக்கப்போகுது. முதல்ல இந்த வீட்டக் காலி பண்ணிட்டு, வேற வீட்டுக்குப் போவோம்” என்றாள்.

நான், “உன்னோட கற்பனை பயத்துக்கெல்லாம் வீட்ட மாத்த முடியாது நந்தினி” என்றபோது என் மொபைல் போன் அடித்தது. புதுக்கோட்டையிலிருந்து என் பெரிய அக்கா. நான் மொபைலை ஆன் செய்ய… அக்கா, “டேய்… கே டிவி பாருடா… ” என்று போனை வைத்துவிட்டாள். நான், ”கே டிவில படம்தானே போடுவாங்க… என்று ரிமோட்டில் கே டிவியை வைத்தேன். அதில் பாக்யராஜின் ‘சின்ன வீடு’ படம் ஓடிக்கொண்டிருந்தது. “சின்ன வீடு” என்று நந்தினியைப் பார்த்துச் சிரித்தேன்.

“இந்தப் படத்த ஏன் உங்கக்கா பாக்கச் சொல்றாங்க.”

“நான் எங்கம்மா வயித்துல நிறைமாசமா இருந்தப்ப, நடராஜா தியேட்டர்ல ‘சின்ன வீடு’ படம் பாக்கப் போயிருக்காங்க. அப்ப திடீர்னு பிரசவ வலி வந்து ஒரே கூப்பாடு. படத்துக்கு வந்திருந்த ஒரு லேடி டாக்டர், தியேட்டர்லயே மேனேஜர் ரூம்ல வச்சு பிரசவம் பாத்தாங்களாம். அதனால டிவில எப்ப ‘சின்ன வீடு’ போட்டாலும் எனக்கு போன் பண்ணி சொல்வாங்க” என்றவுடன் அதிர்ந்துபோன நந்தினி, “சின்ன வீட்டுலயா நீங்க பொறந்தீங்க?” என்றாள் சத்தமாக.

“சின்ன வீட்டுல இல்லடி. நடராஜா தியேட்டர்ல…”

“அய்யோ… மகமாயி… எல்லாம் தப்பு தப்பா நடக்குதே… எந்த சீன்ல பொறந்தீங்கன்னு தெரியுமா?”

“ம்… அப்பா சொல்லியிருக்காரு. மேனேஜர் ரூம்ல வசனம்லாம் நல்ல தெளிவா கேட்டுருக்கு. கல்பனா பாக்யராஜ்கிட்ட, “நீங்க வேணும்னா சின்ன வீடு வச்சுக்குங்க மாமா’’ன்னு சொன்னப்ப பிறந்தேனாம்…” என்றதுதான் தாமதம். “டேய்…” என்று பாய்ந்து என் தலைமுடியைப் பிடித்து உலுக்கிய நந்தினி, “இதெல்லாம் ஏன்டா கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லல?” என்றாள்.

“ஏய்…” என்று அவள் கையை விலக்கிய நான், “இதெல்லாம் சொல்வாங்களா?” என்றேன்.

“போச்சு… என் வாழ்க்கையே நாசமாப்போயிடுச்சு” என்ற நந்தினி மேற்கொண்டு ஒன்றும் பேசாமல், எனது பக்கத்தில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

அவள் தோளை அணைத்த நான், “ஏய்… லூசு… இவ்ளோ அழகா ஒரு பொண்டாட்டி இருக்கிறப்ப நான் ஏன் இன்னொருத்திய பாக்கப்போறேன்…’’ என்றேன். உடனே எதிரேயிருந்த கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்துக்கொண்ட நந்தினி, “இருந்தாலும் இந்த ஆம்பளைங்கள நம்பமுடியாது. எங்கம்மா அடிக்கடி, ‘கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும், ஆம்பளைங்க எலி மாதிரி ஒரு வப்பாட்டி வச்சுப்பாங்க’ன்னு சொல்வாங்க…’’

“அதெல்லாம் அந்தக் காலம் நந்தினி… இப்பல்லாம் ஒரு பொண்டாட்டியவே சமாளிக்க முடியல…” என்று அவளை உற்றுப் பார்த்துக்கொண்டு கூற… அவள், “என்னைத்தானே சொல்றீங்க…” என்று என் நெஞ்சில் ஓங்கி அடித்தாள். அவள் கையைப் பிடித்த நான், “என் மேல நம்பிக்கை வை நந்தினி. நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா? அந்தக் கவிதைய பாத்தீல்ல?” என்றேன்.

“நிஜமா அந்தக் கவிதைய என்னை நினைச்சுட்டுதான் எழுதினீங்களா?” என்றாள்.

“அதுல என்ன சந்தேகம்?”

“சத்தியமா?” என்று கையை நீட்டினாள்.

“நம்ம புள்ள மேல சத்தியமா…’’ என்று நந்தினியின் வயிற்றில் கையை வைத்து சத்தியம் செய்தேன். லேசாக சிரித்த நந்தினி, “சரி, அந்தக் கவிதைக்கு என்ன அர்த்தம்?” என்று கேட்க… நான், “கடவுளே… என்னைக் காப்பாத்து” என்று கத்தினேன்.

மறுநாள் காலை நான் அவசர அவசரமாக அலுவலகத்திற்குக் கிளம்பிக்கொண்டிருந்தேன். குளித்துவிட்டு ஹாலுக்கு வந்த நான், வேகமாக தேங்காய் எண்ணெயைக் கையில் ஊற்றினேன். சட்டென்று ஏராளமான எண்ணெய் என் கையில் கவிழ்ந்து, வேகமாக தரையில் சிந்திவிட்டது. நான், “நந்தினி… தேங்காய் எண்ணெய் கீழ ஊத்திருச்சு பாரு…” என்றேன்.

அப்போது வேகமாக எங்கள் வீட்டுக்குள் நுழைந்த பூஜா, பரபரப்புடன் கையில் ஆனந்த விகடன் இதழை விரித்தபடி, “சார்… இந்த வார விகடன்ல உங்க கவிதை…” என்றவள், நான் சற்றும் எதிர்பாராத விதமாக, தேங்காய் எண்ணெயைக் கொட்டியிருந்த இடத்தில் காலை வைத்துவிட்டாள். அடுத்த நொடியே பூஜா கால் வழுக்கி பக்கவாட்டில் சரிய… நான் அனிச்சையாகப் பாய்ந்து அவளைப் பிடிக்கப்போனேன். அப்போது கிச்சனிலிருந்து வந்த நந்தினி இதைப் பார்த்து அரண்டுபோய், “அய்யோ…’’ என்று கத்தினாள்.

நான் கையை நீட்டி, பூஜாவின் இடுப்பில் கைவைத்தபோது மனதில், “நாதிர்தனா… திரனனா… னா…” என்ற சின்னவீடு இசை ஒலித்தது. நான் பூஜாவின் இடுப்பை வளைத்துப் பிடிக்க - “தன… நாதிர்தனா… தன திரனனா… திரனா…’’ – தடுமாறி நாங்கள் இருவரும் அப்படியே கீழே விழ - ``நாதிர்தனா… நாதிர்தனா… நாதிர்தனா…’’ - பூஜா சரியாக என்மீது நூறு சதவிகிதம் குப்புறப் படுத்திருக்க - ``நாதிர்தனா… நாகிர்தனா… நாகிர்தனா… திரனனனா...” பதறிப்போன நந்தினி பூஜாவைத் தூக்கி சோபாவில் உட்கார வைத்த பிறகுதான், என் காதில் சின்னவீடு இசை ஒலிப்பது நின்றது. நந்தினி மெல்லத் திரும்பி என்னைப் பார்த்தாள். மதுரையை எரித்தபோது கண்ணகியின் கண்கள் அப்படித்தான் இருந்திருக்கும்.
பூஜா, “ஸாரி… விகடன்ல உங்க கவிதை ஃபுல் பேஜ்ல போட்டிருந்தாங்க. அந்தப் பரவசத்துல வேகமாக வந்தேன்…” என்றாள். நந்தினியைப் பார்த்த நான் வேகமாகத் திரும்பி பூஜாவைப் பார்த்து, “நான் ஆபீஸுக்குக் கிளம்பணும். டைமாயிடுச்சு. அப்புறம் பேசலாம்…” என்று அவளை அனுப்பி வைத்தேன்.

பூஜா சென்றவுடன், “அய்யோ… அய்யோ…” என்று தலையில் அடித்துக்கொண்ட நந்தினி, “புள்ளத்தாச்சிப் பொண்ண வச்சுக்கிட்டு, ஊரான் வீட்டுப் பொண்ணோட நடு ஹால்ல உருண்டு புரள்றீங்களே… நீங்க நல்லாருப்பீங்களா?” என்று ஆரம்பிக்க… நான் தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

“அவ விழுந்தா விழட்டும்னு விடவேண்டியதுதானே…”

“அதெப்படி நந்தினி…”

“அதான… சின்ன வீடு பாத்தப்ப பொறந்தவ ராச்சே…” என்று புடவை முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டாள். அப்போது, ‘சின்ன வீடு’ படம் எடுத்ததற்காக பாக்யராஜ் மேல் எனக்கு பயங்கர கோபம் வந்தது.

“ஒவ்வொரு நாளும் என்னால வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டு இருக்க முடியாது. இந்த வீட்டக் காலி பண்ணியே ஆகணும்” என்றாள் நந்தினி. நான் முதலில் ‘முடியாது…’ என்று மறுத்தேன். ஆனால் நந்தினி தொடர்ந்து ஒரு மணி நேரம் கண்ணீருடன் சண்டை போட்டாள். பெண்களின் கண்ணீரை வெல்வதற்கான ஆயுதம், இன்னும் இந்த உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், வேறு வழியின்றி நான் வீடு மாற்ற ஒப்புக்கொண்டேன்.

அடுத்த வாரத்திலேயே, வளசரவாக்கத்தில் ஒரு வீட்டைப் பார்த்தேன். அதுவும் தனி வீடுதான். கீழ் வீடு வாடகைக்கு. மாடியில் ஹவுஸ் ஓனர். எனது கெட்ட நேரம்… அந்த ஹவுஸ் ஓனருக்கு 22 வயதில் ஒரு பெண் இருந்தாள். அவளைப் பார்த்தவுடனேயே வீட்டுக்கார அம்மாவிடம் நந்தினி, “உங்க பொண்ணு பேரு என்ன?” என்றாள்.

“காவ்யா” என்றார் காவ்யாவின் அம்மா.

உடனே நந்தினி என் காதுக்குள், “காவ்யாங்கிற பேர்ல எதாச்சும் கவிதை எழுதியிருக்கீங்களா?” என்றாள். “எங்கம்மா மேல சத்தியமா இல்ல நந்தினி” என்றேன் பரிதாபமாக. நிம்மதியான நந்தினி வீட்டுக்காரம்மாவிடம்,, “இங்க… பூஜான்னு யாரும் இருக்காங்களா?” என்றாள்.

“இல்லையே…”

“பக்கத்து வீட்டுல…”

“இல்லையே… ஏன் கேக்குறீங்க?”

“இல்ல… நான் வர்றப்ப பூஜான்னு யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு. நல்ல அழகான பேரு…’’

“இல்ல… இங்க பூஜான்னு யாருமில்ல” என்று கூறிய பிறகுதான் நந்தினி என்னை அட்வான்ஸ் கொடுக்கச் சொன்னாள்.

புதிய வீட்டில் என் புத்தகங்களை நான் அடுக்கிக்கொண்டிருந்தேன். அப்போது “ஆன்ட்டி…” என்று அழைத்தபடி ஹவுஸ் ஓனரின் பெண் காவ்யா வீட்டிற்குள் நுழைய… நந்தினி சிரிப்புடன் வரவேற்றாள். காவ்யா, “இது உங்க ஈபி கார்டு” என்று நந்தினியிடம் கார்டைக் கொடுத்தாள். “வர்றேன் ஆன்ட்டி…” என்று என் அறையைக் கடந்தவள், நான் புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து நின்றுவிட்டாள்.

“இவ்ளோ புக்ஸா?” என்று அறைக்குள் வந்துவிட்டாள்.

“ம்…’’ என்ற நான், “நீங்க புக்ஸ்லாம் படிப்பீங்களா?” என்றேன்.

“ம்… எப்பயாச்சும் படிப்பேன்…” என்றவள் சரியாக என் கவிதைப் புத்தகத்தைக் கையில் எடுத்தாள். பின்பக்கம் என் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, “சார்… நீங்க புக்குல்லாம் போடுவீங்களா?” என்றாள் நான் ஏதோ கோனார் நோட்ஸ் போடுவதுபோல்.

“புக்குல்லாம் போடமாட்டேன். கவிதை எழுதுவேன். அதை புக்கா போடுவாங்க” என்றேன்.

“நானும் காலேஜ் டேஸ்ல நிறைய கவிதைல்லாம் எழுதி பத்திரிகைக்கு அனுப்புவேன். யாரும் போடவேயில்ல. அப்படியே விட்டுட்டேன். உங்கள்ட்ட தரேன். நீங்க சொல்லி போட வைக்கிறீங்களா?” என்றாள்.

“கவிதைய காமிங்க. நல்லா இருந்தா சொல்றேன்” என்றேன். அப்போது முன் அட்டையைத் திருப்பிப் பார்த்த காவ்யா, “சார்… உங்க பேரு வினோத்குமாரா?” என்றாள் ஆர்வத்துடன்.

“ஆமாம்… ஏன்?”

“இல்ல… அப்பல்லாம் நான் காதல் கவிதைதான் எழுதுவேன். அதுக்காக கற்பனையா ஒரு ஆம்பளப் பேர வச்சு எழுதுவேன். அந்தக் கற்பனை ஆணோட பேரு வினோத்தான்.”

பதறிப்போன நான், “ஆ…’’ என்று அதிர்ந்தபோது, அறை வாசலிலிருந்து “அய்யய்யோ…” என்று நந்தினியின் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். நந்தினியின் முகம் தீப்பிழம்பாகச் சிவந்திருக்க… எங்களை உக்கிரத்துடன் முறைத்துப் பார்த்துக்கொண்டி ருந்தாள்.

நான் மறுபடியும் வேறு வீடு பார்க்கவேண்டும்.