“ஏய் லூஸு, என்னடா இது ரத்தத்தில எல்லாம் கடிதம் எழுதி வெச்சிருக்கே. இதைத்தான் நீ படிக்கிற உம்பர்ட்டோ பூக்கோ, ஈக்கோல்லாம் சொல்றாங்களா?”

“அது உம்பர்ட்டோ ஈக்கோ, மிஷல் ஃபூக்கோ.”

“இருக்கட்டும். அவங்க இப்படியா ரத்தத்தில எழுதச் சொல்லியிருக்காங்க?”

“எழுதக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்களா என்ன, `எழுத்து என்பது ரத்தத்தைப்போல் இருக்கணும்'னு நீட்ஷே சொல்லியிருக்கார்.”

“ஏய்ய்ய், இதென்னடா வாடின மல்லிகைப்பூ, பழைய பஸ் டிக்கெட், கண்ணாடி வளையல் துண்டு, சாக்லேட் பேப்பர்ஸ், துருப்பிடிச்ச ஹேர் பின். வாட் இஸ் திஸ்யா?”

“காதல். உனக்குப் புரியாது.”

“கெட்ட நாத்தம் வருது. இன்னுமா இதெல்லாம் வெச்சுக்கிட்டிருக்கே?”

“காதல்ங்கிறதே ஒரு பழைய வாசனைதான். அந்த வாசனை பழகினவங்களுக்கு மட்டும்தான் பிடிக்கும். எப்பவுமே அந்தப் பழைய வாசனை புதுசா இருக்கும். புத்தம்புதுசா...”

“லூஸு, அப்போ காதல்ங்கிறது அழுக்குமூட்டை. அப்படித்தானே?”

தமிழகத்தில் மொத்தம் 427 சாதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு சாதியிலும் குறைந்தபட்சம் 13 உட்பிரிவுகள் இருக்கின்றன. சென்ற ஆண்டு நடந்த திருமணங்களில் காதல் திருமணங்கள் 1.4 சதவிகிதம். காதலைப் பற்றி இதுவரை எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் 6,478. கடந்த மூன்று ஆண்டுகளில் 83 ஆணவக்கொலைகள் நடந்துள்ளன. உடனே இணையத்தில் தரவுகளைச் சரிபார்க்க வேண்டாம். இந்தப் புள்ளிவிவரங்கள் முழுக்க உண்மை இல்லாமலிருக்கலாம். ஆனால் உண்மை இல்லாமலில்லை.

அரச மரத்தின் உச்சியிலிருந்து விழுந்த இலை, மழிக்கப்பட்ட தலையின்மீது விழுந்தது. ஒருகணம் அதை உற்றுப்பார்த்தவர், “மகிழ்ச்சி ஒன்று மட்டுமே பகிர்ந்துகொள்வதால் குறைவதில்லை” என்றார்.

“காதலும்கூட. ஆமாம், காதலும்கூடப் பகிர்ந்துகொள்வதால் குறைவதில்லை. சமயங்களில் பகிர்ந்துகொள்ளாவிட்டாலும் குறைவதில்லை. அது வெள்ளக்காலத்து ரோகிணி நதியைப்போல் பெருகிக்கொண்டேயிருக்கிறது”

சங்கத்தில் குரல் கேட்டதும், அதுவும் பெண் குரல் என்றதும் எல்லோரும் திரும்பிப்பார்த்தார்கள். சாக்கிய முனியின் முகத்தில் ஒரு சலனம், யாரும் கவனிப்பதற்குள் வந்துமறைந்தது.

“ததாகரே, என்னைத் தெரிகிறதா?”

“கனவின் நடுப்பகுதியில் தெரியும் மங்கிய முகம். ஒரு சுடர் ஆடிக்கொண்டிருக்கிறது, இல்லை, காற்றில் நடுங்கிக்கொண்டிருக்கிறது. உலகம் துக்கமயமானது பெண்ணே.”

“உண்மைதான் சாக்கிய முனி. இப்போது என் உலகம் துக்கமயமானதுதான்.”

“உலகம் என்பது வீட்டுத் தாழ்வாரத்தோடு முடிந்துவிடுவதில்லை. இந்த வாழ்க்கை ஏன் துக்கமயமானது என்பதை அறிந்துகொள்ள வீட்டைவிட்டு வெளியில் வந்துதான் ஆகவேண்டும். அதற்காகத்தான்...”

“நள்ளிரவில் வீட்டைவிட்டு உலகத் துக்கம் காண வந்தீர்.”

“ஆசையே துன்பத்துக்குக் காரணம்.”

“காதல் என்பது ஆசை பெற்றெடுத்த குழந்தைதான். என் வீட்டிலும் ஒரு மகன் உண்டு.”

“சாவு ஏன் வருகிறது தெரியுமா, முதுமை ஏன் வருகிறது தெரியுமா?”

“காதல் ஏன் வருகிறது என்றும் தெரியவில்லை. ‘உனக்கு நீயே விளக்கு’ என்றீர். திரியை இழந்துவிட்டுத் தேடிக்கொண்டிருக்கிறேன். சரணம்.”

அவர் கண்களை மூடிக்கொண்டார். தியானம் செய்வதற்காகவும் இருக்கலாம்.

அவன் அப்போது தீவிர கம்யூனிஸ்டாக இருந்தான். காரல் மார்க்ஸின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘கம்யூனிச பூதம்’ அவனைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தது. தடித்த சிவப்புப் புத்தகங்களின் மீதான காதல் ஒரு பெண்ணின்மீதும் பற்றியபோது அவனைக் காதல் பூதமும் ஆட்டிப்படைத்தது. அன்று அப்படித்தான், தன் காதலை அவளிடம் சொல்லிவிடுவதென்று முடிவெடுத்தான். அன்றும் அப்படித்தான் தன் காதலை அவளிடம் சொல்லிவிடுவதென்று முடிவெடுத்தான். ஏனென்றால், இது 27வது முறை.

ஆனால் அவள் தனியாகத்தான் செல்கிறாள். எப்படியும் காதலைச் சொல்லிவிடுவதென்று முடிவெடுத்த அவன் தன் கையில் லெனினின் ‘தேசிய இனப்பிரச்னைகளும் பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதமும்’ என்ற புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டான். ஏனென்றால் ‘ஒரு புரட்சிக்காரனுக்குத் தேவையெல்லாம் மூன்றே மூன்றுதான். துணிச்சல், மிகத் துணிச்சல், மிகமிகத் துணிச்சல்’ என்று ஒரு தோழர் சொல்லியிருக்கிறார். அவன் துணிச்சலுக்கு இப்போதைய தேவை லெனின் புத்தகம்.

அவள் பின்னால் செல்கிறான். திடீரென்று அவள் திரும்பிப் பார்த்துவிட, கைகால்கள் உதற, வியர்வை ஊற்றெடுக்க, சட்டென்று புத்தகத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்துவிட்டான். 37-ம் பக்கத்தில் லெனின் இவ்வாறு கூறுகிறார்

“ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிக்கும் பொழுது ஒடுக்கப்படும் நாடுகளுக்குப் பிரிந்து போகும் சுதந்திரமளிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆதரித்து, அதற்காகப் போராடவேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.”

“வார்த்தைகளே மாம்சங்களாகவும்
மாம்சங்களே வார்த்தைகளாகவும்
மாறித்திரியும் நிலப்புலத்தில்
சிந்திச் சிதறிக்கிடக்கும்
மாம்ச மற்றும் வார்த்தைத்
துண்டுகளை என்ன செய்வது?”
“மனிதர்கள் யாருமற்ற
வனாந்தரங்களில்
பூக்கும் பூக்களே
அழகாயிருக்கின்றன.’’

“வண்ணத்துப்பூச்சிகள் சிறகுதிர்க்கும் ஒரு மாலைப் பொழுதில் உன்னைச் சந்திக்கும்போதெல்லாம் எப்போதும் மழையை நினைவுபடுத்துகிறாய்.”

“நீ மாமிச விரும்பி. நானோ தாவர உண்ணி. உன் காமமே மாம்சவேட்கையாய் மாறுகிறது. நீ விரும்பிச்சுவைக்கும் என் இதழும் மார்பும் கூட மாமிசம்தானே?”

“இருக்கலாம். ஆனால் உன் கண்களை அப்படிச் சொல்லமுடியாது. அது சதைக்கோளங்களினின்று நழுவி ஓடுவது, வான், வெளி, பிரபஞ்சம் போல முடிவிலி உன் கண்கள். உன்னுடலின் உயிர்ப்புள்ள ஒரே பகுதியும்கூட”

“அப்படியானால் இப்படிச் சொல்லலாம், கண்கள் என்பவை பாதரச மாமிசம்.”

“ஏன் எந்தக் கதையிலுமே ரெண்டுபேர் பெயர்களும் இல்லை?”

“பெயர்கள் அவசியமா என்ன? உலகத்தில் எத்தனையோ பேருக்குக் காதல் உண்டு. சொல்லப்போனால் எல்லாருக்கும்தான் காதல் உண்டு. காதலின் பெயர் காதல் மட்டுமே.”

“ஓ, அப்புறம் ஏன் ஸ்கூல், காலேஜ் டெஸ்க்கில் எல்லாரும் காதலிக்கிறவங்க பேரை எழுதி வைக்கிறாங்க? பாறையில் இருந்து பஸ் வரைக்கும் ஏன் எழுதிவைக்கிறாங்க? அவ்வளவு ஏன், பலபேரின் பாஸ்வேர்டாய் இருக்கும் பெயர்கள் காதலின் அடையாளம் இல்லையா?”

சுகுணா திவாகர் - ஓவியங்கள்: ரமணன்