காதலென்பது...
எல்லோருக்கும் பொதுவான உப்பிலொரு பண்டம்
சுவாரஸ்யமான பிழைகளின் புன்னகை
இலை மறைவில் கனிந்த நிர்வாணம்
காதலென்பது...
மீன் எண்ணெய் விளக்கொளியில் எழுதப்படும்
மீன்கள் பற்றிய செய்யுள்
காதலென்பது...

காதலென்பது...
எரியூட்டவென ஓருடலைத் தனியாக
ஏந்திச் செல்பவனின் தோள்வலி
பழுதுற்ற காந்தமுள்ளின் திசைக்குழப்பம் அதில்
வழிபிறழ்ந்த பெருநாவாய் மீட்கும் ஓங்கில்
காதலென்பது...
பந்தயக் குதிரையின் காம்பில்
பாய்ந்தபடி பால் உறிஞ்சுவது
காதலென்பது...

காதலென்பது...
அகழாய்வில் கண்டறியப்பட்ட
விசாலமான படுக்கையறை - மேலுமதில்
கிடைத்த புத்தனுக்கும் முற்காலத்து வசியப்பதுமை
காதலென்பது...
உப்பளத்து அம்பார மறைவில்
கூலிகள் புனையும் காமத்தின் மீமதுரம்
காதலென்பது...

காதலென்பது...
நீலப்பட படப்பிடிப்பு இடைவேளையில்
களைத்த உடல்கள் அருந்தும் பச்சைத் தேநீர்
அகதி முகாம் குழந்தைகள் வியக்கும்
வலசைப் பறவைகளின் அணிகோலம்
காதலென்பது...
திமிங்கிலங்கள் பாலூட்டும் பொழுதின்மீது சிதறும்
மகிழ்ச்சிகரமான எரிநட்சத்திரம் - மற்றும்
பின்மதியத்தில் ஒலிக்கும் மதுவந்தி ராகம்
காதலென்பது...

காதலென்பது...
மார்பையும் தொடைகளையும் மூடிக்கொள்ள
இணையிடம் கேட்கும் புலித்தோல்
வெட்டுக்காயங்களில் பூசிக்கொள்ளும்
சூடு குறையா சர்க்கரைப்பாகு
காதலென்பது...
எழுத்துகளைப் புணர்த்தி இருவர்
வார்த்தைகளில் ஆடும் சூதாட்டம்
காதலென்பது...

காதலென்பது...
வரலாற்றுக்கு முந்தைய பாறைகளில் நிலைத்த
அர்த்தமற்ற இரு கீறல்கள்
சற்று முன் புணர்ச்சி முடித்தவனின் லகுசீழ்க்கை
காதலென்பது...
வேட்கையோடு திறந்த கருப்பையில்
இடப்பட்ட செல்லாக்காசு
காதலென்பது...

காதலென்பது...
பிசாசின் இசைக்குறிப்பில் தொனிக்கும்
தெய்வத்தின் இறைச்சி
நாதஸ்வரத் துளைகளுக்குள் விளையாடும்
ஈக்களின் ஒளிநிழல் விளையாட்டு
காதலென்பது...
வாய் முத்தத்தின்போது நழுவும் பல்செட்
காதலென்பது...

காதலென்பதை இதழெங்கும் கவிதையில் எழுதியவர்...
வெய்யில்

காதலென்பது...
எல்லோருக்கும் பொதுவான உப்பிலொரு பண்டம்
சுவாரஸ்யமான பிழைகளின் புன்னகை
இலை மறைவில் கனிந்த நிர்வாணம்
காதலென்பது...
மீன் எண்ணெய் விளக்கொளியில் எழுதப்படும்
மீன்கள் பற்றிய செய்யுள்
காதலென்பது...

காதலென்பது...
எரியூட்டவென ஓருடலைத் தனியாக
ஏந்திச் செல்பவனின் தோள்வலி
பழுதுற்ற காந்தமுள்ளின் திசைக்குழப்பம் அதில்
வழிபிறழ்ந்த பெருநாவாய் மீட்கும் ஓங்கில்
காதலென்பது...
பந்தயக் குதிரையின் காம்பில்
பாய்ந்தபடி பால் உறிஞ்சுவது
காதலென்பது...

காதலென்பது...
அகழாய்வில் கண்டறியப்பட்ட
விசாலமான படுக்கையறை - மேலுமதில்
கிடைத்த புத்தனுக்கும் முற்காலத்து வசியப்பதுமை
காதலென்பது...
உப்பளத்து அம்பார மறைவில்
கூலிகள் புனையும் காமத்தின் மீமதுரம்
காதலென்பது...

காதலென்பது...
நீலப்பட படப்பிடிப்பு இடைவேளையில்
களைத்த உடல்கள் அருந்தும் பச்சைத் தேநீர்
அகதி முகாம் குழந்தைகள் வியக்கும்
வலசைப் பறவைகளின் அணிகோலம்
காதலென்பது...
திமிங்கிலங்கள் பாலூட்டும் பொழுதின்மீது சிதறும்
மகிழ்ச்சிகரமான எரிநட்சத்திரம் - மற்றும்
பின்மதியத்தில் ஒலிக்கும் மதுவந்தி ராகம்
காதலென்பது...

காதலென்பது...
மார்பையும் தொடைகளையும் மூடிக்கொள்ள
இணையிடம் கேட்கும் புலித்தோல்
வெட்டுக்காயங்களில் பூசிக்கொள்ளும்
சூடு குறையா சர்க்கரைப்பாகு
காதலென்பது...
எழுத்துகளைப் புணர்த்தி இருவர்
வார்த்தைகளில் ஆடும் சூதாட்டம்
காதலென்பது...

காதலென்பது...
வரலாற்றுக்கு முந்தைய பாறைகளில் நிலைத்த
அர்த்தமற்ற இரு கீறல்கள்
சற்று முன் புணர்ச்சி முடித்தவனின் லகுசீழ்க்கை
காதலென்பது...
வேட்கையோடு திறந்த கருப்பையில்
இடப்பட்ட செல்லாக்காசு
காதலென்பது...

காதலென்பது...
பிசாசின் இசைக்குறிப்பில் தொனிக்கும்
தெய்வத்தின் இறைச்சி
நாதஸ்வரத் துளைகளுக்குள் விளையாடும்
ஈக்களின் ஒளிநிழல் விளையாட்டு
காதலென்பது...
வாய் முத்தத்தின்போது நழுவும் பல்செட்
காதலென்பது...

காதலென்பதை இதழெங்கும் கவிதையில் எழுதியவர்...
வெய்யில்