உலர்ந்த நிற டீ-ஷர்ட்களை விரும்பி அணியத் தொடங்கியதிலிருந்து, நான் தனிமையானவாக மாறிவிட்டதாக அம்மா முனகிக்கொள்வாள். பதினேழு வயதில் இவ்வளவு நுண்ணுணர்வும் நிதானமும் அவசியமற்றதென நூலக நண்பர் அலுத்துக் கொள்வார். உண்மையில் பெரிய வெளிச்சம் எதனாலும் நான் மௌனமாக்கப்படவில்லை. என்னுடைய விளையாட்டுத்தனங்களிலும், அவமானங்களிலும் ஒரு புதிய கண் திறந்திருந்தது. செயல்களுக்குப் பின் எஞ்சுகிற வெறுமையை அடிக்கடி உணர்ந்தேன். ‘இது பிராயத்திற்கே உரிய ஒருவித போலி பெரியமனுஷத்தனம்’ என்றார் நண்பர். ஒருவகையில் இது முழுவதும் போலியுமல்ல. இந்த எளிய முகமூடி அளிக்கின்ற புதிய பொறுப்புகள், புதிய நாசூக்குகள், புதிய மரியாதைகள் அனைத்தின்மீதும் காலம் களிம்பூற்றி இறுகச் செய்துவிடும். நீ வெளியேறவே முடியாத சாதாரண ‘சருகுச் சிறை’ என்றார். நான் வழமைபோலச் சாலையை மேய்ந்து கொண்டிருந்தேன்.

குரியனை போலீஸ் அழைத்துச் சென்றுவிட்டதாக அம்மா சொன்னாள். அவளுக்கருகே ஜோசபின் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள். நான் சிகரெட் வாடையை அடக்கியபடி அமைதியாக அவர்களைக் கடக்கும்பொழுது, ஜோசபினின் கண்கள் புத்தக விளிம்பிலிருந்து மேலேறி, என்னை ரகசியமாய் விசாரித்து விலகியது. நான்காவது நாளாக இரண்டு எறும்புகள் முட்டிக்கொண்டு விலகி முன்னேறவியலாமல் ஸ்தம்பித்திருப்பதைப் போல நானும் அவளும் ஒரு கணத்தின் முன் உறைந்திருந்தோம். இயல்பாகப் பார்த்துச் சிரித்துக்கொண்டால், அத்துடன் என் பால்யம் முடிவுக்கு வருகின்றதை அவளின் முன் நான் ஒப்புக்கொள்ள நேரிடும்.

ஜோசபின் அவளது வீட்டிலிருந்து இங்கே வந்து சில மாதங்களாகின்றன. இந்த முறை நிகழ்ந்தது சொல்லமுடியாத மோசமான சம்பவம். அவளுக்கு எப்போதும் கைவருகின்ற, தான் செய்த குற்றத்தை ஒரு சாதாரண செயலைப்போல எள்ளி நகையாடித் தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்கின்ற சிறுமி வேடத்தை அவள் அணிய முயலவில்லை. அவளது வயிற்றைக்கூடக் கழுவிவிட்டுத்தான் அனுப்பியதாக ஒரு தகவலும் உண்டு. ஜோசபினின் கடந்த காலத்தில் – அது நீண்டதல்ல – இரண்டு முறை பருவத்தவறுகள் செய்தாள். ஒவ்வொரு முறையும் அவளுக்கு ஞானஸ்நானம் இங்குதான் அம்மா வழங்குகிறாள். அப்போதெல்லாம் என்னைத்தான் முன்னுதாரணமாக அம்மா குறிப்பிடுவாள். மெல்லிய புன்னகையுடன் என்னைப் பார்க்கின்ற ஜோசபினைத் தவிர்த்தபடி, “சாத்தான்… சாத்தான்…” என நான் முணுமுணுத்துக்கொள்வது அம்மாவிற்குச் சந்தோசமளிக்கும். ஜோசபினையும் என்னைப்போலக் குழந்தைத்தனம் மிக்கவளாகவே அம்மா பார்க்கிறாள் என்பது எரிச்சலூட்டும். ஜோசபினின் பெற்றோர்கூட அவளை இப்போது ஒரு சந்தர்ப்பவாதியாக உணரத் தொடங்கியிருந்தனர். அவளது உயர்ந்தபட்ச பகடித்திறன்கூட நாடகமாகவே வெளிப்படுகிறது.

அறைக்குள் நுழைந்து தாழிட்டேன். மிக நுட்பமாக ஜோசபினின் ஈரமணம் அங்கிருந்தது. குளியலறையைத் திறந்து பார்க்கையில், எப்போதும் அங்கிருக்கும் ஒழுங்குச் சிதைவை நேர்ப்படுத்தி அதன் சுத்தத்தில் ஜோசபின் தனது வருகையைப் பதிந்துசென்றிருந்தாள். எனக்குள்ளிருந்த அசூயை விலகி, லேசான வசீகரம் மேலெழுந்தது. உதட்டைக் குவித்து விசிலை முயன்றபடி, சட்டையைக் கழற்றிவிட்டு, எனது நெஞ்சின்மீது சமீபமாய் அமரத் துவங்கியிருக்கும் முடிகளை வருடினேன்.

“ஜோசபின்…”

சில நாள்களுக்கு முன்பு, வெளியே சென்றுவிட்டு எனது அறைக்குள் நான் நுழைவதற்கும் குளியலறையைத் திறந்து அவள் வெளிவருவதற்கும் சரியாயிருந்தது. அது பகலிலேயே வானம் மோடம் போட்டிருந்த நாள். எனது அறையெங்கும் இளம் இருட்டுப் பரவியிருக்க, எனது கண்கள் அதற்கு விரைவாகப் பழகியபடி, அவளின் பக்கம் திரும்புவதற்கும் நடுவே ஒரு கணம். ஒரே ஒரு கணம்... பிரகாசமான வெளிச்சத்துடனும் ஞாபகத்துடனும் எங்களிடையே பதிவாகியது. அவளை யறியாமல் ‘அச்சோ’வென ஒரு விக்கிப்பு. மூலை இருளுக்குள் உடலின் பெரும்பாகங்கள் மறைந்திருக்க, அவளின் உடல் விளிம்புகள்மீது வெளிச்சம் ஒரு வசீகர வளைகோட்டை வரைந்தது. ஒரு மெல்லிய திகைப்புடன் முகத்தைத் திருப்பிக் கொள்வதற்குள், அந்த அசாதாரண விளிம்புகளின் மேல் பரவிய ஒளியில் அவளுடல் கூர்மையான வாளைப்போன்ற தீவிரத்துடன் என்னைக் கடந்தது.

பிறகு வந்த நாள்களில் அவள் கண்கள் எனக்குள் எதையோ தேடின. நான் சாதாரணமாக என்னைக் காட்டிக்கொள்ள முயன்று மோசமாய்த் தோற்றபடியிருந்தேன். ஒரு சிறிய கீழுதட்டுச் சிரிப்பைக் கசிந்தபடி “சரிதான்…” என்பதுபோலத் தலையாட்டிக் கடந்தாள்.

ஜோசபின்… அந்த விளிம்புகள்…

ஜன்னலைத் தாழ் நீக்கினேன். அறைக்குள்ளிருந்த வெளிச்சம் கீழேயிருந்த கொல்லைத் தோட்டத்தில் நீரைப்போலப் பரவியது. அம்மா பயிரிட்டிருந்த சிறிய தோட்டத்திற்கு நடுவே சில உடல்கள் திகைத்து நிமிர்ந்தன. குரியனின் பிள்ளைகள். மேலாடைகளற்ற அந்தச் சிறார்கள் விலங்கின் கண்களுடன் கைகளில் பறித்து வைத்திருந்த காய்கறிகளுடன் ஜன்னலை ஏறிட்டனர். நான் புகையை ஊதியபடி உன்னிப்பாகப் பார்வையை வீசினேன். நான்கு பிள்ளைகளும் தேவாங்கைப்போல என்னைப் பார்த்தபடியிருக்க, தோட்டத்தின் வேலிக்குச் சற்றுத்தள்ளி தெருவிளக்கின் கீழ் நின்றபடி குரியனின் மனைவி யாருடனோ போனில் பேசியபடியிருந்தாள். என்னைப் பார்த்துவிட்ட பதற்றமே யில்லாமல் தெருவிளக்குத் திண்டின்மேல் ஒரு காலைத் தூக்கி வைத்தபடி உரையாடலைத் தொடர்ந்தாள். கடற்கரைக்குச் செல்கின்ற சில்லண்டிப் பாதைத் தடத்திலிருக்கும் குரியனின் குடிசை மிகவும் தனிமையில் கிடந்தது. வேறு வீடுகளேயற்ற அந்தப் பாதைத்தடத்தில் குரியனின் குடிசை கடலைப் பார்த்தபடியிருக்க, அதன் வாசலில் ஆட்டோ நின்றிருந்தது. குரியனின் நண்பனும் பகல்நேரக் குடிகாரனுமாகிய ஆசிர், குடிசையின் வாசலில் கிடந்த மண் அடுப்பின் முன் அமர்ந்தபடி, எதையோ சமைத்துக்கொண்டிருந்தான். அவனருகே குரியனின் இன்னும் சில குழந்தைகள் தூக்கக் கலக்கத்தில் நின்றிருந்தன. நான் சிகரெட்டை நசுக்கியபடி தோட்டத்தில் திருடிய பிள்ளைகளைப் பார்த்தேன். அவை பதற்றமின்றி, அதிருப்தியுடன் கையிலிருந்த காய்கறிகளை நெஞ்சிலணைத்தபடி தோட்டத்திலிருந்து வெளியேறின. அம்மா காலையில் ஊரைக் கூட்டுவாள்.

குரியனைப் புரிந்துகொள்வது எவ்வளவு குழப்பமானதோ அதைவிட அவனது குடும்பத்தை அர்த்தப்படுத்திக்கொள்வது திகிலானது. குரியன் நகரங்களில் திருடுபவனென அம்மா கூறினாள். அவனது மனைவியும் திடீரென ஏதாவதொரு நாளில் ஜீன்ஸ் பேன்ட், டீ-ஷர்ட் அணிந்து, ஒரு மலின ஜோடியைப்போல குரியனுடன் செல்கையில், ‘அவளது கைப்பையிலிருக்கும் மயக்க பிஸ்கட்களைக் கவனி’ என அம்மா கிசுகிசுப்பாள். எண்ணிக்கையற்ற அவர்களது குழந்தைகள் மண்ணுக்குக் கீழே உலாத்தும் குட்டிப் பிராணிகளைப்போல தெருக்களின் எல்லா இருள் மூலைகளுக் குள்ளிருந்தும் நாம் மறந்துவிட்ட பொருள்களைக் கைகளில் பதுக்கியபடி வெளிப்படுபவர்களாக இருந்தனர். கடுமையான காயங்களுடன் குரியன் வீடு திரும்பும் நாள்களில், குடிசையின் வெளியே பாய் விரித்து விழுந்து புரண்டபடி, குழந்தைகள் கூச்சலிட்டபடியிருக்க, குரியனும் மனைவியும் குடித்தபடி சிகரெட்களைப் பரிமாறிக்கொள்வர். ஆர்வமாய் வருகின்ற ஒரு குழந்தைக்கு அவர்கள் உதடு மாற்றித் தருகின்ற ஒரு வாய்ப் புகையை அந்தப் பிள்ளை ரயிலோசை எழுப்பியபடி புகைவிட்டு ஓடும்.

போலீஸ் காவலில் குரியன் சிக்கிக்கொள்ளும் நாள்களில் ஆசிரின் ஆட்டோ, குடிசையின் வாசலுக்கு வந்துவிடும். குரியனின் பிள்ளைகளுக்குக் கருவாடு சுட்டுத் தரும் ஆசிர், குழந்தைகள் உறங்கத் துவங்கும்போது, குடிசைக்குள் நுழைந்துகொள்வான். குரியனின் மனைவி ஒருமுறை வெளியே தலைநீட்டி குழந்தைகளை உறங்குவதுபோல் பாவனை செய்யக் கூடாதென சத்தம் போட்டுவிட்டு மெதுவாகக் கதவைச் சாத்துவாள்.

காவலிலிருந்து குரியனை ஆசிர் அழைத்து வருகின்ற இரவைப்போல உற்சாகமானது வேறில்லை. குரியனின் மனைவியும் குழந்தைகளும் தான்தோன்றி நடனமாட, குடி முற்றிய நிலையில் ஆசிரும் குரியனும் சண்டைபோட்டு உருண்டு கொண்டி ருப்பார்கள். அம்மா அப்போதெல்லாம் சாத்தானின் வீடு எனத் திகிலடைவாள்.

எனது கிளப் உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்கப் போய்க்கொண்டிருந்தேன். சாலையின் எதிர்முனையில் அம்மாவும் ஜோசபினும் காய்கறிப் பையுடன் வந்துகொண்டிருந்தனர். கையில் கீரைக் கட்டுடன் என்னைப் பார்த்துச் சிரித்தபடி அம்மாவிடம் ஏதோ கூறினாள். நான் தலையசைத்தபடி விரைந்தேன். ‘ஜோசபினுக்கு எத்தனை முகங்கள்’ எனத் தோன்றியது. கடந்த காலத்தைச் சட்டமிட்டு மாற்றிவிட்டு, வேறு நாள்களைத் துவங்குபவர்கள்மீது ஏன் ஒருவித வன்மம் மேலிடுகிறதெனப் புரியவில்லை. சாசுவதம் என நாம் மயங்கிச் சப்புகின்ற வாழ்வின் பொருக்கு அம்சங்களையும், ஒரு எளிய தற்காலிகமென உன்னையும் கடந்துவிட முடியுமென்னும் பொருள்படும்படியான அவர்களது மிருதுவான ஆனால், கூர்மையான புன்னகையும்கூட ஒரு காரணம். ஜோசபினை நான் அஞ்சுவதற்கு அதுகூட விசயமாயிருக்கலாம்.

அம்மா வெளியில் சென்றிருந்தாள். நான் சிகரெட்டை எடுத்தபடி மொட்டைமாடிக்கு வந்தேன். சாயங்காலம். சற்று தூரத்தில் ஆள்களற்ற கடலின் அலைகள் கரையில் வந்து தங்களை அவிழ்த்துக்கொண்டிருந்தன. அலையின் இரைச்சல் கேட்காத இந்த தூரத்திலிருந்து அது மிக வெறுமையான காட்சியாகத் தோன்றியது. முதுகுக்குப் பின்னால் சூடான காபியின் மணம். ஜோசபின், இரண்டாவது குவளையை என்னிடம் நீட்டியபடியும் கடலைப் பார்த்தபடியும் நின்றாள். நான் வாங்கிக்கொண்டு திரும்பினேன்.

குரியனின் பிள்ளைகள் கடற்கரை யோரமாக ஒதுங்கியிருந்த கடற்பிராணி யொன்றை நெருப்பிட்டுக்கொண்டிருந்தன. குரியனின் குடிசை வாசலில் ஆசிரின் ஆட்டோ நின்றிருந்தது. ஜோசபின், காபியை உறிஞ்சியபடி குடிசையின் லேசாகச் சாத்தியிருந்த கதவைப் பார்த்தாள். பிறகு அவளது கண்கள் கடலின்மேல் படர்ந்தன. இந்த மாலையின் இளவெயிலில் அவளது நளினங்கள் சுடர்விட்டுக்கொண்டிருந்தன. எனது தன்னிலையிலிருந்து உருவாகும் எல்லா அபிப்ராயங்களையும் சிதைத்துவிடும்படி அவளது மெல்லிய துறவுத்தன்மை வலுப்பெற்றிருந்தது. நான் இந்த அழகை விரும்பினேன். ஆனால், அதை ஜோசபினிடம் உணர்ந்தது குறித்த எனது தாழ்வுணர்ச்சி எனது பூஞ்சையான குரலில் துருவேறிக் கரகரப்பது வரை நோய்மையுறச் செய்திருந்தது. எனது எல்லைகள் இவ்வளவு வெட்கமிழந்திருப்பது குறித்து வெறுப்புற்றேன். அவள் எனது டீ-ஷர்ட்டில் கைதவறி விழுந்துவிட் டதைப் போலச் சிதறியிருந்த எழுத்துக்களை வாசிக்க முயன்றுகொண்டிருந்தாள். பொறுக்க முடியாதபடி அவளது முகம் மேலும் குழந்தைமை பூண்டிருந்தது. நான் அவளது இந்த மிகை நடிப்பை உடையச் செய்யும் பொருட்டு, “குரியனின் மனைவிக்கு உன்னைப் போலவே கண்கள்” என்றேன்.

அவளிடம் இவ்வளவு நெருக்கமான ஒரு வார்த்தையை நான் கூறுவதை முதலில் ஆச்சர்யமாக ஏந்தியவள், சீக்கிரமே அதன் அர்த்தங்களை அடைந்தாள். ஒரு கணம் கண்கள் சுருக்கி என்னைப் பார்த்தவள், மீண்டும் ஒரு மிருதுவான புன்னகையுடன் கடலைப் பார்த்தாள். நான் மட்டுமே உணரக்கூடிய ஒரு கசகசப்பு காற்றில் பரவியது.

நாங்கள் மௌனமாய் நின்று கொண்டிருந்த நேரத்தில், குடிசையின் கதவைத் திறந்து வெளியே வந்து சிகரெட்டை எடுத்த ஆசிர், ஞாபகம் வந்தவனாக ஆட்டோவை நோக்கிச் சென்றான். இவ்வளவு நேரம் அதில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளை இறக்கிவிட்டு, பின்புற இருக்கைக்குக் கீழேயிருந்த தீனிப் பொட்டலங்களைக் கைநிறைய அள்ளி குழந்தைகளிடம் நீட்டினான். வளர்ப்பு விலங்கின் உடல்மொழியுடன் அந்தக் குழந்தைகள் அவனைச் சூழ, திருத்தப்படாத ஆடைகளுடன் வெளியே வந்த குரியனின் மனைவி, வாசலில் கிடந்த கல் அடுப்பின் சாம்பல் குவியலைக் காலால் வெளியே இழுத்துவிட்டபடி பிள்ளைகளைப் பார்த்துக் கத்தினாள். இருப்பதிலேயே சிறிய குழந்தையைத் தனது மடியில் அமரவைத்திருந்த ஆசிர், அதன் சிறிய கைகளை எடுத்து “பேசாம இருடி… சொல்லு பாப்பா” எனப் பழக்கப்படுத்திச் சிரித்தான்.

என் கைகளிலிருந்த காலிக் கோப்பைகளை வாங்கியபடி, “அதுவும் குரியனையும் ஆசிரையும் ஒரே நேரத்துல உக்கார வச்சு சோறு போடுறப்ப, அவளோட கண்ணு ரொம்ப நல்லாருக்கும்” என்றாள்.

கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருந்தது. எங்களது சிறிய வீட்டின் வாசலில் தொங்குகின்ற காகித நட்சத்திரம் முனுக் முனுக்கென ஒரு சோக முகத்தைத் தந்தது. உடலுக்கு மீறிய பாவாடை சட்டையில் கேரல் ரவுண்டிற்கான பாடலை ஒப்புவித்தபடி ஜோசபின் ஒரு தீக்கொழுந்தைப்போல வீடு முழுவதும் பரவிக்கொண்டிருந்தாள்.

நானும் அம்மாவும் பெரும்பாலும் கவனிக்காமல் விட்ட வீட்டின் இடுக்குகளிலிருந்து, அவளுக்கெனவே தொலைந்துபோன பொருளோ, சிறிய எலிக்குஞ்சோ அதிசயங்களாகக் கிடைத்த படியிருந்தன. அம்மாவும் அவளும் அடிக்கடி ஜன்னல் வழிக் காட்சிகளைப் பார்த்தபடி உரையாடிக்கொண்டிருந்தனர்.

ஒழுக்கம் சார்ந்து பெரிய அபிப்ராயங்கள் இல்லாத நான், ஜோசபினிடம் ஏன் அதை எதிர்பார்க்கிறேன் என உண்மையிலேயே புரியவில்லை. “அதுவொரு மோசமான தாழ்வுணர்ச்சி” என்றான் நண்பன். “நமது பரிதாபங்களை யாராவது ஏற்க மறுக்கும்போது வருகின்ற குரூரத்தனமும்கூட”. நான் அந்த பதிலால் வெகுவாக நிர்வாணப் பதட்டமடைந்தேன்.

வீட்டுவாசலில் மாட்டியிருந்த காகித நட்சத்திரங்கள் தொலைந்திருந்தன. அம்மா கடுமையான எரிச்சலுடன் குரியனின் குடும்பத்தை ஏசிக்கொண்டிருந்தாள். ஜோசபின் சிரித்தபடி கண்ணாடி அலமாரியைத் துடைத்துக் கொண்டிருந்தாள். நான் அம்மாவிடம் தேவைக்கதிகமான சத்தத்துடன் “குரியன் மட்டுமா இங்கே வெக்கங்கெட்டு அலையுறான்” என்றேன். அம்மா ஒரு கணம் முனகுதலை நிறுத்தி என்னைப் பார்த்தாள். என் முதுகுக்குப் பின்னே கண்ணாடியைத் துடைக்கும் அந்த மெழுகுச் சத்தம் நின்றிருந்தது. அம்மாவின் கண்கள் ஜோசபினை உன்னித்துவிட்டு சிலைபோல நின்ற என்னை நோக்கித் திரும்பின. அப்போது, அவளது முகக் குறிப்புகள் கோபத்துடனா, மௌனத்துடனா என்ன தொனித்தது எனப் புரியவில்லை.

“வெண்மை என்பது எப்போதும் பதற்றப்படுத்தும் ஓர் உணர்வு. அதில், நீண்ட காலம் வாழ்வதென்பது எவ்வளவுக்கெவ்வளவு நாம் சாதுர்யமாக நம்மை மறைக்கின்றோம் என்பதைப் பொறுத்தது. இன்னும் தெளிவாகச் சொல்வதானால், ஒரு டீ-ஷர்ட்டின் தத்துவத்தையே நீ தவறாகப் புரிந்துகொண்டு அணிந்துகொண்டி ருக்கிறாய். வெண்மைக்கு வெளியே இருப்பதெல்லாம், முடிவற்ற நட்சத்திரங்களின் வசீகர வெளிச்சங்கள். ஜோசபினைப் போன்ற நட்சத்திரங்களின் வர்ணங்களை உமிழ்பவளை, நீ தாங்கிக் கொள்ளவே இயலாது. இன்னும் உனது சிறுபிள்ளைத்தனங்களை வெளிப்படுத்தி மொன்னையாக்கிக் கொள்வது தவிர வேறு நடக்காது.”

இரண்டாவது சிகரெட்டைப் பற்றவைத்த நண்பன், அவனது பேருந்து வரவும் எனது கைகளில் அதைத் திணித்துவிட்டு ஓடினான். சாயங்காலக் காட்சிகள் மறைந்துகொண்டிருக்கும் சாலை. எப்போதும் என்னைத் தனியனாகவே உணரச் செய்கின்ற வீதிகள். என்னால் அந்த இரண்டாவது சிகரெட்டைப் புகைக்க முடியவில்லை. நான் கனத்த உணர்வுச்சுமை அடைந்திருந்தேன். எனது பொருக்குத் தனங்களின் ஆவேசம் கரைந்து கொண்டிருப்பதை உணர்கையில், எனது மென்மையான முகங்கள் தூர நிலங்களில் உதிர்ந்து உறைந்திருந்தன. மாலை வெளிச்சத்தில் அவை நிரந்தரப் புன்னகையுடன் என்னைப் புதியவனைப் போல எதிர்கொண்டன. காற்றில் மிருதுவாக அசையும் அவற்றின் சிகைகளை நான் வருடினேன்.

என்னை நானே விசாரித்துக்கொள்கின்ற வேளைகளில், இலக்கின்றி நடந்து செல்வது வழக்கமானதுதான். இந்த மாலையில் நீண்ட நடையின் முடிவில், குரியனின் குடிசை வழியே செல்கின்ற கடற்கரைப் பாதையை அடைந்திருந்தேன். அங்கிருந்து பார்க்கையில் எனது வீடு விநோத மனவுணர்வை அளித்தது. இருள் கவியத் துவங்கிய நேரத்தில், தாவரங்கள் முதியவர்களைப்போன்ற மௌனத்துடன் என்னைப் பார்த்தபடியிருக்க, இன்னதென வகைபிரிக்க முடியாத உணர்வுகள் அலைக்கழிந்தபடியிருந்தன. தூரத்துப் பாறைத் திட்டுகளை நோக்கி நான் செல்கையில், முதுகுக்குப் பின்னே எனது வீட்டின் கண்ணைப்போல வெளிச்சம் கசியும் ஜன்னலை, ஓர் அழைப்பைப் புறக்கணிப்பதைப்போல மறுத்து நடந்தேன்.

கீற்று விளிம்புகள் படபடக்கக் குடிசை தனிமையில் இருந்தது. குரியன் நிறைபோதையின் உச்சத்தில் வாசலில் சுருண்டுகிடந்தான். கல் அடுப்பின் இடைவெளியில் ஆசிரின் செருப்புகள் செருகப்பட்டிருக்க, சற்றுத்தள்ளி இருளில் அவனது ஆட்டோ நின்றிருந்தது. தாழிட்டிருந்த குரியனின் குடிசைக்குள் சில அசைவுகளை உணர்ந்தேன். உட்புறத் தாழ்ப்பாளைச் சோதிக்கின்ற சப்தத்துடன் அவசர அவசரமாகக் குடிசைக்குள் எரிந்த குண்டுபல்பு அணைக்கப்பட்டது. வெகுதூரத்தில் கடற்கரை மணலில் விளையாடுகின்ற குரியனின் குழந்தைகள், இருளோவியங்களைப்போல இரைந்தபடி யிருந்தன. குரியன், உலகின் செல்லக் குழந்தையென கடற்காற்றின் நடுவே உறங்கிக்கொண்டிருந்தான்.

பிரத்யேகமற்ற கடற்கரையின் மாலைவேளையில் உருவாகும் இசைமை எங்கும் பரவியிருந்தது. முழுவதும் இருளில் புதைந்துவிட்ட கடலின் அலைவிளிம்புகளில் தெறிக்கின்ற நுரைக் குமிழிகள் கரையில் சிறிது நேரம் வெளிச்சங்களாய் எஞ்சி மறைந்தன. பேருரு ஒன்றின் மிருதுவான முகங்கள்.

எனக்குள் நான் லேசாகிக் கொண்டிருந்த நேரத்தில் ஆசிரின் ஆட்டோவிலிருந்து குரியனின் குழந்தைகளிலேயே கருப்பான சிறுவன் இறங்கினான். தனிமையில் விளையாடப் பழகிவிட்டதன் சோபை படிந்த முகம் இருளில் மேலும் வசீகரமாயிருக்க, பனியில் நிறம் வெளுத்துவிட்ட காகித நட்சத்திரங்களைக் கையிலெடுத்தபடி, எனக்குப் பின்னால், தூரத்தில் விளையாடுகின்ற குழந்தைகளை நோக்கி நடந்தான். சிறிய ஆச்சர்யத்துடன் என்னைப் பார்த்தவனை நோக்கி மெலிதாகப் புன்னகைத்தேன். அதில் கவரப்பட்டவனைப் போல ஒரு கணம் தாமதித்தவன் வாடிய மலர்களைப்போல படபடத்த காகித நட்சத்திரங்களை நெஞ்சோடு அணைத்தவாறே சீரற்ற தனது பல்வரிசையால் சிரித்தபடி, “ஹேப்பி கிறிஸ்மஸ்…” என்றான். அங்கிருந்து தூரத்து இருளில் கிடந்த எனது வீட்டின் மொட்டைமாடி விளக்கை யாரோ சட்டெனப் பிரகாசிக்கச் செய்தார்கள்.

- பா.திருச்செந்தாழை, ஓவியங்கள் : மணிவண்ணன்