அன்பு நண்பா ரோகித்:
அங்கிருந்து நீ கனன்று சிரிப்பது கேட்கிறது
சோர்ந்துபோகாத சுயத்தின் ருசி சொட்டுகிறது
கண்ணீர் என்பது விடுதலைக்கான விளக்காய்
கசியத் தொடங்கியது
உன் கடிதம் என் கைக்கு வந்தபோது
அன்பு நண்பா ரோகித், மன்னித்துவிடு
நான் எப்போதும்போல் போதையில்தான் கிடந்தேன்.
பிதற்றலுக்கு அடிமையாகிப்போன என்னால்
வாய்க்கும் அவகாசத்தில்தான் உன்னை உணரமுடிகிறது.
வீட்டுக்கு வீடு உறியத் தொடங்கிய ஆதிக்கத்தை
உன்போல் என்னால் எதிர்க்க ஆகவில்லை.
அங்கிருந்து எனக்காகக் கனன்று சிரி நண்பா
எனக்கு யதார்த்தம் புரிய வை.
உன்னால் மட்டுமே என்னை மாற்ற முடியும்.
எந்தப் பீ கவிச்சியும் வீசாத
எண்ணங்களின் வெளிவந்து கேட்கிறேன்:

எந்த மலரின் ஜீவனை
நான் உள்வாங்க வேண்டும்?

எந்த முள்கொண்டு
யாரின் நிலத்தைக் கீறிவிட வேண்டும்?

எனது அறியாமையின்
சவப்பெட்டியைத் தயார்செய்து தர
யாரைக் கேட்பது?

எனது இயலாமையின் இந்திரியங்கள்
வற்றும் முதுமை என்று?

எனது செயலின்மை
எந்த மதத்தின் வேரில் அசைகிறது?

எனது போலிகளின் பின்னால்
உறுத்தும் உண்மையின் துருவை
நிலைத்திருக்கச் செய்வது எப்படி?

எனது கண்ணீரின் அனுபவம்
எந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால்
தரச் சுரந்தபடி இருக்கிறது?

அன்பு நண்பா ரோகித்,

என்னை இயங்கிடாது செய்துவந்த
சாத்விக அகந்தையின்
கடைசி கணத்தில் நின்று அழுகிறேன்
எனது ஆகச்சிறந்த முகமூடியையும்
எரித்துவிட்டு வருகிறேன்

உனது ஆடைகளை எனக்குத் தருவாயா?
உன்னைக் கொன்றொழித்தபோது
உடுத்தியிருந்த
அன்பின் ஆடையை
புரட்சியின் மேலங்கியை
தோழமையின் கைக்குட்டையை
விடுதலைக்குக் கூட்டிப்போக இருந்த
பூட்ஸை
பூட்ஸின் பேரொலியை
அப்பழுக்கிலாத உனது
ஆன்மாவை...

அன்பு நண்பா ரோகித்:
அங்கிருந்து நீ கனன்று சிரிப்பது கேட்கிறது
சோர்ந்துபோகாத சுயத்தின் ருசி சொட்டுகிறது
கண்ணீர் என்பது விடுதலைக்கான விளக்காய்
கசியத் தொடங்கியது
உன் கடிதம் என் கைக்கு வந்தபோது
அன்பு நண்பா ரோகித், மன்னித்துவிடு
நான் எப்போதும்போல் போதையில்தான் கிடந்தேன்.
பிதற்றலுக்கு அடிமையாகிப்போன என்னால்
வாய்க்கும் அவகாசத்தில்தான் உன்னை உணரமுடிகிறது.
வீட்டுக்கு வீடு உறியத் தொடங்கிய ஆதிக்கத்தை
உன்போல் என்னால் எதிர்க்க ஆகவில்லை.
அங்கிருந்து எனக்காகக் கனன்று சிரி நண்பா
எனக்கு யதார்த்தம் புரிய வை.
உன்னால் மட்டுமே என்னை மாற்ற முடியும்.
எந்தப் பீ கவிச்சியும் வீசாத
எண்ணங்களின் வெளிவந்து கேட்கிறேன்:

எந்த மலரின் ஜீவனை
நான் உள்வாங்க வேண்டும்?

எந்த முள்கொண்டு
யாரின் நிலத்தைக் கீறிவிட வேண்டும்?

எனது அறியாமையின்
சவப்பெட்டியைத் தயார்செய்து தர
யாரைக் கேட்பது?

எனது இயலாமையின் இந்திரியங்கள்
வற்றும் முதுமை என்று?

எனது செயலின்மை
எந்த மதத்தின் வேரில் அசைகிறது?

எனது போலிகளின் பின்னால்
உறுத்தும் உண்மையின் துருவை
நிலைத்திருக்கச் செய்வது எப்படி?

எனது கண்ணீரின் அனுபவம்
எந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால்
தரச் சுரந்தபடி இருக்கிறது?

அன்பு நண்பா ரோகித்,

என்னை இயங்கிடாது செய்துவந்த
சாத்விக அகந்தையின்
கடைசி கணத்தில் நின்று அழுகிறேன்
எனது ஆகச்சிறந்த முகமூடியையும்
எரித்துவிட்டு வருகிறேன்

உனது ஆடைகளை எனக்குத் தருவாயா?
உன்னைக் கொன்றொழித்தபோது
உடுத்தியிருந்த
அன்பின் ஆடையை
புரட்சியின் மேலங்கியை
தோழமையின் கைக்குட்டையை
விடுதலைக்குக் கூட்டிப்போக இருந்த
பூட்ஸை
பூட்ஸின் பேரொலியை
அப்பழுக்கிலாத உனது
ஆன்மாவை...