க.ரத்னம்... மொழிபெயர்ப்பு, நாவல், சிறுகதை, கவிதை எனத் தமிழின் சகல தளங்களிலும் ஆழங்கால்பட்ட ஆளுமை. சூழலியல், நாட்டார் வழக்காறு சார்ந்தும் நிறைய பங்களிப்பு செய்தவர். சங்க இலக்கிய ஆய்வாளர், விமர்சகர். பெரிதும் கவனிக்கப்படாத அவரின் பங்களிப்புகள் குறித்து வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம்.

பிரிட்டிஷ் மானுடவியல் ஆய்வாளரான எட்கர் தர்ஸ்டன், தென்னிந்தியச் சாதிகள், பழங்குடிகள் குறித்து எழுதிய ‘Castes and Tribes of Southern India’ நூலின் ஏழு தொகுதிகளையும், ‘தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்’ என்ற தலைப்பில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்காக மொழிபெயர்த்தவர். ரத்னத்தின் ஆகச் சிறந்த பங்களிப்பு இது. மேலும், ஜேம்ஸ் ஜாய்ஸின் புகழ்பெற்ற ‘டப்ளினர்ஸ்’ நாவலை ‘டப்ளின் நகரத்தார்’ என்ற பெயரில் தமிழ்ப்படுத்தியவர். ஆன்டன் செகாவின் சிறுகதைகள், டி.ஆர்.சேஷ ஐயங்காரின் ‘திராவிடரின் இந்தியா’ என ரத்னத்தின் மொழிபெயர்ப்புச் செயல்பாடு தமிழ்ப் படைப்புச் சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

எழுபதுகளில் கோவையைக் களமாகக்கொண்டு தீவிரமாக இயங்கிவந்த படைப்பாளிகளில் ரத்னம் முக்கியமானவர். சிறுபத்திரிகைச் சூழலில் அவர் அளித்த பங்களிப்புகளும் செயல்பாடுகளும் கவனத்திற்குரியவை. ‘கனவு மாலை’, ‘கல்லும் மண்ணும்’, ‘நினைவின் நிழல்’ போன்ற ரத்னத்தின் நாவல்களும், ‘பேதை நெஞ்சம்’, ‘காலத்தேரொலி’ போன்ற கவிதை நூல்களும், ‘சிறுகதைச் சாளரம்’, ‘சிறுகதை முன்னோடிகள்’ போன்ற விமர்சன நூல்களும் இளம் படைப்பாளிகள் வாசிக்க வேண்டியவை. மண்ணின் தன்மையும் தட்பவெப்பமும் மனிதனுக்குள் ஊடுருவி, அவன் தனித்தன்மையாக மாறும் வித்தையை, அந்த மண்ணிலேயே புரண்டெழுந்த வார்த்தைகளால் தனக்கேயான மொழியில் புனைவு தடவி, படைப்பாக்குபவர் ரத்னம்.

தஞ்சை சரபோஜி மன்னர் அரசினர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ரத்னத்துக்கு இப்போது வயது 87. அவரது தீவிரத்தை, இப்போது ஒரு விபத்தும் முதுமையும் முடக்கிப் போட்டிருக்கின்றன. கோவை, சிங்கா நல்லூரில் குடியிருக்கும் ரத்னத்துக்கு வீடே உலகமாகியிருக்கிறது.

வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பத்திலிருந்து, கல்வித்துறைக்கும் இலக்கியத்துக்கும் வந்தவர் ரத்னம். வேளாண்மையே அவரது பெரும்பாலான படைப்புகளுக்குக் களமாக இருக்கிறது. பொறியாளராக்கிப் பார்க்க நினைத்த தந்தையின் கனவு நோக்கிப் பயணித்தவரை, புதுமைப்பித்தனின் எழுத்துகள் தமிழ் நோக்கி நகர்த்திவிட்டன. கல்லூரிக் காலத்திலேயே `உலகம்’ என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். இன்று கோவையிலிருக்கும் பிரதான படைப்பாளிகள் பலர் அந்த இதழில் எழுதியவர்கள். சென்னை பச்சையப்பன் கல்லூரி, ரத்னத்தின் தேடலுக்குத் தீனி போட்டது. சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். எழுத்தாளரும் இதழாளருமான விந்தன், ரத்னத்தின் தீவிரத்தைக் கண்டு உற்சாகப்படுத்தினார். அவர் நடத்திய `மனிதன்’ இதழில் ரத்னத்தின் சிறுகதைகளை வெளியிட்டார்.

1960 முதல் 1975 வரை சிறுகதைகள் எழுதிக் குவித்த ரத்னம், கடித நாவல்கள், உருவகக் கதைகள் என உள்ளடக்கத்தில் பல புதுமைகளை முயன்றார். ‘நினைவுப்புற்று’ என்ற பெயரில் அவரின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டன.

கும்பகோணம், ராமநாதபுரம், முசிறி எனப் பணி நிமித்தம் ஊர் ஊராக அலைய நேர்ந்தது. 1970 முதல் 1974 வரை ராமநாதபுரத்தில் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில்தான் பறவைகள்மீதான ஆர்வம் துளிர்த்தது. விடுமுறை நாள்களெல்லாம் பைனாகுலரைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு காடு கரைகளில் சுற்றித் திரிந்தார் ரத்னம்.

கும்பகோணம், கோடியக்கரை, ராமநாதபுரம் என கால்போன போக்கில் சுற்றி, பறவைகள் பற்றிய தரவுகளைச் சேகரித்தார். `கேரவன்’, `தி ஹிந்து’, `சுதேசமித்திரன்’ போன்ற பத்திரிகைகளில் சூழலியல் பாதுகாப்பு, பறவைகளின் வாழ்வியல் முறைகள் குறித்து எழுதினார். தமிழகப் பாடநூல் நிறுவனம், ‘தென்னிந்தியப் பறவைகள்’ குறித்து ஒரு நூலை எழுதிக்கேட்டது. விரிவாக எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தை கறுப்பு வெள்ளையில் பாடநூல் நிறுவனம் வெளியிட்டது. மணிவாசகர் பதிப்பகம், மேலும் பல தகவல்கள் சேர்த்து முழுமையான வண்ணத்தில் ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ என்ற பெயரில் அழகிய கட்டமைப்பு
கொண்ட நூலாக மீண்டும் வெளியிட்டது.

தத்துவ மரபு குறித்தும் ரத்னம் நிறைய வாசித்திருக்கிறார். உலகளாவிய வாழ்வியல் முறைகளும் தத்துவ மரபுகளும் மரணம் குறித்து நிறைய பேசுகின்றன. வெவ்வேறு புள்ளிகளில் தொடங்கி, வேறு வேறு பாதைகளில் பயணித்து, இறுதியில் எல்லாமும் ஒற்றைப்புள்ளியில் இணைகின்றன. அதுகுறித்த சித்தாந்தத் தெளிவோடு ‘காலத்தேரொலி’ என்ற கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்தார்.

தஞ்சாவூர் சரபோஜி மன்னர் அரசினர் கல்லூரிக்கு மாற்றலான பிறகு, மொழிபெயர்ப்பில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார். 1981-ல் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. முதல் துணை
வேந்தராகப் பொறுப்பேற்ற முனைவர் வ.அய்.சுப்பிரமணியம், இந்தியாவை உள்ளடக்கி எழுதப்பட்ட பிறமொழி நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவருவதில் தீவிர ஆர்வம் காட்டினார். 3,500 பக்க அளவில் ஏழு தொகுதிகளாக உருவாக்கப்பட்டிருந்த ‘Castes and Tribes of Southern India’ நூலை மொழிபெயர்க்கும் பொறுப்பை ரத்னத்திடம் வழங்கினார் சுப்ரமணியம்.

இங்கிலாந்தைச் சேர்ந்த எட்கர் தர்ஸ்டன், பிரிட்டிஷ் இந்திய ஆட்சிக்காலத்தில் சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றியவர். மானுடவியல் துறையில் ஈடுபாடுகொண்ட தர்ஸ்டன், தென்னிந்திய வாழ்க்கை முறையில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தும் சாதிகளைப் பற்றியும் அவற்றின் வரையறைகள் பற்றியும் விரிவாக ஆய்வுசெய்தார். அந்த ஆய்வுக் குறிப்புகள்பின் னாளில் நூலாகவும் வந்தன. அந்த நூல்களே இன்றளவும் இந்திய மானுடவியல் துறையின் முக்கிய ஆதாரமாக இருக்கின்றன. தென்னிந்தியாவில் உள்ள 300-க்கும் மேற்பட்ட சாதிகள் குறித்துத் தெளிவாகவும் நுட்பமாகவும் வரையறை செய்திருக்கிறார் தர்ஸ்டன். அந்தத் தொகுப்பைக் கையில் எடுத்தார் ரத்னம்.

“1981-ம் ஆண்டில் தஞ்சையில், தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கினார்கள். ஒருநாள், என்னை அழைத்த துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியம், தர்ஸ்டனின் ஏழு மூலநூல் தொகுதிகளையும் கையில் தந்து, “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் செய்து தாருங்கள்” என்றார். இரவு பகலாக வேலைசெய்து பணியை முடித்தேன். ஆனால், அதற்குள் வ.அய்.சுப்பிரமணியம் மாற்றலாகிவிட்டார். சுப்ரமணியத்திற்குப் பிறகு வந்த துணைவேந்தர்கள் அந்தப் பணியைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். பல இடையூறுகளையும் சந்தித்தேன். 1983-ம் ஆண்டு தொடங்கி 1987-க்குள்ளாக மொழிபெயர்ப்புப் பணியை முடித்துவிட்டேன். 1989-ம் ஆண்டு கல்லூரிப் பணியிலிருந்தும் ஓய்வுபெற்றுவிட்டேன். ஆனால், அதுவரை மூன்று பாகங்கள் மட்டுமே வெளிவந்திருந்தன. மற்றவை அப்படியே கைவிடப்பட்டுவிட்டன. துணைவேந்தராக இ.சுந்தரமூர்த்தி வந்த பிறகுதான் மொழிபெயர்ப்பு மீண்டும் தூசி தட்டப்பட்டது.

எட்கர் தர்ஸ்டன் போல ஒரு மானுடவியல் ஆய்வாளர், நேசர் எவருமில்லை. ஊர், ஊராக அலைந்திருக்கிறார். தோடர்கள், பளியர்கள், காடர்கள், இருளர்கள் எனத் தென்னிந்தியாவிலிருக்கும் பழங்குடிகளின் குடியிருப்புகளைத் தேடிப்போய்த் தங்கி அவர்களின் திருமணம், இறப்புச் சடங்குகளிலெல்லாம் பங்கேற்று அனைத்தையும் பதிவுசெய்திருக்கிறார். இந்தப் பயண அனுபவங்களையும்கூட எழுதியிருக்கிறார். வால்பாறை மலைப்பகுதிக்குச் சென்றபோது, இவரை ஒரு கட்டிலில் உட்காரவைத்துத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். யானைகளின் தொந்தரவால் அங்கு வசித்த பழங்குடிகள், தானிய மூட்டைகளைத் தலைக்கடியில் வைத்துக்கொண்டுதான் உறங்குவார்களாம். யானைகள், அவர்களின் தூக்கத்தைக் கலைக்காமலே, அவற்றைத் தின்றுவிட்டுப் போய்விடுமாம். இதையெல்லாம் சுவைபட எழுதியிருக்கிறார்.

300 சாதிகள் பற்றி மிகவும் நுணுக்கமான பதிவுகள் இந்த நூலில் இருக்கின்றன. சில சாதிகள் பற்றி 30-40 பக்கங்கள் எழுதியிருக்கிறார். நம்பூதிரிகள் பற்றி 60 பக்கம் எழுதியிருக்கிறார். ஐயர்களுக்கும் ஐயங்கார்களுக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறார். நிறைய உதவியாளர்களை வைத்து ஆய்வு செய்திருக்கிறார். ராகாவாச்சாரியார் என்பவர் அவரோடு நிறைய களங்களுக்குச் சென்றிருக்கிறார். மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதம் எழுதி, அந்தந்தப் பகுதிகளில் உள்ள சாதிகள் குறித்த விவரங்களையெல்லாம் வாங்கியிருக்கிறார்.

எட்கர் தர்ஸ்டன் எழுதிய ‘Castes and Tribes of Southern India’ என்ற தொகுப்பைப் பற்றி மட்டும்தான் இன்று பேசுகிறார்கள். இது தவிர, 30-க்கும் மேற்பட்ட அரிய தொகுப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறார் தர்ஸ்டன். ‘Castes and Tribes of Southern India’ நூலின் சுருக்கப்பட்ட வடிவமாக அந்த மக்களின் வாழ்க்கைமுறைகள் குறித்துத் தனியாக இரண்டு தொகுதிகள்
கொண்ட நூலையும் எழுதியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்து முடித்தது பற்றியே ஒரு புத்தகம் எழுதலாம். அவ்வளவு அனுபவங்கள். தமிழ்ப் பல்கலைக்கழகம், இந்தப் புத்தகத்தைக் கிடப்பில் போட்டுவிட்டதை அறிந்து, மணிவாசகர் பதிப்பகம் மெய்யப்பன், “சுருக்கப்பட்ட வடிவத்தை மொழிபெயர்த்துக் கொடுங்கள், நம் பதிப்பகத்தில் போடுவோம்” என்றார்.

பொதுவாக இந்தியக் கலாசாரங்கள், சடங்குகள், வழிபாடுகள் குறித்து நிறைய ஆங்கிலேயர்கள் குறிப்புகள் எழுதியிருக்கிறார்கள். பிற்காலத்தில் அவை தமிழுக்குப் பெயர்க்கப்பட்டு நூல்களாகியிருக்கின்றன. அந்த நூல்கள் உண்மையில் நமக்குக் கொடைகள்தான். ஆனால், அவற்றில் நிறைய பிழைகளும் இருக்கும். குறிப்புகளை எழுதிய ஆங்கிலேயர்களுக்கு நம் பண்பாடு, மரபு குறித்த தெளிவான புரிதல்கள் இருக்காது. எவரோ சொல்வதைக் கேட்டு ஆவணப்படுத்துவார்கள். தகவலாளி தவறான செய்தியைச் சொன்னால் அதுவே பதிவாகிவிடும். எட்கர் தர்ஸ்டன் நூல்களிலும் இந்தப் பிரச்னைகள் உண்டு.

கொங்கு வேளாளர் திருமணம், இறப்புச் சடங்குகள் குறித்து தர்ஸ்டன் சொல்லியிருக்கும் செய்திகள் தவறானவை. அந்த மக்களின் திருமணங்களில் நாவிதர்களின் பங்கு அதிகமிருக்கும். பிராமணர்கள் இருக்க மாட்டார்கள். பிற்காலத்தில்தான் அவர்கள் உள்ளே வந்தார்கள். செட்டியார்கள் பற்றியும் சில முரணான கருத்துகள் அதில் உண்டு. செட்டியார்களை ‘நாடோடிகள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். பிள்ளைமார் சமூகம் பற்றியும் சில பிழையான கருத்துகள் இருக்கின்றன.

ஒரு மொழிபெயர்ப்பாளனாக, தர்ஸ்டன் எழுதியதில் ஒரு புள்ளியைக்கூட நான் மாற்றவில்லை. அதற்கு எனக்கு உரிமையும் இல்லை. அதிலிருக்கும் சிறு சிறு பிழைகளைக் குறிப்பிட்டு, அந்தத் தொகுப்புகளை நிராகரித்துவிட முடியாது. தர்ஸ்டன் அளவுக்கு இந்தியாவைப் புரிந்துகொண்ட வெளிநாட்டவர்கள் இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும். அவரளவுக்கு மக்களோடு நெருங்கி இங்கே களப்பணி செய்தவர்களும் இல்லை. இன்றைக்கும் தர்ஸ்டன் புத்தகம்தான், அரசு அதிகாரிகளுக்கு வேதப் புத்தகம். இந்தப் புத்தகத்தின் அடிப்படையில் சான்றிதழ்கள் தருகிறார்கள். இந்தப் புத்தகத்தின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. சாட்சியாக தர்ஸ்டனின் குறிப்புகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

தர்ஸ்டனின் புத்தகங்களை மொழிமாற்றம் செய்த பிறகு, என் கவனம் முழுவதும் மீண்டும் பறவைகள்மீது திரும்பியது. செம்மொழி மாநாட்டுச் சமயத்தில், ‘செம்மொழி இலக்கியத்தில் பறவைகள்’ என்ற புத்தகத்தை எழுதினேன். பிறகு, ‘கம்பன் எழுதிய ராமகாதையில் பறவைகள்’ என்றொரு புத்தகமும் எழுதினேன். மொழிபெயர்ப்பையும்விடவில்லை.

ஓய்வுக்குப் பிறகு, கைவிலங்கு அறுந்தது போல இருந்தது. நிறைய எழுதினேன். அதுநாள் வரை எழுத நினைத்ததையெல்லாம் மொத்தமாக எழுதிக் குவித்துவிட வேண்டும் என்ற ஆவல். ஆனால், எதிர்பாராத விபத்து... மொத்தமாக முடக்கிப்போட்டுவிட்டது. புத்தக அறைக்கும் ஹாலுக்கும் நடக்கவே போராட வேண்டியிருக்கிறது. எப்போதேனும் தட்டுத் தடுமாறி வெளியே போய்க் கொஞ்சம் புதிய காற்றைச் சுவாசித்துவிட்டு மீண்டும் வந்து முடங்கிக்கொள்கிறேன். நாவலும் கதைகளும் இன்னும் மனதில் நிரம்பியிருக்கின்றன. காலம் கைகொடுத்தால் எழுதிவிட்டுப்போக முயல்வேன்” என்று சிரிக்கிறார் ரத்னம்.
ரத்னத்தின் மனைவி பெயர் மரகதம். இரண்டு மகள்கள்... இரண்டு மகன்கள். மகள்கள் நிலவி, உலகி. இருவரும் இரட்டையர்கள். நிலவி, மருத்துவர். உலகி, ஒரு கல்லூரியில் முதல்வராக இருக்கிறார். மகன் திருவேரகன், கும்பகோணத்தில் இருக்கும்போது பிறந்தவர். சுவாமிமலைக்கு இன்னொரு பெயர் திருவேரகம். அதனால் அந்தப் பெயர். சுயதொழில் செய்கிறார். இன்னொரு மகன் செந்தில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறார். எல்லோருக்கும் திருமணமாகிவிட்டது.

ரத்னம் அமைதிக்குள் வாழ்கிறார். வீடு நிசப்தமாக இருக்கிறது. அவ்வப்போது தோட்டத்தில் நிற்கும் கொய்யா மரத்துக்கு வந்துபோகிற அணில்களும் சில குருவிகளும் தவிர எப்போதேனும் வந்துசெல்கிறார் அஞ்சல்காரர். எல்லா நேரத்திலும் ஆழ்ந்த வாசிப்புக்குள் நிறைந்து கிடக்கிறார் ரத்னம்!