வெற்றிடம்

நுரைத்துப் பொங்கி
சுழித்தோடிய ஆற்றின்
கரையையொட்டி வளர்ந்திருக்கும்
ஆலமர விழுதுகளில்
உறைந்துகிடக்கின்றன
விளையாட்டுச் சிறுவர்களின்
பிஞ்சு ரேகைகள்.
இப்போதும்
சுழித்தோடுகிறது ஆறு
கானல் நீர் சுமந்து.
பால்யங்கள் தழுவாத
வெற்றிடமாய் விம்முகிறது
ஆற்றங்கரை.

- தி.சிவசங்கரி

சமுத்திரம்

சுண்டல் விற்கும் சிறுவன்
பேன்ட் பாக்கெட்டில்
கையளவு கடற்கரை!

-தக்ஷன்

சுடர்

காற்றில் அலைக்கழியும்
சுடர்களில்
நிறைவேறா பிரார்த்தனைகள்!

-தக்ஷன்

கதை

ஆட்டுக்கார தாத்தாவிடம்
நிறைய கதையிருக்கு
சொல்வதற்கு

ஒரு வேளை சாப்பாட்டிற்காக
நாள் முழுக்க
ஆடு மேய்த்த
வறுமையின் கதை

ஆடு மேய்க்கும்போது
காணாமல்போன
ஆட்டுக்குட்டியைத் தேடித் தேடி
ஆளுக்கு ஒரு திசையில் தொலைந்து போன
காட்டின் கதை

சுனையில்

தண்ணீர் எடுக்கையில்
ஏதோ துரத்தின
பேய்க் கதை

ஆலங்கட்டி மழையில்
ஒரு வாரம்
ஊர் உறைந்துபோன மழைக்கதை
என நிறைய
கதையிருக்கு
சுவாரசியமாகச் சொல்வதற்கு

கேட்பதற்குத்தான்
காதுகள் இல்லை வீட்டில்.

- சுபி.முருகன்

தவம்

ஒழுகிவிழும் நீர்த்துளியில்
நிலவொளியைப் பூசிக்கொள்கிறது
கிணத்துத் தவளை.

- பாணால்

வெற்றிடம்

நுரைத்துப் பொங்கி
சுழித்தோடிய ஆற்றின்
கரையையொட்டி வளர்ந்திருக்கும்
ஆலமர விழுதுகளில்
உறைந்துகிடக்கின்றன
விளையாட்டுச் சிறுவர்களின்
பிஞ்சு ரேகைகள்.
இப்போதும்
சுழித்தோடுகிறது ஆறு
கானல் நீர் சுமந்து.
பால்யங்கள் தழுவாத
வெற்றிடமாய் விம்முகிறது
ஆற்றங்கரை.

- தி.சிவசங்கரி

சமுத்திரம்

சுண்டல் விற்கும் சிறுவன்
பேன்ட் பாக்கெட்டில்
கையளவு கடற்கரை!

-தக்ஷன்

சுடர்

காற்றில் அலைக்கழியும்
சுடர்களில்
நிறைவேறா பிரார்த்தனைகள்!

-தக்ஷன்

கதை

ஆட்டுக்கார தாத்தாவிடம்
நிறைய கதையிருக்கு
சொல்வதற்கு

ஒரு வேளை சாப்பாட்டிற்காக
நாள் முழுக்க
ஆடு மேய்த்த
வறுமையின் கதை

ஆடு மேய்க்கும்போது
காணாமல்போன
ஆட்டுக்குட்டியைத் தேடித் தேடி
ஆளுக்கு ஒரு திசையில் தொலைந்து போன
காட்டின் கதை

சுனையில்

தண்ணீர் எடுக்கையில்
ஏதோ துரத்தின
பேய்க் கதை

ஆலங்கட்டி மழையில்
ஒரு வாரம்
ஊர் உறைந்துபோன மழைக்கதை
என நிறைய
கதையிருக்கு
சுவாரசியமாகச் சொல்வதற்கு

கேட்பதற்குத்தான்
காதுகள் இல்லை வீட்டில்.

- சுபி.முருகன்

தவம்

ஒழுகிவிழும் நீர்த்துளியில்
நிலவொளியைப் பூசிக்கொள்கிறது
கிணத்துத் தவளை.

- பாணால்