Published:Updated:

கவிதை

கவிதை
பிரீமியம் ஸ்டோரி
கவிதை

கைலாஷ் சிவன் - ஓவியங்கள் : மணிவண்ணன்

கவிதை

கைலாஷ் சிவன் - ஓவியங்கள் : மணிவண்ணன்

Published:Updated:
கவிதை
பிரீமியம் ஸ்டோரி
கவிதை

ஆல கால விஷம்

ருளுக்கென்று வேறுபெயர்
தேவையில்லை
உடலை இறுக்கி மீந்திருக்கும்
ஈரத்தையும்
பிழிந்து ஊற்றிவிடு
குங்குமக் குருதியில்
சுடரின் ஓவியம்

மாதவிடாய்த் தூமையை
தன் கால்நக்கிச் சுற்றிவரும்
மந்திரப்பூனைக்கு
பருகக் கொடுக்கிறாள்
அதுவும் நக்கித் துடைக்கிறது
அந்நாட்களின் வலிக்கு
நிவாரணம் போலல்லாது
புணர்வின் உச்சம் தாண்டி
உள் உயிர்வெறியில்
சிரசைக் குடையும் விஷம்
பூனையின் கதறலில்
உடைகிறது இருள். 

கவிதை

என் பெயர் அறிந்த காதலி

மீதமிருந்த சொற்களும் எழுதப்படாத கவிதையும்
தொகுப்பிலிருந்து

ஓர் இறையியல்வாதியைவிடவும்
ஒரு பைத்தியத்தின் பைசாசத்தைவிடவும்
எதிலும் கால்வைக்க முடியாத சொற்கள்
பதினைந்து இரவுகளும் நிலவும்
தூக்கமற்ற சொற்கள்
அது காதல்தான்
எப்படி அதை நான் சொல்ல முடியும்
சொற்களைத் தவிர்த்துவிடும்போது
பறவையின் அழைப்பிற்குச் செவி கொடுக்க வேண்டும்
ஒரு பெண்ணின் பெயரை உச்சரிப்பதைவிட
அவள் இருப்பு என்னை முழுமை கொள்ளச் செய்கிறது
உதடை அசைக்கின்றன அவளின் சொற்கள்
அமைதி அதில் சற்று சலனமுறுகிறது

சில சமயங்களில் அர்த்தங்கள்
சொற்களைக் கடந்து
தூரத்தை அருகழைத்துவிடுகிறது.

வைதவ்யம்

பேனாவைத் தொலைத்துவிட்டேன்
இருளில் புதைந்தமுகம்
வெற்று வெம்பரப்பைத் தேடி
இறந்துபோனவனின் கனவைத் திருடி
அந்தத் திருகலான வார்த்தையின்
நிழல் வீச்சம்
வலியுடன் கூடிய மாதவிலக்கு
நான் ஏன் ஈரம் சுமக்க வேண்டும்?
இருளின் ஒளிநகை
திருகலான அந்த வார்த்தை
உமிழ் நீரில் கரைகிறது
மீன் வாடையற்று
உப்புக்கரிக்கும் அலை மூச்சு
எதனெதிர் எதன் உயிர்ச் சாயை
சமுத்திரத்தின் முதுகை மிதித்து நடந்தவன்
வந்தவன் தீர்ப்பு நாள் என்றான்
அச்சடிக்கப்பட்ட அறிக்கை
தூய வெள்வொலி
கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது
பொய்களை
தர்க்கத்திற்கானது அல்ல வார்த்தை
இந்த இருளை யாருக்குத்தான்
பரிசளிக்க முடியும்
எண்ணிறந்த நட்சத்திரங்கள்
எழுதப்படாத பக்கங்களை
இனி எங்கென்று வாசித்தறிய
ஆரேலோ ரெம்பாவாய்
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூமம் கமழத் துயிலணை மேல்
கண் வளரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கவிதை

பழம் பாடலொன்றின் எச்சமிகுதி

ந்தப் பின்மதியத்து
மழையும் தூக்கமும்
ஈரத்தை உள்ளிறைக்கிறது
காற்று
தன்லயம் சிதறாத சந்தம்
உள்ளோடி இழையும்
ஈரவோசை
புல்லை நகையுறுத்தி
தன் அகக்கூட்டுக்குள்
சிறகொடுங்கி ஓய்கிறது ஓசை
இருளின் ஒளி சிதறி
மனதை நெட்டுயிர்க்கிறது
ககன மழை
காற்றும் நனைந்தது
ஈரம் சொட்டச் சொட்ட
சூரியனில்லாத அந்தி வெளிச்சம்.

வெயில் பட்டு உலரும் ஈரம்
வெயிலுக்குள் கருக்கிட்டு
எருமை மாடுகளும்
காலாந்திர வான் முகடுகளும்
மீந்த மச்சங்களின் பொறுக்குகளும்
தாமரைத் தண்டின் நீர் மொக்குகளும்
நீர் வழிந்து வழிந்து
தன் பொய்கைக்குள்

தாமரையை அந்த ஒளிதான்
அஃது அங்கு
ஓலைப் பசுமை அமிழ்தம்
வெம்புகை உப்பங்கழி
பரிதிக்கு நிழலில்லை
வெப்பமுதிர் நீராழி
நுரை ததும்பி
அந்தக் கைக்கொள் பறவையின்
சுவடுபோல்
ஈர நெஞ்சுள் உன் அன்பு
தொண்டைக்குழி தங்கி
உன் சொற்களில் கசியும்
உமிழ் நீர்.

இமை கூடி விழி கொள்
ஒட்டுமொத்த இருளுக்கும்
அந்த ஒற்றைச்சுடர்
இருளையும் உள் தஹித்து
அவளென் இமை
வெளிச்சச் சிமிழ்
வேறேதும் சொல்லாயோ
இமை திரிந்தா லெம் பாவாய்.