Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

ஓவியம்: செந்தில்

சொல்வனம்

ஓவியம்: செந்தில்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்
சொல்வனம்

கனவெனும் சிறு பூ

னவுகளுக்கும் பூக்களுக்கும்
தன் வாழ்வானது  
ஒப்புக்கொடுக்கப்பட்டுவிட்டதாக
எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு
இரண்டாம் சாமத்தில் அப்பா
இறந்துவிட்டதைப்போல துர்க்கனவு வந்தது

நெடுநாள்களுக்கு முன்பான
மாதவிடாய் நாளொன்றில்
அவள் வீட்டு நிலைக் குத்துவிளக்கு
குறுகிக் குறுகி நீள்வதைப்போல 
ஓர் கனவு வந்தது
அவ்விரவில் அவள் தவறிப்போன
அக்காவின் கைகளைப் பிடிப்பதாய் நினைத்து
பாட்டியின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டாள்

பெரும்பாலான அவள் கனவுகளில்
பூக்களே எப்போதும் விரிந்திருக்கும்
சாமந்திப்பூக்கள் மலர்ந்திருந்த
கனவிற்குப் பிந்தைய நாளிலேயே
அவள் பூப்பெய்தினாள்
பிச்சிப்பூக்களை உள்ளங்கைகளில் ஏந்தி
மோந்த கனவுக்குப் பிறகே
அவளுக்குப் பூ வைத்துவிட்டுப் போனார்கள்
மகப்பேற்றிற்கு முன்தின இரவுக் கனவில்
அவள் ரோஜாத் தோட்டத்திற்கு நடுவில்
நின்றுகொண்டிருந்தாள்

விடிந்ததும் விடியாமல் இருந்த 
அதிகாலையில் ஒலித்த அலைபேசி அழைப்பை
பீதியோடு எதிர்கொள்ள
எதிர்முனையில் பேசிய அம்மா
அன்றைய தினத்தை அவள் அப்பாவின்
பிறந்தநாளெனக் குறிப்பிட்டுச் சொல்ல
அவளுள் நிஜத்தில் ஒரு செம்பருத்தி
முகிழ்க்கத் தொடங்கியிருந்தது 

- வே.முத்துக்குமார்

வாசம்

துவொன்றும்
பாழடைந்த வீடில்லை
அதில் குருவி
ஒன்று குடியிருக்கிறது

- மகேஷ் சிபி

சாம்பல் வாசம்

ங்கிருந்தோ வந்து
என் நாசியில் கலக்கிறது
அந்தச் சாம்பலின் வாசம்...
வாசம் வந்த திசைநோக்கித்
திரும்பிப் பார்க்கையில்
கொழுந்து விட்டெரிந்துகொண்டிருக்கிறது
கொழுப்பேறிய மானுட உடல்
முன்னையிட்ட தீயில்...
எரியும் பிம்பத்தில்
அழிந்துகொண்டிருக்கிறது
அவன் இதுவரை
சேர்த்து வைத்த ஆணவச்செருக்கும்
அகங்கார மிடுக்கும்...
அழிவதை உணர்ந்த அவ்வுடல்
திமிறி எழுகையில்
வெட்டியானின்
ஆவேச தடியடியில்
அமுங்கிபோகிறது
அவன் சாதிவெறியும்...
எரிந்து முடிந்த அந்தச்
சாம்பல் குவியல்
சொன்ன சேதிகள்
இதுவரை யாரும்
சொல்லாத நீதிகள்...

- பிரபுசங்கர்.க

குந்தி

நி
னைவில் கொண்டாள்
கற்பிக்கப்பட்ட மந்திரங்களை.
விளையாட்டுப் பருவம்
பரிசோதித்திடத் தூண்டியது.
அதிகாலையில்
ஓடிக்கொண்டிருந்த நீரிடம்
கூழாங்கற்களைப் பெற்றாள்
ஒவ்வொரு கல்லையும்
ஒவ்வொரு உருவாக்கி
குலுக்கிப் போட்டாள்
உலகம் கணநேரம் ஆடி நின்றது
கண் மூடி தேர்வு செய்தவரை நினைத்து
காமம் ஏற்றப்பட்ட சொற்களுக்கு
உயிர் கொடுத்தாள்.

அன்று உலகத்தார்
இரண்டு சூரியன்கள் கண்டதை
மகாபாரதம் சொல்ல மறந்தது.

- ந.பெரியசாமி