வீடு திரும்புதல்

கார்கால இளவெயில்
பறவைகள் கிளையில் அமர்ந்து
ஒன்றை ஒன்று கோதிக்கொண்டிருந்தன

இளஞ்சிவப்பு நிற டெய்ஸி மலரிலிருந்து
அடுக்கிய இதழ்களைக் காற்று பிய்த்ததை
வண்ணத்துப்பூச்சி தடுத்தாட்கொண்டது

குயிலின் குரலுக்கு பதில்குரல் எழுப்பும்
குழந்தை விளையாட்டு ஒரு பக்கம் தொடர...
அலகில் கூட்டுக்கு செத்தையெடுத்துப் பறந்தன இரு குருவிகள்

முற்றத்துக் கொய்யாமரக்கிளை
இலை மறைவில் இரவு தூங்க வரும்
இணைப்பறவை மழையில் நனைந்தது
இந்த மழைக்காலமும் உலராமல்

உன்னோடு என்னையும் ரயில் ஏற்றிவிட்டு
கையசைத்து வீடு திரும்பினேன்.

- பூர்ணா

தயக்கமும்... நடுக்கமும்...

சற்றைக்கு முன்பாக
விரல்கள்
நடுங்க நடுங்க
மதுபானக்கடையின்
துவாரம் வழியே
நுழைந்து
சிரித்தவாறே
பாட்டிலொன்றை
வாங்கிச் செல்லும்
கைகளுக்குரிய
கால்கள்
முன்பொரு நாளில்
இதேபோன்ற
மதுபானக்கடையொன்றில்
தயங்கித் தயங்கி
அச்சத்தோடு
அடியெடுத்து
வைத்தவைதான்.

- சாமி கிரிஷ்

மழை விற்பவன்

மழையை விற்கலாம் என்று
புதிதாகக் கடையைத் திறப்பவன்
எந்தப் புள்ளியிலிருந்து
மழையை அறுப்பதெனத் தெரியாமல்
அதன்பின்னே ஓடிக்கொண்டே இருக்கிறான்

நெகிழிப் பைகள் தடையிருந்ததால்
வெறும் கையில் மழை வாங்க வந்தவர்கள்
சிந்தாமல் மழையை அறுத்துத் தரும்படி
திட்ட ஆரம்பிக்கிறார்கள்

கூரான கத்தியை மழைக்குள் செருகுகிறான்
நழுவுகிற மழையைப் பார்த்து
மண்ணில் ஒட்டிய மழை வேண்டாம்
நேரடியாகப் பிடித்த
உயிர்போகத் துடிதுடிக்கும் மழை
மிகவும் ருசியாக இருக்குமென்கிறார்கள்

பக்கவாட்டில் மழையை வெட்டுகிறான்
அவன் ஆடைகளை யாரோ
மண்ணுக்குள்ளிருந்து இழுக்கிறார்கள்
தலைகுனிந்து நிற்பவனின்
நிர்வாணத்தை
மூடுகிறது மழை.

மழையை விற்கமுடியாதவன்
கடலுக்குள் குதித்து மறைகிறான்

கோபத்தில்
கடையைப் பிளக்கும் கூட்டம்
வெறியில் மழையைப்
பச்சையாகக் கடிக்க ஆரம்பிக்கிறது
ஓட்டைப் பற்கள் வழியே தப்பிக்கிறது மழை

மழையைக் கொன்று பிடிக்க
ஆயுதங்களேந்திய பெரும்படை
தூசிபறக்க விரைகிறது
மேல்நோக்கிப் பின்வாங்கும் மழை
மேகங்களில் மறைகிறது

வெறும் கைகளுடன் வீடு திரும்பியவர்கள்
தண்ணீரைத்
திரும்பத் திரும்ப அடிக்கிறார்கள்
அது
முகங்களை முத்தமிடுகிறது.

- இரா.கவியரசு

வீடு திரும்புதல்

கார்கால இளவெயில்
பறவைகள் கிளையில் அமர்ந்து
ஒன்றை ஒன்று கோதிக்கொண்டிருந்தன

இளஞ்சிவப்பு நிற டெய்ஸி மலரிலிருந்து
அடுக்கிய இதழ்களைக் காற்று பிய்த்ததை
வண்ணத்துப்பூச்சி தடுத்தாட்கொண்டது

குயிலின் குரலுக்கு பதில்குரல் எழுப்பும்
குழந்தை விளையாட்டு ஒரு பக்கம் தொடர...
அலகில் கூட்டுக்கு செத்தையெடுத்துப் பறந்தன இரு குருவிகள்

முற்றத்துக் கொய்யாமரக்கிளை
இலை மறைவில் இரவு தூங்க வரும்
இணைப்பறவை மழையில் நனைந்தது
இந்த மழைக்காலமும் உலராமல்

உன்னோடு என்னையும் ரயில் ஏற்றிவிட்டு
கையசைத்து வீடு திரும்பினேன்.

- பூர்ணா

தயக்கமும்... நடுக்கமும்...

சற்றைக்கு முன்பாக
விரல்கள்
நடுங்க நடுங்க
மதுபானக்கடையின்
துவாரம் வழியே
நுழைந்து
சிரித்தவாறே
பாட்டிலொன்றை
வாங்கிச் செல்லும்
கைகளுக்குரிய
கால்கள்
முன்பொரு நாளில்
இதேபோன்ற
மதுபானக்கடையொன்றில்
தயங்கித் தயங்கி
அச்சத்தோடு
அடியெடுத்து
வைத்தவைதான்.

- சாமி கிரிஷ்

மழை விற்பவன்

மழையை விற்கலாம் என்று
புதிதாகக் கடையைத் திறப்பவன்
எந்தப் புள்ளியிலிருந்து
மழையை அறுப்பதெனத் தெரியாமல்
அதன்பின்னே ஓடிக்கொண்டே இருக்கிறான்

நெகிழிப் பைகள் தடையிருந்ததால்
வெறும் கையில் மழை வாங்க வந்தவர்கள்
சிந்தாமல் மழையை அறுத்துத் தரும்படி
திட்ட ஆரம்பிக்கிறார்கள்

கூரான கத்தியை மழைக்குள் செருகுகிறான்
நழுவுகிற மழையைப் பார்த்து
மண்ணில் ஒட்டிய மழை வேண்டாம்
நேரடியாகப் பிடித்த
உயிர்போகத் துடிதுடிக்கும் மழை
மிகவும் ருசியாக இருக்குமென்கிறார்கள்

பக்கவாட்டில் மழையை வெட்டுகிறான்
அவன் ஆடைகளை யாரோ
மண்ணுக்குள்ளிருந்து இழுக்கிறார்கள்
தலைகுனிந்து நிற்பவனின்
நிர்வாணத்தை
மூடுகிறது மழை.

மழையை விற்கமுடியாதவன்
கடலுக்குள் குதித்து மறைகிறான்

கோபத்தில்
கடையைப் பிளக்கும் கூட்டம்
வெறியில் மழையைப்
பச்சையாகக் கடிக்க ஆரம்பிக்கிறது
ஓட்டைப் பற்கள் வழியே தப்பிக்கிறது மழை

மழையைக் கொன்று பிடிக்க
ஆயுதங்களேந்திய பெரும்படை
தூசிபறக்க விரைகிறது
மேல்நோக்கிப் பின்வாங்கும் மழை
மேகங்களில் மறைகிறது

வெறும் கைகளுடன் வீடு திரும்பியவர்கள்
தண்ணீரைத்
திரும்பத் திரும்ப அடிக்கிறார்கள்
அது
முகங்களை முத்தமிடுகிறது.

- இரா.கவியரசு