Published:Updated:

மீன் பிடி தடைக்காலம்

மீன் பிடி தடைக்காலம்
பிரீமியம் ஸ்டோரி
மீன் பிடி தடைக்காலம்

ஷக்தி

மீன் பிடி தடைக்காலம்

ஷக்தி

Published:Updated:
மீன் பிடி தடைக்காலம்
பிரீமியம் ஸ்டோரி
மீன் பிடி தடைக்காலம்

ம் வலைகளை அகழெலி வெளியேறும் காலத்தில் சீர்ப்படுத்துகிறவர்கள்
கரிச்சான்களையும் பார்த்துச் சிரிக்கிறார்கள்
அப்பய்க்கப்ப தன் இரு கைகளை உதறி
தூக்கணாக்கயிறுபோல நீளும் வலையுடன் சமருக்குத் தயாராகிறார்கள்
தூக்குக்குண்டின் அலைவுறுதல்போல் இப்பகல்
வலை சீர்ப்படுத்தும் கூடங்கள் அதன் வடிவம் இழந்து நிரம்புகின்றன
தூலசரீரம் கொண்டவனொருவன் வலையின் மீது உறங்குகிறான்
இந்தக் கரை தெங்கம் மரங்கள் சூழ்ந்த தன்மையான அழகினாலானது
கட்டிவைக்காத வலையின் துளையில் இருந்து
மேலோடுகளைக் கழற்றிய நண்டின் கூட்டுக்கண்கள் கடலை வெறிக்கிறது
சற்று அகலமான பெண் நண்டு முட்டைகளை விடுவிக்க நெளிகிறது
தீர்மானமாய் ஒரு வெயில் மெல்ல வெப்பத்தைக் கூட்டுகிறது
காய்ந்த கரையில் மீன்களின் செட்டைகள் ஒளிர்கின்றன
வாற்செட்டையும் குதச்செட்டையும் காலை வெயிலை வீணாக்குவதில்லை
வலைகட்டி கடலில் வீசும் கொம்புகளை ஆசையாகப் பார்த்துக்கொள்கிறார்கள்
இனி கரப்புகளும் செவுள் வலைகளுமே போதுமானது
கோல் வலைகளும் இழு வலைகளும் ஓய்வுக்குத் திரும்புகிற காலம்,
இந்த அறுபது நாள்களும் கடல்வாழ் உயிரிகள் நாசனன் எனச் சபிக்கும் காலம்
இழுவைப் படகுகளும் விசைப் படகுகளும் வர்ணமேறுகின்றன
ஒரு காதலின் சிற்சபை போலிந்தக் கடல்
இந்த நடனங்கள் முடிவற்றுத் தொடர இந்த வலைகளுக்கு விருப்பமுமில்லை.

மீன் பிடி தடைக்காலம்

கோடைக்காலங்கள் மீனவனைப் பலவீன இதயம் கொண்டவனாக்குகிறது
அதன் வடிவத்தை இழக்கத் துவங்கும் படகுகள்,
வலை வாங்கிய மந்திர விதிகள்கொண்ட தவணைகள்.
சூழ்ச்சியான விசைப்படகு அரசியல்கள்,
மென் இதய பேறுகால மனைவி,
கருணையற்று வறண்ட முகத்துவாரங்கள்.
அணுவுலை குளிர்ந்து நிரம்பும் வெந்நீர்.
நிரம்பவே நிரம்பாத வயிறு.
கூடவே
நேர்மையான தேவன்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீன் பிடி தடைக்காலம்

திசையே இங்கு மறதி...
இந்த நடு இரவில் குறைந்தது எழுபது நாட்டிக்கல்லைத் தாண்டியிருக்கும்போது
நான் மழைத்துளியின் குளுமையை உணர்கிறேன்
கரிக்கும் இப்பிரதேசத்துக்குள்
தடைக்காலங்களில் இந்த ஆழ்கடலே தயை காட்டும்
நெய்பவர் கருணையில் கப்பலறை ஞாபகங்களில் குமைகிறது
பதப்படுத்தும் பனிக்கட்டியைக் கொஞ்சம் நாவில் இட்டுக்கொள்கிறேன்
நிலைகெடும் அலைத் தாவலில் படகுக்குள் மல்லாந்து கிடக்கிறேன்
சூற்பெண்டிர் கணவன் உடனிருப்பதையே விரும்புவர்
தலைக்குடி காலம் முதல் வணங்கும் சுறாவின் கொம்பை வேண்டுகிறேன்
அந்த நுழைவாயிலில் நின்று நிரைநிலைப் பார்வையோடு
அவள் விடைகொடுத்த ஞாபகம் வருகிறது
அக்கணப் பரிணமிப்பில் புரிந்துகொள்ளலால் உறுதியை விதைக்கிறாள்
புராதன இந்தச் சமுத்திரத்தில் நான் திக்கற்றவன்
அவளுக்கான முன்னிருப்பு எதுவும் பெரிதாக இல்லை
தீக்குறிகள் வந்துபோவதாக வேறு அச்சமூட்டி அனுப்பியிருந்தாள்
நான் ஒரு முப்பது வருடங்களின் தோட்டாக்களில் போன
எல்லா நிச்சயமற்ற உயிருக்கும் கரைந்திருக்கிறேன்
இரண்டு முறை தெளிவற்று ஏவத் தெரியாதத் தோட்டாவுக்குத் தப்பியிருக்கிறேன்
நான் அவளின் காதலைக் கண்டெடுத்த இதே தெண்டிரை மணலில்
எவ்வழியிலும் உதவிக்கு வழியற்றவனுக்காய்
ஒவ்வொரு முறையும் உயிர்த்தும் அவளைத் திகைப்பிலாழ்த்துவதையே விரும்புகிறேன்
அந்தத் தலைநீவுதலுக்கேனும் நான் வந்துசேர்வேன் என
நான் எந்நாழியில் காற்றில் சொல்லினேன் என மறந்துவிட்டேன்.

டந்துகொண்டிருக்கும் இந்த மீன்பிடித் தடைக்காலம் மீண்டும்
பூமி வெப்பம் தாளாது தகிப்பதாகவும் குறிப்பாகப் பருவநிலை பற்றிய
பயங்களை மட்டுமே விதைக்கும் பயமாயிருக்கிறது.
என் நீலவர்ண உப்பு நீர்ப் பரப்பில் எனக்கோர் இடம் உண்டு
ஒவ்வொரு பெருங்கடலுக்குள்ளும் ஒரு கடலிருப்பதைப்போல
என்னால் அதைத் தனிமைப்படுத்த முடிகிறது
எனவே இந்தக் கற்றளத்தில் நான் வேடதாரியாக நிற்க விரும்பவுமில்லை
என் விருப்பம்
எதிர்வரும் பருவத்தில்
பெரிய உருக்குக் கப்பல்களை என் பரப்புக்குள் திணிக்காதிருங்கள்
என் வேட்டை மீன் வளத்துனுள் மின்னணு சாதனங்கள்கொண்டு
திசை காண திரியாதிருங்கள்

நான் ஆரோக்கியமானவனாக இருப்பதுபோலிந்த மீன்களும் இருக்கட்டும்
ஆலைகளின் அமிலக் காரங்களும் நிரம்பி அதன் பிராணவாயுக்களை தின்னாதிருக்கட்டும்
என் கடலடித் திட்டுகளும் தாவரங்களையும்போல நான் உடைபடுகிற இக்காலத்தில்
என் தட்டைக்கைகளால் திறந்த கடலை நோக்கிப் பார்க்கிறேன்
நரையோடியக் காலம்போல இந்த மீன்பாடும் குறைந்துபோயிற்று
யாரையும் குற்றம் சாட்டுவதற்கு இது பாழ்வெளியல்ல
குளிர்ப்பதனக் கிடங்கு மீன்பிடிப் படகுகள் என் பரவெளிக் கடலினுள் அலைகின்றன
பிரமாண்ட இரட்டை மடி வலைகளில் எம் கடற்தரை வரை பெருக்கித் தீர்க்கின்றன

தயைகூர்ந்து
இவ்வுயர்ந்த பரப்பை ஆளும் மீன்வளம் ஒரு நாள் வற்றும்
வளம் பெருக இந்தத் தடைக்கால இவ்வாய்ப்புகள் போதுமானதாயிராது
நம் வாழ்வுகளுக்கு முடிவொன்றிருப்பதைப்போல

வழித்தெடுக்கும் இந்தப் பெருவிருந்தில் கடைச்சன் பிள்ளை நான்
என் தேவதை வாதிடும் நாளுக்கு முன்பாகவே கட்டுமானங்கள் எதுவுமற்ற
கட்டுமரத்தை எரித்துவிடுவேன்,
நீங்கள் வருணனை வேண்டி கடலோடுங்கள், தீர்க்காயுளுடனிருக்கும் என் கடல்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism