Published:Updated:

அடிமை வனம்

அடிமை வனம்
பிரீமியம் ஸ்டோரி
அடிமை வனம்

சமயவேல்

அடிமை வனம்

சமயவேல்

Published:Updated:
அடிமை வனம்
பிரீமியம் ஸ்டோரி
அடிமை வனம்

னத்திற்குள்
வளைத்து வளைத்துப் பெருஞ்சுவர்களை எழுப்பியிருந்தார்கள்
எல்லாச் சுவர்களையும் உள்ளடக்கி
ஒரு பெரிய கோட்டையும் இருந்தது

இது கரடி வனம் என்றார்கள்
ஆனால் பாருங்கள் நகரத்தின் அதே வெயில்.
நிற்பதா, தூங்குவதா அல்லது நின்றுகொண்டே தூங்குவதா
என்னும் குழப்பத்தில்
ஒரு கரடி ஆடிக்கொண்டே இருந்தது
நிற்காமலும் தூங்காமலும் ஒரு புதிய வழியைக்
கண்டுபிடித்த விஞ்ஞானிக் கரடியைப்
பலரும் படம் பிடித்தார்கள்.

அடிமை வனம்

பாதுகாப்பான பகுதி என்னும் அறிவிப்பின் அடியில்
பெரியதொரு இரும்புக் கதவை தானியங்கி எந்திரம் மூலம்
தள்ளித் திறந்தார்கள்
முதலில் அதை யானைக்காடு என்றார்கள்
கொஞ்சம் தண்ணீரே இருக்கும் ஒரு குட்டை
அதன் கரை மரங்களின் நிழலில்
யானைக் குடும்பங்கள் அனைத்தையும் குழுமவைத்தார்கள்
இரும்புவலை மனித ஊர்தியை நடுவில் செலுத்தி
சிதறி ஓடும் யானைகளைப் படம் பிடித்தார்கள்
அவை அடுத்த கரை மர நிழல்களில் இளைப்பாறட்டும்
என்று தனிப்பெருங்கருணையுடன் கூறினான் வழிகாட்டி.

புலிக்காட்டுக்குள் நுழைந்தார்கள்
போங்கடா என இவர்களைப் பொருட்படுத்தாமல்
கொட்டாவி விடுவதற்காக வாய்பிளந்து நடித்தது
ஓர் ஆண் புலி
சிங்கங்கள் என்ன புலிகளுக்கு இளைத்ததா
சிவாஜி கணேசன்களாக நடந்து காண்பித்தன
ஆட்டுக்கறித் தொடைகள் எறியப்படுகையில்
பாய்ந்து வேட்டையாடின
அடுத்த லோடு தண்ணீர் இன்னும் வரவில்லையே
என்னும் கவலையின்றி நீர்யானைகள்
கொஞ்சம் நீரிலும் கும்மாளமாய்ப் புரண்டுகொண்டிருந்தன.
 
ஒருவர் முதலைப் பண்ணையைக் காட்டவில்லையே என்றார்
அது பார்வையாளர்கள் நன்மையைக் கருதி
தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள்
ஒரு பார்வையாளரையாவது தின்றே ஆக வேண்டும் என்று
முதலைகள் நேற்று மாலையில் நோட்டீஸ் கொடுத்திருக்கலாம்.
பரவாயில்லை நாம் இன்னும் நிறைய பார்க்க வேண்டியிருக்கிறது
என்னும் ஆறுதல் வழங்கப்பட்டது
சாதுவான பிராணிகள் பகுதிக்குப் போகிறோமென அறிவிக்கப்பட்டது.

அங்கே மான்கள், மான்கள்போலவே துள்ளித் திரிந்தன
ஒட்டகச்சிவிங்கிகள் மிகச்சரியாக
ஒரு தாழ்மரக்கிளையின் இலைகளை மென்றபடி நின்றிருந்தன
அது ஒரு காடுதான் என்று நிரூபிக்கும் குரங்குகள்
யாருக்கு எது பாதுகாப்பான பகுதி என்னும் குழப்பத்தில்
பெரிய சுற்று மதில்கள் மேலேயே குதித்து அலைந்தன.

ஒரு வனத்திற்குள் நுழைவதற்கான ஓர் அனுமதிச் சீட்டு
உங்களிடம் இருக்கிறது என்பதற்காக
அது வனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism