கருணைமிக்க மாஸ்டர்

``கம்பிக்குப் பின்னால் நீங்கள் இருக்கிறீர்கள்.
வெளியே நாங்கள் இருக்கிறோம். சரிதானே?’’
``கம்பிகளுக்கு வெளியே நீங்கள் இருப்பதால்
சரிதான் மாஸ்டர்!’’
``கம்பிகளின் எண்ணிக்கையை மாற்றக்கூடாது
என்பது அறையப்பட்ட விதி.
எண்ணிப்பார்த்துக்கொள்கிறீர்களா?’’
``ஆம் மாஸ்டர்.
எண்ணுவதைக் கம்பிகளுடன்
நிறுத்திக்கொள்கிறேன்.’’
``உங்களுக்கான விதிகள் மற்றும்
தண்டனைகள்
பட்டியலிடப்பட்டுள்ளன.’’
``ஆம் மாஸ்டர். மரணமும் அந்தப்
பட்டியலில் உள்ளது.’’
``நல்லது. இறுதியாக ஏதேனும்
கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறீர்களா?’’
``இல்லை மாஸ்டர். அதனால்தான்
கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறேன்.’’

அது எப்படியும் வெளிவந்துவிடுகிறது

இசைத்தட்டில் சுழலும் ஆணி
ஒரு பாடல்வரியைப் பெயர்த்தெடுத்தது.
அது எங்கும் கசியாமல்
உள்ளங்கையில் பொத்திக் கடலில் விட்டீர்கள்.
கொப்பளித்த கடல் அதைக் கரையில் துப்பியது.
பின் கரைமணலுடன் அதை உள்வாங்கிக்கொண்டது.
இப்போது அந்தப் பாடல்வரியை
பலவண்ண மீனொன்று விழுங்கிவிட்டது.
அதன் வயிற்றிலொரு சினைமீன்.
மீன் வாய் திறந்து மூடும்போதெல்லாம்
தண்ணீர் `கொபுக்' `கொபுக்' என்கிறது.
ஒவ்வொரு கொபுக்கிலும் ஒரு ஸ்வரம்.

- சுகுணா திவாகர்; ஓவியம்: ரமணன்

கருணைமிக்க மாஸ்டர்

``கம்பிக்குப் பின்னால் நீங்கள் இருக்கிறீர்கள்.
வெளியே நாங்கள் இருக்கிறோம். சரிதானே?’’
``கம்பிகளுக்கு வெளியே நீங்கள் இருப்பதால்
சரிதான் மாஸ்டர்!’’
``கம்பிகளின் எண்ணிக்கையை மாற்றக்கூடாது
என்பது அறையப்பட்ட விதி.
எண்ணிப்பார்த்துக்கொள்கிறீர்களா?’’
``ஆம் மாஸ்டர்.
எண்ணுவதைக் கம்பிகளுடன்
நிறுத்திக்கொள்கிறேன்.’’
``உங்களுக்கான விதிகள் மற்றும்
தண்டனைகள்
பட்டியலிடப்பட்டுள்ளன.’’
``ஆம் மாஸ்டர். மரணமும் அந்தப்
பட்டியலில் உள்ளது.’’
``நல்லது. இறுதியாக ஏதேனும்
கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறீர்களா?’’
``இல்லை மாஸ்டர். அதனால்தான்
கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறேன்.’’

அது எப்படியும் வெளிவந்துவிடுகிறது

இசைத்தட்டில் சுழலும் ஆணி
ஒரு பாடல்வரியைப் பெயர்த்தெடுத்தது.
அது எங்கும் கசியாமல்
உள்ளங்கையில் பொத்திக் கடலில் விட்டீர்கள்.
கொப்பளித்த கடல் அதைக் கரையில் துப்பியது.
பின் கரைமணலுடன் அதை உள்வாங்கிக்கொண்டது.
இப்போது அந்தப் பாடல்வரியை
பலவண்ண மீனொன்று விழுங்கிவிட்டது.
அதன் வயிற்றிலொரு சினைமீன்.
மீன் வாய் திறந்து மூடும்போதெல்லாம்
தண்ணீர் `கொபுக்' `கொபுக்' என்கிறது.
ஒவ்வொரு கொபுக்கிலும் ஒரு ஸ்வரம்.

- சுகுணா திவாகர்; ஓவியம்: ரமணன்