Published:Updated:

உயிர் பெறும் நாட்டுப்புறக் கலைகள்!

உயிர் பெறும் நாட்டுப்புறக் கலைகள்!

உயிர் பெறும் நாட்டுப்புறக் கலைகள்!

உயிர் பெறும் நாட்டுப்புறக் கலைகள்!

Published:Updated:

டுக்கையடிப் பாட்டு, உருமியுடன் தேவராட்டம், தப்பாட்டம், முரசாட்டம், குதிரை ஆட்டம், கரகாட் டம் எனத் தமிழரின் நாட்டுப்புறக் கலைகள் ஏராளம். இந்தக் 'கொல வெறி’ யுகத்திலும் இந்த இசை கொஞ்ச மும் குலையாமல் கொங்கு மண்ணின் கிராமங்களில் ஜீவனுடன் வாழ்கிறது. இதற்கான இசைக் கருவிகளை மும்முரமாகத் தயாரித்து, உள்ளூர் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வரும் திருப்பூர் மாவட்டம் தொட்டியபாளையத்தின் சுப்ரமணியமே அதற்குச் சாட்சி!

உயிர் பெறும் நாட்டுப்புறக் கலைகள்!

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் வயல் வெளியாகக் காட்சி அளிக்கிறது தொட்டியபாளையம். சுப்ரமணியின் வீட்டில் விட்டத்தில்... தாழ்வாரத்தில்... ஜன்னலில்... வரவேற்பு அறையில்... எங்கு பார்த்தாலும் தொங்கிக்கொண்டு இருக்கின்றன இசைக் கருவிகள்! சுடச்சுட அப்போதுதான் தயாரித்த மத்தளத்தைத் தட்டிச் சரிபார்த்தபடி பேசத் தொடங்கினார் சுப்ரமணி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''என் அப்பா கருப்பன், கொல்லன் பட்டறை வெச்சிருந்தார். வேலை செய்றப்போ அவரோட பொழுதுபோக்கு பாட்டு பாடிக்கிட்டே, அதுக்குத் தகுந்த இசையோட இரும்பை அடிக்கிறது. இப்படி ஆரம்பிச்ச பாட்டுப்  பழக்கம், திருவிழாக்களில் வாரக் கணக்கில் பாடுற உடுக்கைப் பாட்டுக்காரரா அவரை மாத்தினது.

அவரோட கச்சேரிக் குத் தேவையானஉடுக்கை களை அவரே செஞ்சுக் குவார். இந்தப் பகுதியில் ஒவ்வொரு ஏரியா வுலயும் ஒரு தப்பாட்டக் குழு இருக்கும். அவங்க உருமி, திடும்பு, முரசு மாதிரியான கருவிகளை வெச்சிருப்பாங்க. இந்தக் கருவி களைப் பழுது பார்க்க, புதுசா வாங்கனு... எதுவா இருந்தாலும் ஈரோடு, கோயம்புத்தூர் பக்கம்தான் போகணும். அதனால நிறைய தப்பாட்டக் குழுவினர் எங்க அப்பாகிட்ட இசைக் கருவிகளைப் பழுது பார்க்கக் கொடுப்பாங்க.

ஒரு கட்டத்தில் அவரே தப்பாட்டக் கருவிகளையும் சொந்தமா தயாரிக்க ஆரம்பிச்சிட்டார். சின்ன வயசுல இருந்து நானும் அவருக்குத் துணையா இருந்ததால நல்லா தொழிலைப் பழகிட்டேன். இப்ப அவருக்கு வயசானதால தொழிலை நான் செய்யறேன். ஆனா, அப்பா போல தப்பட்டை மட்டுமே தயாரிச்சா ஒரு வட்டத்துக்குள்ள தொழில் நின்னுடும்.

வருமானமும் பெரிசா கிடைக்காது. அதனால, கொஞ்சம் மாத்தி யோசிச்சேன்.

இப்ப நான் தப்பட்டை, உருமி, கடம், மத்தளம், நகார்னு, எல்லா விதமான கிராமிய இசைக் கருவிகளையும் தயாரிக்கிறேன். அப்பாகிட்ட இருந்த தொழிலைமட்டும் இல்லாம, தப்பாட்ட இசைக் கலையையும் கத்துக்கிட்டேன். சுத்துப்பட்டுல என் தப்பாட்டம் இல்லாத திரு விழாவே கிடையாது. நானும் இசைக் கலைஞன் என்பதால், அர்ப்பணிப்பு உணர்வோடு தரமான இசைக் கருவிகளைத் தயாரிக்கிறேன். நார்வே, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள்ல இருந்தும் எங்கிட்ட தப்பாட்ட இசைக் கருவிகளை வாங்கிட்டுப் போறாங்க.

உயிர் பெறும் நாட்டுப்புறக் கலைகள்!

கிராமத்துத் திருவிழாக்களில் கொஞ்ச வருஷங்களுக்கு முந்தி சினிமா டான்ஸ்தான் பிரதானமா இருந்தது. அது அப்ப டியே ரிக்கார்டு டான்ஸா தரம் தாழ்ந்து போனது. ஆனா, இன்னைக்கு நிலைமை நிறைய மாறிடுச்சு. அது மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்த்து, சலித்து, வெறுத்துப்போன மக்கள், இப்ப திரும்பவும் நம்ம பாரம்பரியக் கலைகள் பக்கம் திரும்பி இருக்காங்க.

சேலம், ஈரோடு, பொள்ளாச்சி, திண்டுக்கல், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை பகுதிகளில் சமீபத்துல முறையா பயிற்சி பெற்ற கிராமியக் குழுக்கள் நிறைய உருவாகி இருக்கு. கோயில் திருவிழா மட்டும் இல்லாம கல்லூரி விழாக்கள், பொதுக் கூட்டம், திருமண நிகழ்ச்சிகளுக்கும் தப்பாட் டக் கலைஞர்களைக் கூப்பிடுறாங்க. இது நல்ல விஷயம். இசைக் கருவிகளின் தேவையும் அதிகரிச்சு, எனக்கும் அமோகமா ஆர்டர் வருது. இந்த நிலை தொடரணும்!'' கலையார்வத் தோடு உற்சாகமாகப் பேசுகிறார் சுப்ரமணி!

உயிர் பெறும் நாட்டுப்புறக் கலைகள்!
உயிர் பெறும் நாட்டுப்புறக் கலைகள்!

- ஜி.பழனிச்சாமி
படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism