Published:Updated:

"இது, எங்கள் மண்ணின் இசைக் கருவி!"

"இது, எங்கள் மண்ணின் இசைக் கருவி!"

"இது, எங்கள் மண்ணின் இசைக் கருவி!"

"இது, எங்கள் மண்ணின் இசைக் கருவி!"

Published:Updated:

லைகளில் புதுமை செய்யும் மனிதர்களுக்கு மத்தியில் கருவியில் புதுமை செய்தவர் புதுவையைச் சேர்ந்த கோபகுமார். 2001-ல் இவர் உருவாக்கிய 'அறுமுகனம்’ என்னும் இசைக் கருவி இப்போது புதுவை இசைக் கலைஞர்கள் மற்றும் இசைப் பிரியர்கள் மத்தியில் பிரபலம். புதுச் சேரி பாரதியார் பல்கலைக் கூடத்தில் இசைத் துறையில் மிருதங்க விரிவுரையாளராகப் பணி யாற்றிவரும் கோபகுமாரை, மாணவர்களுக்குத் தாள இசைப் பயிற்சி கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்த ஒரு இனிய மாலைபொழுதில் சந்தித்தேன்.  

"இது, எங்கள் மண்ணின் இசைக் கருவி!"
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அப்பா சுப்ரமணியம், அம்மா ராஜம்ரெண்டு பேருமே வாய்ப்பாட்டுக்காரர்களா இருக்காங்க. ஊர்த்  திருவிழாக்களில் மேளக் கலைஞர்கள் வாசிக்கும்போது உடம்புல ஒரு சிலிர்ப்பு ஏற்படும். திருவிழாவில் இசை நிகழ்ச்சிகள் பார்த்துட்டு வீட்டுக்குப் போனவுடனே ரெண்டு குச்சிகளை எடுத்துட்டு வீட்டுத் தரையில் அடிக்க ஆரம்பிச்சுடுவேன்.

அப்படித்தான் இந்த மிருதங்கத் துறையை தேர்ந்தெடுத்தேன்.

சின்ன வயசிலேயே அம்மாவோடு கச்சேரி கள்லேயும் மார்கழி மாத பஜனைகள்லேயும் கலந்துகிட்ட அனுபவங்கள் நிறையவே உண்டு. திருவனந்தபுரத்தில் மிருதங்கத் துறை யில் பட்டயப் படிப்பும் முதுநிலைப் பட்டயப் படிப்பும் முடிச்சேன். அப்புறமா, மூத்த மிரு தங்க வித்வான் டி.கே.மூர்த்தியிடம் ரெண்டு வருடங்கள் மிருதங்கப் பயிற்சி எடுத்தேன்.

1988-ல் புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடத்தில் மிருதங்க ஆசிரியரா என்னோட பணியை ஆரம்பிச்சேன். மாணவர்களின் கலை விழா பரிமாற்றங்களின்போது வெளி மாநிலங்களுக்குச் செல்வது வழக்கம். அப்படி ஒருமுறை போனபோது, அங்கு இருந்த மற்ற கலைஞர்கள், 'ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பாரம்பரிய இசைக் கருவி  உண்டு. புதுச்சேரிக் குனு பாரம்பரிய தாள இசைக் கருவி இருக் கா?’னு கேட்டாங்க. அந்தக் கேள்வி என்னை ஆழமாப் பாதிச்சது. அப்படி எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. புதுச்சேரிக்கு என்று ஒரு தனித்துவமான தாள இசைக் கருவியை உருவாக்கணும்கிற என்னோட உந்துதல், ஆர்வத்தோட விளைவுதான் இந்த 'அறுமுகனம்’.

முதல்ல இசைக் கருவியை உருவாக்கணும்கிற வைராக்கியம் மட்டும்தான் இருந்துச்சு. ஆனா என்ன கருவி பண்ணப் போறேன், அதை எப்படி செய்யப் போறேன்னு ஒரு ஐடியாவும் இல்லை. நிதானமா யோசிச்சப்போ எனக்கு ஆர்வமுள்ள, சின்ன வயசில இருந்தே ரத்தத் தில ஊறிப் போன, இதயத் துடிப்போட ஓசையா மாறிப்போன மிருதங்கத்தையே வேறு மாதிரி பண்ணினா என்னனு தோணி னது. நாலைந்து மிருதங்கங்களை ஒண்ணா இணைக்கணும்னு யோசனை வந்தது.

மரத்தை எவ்வளவு தூரம் குடையணும், எத்தனை தோல் போடணும், கருவி வைக்கிற ஸ்டாண்டை வெல்டிங் செய்றது எப்படினு ஆய்வுகள் செய்ய மட்டும் முழுசா ஐந்தரை வருடங்கள் பிடிச்சது. 2001 டிசம்பரில் இந்த அறுமுகனத்தை உருவாக்கி புதுச்சேரி மக்க ளுக்கு அறிமுகம் செய்தப்போ எனக்குள்ள ஏற்பட்ட பரவசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இசையை அனுபவிக்கத் தெரிஞ்சா தான் அந்தப் பரவசத்தையும் உணர முடியும்.

"இது, எங்கள் மண்ணின் இசைக் கருவி!"

மிருதங்கத்தில் வாசிக்கக் கூடிய எல்லா விஷயங்களையும் அறுமுகனத்திலும் வாசிக்க லாம். இப்போ ராக், ஜாஸ் மாதிரியான மேற்கத்திய இசையையும் அறுமுகனத்தில் வாசிக்க முயற்சிகள் பண்ணிக்கிட்டு இருக் கேன். அப்போதைய முதல்வர் ரங்கசாமி அறுமுகனத்தை புதுச்சேரியின் இசைக் கருவியா ஏத்துக்கிட்டார். 2004-ல் எனக்குப் புதுச்சேரி அரசின் கலைமாமணி விருது கிடைத்தது.

இப்போ பாரதியார் பல்கலைக் கூடத்தில் அறுமுகனத்துக்குத் தனியா பாடத் திட்டத்தை உருவாக்கியிருக்கேன். என்னதான் புதுப் புது இசைக் கருவிகள் வந்தாலும் பழைய கருவிகள்  தனித்துவமானவை. நகரா, கடசிங்காரி மாதிரி யான பல பழமையான இசைக் கருவிகள் அழிஞ்சிட்டே வருது. இப்போ வந்திருக்கிற எலெக்ட்ரானிக் டிரம்களில் எல்லா விதமான இசைக் கருவி களின் இசையையும் வாசிக்கலாம். ஆனா, நம்மோட மரபான இசைக் கருவிகள் மூலமா உருவாகிற இசைதான் தாலாட்டு மாதிரி உயிர்ப்பானது!''- ஒரு நிம்மதி பரவுகிறது கோபகுமார் முகத்தில்.  

"இது, எங்கள் மண்ணின் இசைக் கருவி!"
"இது, எங்கள் மண்ணின் இசைக் கருவி!"

- நா.இள.அறவாழி
   படங்கள்: ஆ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism