Published:Updated:

"பைக்ல சென்னையைச் சுத்திப்பார்ப்போம் ஹேமா!" கவிஞர் கலை இலக்கியாவின் நிறைவேறாத ஆசை

"பைக்ல சென்னையைச் சுத்திப்பார்ப்போம் ஹேமா!" கவிஞர் கலை இலக்கியாவின் நிறைவேறாத ஆசை

"பைக்ல சென்னையைச் சுத்திப்பார்ப்போம் ஹேமா!" கவிஞர் கலை இலக்கியாவின் நிறைவேறாத ஆசை

Published:Updated:

"பைக்ல சென்னையைச் சுத்திப்பார்ப்போம் ஹேமா!" கவிஞர் கலை இலக்கியாவின் நிறைவேறாத ஆசை

"பைக்ல சென்னையைச் சுத்திப்பார்ப்போம் ஹேமா!" கவிஞர் கலை இலக்கியாவின் நிறைவேறாத ஆசை

"பைக்ல சென்னையைச் சுத்திப்பார்ப்போம் ஹேமா!" கவிஞர் கலை இலக்கியாவின் நிறைவேறாத ஆசை

மிழ் இலக்கிய உலகுக்கு இரண்டு நாள்களாக அதிர்ச்சியான செய்திகளாகவே வந்துகொண்டிருக்கிறது. நேற்று, கவிஞர் ஜெ.பிரான்சிஸ் கிருபா, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மனநிலை பிறழ்ந்தவர் ஒருவரைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டார். பிறகு, சிசிடிவி காட்சிகள், பிணக்கூறாய்வு அறிவிக்கை இவற்றின் அடிப்படையில் பிரான்சிஸ் கிருபா மீது குற்றமில்லை என்று விடுவிக்கப்பட்டார். இதன் அடுத்து, நேற்றிரவு கணீரென்ற குரலுக்குச் சொந்தக்காரக் கவிஞர் கலை இலக்கியா மரணம் அடைந்த செய்தி வந்தது.

"பைக்ல சென்னையைச் சுத்திப்பார்ப்போம் ஹேமா!" கவிஞர் கலை இலக்கியாவின் நிறைவேறாத ஆசை

தேனியைச் சொந்த ஊராகக் கொண்ட இலக்கியாவின் இயற்பெயர் இந்திரா. சிறுவயது முதலே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். ஆனால், பெண்களே உரிய கட்டுப்பாடுகளை விதித்தது வீடு. அவற்றையும் மீறி தம் படைப்புகளை எழுதினார். இமைக்குள் நழுவியவள், பிரம்ம நிறைவு, என் அந்தப்புரத்திற்கு ஒரு கடவுளைக் கேட்டேன் உள்ளிட்ட எட்டு நூல்களை எழுதியுள்ளார்.  இவற்றில் கவிதை மற்றும் கட்டுரைகள் நூல்கள் அடங்கும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொறுப்பில் இருந்தவர். தான் எழுதிய கவிதையை அதன் இயல்பு கெடாமல் வாசிப்பது கலை இலக்கியாவின் தனிச் சிறப்பு. மேடைகளில் அவரின் குரல் மட்டுமல்லாமல் கருத்துகளும் தனித்துத் தெரியும். இரண்டு குழந்தைகளின் தாய். நுரையீரல் புற்றுநோய் தன்னைப் பாதித்திருக்கிறது என்பதை மிகத் தாமதமாகவே தெரிந்துகொண்டிருக்கிறார். தொடர்சிகிச்சை எடுத்தும் பலனின்றி நேற்று மரணமடைந்தார். 

கலை இலக்கியாவைப் பற்றி பத்திரிகையாளர் குமரேசன் எழுதிய அஞ்சலிக் குறிப்பில், ``25 ஆண்டுகளுக்கு முன் தீக்கதிர் - வண்ணக்கதிர் பகுதிக்கு இந்திரா என்ற பெயரில் கவிதைகள் வந்துகொண்டிருந்தன. பிறகு ஒருநாள் வந்த கடிதத்தில் தனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும் இனிமேல் தொடர்ந்து எழுத முடியுமா என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். பிறகு, பல ஆண்டுகள் கழித்து திருப்பூர் மாநாடு ஒன்றில் ஒருவர் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, 'இந்திராவை நினைவிருக்கிறதா?' என்று கேட்டார். `அவரை மறக்க முடியுமா?' என்றதும் `நான்தான் இந்திரா' என்று சொன்னார். மன நெகிழ்ச்சியோடு கைகுலுக்கினேன். தொடர்ந்து உரையாடுகையில் மறுபடி தான் எழுதத் தொடங்கிய சூழலையும் புனைபெயர் வைத்துக்கொண்ட கட்டாயத்தையும் பகிர்ந்துகொண்டார்" என்று எழுதியுள்ளார். 

"பைக்ல சென்னையைச் சுத்திப்பார்ப்போம் ஹேமா!" கவிஞர் கலை இலக்கியாவின் நிறைவேறாத ஆசை

கலை இலக்கியாவின் பெரிய பலமே எப்போதும் தோழிகள் சூழ இருப்பதுதான். அவரின் மரணத்தின் துயரை அவரின் தோழிகள் கண்ணீரோடு சமூக ஊடகங்களில் பகிர்ந்துவருகின்றனர். அவர்களில் சிலரிடம் பேசினேன். 

கடலூரைச் சேர்ந்த கவிஞர் வெற்றிச்செல்வி, ``இப்போதான் அவளைக் கடைசியா பார்த்துட்டு வர்றேன். கலையை நினைச்சாலே நம்பிக்கையான அவள் குரல்தான் ஞாபகத்துக்கு வரும். கலை, உமா மகேஸ்வரி, நான் மூணு பேரும்தான் எந்த நிகழ்ச்சியிலும் சேர்ந்தே இருப்போம். மேடையில நின்னா ஒரு கம்பீரமா இருக்கும். என்னைப் பேசக்கூப்பிட்ட இடத்துக்குப் போக முடியலைன்னா, உடனே அவளுக்குத்தான் போன் பண்ணி கேட்பேன். இப்படி வேலூர் முத்தமிழ் மன்றத்துல எனக்குப் பதிலா அவ பேசினா. அங்கிருந்தவங்க அவ பேச்சில மெய் மறந்துட்டாங்க. அவளுக்கு கேன்சர்னு தெரிஞ்சதும் உடனே போய்ப் பார்த்தேன். அப்பக்கூட, `ஒண்ணுமில்ல.. பயப்படாதே'ன்னு சொல்லி அனுப்பினா. கடந்த மூணு மாசமாவே, 'வெற்றி எனக்கு நம்பிக்கை ஊட்டுற கவிதைகளாக அனுப்பு'ன்னு சொல்லிட்டே இருந்தா. நானும் நிறைய கவிதைகளை அனுப்பினேன். இப்படித் திடீர்னு எங்களை விட்டுட்டுப் போவான்னு நினைக்கவே இல்ல" என்று சொன்னவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

"பைக்ல சென்னையைச் சுத்திப்பார்ப்போம் ஹேமா!" கவிஞர் கலை இலக்கியாவின் நிறைவேறாத ஆசை

எழுத்தாளர் ரேவதி முகில்: "நான் அவளை த.மு.எ.க.ச கூட்டத்தில்தான் முதன்முதலாப் பார்த்தேன். ஆனா, கொஞ்ச நேரத்துலயே ரொம்ப வருஷம் பழகினமாதிரி பேச ஆரம்பிச்சிட்டா. 'என்ன... என்ன பண்றீங்க எல்லாரும்?" என்று தேனிக்கே உரிய அன்பும் மிரட்டலும் கலந்த அந்தக் குரல்தான் இப்பயும் என் காதில் கேட்டுட்டு இருக்கு. நேத்துதான் பிரான்சிஸ் கிருபா பெரிய சிக்கலில் மாட்டிட்டு வெளியே வந்தார். அப்பாடான்னு ஆசுவாசம் ஆகறதுக்குள்ள கலை இலக்கியா இறந்தது பெரிய இடியா வந்துச்சு. எப்போதும் நம்பிக்கையா பேசற கலை இப்போ இல்லைன்னு நினைக்கவே முடியல" என்கிறார். 

"பைக்ல சென்னையைச் சுத்திப்பார்ப்போம் ஹேமா!" கவிஞர் கலை இலக்கியாவின் நிறைவேறாத ஆசை

சமூகச் செயற்பாட்டாளர் ஹேமாவதி: "2011 ல விருதுநகர்ல நடந்த த.மு.எ.க.ச மாநில மாநாட்டுலதான் கலை இலக்கியாவை முதன்முதலாப் பார்த்தேன். அப்பறம் எப்படி இவ்வளவு நெருக்கமான உறவா மாறினோம்னு தெரியல. பாண்டிச்சேரி மாநாட்டுல கலை வாசிச்ச கவிதை வரிகள் இப்பவும் காதுல கேட்டுட்டே இருக்கு. அவ்ளோ அன்பா இருப்பா... நான் பைக்ல போற மாதிரி போட்டோ போடுறதைப் பார்த்து ரொம்ப சந்தோஷாமா பேசுவா. நானும் வாறேன் ஹேமா... பைக்ல சென்னையைச் சுத்திப் பார்ப்போம்"னு அடிக்கடி  சொல்லுவா. கடைசி வரைக்கும் அவ ஆசை நிறைவேறாமலே போயிடுச்சு. கேன்சரோடு நாலாவது ஸ்டேஜ்லதான் தெரியவே வந்துச்சு. ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது பார்க்கப் போயிருந்தேன். அவ ஒரு நோயாளி மாதிரியே இல்ல. சோகமா போன எங்களை சிரித்து, சிரித்து கண்ணுல தண்ணி வர வழைச்சிட்டா. ஒரு நண்பருக்கு அனுப்பின மெசேஜ்லகூட, "இதோ சில நாள்கள்ல ஓடி வந்துடுவேன்'னுதான் சொல்லியிருந்தா. திடீர்னு ஒரு இருட்டு சூழ்ந்த மாதிரி இருக்கு. அவ கவிதைகள்தான் இனிமே எங்களுக்குத் துணை" என்கிறார். 

கோமியம் சாணம் கலந்த நெடி 
கோழி ஆடு எனத் தீனி சிதறிய தளம் அன்று 
பிறகு கொசுவும் பல்லியுமே சுற்றும் 
அங்கங்கு சில வீடுகளில்

கண்ணாடியாய் 
தூசின் சுவடோ கைகளோ படாத மதில் சுவர்கள் 
‘புழுங்கி அழுக்காகாதது வீடா?’ 
என்பாள் அம்மா

சேரும் சோபாவும் இருக்க 
மதில் சாயும் 
அம்மாவின் முகம் 
என்னவோ சொல்லிக்கொண்டே
இருக்கிறது!

ஆற்றின் நீளமும் 
கடலின் எல்லைகளும் 
ஒரு கெண்டை மீனின் 
நீச்சல் வட்டத்துக்குள் சிக்குவதில்லை

புல்லின் தலைக்கு 
அகப்படும் வானமும் 
வேருக்குப் பிடிபடும் 
மண்ணும்தான் 
எத்தனை சிறியது?

ஒரு பிறப்புக்கு 
நூற்றாண்டு மனிதர்களின் சிரிப்பும் 
ஒரு மரணத்துக்கு 
யுகயுகத்து மனிதர்களின் அழுகையும் 
எந்தளவு புரிபடும்? 

தும்பிக்கையால் சுமைகளை 
தூக்கிச் சுருட்டிக்கொண்டு 
நெஞ்சிலிருந்து மூச்சுப் பாதையில் 
ஏறுகின்றன 
ஏகாந்த யானைகள்

சுமைகளை அவை 
இறக்கவும் இல்லை 
நெஞ்சுக்கும் நாசிக்குமான 
அதன் மிதித்தல் 
ஓயவும் இல்லை!

பறந்துவிடத் 
தவமிருக்கும் மனசு 
கனவுகளைச் 
சுமந்திருக்கும் உயிர் 

இரண்டுக்கும் பொருந்தாமல் 

எழுதப்படாத சட்டங்களால் 
சீசாவில் அடைக்கப்பட்டுள்ளது 
பெண் என்னும் உடல்

அறிவும் மனசும் 
லட்சியமும் உடலும் 
ஒவ்வொரு திசைநின்று 
மோதிக்கொள்ளும்போது தெரியும் 
பெண் என்றால் என்னவென்று!