Election bannerElection banner
Published:Updated:

திராவிடத்தால் வீழவில்லை... வாழ்ந்திருக்கிறோம் உறவுகளே! ஹலோ...ப்ளூடிக் நண்பா!

திராவிடத்தால் வீழவில்லை... வாழ்ந்திருக்கிறோம் உறவுகளே! ஹலோ...ப்ளூடிக் நண்பா!
திராவிடத்தால் வீழவில்லை... வாழ்ந்திருக்கிறோம் உறவுகளே! ஹலோ...ப்ளூடிக் நண்பா!

திராவிடத்தால் வீழவில்லை... வாழ்ந்திருக்கிறோம் உறவுகளே! ஹலோ...ப்ளூடிக் நண்பா!

திராவிடத்தால் வீழவில்லை... வாழ்ந்திருக்கிறோம் உறவுகளே! ஹலோ...ப்ளூடிக் நண்பா!

நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ்ராஜ் டெல்லியில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரை செய்கையில் `டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் அதிகம் சேருவதால் டெல்லி மாணவர்களின் வாய்ப்பு பறிபோவது உண்மையே. நான் தமிழன் அல்ல; கன்னடன்’ என்று பேசியதாகச் சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. தமிழர்கள் கொந்தளித்தார்கள். பின் அதைப்பற்றி ஒருவர் ட்விட்டரில் பிரகாஷ்ராஜிட‌ம் விளக்கம் கேட்டதற்கு `அது பொய், நான் பேசியதைத் திரித்து விட்டார்கள்’ என்பதாகச் சொல்லியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவர் அப்படிப் பேசினாரா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஒருவேளை அவர் பேசியிருந்தால் அதிலிருக்கும் உண்மை என்னவெனப் பார்ப்போம்.

பிரகாஷ்ராஜ் கன்னடர் என்பது உண்மையே. அவர் நிஜப் பெயர் பிரகாஷ் ராய். `டூயட்' படத்தில் பாலசந்தர் அறிமுகம் செய்கையில் ஓரெழுத்தைப் பெயரில் மாற்றினார். அவருக்கு நிறைய புகழும், பணமும், விருதுகளும் தந்தது தமிழ்த் திரையுலகாக இருக்கலாம். அதனால் அவர் தன்னைத் தமிழனாக உணர வேண்டும் என்பதில்லை.

நான் பத்தாண்டுகளுக்கு மேலாக பெங்களூரில் மென்பொருள் பணி செய்கிறேன். என் தினப்படிகளை இந்த ஊர்தான் கவனித்துக் கொள்கிறது. அதனாலேயே நான் கன்னடன் ஆகி விடுவேனா? ‘பெங்களூர் தமிழன்’ என்றே அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அதனால் பிரகாஷ்ராஜ் தன்னை என்னவாக உணர்கிறாரோ அப்படியே அவரை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த முடிவை மதிக்க வேண்டும்.

திராவிடத்தால் வீழவில்லை... வாழ்ந்திருக்கிறோம் உறவுகளே! ஹலோ...ப்ளூடிக் நண்பா!

குஷ்பு தமிழகத்தின் மருமகளாகி தன்னை ஒரு தமிழச்சியாகவே கருதுகிறார். அதுபோல் ஓர் உறவு அமையும்போது அல்லது இங்கே நிரந்தரமாய்க் குடியேறும்போது அப்படியான மனமாற்றம் நிகழலாம். அதை நாம் கட்டாயப்படுத்த முடியாது; கூடாது. நான் எல்லாம் கொடுத்தேன், நீ அடையாளம் மாற்று என்று சொல்வது அநாகரிகம்.

அடுத்தது டெல்லி பல்கலைக்கழக விஷயம். அது அபத்த உளறல். அது ஒரு மத்தியக் கல்வி நிறுவனம். அதாவது அதற்கான பணம் நடுவண் அரசிடமிருந்து வருகிறது. அதனால் அதை இந்திய அளவிலான ஒரு கல்விக்கூடமாகவே பார்க்க வேண்டும்.

இந்தியா முழுவதிலிருந்தும் மக்கள் அளிக்கும் வரிப்பணத்திலிருந்துதான் அது கட்டுமானம் செய்யப்பட்டது. இன்று அது செயல்படுவதும் அப்படித்தான். டெல்லி அரசு செய்யும் வரி வசூலிலிருந்து ஒரு பைசாவும் அதற்குப் போவதில்லை. அப்படியான மத்தியக் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை யாவும் இந்திய அளவில்தான் நிகழ்கிறது. அதுவே நியாயம். இதற்கு ஐஐடி, எய்ம்ஸ், ஐஐஎஸ்சி என ஏராளமான‌ உதாரணங்கள் சொல்லலாம். அதனால் டெல்லிப் பல்கலைக்கழகத்தில் எல்லா மாநில, யூனியன் பிரதேச மாணவர்களுக்கும் சம உரிமை இருக்கிறது. டெல்லி மாணவர்களுக்கும் உரிமை இருக்கிறது. அதனால் தனிச்சலுகை ஏதும் அந்த மாநில மாணவர்களுக்கு அளிக்கத் தேவையில்லை. அவர்கள் தம் திறமையால் முட்டி மோதி உள்ளே வந்து கொள்ள வேண்டியதுதான்.

நாம் ஏன் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும்? அது நம் பாடத்திட்டத்திலிருந்து மாறுபட்டது. அதை இங்கே வலுக்கட்டாயமாய் மாணவர் சேர்க்கைக்குத் திணிக்கிறது மத்திய அரசு. அதனால்தான் எதிர்க்கிறோம்.

சில கல்லூரிகள் மத்திய, மாநில அரசுகளின் கூட்டுச் செலவினத்தில் இயங்குபவை. அங்கெல்லாம் அந்த‌ மாநில மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு உண்டு. உதாரணம் என்ஐடிக்கள். அதனால் மாநில‌/இந்திய அளவிலான மாணவர் சேர்க்கை விகிதத்தில் தெளிவான காரணம் இருக்கிறது. டெல்லி பல்கலைக்கழகத்தில் இந்திய அளவில் சம உரிமையையும், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் தமிழக மாணவர்களுக்கே அதிக இடங்கள் தரப்படுவதையும் ஆதரிப்பதுதான் தர்க்கபூர்வமானது; நியாயமானது.

இன்னொரு விஷயம் இதில் டெல்லி மாணவர்களின் வாய்ப்பைப் பறிப்பது தமிழக மாணவர்கள் மட்டுமல்ல; மற்ற எல்லா மாநிலத்தவரும்தான். ஆனால், இதில் நாம் அறிந்து கொள்ளும் நல்ல விஷயம், போட்டி இந்திய அளவில் என்றாலும் அதில் தமிழக மாணவர்களே முன்னணியில் இருக்கிறார்கள் என்பதுதான். மறைமுகமாக 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' கோஷ்டிகளைக் கேலி செய்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

நடிகை ஏமி ஜாக்சன் கர்ப்பமாய் இருக்கிறார். நேற்று அவரது காதலருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. மேற்கில் இது ரொம்ப‌வும் அதிர்ச்சிக்குரிய விஷயமல்ல. போலவே கர்ப்பவதிகள் புகைப்படத்துக்கு நிர்வாண போஸ் கொடுப்பதும். ஏமி அப்படிச் செய்யவில்லை என்றாலும் கடந்த சித்திரைக்கனி அன்று கடற்கரையில் நிற்கும் அரைக்கும் குறைவான நிர்வாண போஸ் அளித்த மீச்சிறு குறும்படம் வைரலானது.

திராவிடத்தால் வீழவில்லை... வாழ்ந்திருக்கிறோம் உறவுகளே! ஹலோ...ப்ளூடிக் நண்பா!

30,000 ஆண்டுகளுக்கு முன்பே கர்ப்பவதிகளை நிர்வாணமாய்ச் சிலையாய்ச் செதுக்கும் கலாசாரம் இருந்திருக்கிறது. வடகிழக்கு ஆஸ்திரியாவிலுள்ள‌ வில்லன்டார்ஃப் என்ற‌ கிராமத்தின் நான்கரை அடி உயர வீனஸ் சிற்பம் உதாரணம். பின் ஐரோப்பியர்களின் மத்திய கால ஓவியங்களிலும் இது இடம்பெற்றது. முதன் முதலாக ஆகஸ்ட் 1991-ல் Vanityfair இதழில் நடிகை டெமி மூர் கர்ப்பம் தரித்திருந்தபோது எடுத்த‌ நிர்வாண புகைப்படம் அட்டையில் இடம்பெற்றது. அதற்கு கடும் எதிர்ப்பு வந்தது என்கிறார், அப்போது அதன் ஆசிரியராக இருந்த டினா ப்ரௌன்.

சூப்பர் மார்க்கெட்கள் அதை விற்க மறுத்தன. விற்ற சில கடைகள் அதற்கு உறையிட்டு ரகசியம் செய்தன. 2016-ல் `டைம்’ இதழ் 100 சக்தி வாய்ந்த புகைப்படங்கள் எனப் பட்டியலிட்டபோது இப்படமும் இடம் பெற்றது. பிற்பாடு பல நடிகைகளும் பிரபலங்களும் அப்படியான புகைப்படம் வெளியிட அது தொடக்கப்புள்ளியாய் அமைந்தது. உதாரணம்: ப்ரிட்னி ஸ்பியர்ஸ், சிண்டி க்ராஃபோர்ட், மோனிகா பெலூசி, ஜெஸ்ஸிகா சிம்ப்சன், செரீனா வில்லியம்ஸ். 2016–ல் அலானிஸ் மோரிசெட் நீச்சல் குளத்தில் எடுத்த படம் பிரபலம். அப்படியானவற்றில் கறுப்பினப் பாடகியும் நடிகையுமான‌ கெல்லி ராலேண்டின் படம் வசீகரமானது.

எனக்கென்னவோ சமீபமாய் வரும் சரவணா செல்வரத்னம் நகைக்கடை விளம்பரமே (ஏமி ஜாக்சன் இடுப்பை மறைத்த ஸ்கர்ட் அணிந்து வருவது) அவர் கர்ப்பமுற்ற பின் எடுத்ததோ எனத் தோன்றுகிறது. அது உண்மையெனில் தமிழின் அப்படியான முதல் விளம்பரப்படம் இதுதான்!

தமிழில் இதற்கு முன் ஒருவரின் 600 கவிதைகள் அடங்கிய தொகுப்பொன்று வெளிவந்திருக்கிறதா எனத் தெரியவில்லை. `ஆதிவாயில்’ அவ்வகையில் முன்னுதாரணம் அற்றது. குட்டி ரேவதியின் மெகாதொகுப்பு. இது உண்மையில் அவரது பத்து கவிதை நூல்களைச்சேர்த்து ஒரே நூலாக `அடையாளம்' பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதன் ஒரு முக்கிய பலன் காலவரிசைப்படி குட்டி ரேவதியை வாசிக்க முடிகிறது. அவர் கடந்து வந்த எழுத்துப் படிநிலையை ஒரு நுண்ணிய வாசகர் கண்டுகொள்ளலாம்.

திராவிடத்தால் வீழவில்லை... வாழ்ந்திருக்கிறோம் உறவுகளே! ஹலோ...ப்ளூடிக் நண்பா!

`ஆதிவாயில்’ என்ற தலைப்பு எதைக் குறிக்கிறது என விளக்கத் தேவையில்லை. அட்டைப்படத்தில் விலக்காகி நிற்கும் ஏவாள்!

கொஞ்சம் உடல், கொஞ்சம் மனம், கொஞ்சம் பெண்ணியம், கொஞ்சம் இயற்கை, கொஞ்சம் சமூகம், கொஞ்சம் சூழலியல், கொஞ்சம் போராட்டம், கொஞ்சம் போர் எனப் பல்வேறு தளங்களில் வெவ்வேறு நிறங்களில் இக்கவிதைகள் விரிகின்றன.

திராவிடத்தால் வீழவில்லை... வாழ்ந்திருக்கிறோம் உறவுகளே! ஹலோ...ப்ளூடிக் நண்பா!

குட்டி ரேவதியின் சொல் ஆளுமை தனித்துவமானது; ஒரு மாதிரியாய் வசீகரமூட்டக் கூடியது (உதா: விடையல்லாத வசீகரம் தேய்ந்து நிறையும், புளிக்கிறது பாலையாகும் வெயில், துயரத்தின் ஓலமோ அலை ஓயும் தூரம்). நீட் தேர்வின் பொருட்டு உயிர் மாய்த்துக் கொண்ட அனிதா பற்றிய அறுநூறாவது கவிதை இப்ப‌டி முடிகிறது:

அண்டத்தையும் பிண்டத்தையும்

தூக்குக்கயிற்றால் பிணைத்தது

அன்னையின் பொன்பட்டுச்சேலை

அண்டத்திற்கும் பேரண்டத்திற்கும்

இடையே அவளை ஊஞ்சலில் ஆட்டியதும்

அவள் அன்னையின் பொன்பட்டுச்சேலை.

தமிழ்ப் பதிப்புலகில் இது பெருந்தொகுப்புகளின் காலம். அதில் இஃது வலுவான வரவு!

முந்தைய பாகங்கள்

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு