Published:Updated:

``என்னை, கொஞ்சம் ஒளித்துதான் வைப்பேன்'' - எழுத்தாளர் நரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``என்னை, கொஞ்சம் ஒளித்துதான் வைப்பேன்'' - எழுத்தாளர் நரன்
``என்னை, கொஞ்சம் ஒளித்துதான் வைப்பேன்'' - எழுத்தாளர் நரன்

``என்னை, கொஞ்சம் ஒளித்துதான் வைப்பேன்'' - எழுத்தாளர் நரன்

சர்ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம், ஃபேன்டசி, ஜென் எனப் பல தளங்களில் இயங்கக்கூடிய கவிதைகளை எழுதுபவர் கவிஞர் நரன். `உப்புநீர் முதலை', `ஏழாம் நூற்றாண்டின் குதிரை', `லாகிரி' என மூன்று கவிதைத் தொகுப்புகளும், `கேசம்', `சரீரம்' என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியிட்டிருக்கும் இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். `361 டிகிரி' இதழின் ஆசிரியராகவும் `சால்ட்' பதிப்பாளராகவும் இருக்கிறார். `களம் புதிது', `உயிர்மை', `ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள்' உட்பட 11 விருதுகள் பெற்றிருக்கும் நரன், சமீபத்தில் எழுத்தாளர் பாலகுமாரன் விருதும் பெற்றார். நிறங்கள், எண்கள், வாசனைகள், வடிவங்கள் போன்றவை இடம்பெறும் இவரது கவிதைகள் பிற கவிஞர்களிடமிருந்து தனித்துவிளங்குபவை. கதைகள் முழுக்க காட்சிகளாகவும், கவிதைகள் ரூபம் அரூபம் என இரண்டும் ஒருசேர அமைந்ததாகும். கவிஞர், சிறுகதை ஆசிரியர், பதிப்பாளர், சிற்றிதழாளர், ஊடகவியலாளர் எனப் பன்முகம் கொண்ட நரனிடம் பேசினேன்.

பல்வேறு விருதுகளைத் தொடர்ந்து பாலகுமாரன் விருது பெற்றுள்ள தருணத்தை எப்படி உணர்கிறீர்கள்?

கவனிக்கப்படலையே என்ற ஏக்கம் இருந்தது. ஆனால், இப்போது கவனிக்கப்பட்டிருக்கேன் என்ற திருப்தி ஏற்பட்டிருக்கிறது. கலை இலக்கியத்துறையில் தொடர்ந்து பயணிக்க உற்சாகமான மனநிலையை இந்த விருது கொடுத்திருக்கிறது. ஆனாலும், கடந்தகால அனுபவங்களால் இலக்கியத்தோடு நெருங்கியும் இலக்கியவாதிகளிடமிருந்து வெகுதொலைவிலும் இருக்கவே விரும்புகிறேன். 

``உங்களுக்கும் உங்கள் கதைகளுக்குமான நெருக்கம் எப்படிப்பட்டது..?

``நூல்கள் மட்டும் வாசிக்காமல், வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு கலைஞர்களுடன் பயணங்களும் மேற்கொள்வேன். என் எழுத்துக்கு ஆதாரமாக இருப்பது ஓவியங்கள்தான். எனவே, எங்கு ஓவியக் கண்காட்சி நடைபெற்றாலும் ஓவியர்களோடு சென்று பார்ப்பேன். கேரள மாநிலம் கொச்சியில் ஆறு மாதகாலம் நடைபெறும் Kochi art biennale ஓவியக் கண்காட்சிக்குச் சென்று, பல்வேறு நாடுகளிலிருந்து இடம்பெறும் ஓவியங்களைப் பார்ப்பேன். பெங்களூரு ரங்கசங்ரா உட்பட தியேட்டர் ப்ளே எங்கு நடைபெற்றாலும் கலந்துகொள்வேன். அதற்காகவே, மாதத்துக்கு மூன்று முறை பெங்களூரு செல்வேன். இப்போது, நாவல் பணிக்காக வடமாநிலம் முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கிறேன். கேமராமேன் அருண் ஏ துரையுடன் பக்கிங்காம் கால்வாய் தொடங்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரை கரையிலேயே நடந்து போயிருக்கிறேன்.

சமீபத்தில் வெளியான `குட்டியம்மை' கதையில் இடம்பெறக்கூடிய லாட்டரிச்சீட்டு என்னிடம்தான் இருக்கிறது. முதல் கதையான `மானேந்தி'யை எழுதும்போது ஒவ்வொரு கோயிலுக்கும் பயணம் போய் எழுதினேன். ஒவ்வொரு கதையும் கதை மட்டுமல்ல, உண்மையான என்னுடைய அனுபவம். ஆனால், அதில் மொத்தமாக இல்லாமல் கொஞ்சம் என்னை ஒளித்துத்தான் வைப்பேன். என் வாழ்வியலை எழுதினால் அது பயோகிராஃபி ஆகிவிடும்.'' 

``என்னை, கொஞ்சம் ஒளித்துதான் வைப்பேன்'' - எழுத்தாளர் நரன்


``ஓர் எழுத்தாளன் பதிப்பாளராகவும் இருப்பதன் அவசியம், சிரமம், நோக்கம் என்னென்ன... அடுத்து வெளியிடும் நூல்கள் பற்றி?''

``ஒவ்வோர் ஆண்டும் புதிய திறமையான படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களின் படைப்புகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்றுதான் பதிப்பகம் ஆரம்பித்தேன். பெரிய பொருளாதார பின்புலமற்று ஒரு சிறிய பெட்டிக் கடைபோல்தான் இதை நடத்திவருகிறேன். சக்தியின் `மரநாய்', அனுராதா ஆனந்தின் சமகால மொழிபெயர்ப்புக் கவிதைகள், பாலைவன லாந்தரின் `உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்', ச.துரையின் `மத்தி' போன்ற முக்கியமான படைப்புகளைக் கொண்டுவந்துள்ளேன். அத்தனையுமே விருதுகள் பெற்றுள்ளன. இவர்களைத் தொடர்ந்து இந்த ஆண்டு வெ.நி.சூர்யாவின் `கரப்பானியம்' மற்றும் முத்துராசாவின் `பிடிமண்' ஆகிய

``என்னை, கொஞ்சம் ஒளித்துதான் வைப்பேன்'' - எழுத்தாளர் நரன்

இரண்டு கவிதை நூல்கள் வெளிவரவுள்ளன.''


``உங்கள் கவிதைகள் நம் நிலத்திலிருந்து அந்நியப்பட்டு மேற்கத்திய சாயலில் இருக்கின்றன என்கிற விமர்சனங்கள் குறித்து?''

`` `ஆப்பிளைப் பற்றி ஒருவர் ஏன் கவிதை எழுதவேண்டும்?' என்ற கேள்வியை, சமீபத்தில்கூட ஒருவர் எழுப்பினார். ஆப்பிளை, கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலமாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். ஒரு ஆப்பிளின் நிறத்தை, விதையை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன், சுவைக்கிறேன். இதோ இப்போதும் என் வீட்டில் ஆப்பிள் இருக்கிறது. இப்படி இருக்கையில் எப்படி இது அந்நியமாகும். நவீன கவிதைக்கு எந்த விதிமுறையும் கிடையாது. எதை வேண்டுமானாலும் எழுதலாம். கலை வடிவத்தை எப்படி நீங்கள் கொடுக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். நம்முடைய மண், வேர்கள், கிழங்கு, தானியங்கள், பூக்கள் எல்லாவற்றையும் எழுதவேண்டும்தான். ஆனால், ஆப்பிளைப் பற்றி எழுதும்போது எப்படி அந்நியக் கவிதையாக மாறுகிறது? உங்களின் நுகர்வுக் கலாசாரத்தில் ஒரு பொருள் இருக்க, இல்லாத பொருளை ஏன் எழுத வேண்டும். உலகமயமாக்கலின் எல்லா பொருள்களையும் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். ஆனால், அந்தப் பொருளை மட்டும் நீங்கள் எழுதக் கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? வம்சாவளி விவசாயி. அந்த அடையாளம் என் கவிதைகளில் நிச்சயம் இருக்கும்.'' 

``என்னை, கொஞ்சம் ஒளித்துதான் வைப்பேன்'' - எழுத்தாளர் நரன்


``அடுத்து என்ன?'' 

`` `மிளகு, பருத்தி மற்றும் யானைகள்' என்கிற கவிதைத் தொகுப்பும் ஒரு நாவலும் எழுதி முடித்திருக்கிறேன். இந்தியாவின் கடைசி ஊரின் கடைசி வீட்டில் இருக்கிற கடைசிப் பையன், இந்தியாவின் முதல் வீட்டில் யார் இருக்கிறார் எனத் தேடிப் போவதுதான் நாவலின் கதை. `பாதம்' என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவர இருக்கிறது. அதற்கு அடுத்த ஒரு வருடம் எழுத்துக்குக் கொஞ்சம் இடைவெளிவிட்டு ஃபிலிம் அண்டு டிஜிட்டல் கேமரா இரண்டையும் பயன்படுத்தி கறுப்பு-வெள்ளை புகைப்படம் எடுத்து புகைப்படக் கண்காட்சி நடத்தலாம் என்று யோசித்திருக்கிறேன். அதற்காக புகைப்படக் கலைஞர்களுடன் பயணம் செய்துகொண்டிருக்கிறேன்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு