சொல்லாத காதல்பற்றி...

உணர்தலின் ருசி தெரிகிறது
நம் இருவருக்கும்

கிணற்று ஆழத்தின் சேற்றில்
பதுக்கிவைத்துக்கொள்கிறோம்
வார்த்தைகளை
உடைந்த வளையல்களைப்போல

யாராவது முதலில் திரி கொளுத்தித்
தொடங்கிவிடலாம்
எல்லாம் நம் வசம் இருக்கிறது

எதுவும் முடியும்
மிக பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ளலாம்
இருந்தும் வேண்டாம்

உறவு வைரம் போன்றது
அதைக்கொண்டே அதை
அறுத்துக்கொள்ளும் தன்மை அதற்கு

இந்தக் கவிதை
இத்துடன் முடிந்துபோவது
உன் குடும்பத்துக்கும் எனக்கும் மிக நல்லது!

- முத்துவேல்

கலைமகளின் வீணை...

விடுதிக்கென்று
விசேஷக் கட்டணம் - நுழைவாயிலில்
நுழைய நுழைவுக் கட்டணம்
கராத்தே கற்றுக்கொள்ள
கறாராகக் கட்டணம்
தனிப் பயிற்சி வகுப்புகளுக்கு
தனியே கட்டணம்
சீருடைக்கென்று
சிறப்புக் கட்டணம்
பாடப் புத்தகம் வாங்க
பல நூறு கட்டணம்
கேள்வித்தாளுக்குக் கட்டணம்
இதை எதிர்த்துக்
கேள்வி கேட்டாலும் கட்டணம்
விடைத்தாளுக்குக் கட்டணம்
இதுபோல் எத்தனையோ
விடை தெரியாக் கட்டணம்...
ஏதேதோ காரணம் சொல்லி
எக்கச்சக்கமாய்
கட்டணம் வாங்கிய பின்னும்
குழந்தைகள் சரியாகப்
படிக்கவில்லையே என்று கேட்டால்
பதில் சொல்கிறார்கள்
பள்ளியில்...
'வீட்டில் சொல்லிக்கொடுங்கள்’ என!

- ஆதலையூர் சூரியகுமார்

துண்டுப் பிரசுரம்

சாலை ஓரமாக நின்றிருக்கும்
மரமொன்று
அவ்வழி செல்வோர் தலையில்
துண்டுப் பிரசுரங்களாய்
தன்இலைகளை உதிர்த்துக்கொண்டிருக்கிறது
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என
அதில் எழுதியிருப்பதாய்
உணர்கிறேன்!

- கட்டளை ஜெயா

நனையாத மழை

தொலைக்காட்சிப் படமொன்றில்
பெய்யத் துவங்கிய மழைக்கு
குடை விரிக்கத் துவங்கினாள்
சிறுமி அதிஸ்யா.
பிறகு சலிப்புற்று
நனையத் துவங்கினாள்.
வீட்டிற்குள் ஏன்
ஈரமாகவில்லையென
நச்சரிக்கத் தொடங்கினாள்.
உள்ளே பெய்யாத
அம்மழை
இறங்கத் துவங்கிற்று
அவள் கண்களின் வழியே!

- க.அம்சப்ரியா

களை

புற்றுநோயைப்போலத்
தொடங்கிவிட்டது சந்தேகம்

மிகவும் கொடியதது

இதயத்தில் வேர்வைத்து
மார்பு வரை பாசியாகப் பரவி
தவணையில் குடிக்கிறது உயிரை

அழுகிய மாம்பழத்தின்
ஒரு பகுதியை நீக்கி
உண்ணுகின்ற சகிப்பு
உனக்கும் இல்லை எனக்கும் இல்லை

போலிக்கௌரவம், தாலியின் பொருட்டு
ஒப்புக்காகத் தொடர்கிறதெனில்
அவ்வுறவை
தீட்டிய பாலரிவாள்கொண்டு
அறுத்துக்கொள்ளலாம்!

- முத்துவேல்

சொல்லாத காதல்பற்றி...

உணர்தலின் ருசி தெரிகிறது
நம் இருவருக்கும்

கிணற்று ஆழத்தின் சேற்றில்
பதுக்கிவைத்துக்கொள்கிறோம்
வார்த்தைகளை
உடைந்த வளையல்களைப்போல

யாராவது முதலில் திரி கொளுத்தித்
தொடங்கிவிடலாம்
எல்லாம் நம் வசம் இருக்கிறது

எதுவும் முடியும்
மிக பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ளலாம்
இருந்தும் வேண்டாம்

உறவு வைரம் போன்றது
அதைக்கொண்டே அதை
அறுத்துக்கொள்ளும் தன்மை அதற்கு

இந்தக் கவிதை
இத்துடன் முடிந்துபோவது
உன் குடும்பத்துக்கும் எனக்கும் மிக நல்லது!

- முத்துவேல்

கலைமகளின் வீணை...

விடுதிக்கென்று
விசேஷக் கட்டணம் - நுழைவாயிலில்
நுழைய நுழைவுக் கட்டணம்
கராத்தே கற்றுக்கொள்ள
கறாராகக் கட்டணம்
தனிப் பயிற்சி வகுப்புகளுக்கு
தனியே கட்டணம்
சீருடைக்கென்று
சிறப்புக் கட்டணம்
பாடப் புத்தகம் வாங்க
பல நூறு கட்டணம்
கேள்வித்தாளுக்குக் கட்டணம்
இதை எதிர்த்துக்
கேள்வி கேட்டாலும் கட்டணம்
விடைத்தாளுக்குக் கட்டணம்
இதுபோல் எத்தனையோ
விடை தெரியாக் கட்டணம்...
ஏதேதோ காரணம் சொல்லி
எக்கச்சக்கமாய்
கட்டணம் வாங்கிய பின்னும்
குழந்தைகள் சரியாகப்
படிக்கவில்லையே என்று கேட்டால்
பதில் சொல்கிறார்கள்
பள்ளியில்...
'வீட்டில் சொல்லிக்கொடுங்கள்’ என!

- ஆதலையூர் சூரியகுமார்

துண்டுப் பிரசுரம்

சாலை ஓரமாக நின்றிருக்கும்
மரமொன்று
அவ்வழி செல்வோர் தலையில்
துண்டுப் பிரசுரங்களாய்
தன்இலைகளை உதிர்த்துக்கொண்டிருக்கிறது
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என
அதில் எழுதியிருப்பதாய்
உணர்கிறேன்!

- கட்டளை ஜெயா

நனையாத மழை

தொலைக்காட்சிப் படமொன்றில்
பெய்யத் துவங்கிய மழைக்கு
குடை விரிக்கத் துவங்கினாள்
சிறுமி அதிஸ்யா.
பிறகு சலிப்புற்று
நனையத் துவங்கினாள்.
வீட்டிற்குள் ஏன்
ஈரமாகவில்லையென
நச்சரிக்கத் தொடங்கினாள்.
உள்ளே பெய்யாத
அம்மழை
இறங்கத் துவங்கிற்று
அவள் கண்களின் வழியே!

- க.அம்சப்ரியா

களை

புற்றுநோயைப்போலத்
தொடங்கிவிட்டது சந்தேகம்

மிகவும் கொடியதது

இதயத்தில் வேர்வைத்து
மார்பு வரை பாசியாகப் பரவி
தவணையில் குடிக்கிறது உயிரை

அழுகிய மாம்பழத்தின்
ஒரு பகுதியை நீக்கி
உண்ணுகின்ற சகிப்பு
உனக்கும் இல்லை எனக்கும் இல்லை

போலிக்கௌரவம், தாலியின் பொருட்டு
ஒப்புக்காகத் தொடர்கிறதெனில்
அவ்வுறவை
தீட்டிய பாலரிவாள்கொண்டு
அறுத்துக்கொள்ளலாம்!

- முத்துவேல்