மூடிய இமைகளின் மேல் உருட்டும்
எலுமிச்சை உன் உடல்

காம்பிலிருந்து விழும் பழம் நீ
குளத்திலிருந்து எழும் விறால் நான்

எல்லா அருவிப் புகைக்கு உள்ளேயும்
உருண்டுகொண்டுதான் இருக்கின்றன
பாறைக்குள் கூழாங்கல்

இடி மின்னலுக்குப் பிறகு தேடக் கிடைத்தது
எதிர்க் காளான்

புரண்டு படுத்த உன் முதுகில்தான் பார்த்தேன்
முழுமையான உன் முகம்

எல்லா மழைகளுக்கும் பிறகான
மூச்சுகள் ஓய்ந்த பிறகு வாய்த்தது
நீ விரும்பிச் செய்த மழை

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை
அதுவும் உடுத்திக்கொள்ளுதல்தான்

குருவி பேசி குருவிகள் பேசி
அமைதிகொண்டது பாறை

பற்களுக்குக் கடிக்கக் கிடைத்த காம்பின்
ஒற்றை முடியிலிருந்துதான்
தொடங்கியிருக்க வேண்டும் நரம்பிசை

ஆமாம்
தண்ணீர் தெளித்துக்
கோலம் போடுவதற்காகத்தான் விழித்தாய்

மூடிய இமைகளின் மேல் உருட்டும்
எலுமிச்சை உன் உடல்

காம்பிலிருந்து விழும் பழம் நீ
குளத்திலிருந்து எழும் விறால் நான்

எல்லா அருவிப் புகைக்கு உள்ளேயும்
உருண்டுகொண்டுதான் இருக்கின்றன
பாறைக்குள் கூழாங்கல்

இடி மின்னலுக்குப் பிறகு தேடக் கிடைத்தது
எதிர்க் காளான்

புரண்டு படுத்த உன் முதுகில்தான் பார்த்தேன்
முழுமையான உன் முகம்

எல்லா மழைகளுக்கும் பிறகான
மூச்சுகள் ஓய்ந்த பிறகு வாய்த்தது
நீ விரும்பிச் செய்த மழை

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை
அதுவும் உடுத்திக்கொள்ளுதல்தான்

குருவி பேசி குருவிகள் பேசி
அமைதிகொண்டது பாறை

பற்களுக்குக் கடிக்கக் கிடைத்த காம்பின்
ஒற்றை முடியிலிருந்துதான்
தொடங்கியிருக்க வேண்டும் நரம்பிசை

ஆமாம்
தண்ணீர் தெளித்துக்
கோலம் போடுவதற்காகத்தான் விழித்தாய்