வீடெனப்படுவது...

அதிகாலை
ஊரிலிருந்து
தவிர்க்க முடியாத தகவலொன்று
கைபேசியில் சொல்லப்பட...
ஆற அமர யோசித்துப்
பொருத்தமான பொய்யன்றை
ஆபீஸில் சொல்லிவிட்டு
அவசியம் வருமாறு
அவசரமாய் கிளம்பிவிட்டனர்
அப்பா, அம்மா, தங்கை.

எனக்கும் சேர்த்து எடுத்துச் சென்ற
ஆறேழு நாட்களுக்குமான
ஆடைகள், இதர பொருட்களுடன்
ஒட்டிக்கொண்டு
வீடும் சென்றுவிட
என்னுடன் மிச்சம் இருப்பவை
சில சுவர்கள், பொருட்கள்,
சில ஜன்னல்கள், கதவுகள்,
ஃபிரிஜ்ஜில் மிஞ்சிய நேற்றைய மாவு,
இவற்றுடன்
ஹாலில் அமர்ந்து
தம் அடிக்கக் கொஞ்சம் சுதந்திரமும்
நிறைய தனிமையும்!

- கோநா

அஞ்சல் செய்யப்படாத கடிதம்

ஒளி குறைந்த
முன்னிரவுப் பொழுதொன்றில்
கண்டெடுக்க நேர்ந்தது
அஞ்சல் செய்யப்படாத
என் பழைய கடிதமொன்றை...

எந்த சுவாரஸ்யமும் இல்லை
அதை இப்போது வாசிப்பதில்,
அது என்
சொல்லப்படாத காதலைச் சுமந்திருக்கிறது
என்பதைத் தவிர.

மீண்டும் அதைத்
தொலைக்க முடியவில்லை என்னால்
முகம் தெரியாதவர்களால்
வாசிக்கப்பட்டு
விமர்சிக்கப்படும் என்பதால்.

அழிக்கவும் மனதில்லை அதனை
என் சொல்லாத காதலின்
ஒரே சாட்சியாக
இருக்கிறது என்பதால்.

இறுதியில் அதை
நானே இருத்திக்கொள்வதென முடிவானது
அதிகபட்சமாய் எந்த நம்பிக்கையையும்
என்னில் அது உண்டுபண்ணாவிடினும்
குறைந்தபட்சமாய்
இதே போன்றதொரு
அஞ்சல் செய்யப்படாத கடிதம்
அவளிடமும்
இருக்கக் கூடும் இன்னும்
என்ற நம்பிக்கையை
உண்டுபண்ணியதற்காகவாவது!

- பெ.பார்த்திபன்

பயணக் கட்டுரை

நாலு பத்து வண்டிக்கு
நாலு மணிக்குக் கிளம்பினால்
போதாதா என்றாள்.
நாலு பத்துக்கு வந்தபோது
நாலு பத்து வண்டி
நாலு மணிக்கே போனதாம்.
நாலு மணி வண்டியை
நாலு பத்து வண்டியாகச் சொன்னேன் என
அஞ்சு முப்பது வரையில்
பேசிக்கொண்டு இருந்தாள்.
அஞ்சு நாப்பது வண்டியை
அஞ்சு முப்பதுக்குத்தான் இனி
வண்டியெனச் சொல்ல
அனுபவம்தான் கற்றுத் தந்தது.
போக,
அஞ்சு முப்பதிலிருந்து அஞ்சு நாப்பது வரையில்
இவள் பேசாமல் இருந்ததும்
அஞ்சு நாப்பது வண்டி அஞ்சு நாப்பதுக்கே வந்ததும்
ஆச்சர்யமாக வேறு இருந்தது!

- பா.ராஜாராம்

விட்டு விடுங்கள்!

கவிதை
எப்படி வாசிக்க வேண்டும் தெரியுமா?
கதை
எப்படி வாசிக்க வேண்டும் தெரியுமா?
இலக்கிய அனுபவம்
என்றால் என்ன தெரியுமா?
ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்
என்னைக் கொஞ்சம்
தனியே வாசிக்க விடுங்கள்!

- லதாமகன்

புதிர்

தற்செயலாகத்தான்
பார்த்துக்கொள்கிறோம்
உண்ணுமிடத்தில்
மாடிப் படிகளில்
தேநீர் அருந்துகையில்
இருக்கையின் அருகில்
எதிர்ப்படுகையில்
தற்செயலாகத்தான்
நொடிக்கு ஒரு முறை
எனக்கு உன் நினைவு
வருவதைப்போல
தற்செயலாகத்தான்!

- ராகவ்

வீடெனப்படுவது...

அதிகாலை
ஊரிலிருந்து
தவிர்க்க முடியாத தகவலொன்று
கைபேசியில் சொல்லப்பட...
ஆற அமர யோசித்துப்
பொருத்தமான பொய்யன்றை
ஆபீஸில் சொல்லிவிட்டு
அவசியம் வருமாறு
அவசரமாய் கிளம்பிவிட்டனர்
அப்பா, அம்மா, தங்கை.

எனக்கும் சேர்த்து எடுத்துச் சென்ற
ஆறேழு நாட்களுக்குமான
ஆடைகள், இதர பொருட்களுடன்
ஒட்டிக்கொண்டு
வீடும் சென்றுவிட
என்னுடன் மிச்சம் இருப்பவை
சில சுவர்கள், பொருட்கள்,
சில ஜன்னல்கள், கதவுகள்,
ஃபிரிஜ்ஜில் மிஞ்சிய நேற்றைய மாவு,
இவற்றுடன்
ஹாலில் அமர்ந்து
தம் அடிக்கக் கொஞ்சம் சுதந்திரமும்
நிறைய தனிமையும்!

- கோநா

அஞ்சல் செய்யப்படாத கடிதம்

ஒளி குறைந்த
முன்னிரவுப் பொழுதொன்றில்
கண்டெடுக்க நேர்ந்தது
அஞ்சல் செய்யப்படாத
என் பழைய கடிதமொன்றை...

எந்த சுவாரஸ்யமும் இல்லை
அதை இப்போது வாசிப்பதில்,
அது என்
சொல்லப்படாத காதலைச் சுமந்திருக்கிறது
என்பதைத் தவிர.

மீண்டும் அதைத்
தொலைக்க முடியவில்லை என்னால்
முகம் தெரியாதவர்களால்
வாசிக்கப்பட்டு
விமர்சிக்கப்படும் என்பதால்.

அழிக்கவும் மனதில்லை அதனை
என் சொல்லாத காதலின்
ஒரே சாட்சியாக
இருக்கிறது என்பதால்.

இறுதியில் அதை
நானே இருத்திக்கொள்வதென முடிவானது
அதிகபட்சமாய் எந்த நம்பிக்கையையும்
என்னில் அது உண்டுபண்ணாவிடினும்
குறைந்தபட்சமாய்
இதே போன்றதொரு
அஞ்சல் செய்யப்படாத கடிதம்
அவளிடமும்
இருக்கக் கூடும் இன்னும்
என்ற நம்பிக்கையை
உண்டுபண்ணியதற்காகவாவது!

- பெ.பார்த்திபன்

பயணக் கட்டுரை

நாலு பத்து வண்டிக்கு
நாலு மணிக்குக் கிளம்பினால்
போதாதா என்றாள்.
நாலு பத்துக்கு வந்தபோது
நாலு பத்து வண்டி
நாலு மணிக்கே போனதாம்.
நாலு மணி வண்டியை
நாலு பத்து வண்டியாகச் சொன்னேன் என
அஞ்சு முப்பது வரையில்
பேசிக்கொண்டு இருந்தாள்.
அஞ்சு நாப்பது வண்டியை
அஞ்சு முப்பதுக்குத்தான் இனி
வண்டியெனச் சொல்ல
அனுபவம்தான் கற்றுத் தந்தது.
போக,
அஞ்சு முப்பதிலிருந்து அஞ்சு நாப்பது வரையில்
இவள் பேசாமல் இருந்ததும்
அஞ்சு நாப்பது வண்டி அஞ்சு நாப்பதுக்கே வந்ததும்
ஆச்சர்யமாக வேறு இருந்தது!

- பா.ராஜாராம்

விட்டு விடுங்கள்!

கவிதை
எப்படி வாசிக்க வேண்டும் தெரியுமா?
கதை
எப்படி வாசிக்க வேண்டும் தெரியுமா?
இலக்கிய அனுபவம்
என்றால் என்ன தெரியுமா?
ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்
என்னைக் கொஞ்சம்
தனியே வாசிக்க விடுங்கள்!

- லதாமகன்

புதிர்

தற்செயலாகத்தான்
பார்த்துக்கொள்கிறோம்
உண்ணுமிடத்தில்
மாடிப் படிகளில்
தேநீர் அருந்துகையில்
இருக்கையின் அருகில்
எதிர்ப்படுகையில்
தற்செயலாகத்தான்
நொடிக்கு ஒரு முறை
எனக்கு உன் நினைவு
வருவதைப்போல
தற்செயலாகத்தான்!

- ராகவ்