வியட்நாம்

முன்னொரு காலத்தில் வியட்நாமில் 'சேதுங்’ என்பவன் இருந்தான். அவன் ஒரு கூலி வேலைக்காரன். ஒரு சிறிய கீற்றுக் கொட்டகையில் குடும்பத்துடன் வசித்தான்.

சேதுங் தினமும் வேலைக்குச் சென்று, அன்றன்று கிடைக்கும் பணத்தில்தான் குடும்பத்தைக் காப்பாற்றிவந்தான். ஒரு நாள் வேலை இல்லை என்றாலும் அன்று பட்டினிதான். எவ்வளவுதான் சிரமங்கள் ஏற்பட்டாலும், தன் கஷ்டங்களை வெளியே சொல்ல மாட்டான்.

ஒரு நாள், அவனுக்கு வேலை எதுவும் கிடைக்காமல் வீட்டில் இருந்தான். அப்போது, வீட்டு வாசலில் யாரோ முனகும் சப்தம் கேட்டது. சேதுங் ஓடிச் சென்று பார்த்தான். வயதான ஒருவர் மயங்கிக் கிடந்தார். சேதுங் அவரைத் தூக்கிக்கொண்டு குடிசைக்குள் வந்தான். முகத்தில் தண்ணீர் தெளித்ததும் அவர் விழித்தார்.

''நீங்கள் யார் அய்யா?'' என்று சேதுங் கேட்டான்.

''என் பெயர் சியாங். நான் ஒரு பிச்சைக்காரன். மூன்று நாட்களாக எதுவுமே சாப்பிடவில்லை'' என்றார் அவர்.

உடனே சமையல் அறைக்குச் சென்றான் சேதுங். ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் கஞ்சியுடன் திரும்பி வந்தான். ''இதைக் குடியுங்கள் அய்யா. உங்களுக்குத் தருவதற்கு இது மட்டும்தான் இருக்கிறது'' என்றவாறு கஞ்சிப் பாத்திரத்தைப் பெரியவரின் முன்னால் வைத்தான்.

பெரியவர் கஞ்சி முழுவதையும் ஆவலுடன் குடித்தார். பிறகு, கண்ணீர் மல்க சேதுங்கைப் பார்த்தார். ''இளைஞனே... எத்தனையோ பணக்காரர்களின் மாளிகைகளில் ஏறி இறங்கினேன். பச்சைத் தண்ணீர்கூட தரவில்லை. ஆனால், இருந்த கொஞ்சக் கஞ்சியையும் நீ எனக்குத் தந்துவிட்டாய். நாளையும் உணவு கொடு. அதற்கு அடுத்த நாள் நான் போய்விடுவேன்!'' என்றார்.

அப்படி இரண்டு நாட்கள் கடந்தன. மூன்றாவது நாள், முதியவர் புறப்பட்டார். போவதற்கு முன்பு சேதுங்கையும், அவன் மனைவி, மக்களையும் அருகே அழைத்தார். ''வெகு கால தவத்தின் பயனால் எனக்கு ஒரு சக்தி கிடைத்து இருக்கிறது. எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களை என்னால் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும். சில தினங்களுக்குள் இங்கே ஒரு பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும். சுயநலக்காரர்கள் இறப்பார்கள். ஆனால், நல்லவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதனால், நான் உங்களுக்கு இந்த விதையைத் தருகிறேன். இதை நட்டு, நன்கு பராமரித்து வா!'' என்றவர், ஒரு தர்ப்பூசணி விதையை சேதுங்கிடம் கொடுத்துவிட்டு, விடைபெற்றுச் சென்றார்.

சேதுங், அன்றே அந்த விதையை மண்ணில் ஊன்றினான். நான்கு நாட்களுக்குள் அந்த விதை முளைத்து, வளர்ந்தது. யானை அளவுக்கு பெரிய தர்ப்பூசணியும் காய்த்தது.

மறுநாளே அந்த ஊரில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. எல்லோரும் அந்த வெள்ளத்தில் மூழ்கினார்கள். ஆனால், சேதுங்கிற்கும் அவன் குடும்பத்திற்கும் எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. அவர்கள், அந்த தர்ப்பூசணியை வெட்டி, ஒரு படகு செய்தார்கள். அதில் ஏறி, தண்ணீரின் மீது பயணம் சென்றார்கள். வெள்ளம் ஏறாத ஒரு குன்றின் உச்சியை அடைந்தார்கள். சேதுங் தன் குடும்பத்துடன் அங்கேயே தங்கத் தொடங்கினான்.

சில நாட்கள் கழித்து முதியவர் சியாங், மீண்டும் அங்கே வந்தார். அவரைப் பார்த்ததும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தான் சேதுங். சேதுங் பெரியவருக்கு அருமையான விருந்துக்கு ஏற்பாடு செய்தான்.

விருந்து முடிந்ததும் குடிலுக்கு வெளியே சென்றார் சியாங். திடீரென்று அந்தச் சம்பவம் நடந்தது. சியாங் நின்று இருந்த இடத்தில் ஒரு புனித உருவம். அவர்... புத்தர்!

வணங்கி நிற்கின்ற சேதுங்கையும் அவன் குடும்பத்தையும் ஆசிர்வதித்தபடி புத்தர் சொன்னார், ''நான்தான் பிச்சைக்காரனாக வந்தேன். பூமியில் இப்போதும் நல்லவர்கள் இருக்கிறார்களா என்பதை அறிவதற்காக வந்தேன். உங்களின் நல்ல மனதைக் கண்டு மகிழ்கிறேன். உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார்.

''இறைவா! ஊர் என்று இருந்தால் நல்லவர்களுடன் சுயநலக்காரர்களும் கலந்தே இருப்பார்கள். அவர்கள், தவறை உணர்ந்து மனம் மாறுவதற்கு சந்தர்ப்பம் தர வேண்டும். இப்போது இந்த ஊரில் எங்களைத் தவிர யாருமே இல்லை. உலகம் எல்லோருக்குமானது. இவ்வளவு பெரிய ஊரில்... நாங்கள் மட்டும் இருப்பது உறுத்தலாக இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்து, அவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் தர வேண்டும்'' என்றான் சேதுங்.

கருணையுடன் புன்னகைத்த புத்தர், ''உன் நல்ல மனதை நினைத்து மகிழ்கிறேன். அப்படியே ஆகட்டும். நீங்கள் இந்த ஊருக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருந்து, புகழுடனும் வளமுடனும் நீண்ட காலம் வாழ்வீர்கள்'' என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

புத்தரின் ஆசி பெற்ற சேதுங்கும் அவன் குடும்பமும், மக்களுக்கு வழிகாட்டிகளாக இருந்து நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.