Published:Updated:

’பிரஷ் பிடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிடும்!’

’பிரஷ் பிடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிடும்!’

’பிரஷ் பிடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிடும்!’

’பிரஷ் பிடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிடும்!’

Published:Updated:

சாதனைகளுக்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை என்பதைத் தொடர்ந்து அழுத்தமாக நிரூபித்துவருகிறார்கள், கோவை சித்ரகலா அகாடமி மாணவிகள் பாவிகாவும் பிரியதர்ஷினியும். சமீபத்தில் மத்திய நீர் வளத் துறை அமைச்சகம் 'வருங்காலத்துக்கான நீர் சேமிப்பு’ என்ற தலைப்பில் நடத்திய தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் பாவிகா இரண்டாம் பரிசு, பிரியதர்ஷினி மூன்றாம் பரிசும் தட்டி வந்துள்ளனர். போட்டி என்றால் சாதாரணப் போட்டி எல்லாம் இல்லை. 23,475 பள்ளிகளில் இருந்து கலந்துகொண்ட 16 லட்சம் மாணவர்களை வென்று இந்தப் பரிசைப் பெற்று இருக்கிறார்கள் சாதனை சுட்டிகள்!

’பிரஷ் பிடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிடும்!’
##~##

கோவை பாரதிய வித்யா பவன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார் பாவிகா. இவருக்கு ஓவியம் மட்டுமின்றி நீச்சலும் நன்றாக வருகிறது. அதிலும் தேசிய அளவில் சாதனைகள் செய்துள்ளார். கடந்த ஆண்டு இந்தூரில் நடந்த நீச்சல் போட்டியில் தென் பகுதிக்கானப் பிரிவில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்!

''எங்க அம்மாவுக்கு ஓவியங்கள்னா ரொம்பப் பிடிக்கும். எல்.கே.ஜி. படிக்கும் போதே என்னை ஓவியப் பள்ளியில் சேர்த்துவிட்டுட்டாங்க. ஜீவா சாரும், சந்திரசேகரன் சாரும் ரொம்பப் பொறுமையா ஒவ்வொரு கோடுகளையும் எப்படி இணைச்சு படம் வரையணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லச் சொல்ல என்னை அறியாமயே அந்தக் கோடுகள் மேல பெரிய ஆர்வம் வந்துச்சு. ஒரு நாளைக்குக் குறைஞ்சது ரெண்டு மணி நேரமாச்சும் பிரஷ் பிடிக்கலைனா பைத்தியம் பிடிக்கிற நிலைமைக்கு வந்துட்டேன்.

’பிரஷ் பிடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிடும்!’

இதுவரைக்கும் ஸ்கூல்ல நடந்த எல்லா ஓவியப் போட்டிகள்லயும் நான்தான் ஃபர்ஸ்ட். உலகக் காடுகள் தினத்தை முன்னிட்டு போன வருஷம் தாய்லாந்தில் இன்டர்நேஷனல் அளவுல போட்டி நடந்தது. அதுல எனக்குதான் ஐந்தாவது இடம். இதுவரைக்கும் 100 போட்டிகளுக்கு மேலே முதல் பரிசு வாங்கி இருக்கேன். ஜனவரி 21-ம் தேதி மத்திய நீர் வளத் துறை அமைச்சகம் நடத்திய போட்டியில் நீரை எப்படி எல்லாம் சேமிக்கணும்கிற கான்செப்ட்டில் நான் வரைஞ்ச படத்துக்கு இரண்டாவது பரிசு கிடைச்சுது. 50 ஆயிரம் ரூபாய் பணமும் சான்றிதழும் கொடுத்தாங்க...'' மழலை மாறாமல் பேசுகிறார் பாவிகா!

கோவை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கும் ப்ரியதர்ஷினி, ''போன வருஷம் குழந்தைகள் தினத்துக்காக டெல்லியில் தபால் தலைகளுக்குப் படம் வரையும் போட்டி நடந்துச்சு. அதுல நான் வரைஞ்ச புலி படத்துக்கு இரண்டாம் பரிசு கிடைச்சுது.  ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மேடம் கையால விருது வாங்கினேன். ரொம்பச் சந்தோஷமா இருந்துச்சு. அதேபோல இந்தப் போட்டியிலயும் 'வருங்கால நீர் சேமிப்பு’ என்கிற தலைப்புக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் ஜீவா சார் சொல்லிக் கொடுத்தாங்க. அதைவெச்சுத்தான் படம் வரைஞ்சேன். மூன்றாம் பரிசு கிடைச்சுடுச்சு. 25,000 ரூபாய் பணம் கொடுத்தாங்க. ஓவியம் வரையறதுல சர்வதேச அளவில் சாதிக்கணுங்கிறதுதான் என்னோட லட்சியம்'' என்று சிரிக்கிறார் பிரியதர்ஷினி!

வாழ்த்துகள் சுட்டீஸ்!

’பிரஷ் பிடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிடும்!’

- ம.முரளிதரன்
படங்கள்: செ.பாலநாக அபிஷேக்