நடிப்பு : ஐஸ்வர்யா
கலை : ஸ்யாம்
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா
இயக்கம் : நீங்களேதான்

'உள்ளே செந்தில் குடும்பம், வெளியே அன்வர் குடும்பம்...' அதிர்ச்சியில் துர்கா! என்ன நடக்கப் போகிறது இனி..?!

- இப்படி முடிந்திருந்த கடந்த எபிசோட், அடுத்த கட்டமாக எப்படி பயணிக்கும் என்பதைத் தீர்மானிக்கும் போட்டியில், வழக்கம்போல் வாசகிகள் ஜோர் ஜோர் என்று கலக்கியிருக்கிறார்கள்!

சென்னை - புவனேஸ்வரி, இந்திரா, அன்னபூரணி, சியாமளா ரங்கநாதன், ஆலந்தூர் - ஜெரினாகாந்த், பவானி - கஸ்தூரி... இந்த ஆறு பேரும், 'போலீஸ் அதிகாரி செந்திலைத்தான் சுதா மணக்க வேண்டும்' என உறுதியாக தங்கள் பாணியில் சொல்கிறார்கள்!

ஈரோடு - விஜயலட்சுமி, பெங்களூரு - மீனா... இந்த இரண்டு தோழிகளும், 'சுதா வேறிடத்தில் மணமுடிக்கப்பட, அன்வர் - துர்கா இருவரிடையோன அக்கா - தம்பி பாசம் உடைந்து சிதறுகிறது' என அதிர்ச்சி தருகிறார்கள்!

ஆழ்வார்திருநகர் - லஷ்மி... 'அனைவரும் சம்மதிக்க... ராஜம் எதிர்ப்பு' எனும் இந்த சிநேகிதி, நிறைய கதை சொல்கிறார். இயக்குநர் நாற்காலி உங்களுக்கு வெகு அருகில்!

மதுரை - சுசீலா, புதுச்சேரி - திலகா... இந்த இரு தோழிகளும், 'ஒவ்வொரு பெண்ணுக்கும் கணவன் மட்டுமல்ல... புகுந்த வீட்டுப் பாசம் அதைவிடப் பெரிது' என அழகாக விளக்கி, கதையை வேறு பாதையில் பயணிக்க வைக்கிறார்கள். இந்த இரு தோழிகளும் இம்முறை எபிசோட் இயக்குநர் நாற்காலியை இழந்தாலும், எதிர்காலத்தில் நிச்சயமாக இடம்பிடிப்பார்கள் என்றே தோன்றுகிறது!

மதுரையைச் சேர்ந்த எம்.சாந்தினி, வெகு இயல்பாக எல்லாரும் ரசிக்கும்படி ஒரு பாஸிட்டிவ் தீர்ப்பைத் தந்து, யார் மனமும் கோணாமல் இதமாக தன் கருத்துக்களைச் சொல்லி, எதிர்காலக் கதைக்கு ஒரு கமாவும் போட்டு, ஜம்மென எபிசோட் இயக்குநர் நாற்காலியைப் பிடித்துவிட்டார். வாழ்த்துக்கள்!

ஒரு நொடி துர்கா தடுமாறிப் போனாள்.

'நல்ல விஷயம் பேச வந்திருக்கோம்னா என்ன அர்த்தம்? நிச்சயமா சுதாவைக் கல்யாணம் செஞ்சுக்க இவங்களும் முடிவு செஞ்சாச்சு. வாழ்வு கொடுக்க, பரிசம் போட பெத்தவங்களோட செந்திலும் வந்தாச்சு. நான் என்ன செய்யப் போறேன்?’

''என்னம்மா... வீடு தேடி வந்தவங்கள, உள்ளே கூப்பிட மாட்டியா?'' என்று வாப்பா கேட்க,

''வாங்க... வாங்க... நல்ல நேரத்துல நீங்களும் வந்திருக்கீங்க. திகைச்சுப் போயிட்டேன்!'' என்றவாறே உள்ளே அழைத்து உட்காரச் சொன்ன துர்கா, பரஸ்பரம் அனைவரையும் அறிமுகப்படுத்தினாள். நடேசன், பாலாஜி, வராகன் இவர்களெல்லாம் திகைத்து நிற்க... ''மாமா... பேசிட்டு இருங்க... நான் சுதாவைக் கூட்டிட்டு வர்றேன்!'' என்றபடி துர்கா உள்ளே வந்தாள். உள்ளிருந்தபடியே சகலமும் கவனித்த சுதா, ஒரு மாதிரி செயலிழந்து போயிருந்தாள்.

''என்ன அண்ணி இது?''

''நான் எதையும் உடைச்சுப் பேசல. வாழப் போறவ நீ. என்ன சொல்றே?''

''இனிமே எனக்கு எதையும் பேசற உரிமையோ, தகுதியோ இல்லை. அந்த அளவுக்கு பேசக் கூடாததை நான் பேசியாச்சு, போகக் கூடாத இடங் களுக்குப் போயாச்சு. என்னைப் பெத்த தாய்கூட, உங்களைவிட எனக்கு நல்லதை செய்ய முடியாது. நீங்க என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்படறேன்!''

இதை இவர்கள் பேசும் நேரம், அன்வரை ஆழமாகப் பார்த்தார் வாப்பா. அந்தப் பார்வையில் ஆயிரம் சேதிகள் இருந்தன. அதை மற்றவர் களும் கவனிக்க, சுதாவை அழைத்துக் கொண்டு வந்தாள் துர்கா.

''பெரியவங்கள நமஸ்காரம் பண்ணிக்க சுதா.''

சுதா, பொதுவாக வணங்க... துர்கா ஆரம்பித்தாள்!

''வாப்பா... சமீபகாலத்துல சுதா வாழ்க்கையில ஒரு புயல் வீசி, நடக்கக்கூடாதது நடந்து போச்சு. நிரபராதியான சுதா பழி சுமந்து நிக்கற துரதிர்ஷ்ட நிலை. சுதாவைக் கைது பண்ணின போலீஸ் அதிகாரி செந்தில் இவர்தான். அது தப்புனு உணர்ந்து பத்திரிகை, தொலைக் காட்சியில மறுப்புக் கொடுத்தது மட்டும் இல்லாம, செஞ்ச தப்புக்குப் பரிகாரம் தேடற வகையில அவளைக் கல்யாணம் செஞ்சுக்கவும் முன்வந்திருக்கார்! இந்த நல்ல நேரத்துல என் தம்பி அன்வரும், நீங்களும் உம்மாவும் வந்தது எனக்குச் சந்தோஷம்!''

வாப்பா சட்டென எழுந்தார்.

''துர்கா... நாங்க இங்கே வர்றதுக்கு முக்கிய காரணம், இந்த புது பங்களாவுக்கு வந்த உன்னை வாழ்த்தத்தான். ரெண்டாவது, அன்வர் - மும்தாஜ் கல்யாணப் பேச்சுல அவனோட அக்கா நீ இருக்க வேண்டாமா? அதுக்கு உன்னைக் கூப்பிடத்தான் வந்தோம்!''

வாப்பா ஏற்கெனவே, அன்வரிடம் பேசி எல்லாத்தையும் முடித்திருந்தாலும், அந்த நொடியில் அவன் முகத்தில் சின்னதொரு அதிர்ச்சி மின்னலாக வந்து மறைந்தது. அதேநேரம் துர்காவின் முகத்தில் ஆயிரம் வால்ட் பல்பின் வெளிச்சம் 'வாப்பா ஒரு பெரும் சிக்கலை, வெகு இயல்பாகத் தீர்த்துவிட்டாரே!’

''சரிம்மா... நல்ல நேரம் போயிடப் போகுது... மற்றதை முடிங்க!''

''மாமா... வாங்க! தாம்பூலத் தட்டை மாத்திக்கலாம்!'' என்று துர்கா சொல்ல,

செந்திலின் அப்பா, அம்மாவைப் பார்த்துக் கைகூப்பினார்.

''என் மனைவி, குடும்பத்துல இணக்கமா இல்லை. என் மகன் - அதாவது துர்காவோட புருஷன் ஆனந்தும் அப்படித்தான். துர்காதான் எங்க எல்லாருக்குமே இன்னிக்கு பெரிய ஆதரவு. அவளோட உழைப்பும், நல்ல குணமும்தான் இந்த பங்களா வரைக்கும் எங்களைக் கொண்டு வந்திருக்கு...''

''எங்களுக்கு எந்த விளக்கமும் வேண்டாம். சுதா எங்க மருமகளா வரணும். அது ஒண்ணுதான் முக்கியம். தாம்பூலத் தட்டை மாத்திக்கலாம்!''

- செந்திலின் அப்பா தியாகராஜன், மெள்ள சிரித்தார்.

தேதியை பின்னர் குறித்துக் கொள்ளலாம் என்று முடிவாக... வாப்பா, உம்மா, அன்வர் மூவரும் சுதாவைத் தனியாக அழைத்தார்கள்.

''சுதா... அன்வர் வந்து எங்ககிட்ட பேசினான். நாங்க உன்னை ஒப்புக்கலதான்...''

''அதுல தப்பில்லை. இடைக்காலத்துல எங்கம்மா பேச்சைக் கேட்டு எல்லாரும் அண்ணியை டார்ச்சர் பண்ணினதுல, அன்வரோட மனசு என்னை விட்டு விலகிப் போனதுலயும் தப்பே இல்லை. அன்னிக்கு நான் செஞ்ச பாவங்களுக்கு இப்ப நிறைய அனுபவிச்சுட்டேன்.''

அன்வர் குறுக்கிட்டான்.

''ஆனா, செந்தில் குடும்பம் எங்கயோ போயிருச்சு. அற்புதமான புருஷனும் மாமனார், மாமியாரும் உனக்குக் கிடைச்சுட்டாங்க சுதா!''

''நீயும், நானும் ஒரு சமயத்துல காதலிச்சது செந்திலுக்குத் தெரிய வேண்டாம்...''

''தெரிஞ்சா தப்பில்லை அன்வர். அதுக்கு மேல கரடுமுரடான சம்பவங்கள் என் வாழ்க்கையில நடந்தாச்சு. செந்தில்கிட்ட எதையுமே மறைக்கப் போறதில்லை.''

அவள் கைகளை இறுகப் பிடித்தாள் உம்மா!

''ரொம்பப் பெருமையா இருக்கம்மா. இந்த மாதிரி மனநிலைதான் ஒரு பெண்ணை நல்லா வாழ வைக்கும்.''

துர்கா அருகில் வர,

''துர்கா... நானும் உம்மாவும் புறப்படறோம். அன்வர்... அக்கா கூடவே இருந்து வேண்டியதைச் செய்.''

''சரி வாப்பா.''

அவர்களை வழியனுப்பி உள்ளே திரும்பினாள் துர்கா.

செந்தில் - அன்வர் வெகு இயல்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, பாலாஜி, வராகன் அதில் கலந்துகொள்ள, அப்போதே கல்யாணக் களை கட்டியது!

''ஜோசியரை வெச்சு, நல்ல நாளை குறிச்சுடலாம்'' என்று நடேசன் சொல்ல, ''கல்யாணச் செலவு முழுக்க, எங்களோடது!'' என்று செந்திலின் அப்பா தியாகராஜன் சொல்ல, ''நாங்களும் முறையா என்ன செய்யணுமோ, அதைக் குறையில்லாம செய்வோம்!'' என்றாள் துர்கா. அவர்களும் விடைபெற்றார்கள்.

''துர்கா... பங்களாவுக்குக் குடிவந்த அன்னிக்கே நல்லது நடந்திருக்கு!'' என்று சிலிர்த்தார் பாலாஜி.

''மாமா... அத்தைக்கு விவரம் சொல்ல வேண்டாமா? ஆயிரம்தான் ஆனாலும் சுதாவைப் பெத்தவங்க!''

''சரிம்மா... யாரு போய்ச் சொல்றது? நான் அந்த வீட்டுப் படியில கால் வைக்க மாட்டேன்!'' என்று நடேசன் சொல்ல, வராகன் முன்னால் வந்தார்.

''நான் பேசறேன் மாமா. சுதாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சுருக்குனு புரிஞ்சுக்கட்டும்.''

''சரி மாப்ள.''

''மாமா... கல்யாண பட்ஜெட் போடணும்'' என்று துர்கா சொன்னபோது, அன்வர் அருகில் வந்தான்.

''அக்கா... செந்தில் வீட்டுக்காரங்க செய்ற செலவைச் செய்யட்டும். நான் பெரிய பங்கெடுத்துக்கறேன். நீ பட்ஜெட் போட்ட பிறகு, அதுல என் பங்கு என்னானு சொல்றேன்!''

''துர்கா... நானும் செய்யக் கடமைப்பட்டவன்'' என்று தானும் கலந்தார் பாலாஜி.

நடேசன் பூரித்துப் போனார். ''சுதா... உனக்காக செய்ய எத்தனை பேர் பாரு?''

''இதுக்கெல்லாம் காரணம் என்னோட அண்ணிப்பா!'' என்றவள், அழுதுவிட்டாள்.

ஆனந்த், கல்பனா சாப்பிட்டுக் கொண்டிருக்க, ராஜம் பரிமாறிக் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்தார் வராகன்.

''வாங்க மாப்ள...''

கல்பனா கண்டுகொள்ளவே இல்லை.

''வந்த புருஷனை, வானு கூட கூப்பிட மாட்டியா?''

''நாங்கள்லாம் இருக்கோமா... இல்லை, செத்தோமானு பார்க்க வந்தீங்களா?''

''அதுக்கு மட்டும் வரலைடி. உழைப்பால உயர்ந்த துர்கா, பங்களாவுக்கு குடி வந்திருக்கா. கார் வந்தாச்சு. மாசம் அஞ்சு லட்சம் சம்பளம் உள்ளூர்ல. தவிர பங்களாவுக்கு வந்த முதல் நாளே சுதாவுக்கு நிச்சயதார்த்தமும் நடந்துடுச்சே!''

ராஜம் சட்டென எழுந்தாள்.

''பெத்த நான் உயிரோடு இருக்கும்போது, எங்கிட்ட சொல்லாமலா?''

''நீங்க உங்க புள்ளைங்களுக்கு என்ன நல்லதைச் செஞ்சீங்க? உருப்படாம ரெண்டு பேர் இங்கே இருக்காங்க. சுதா புத்திசாலி... தப்பிச்சுட்டா!''

ஆனந்த் வேகமாக எழுந்தான்.

''தேவையில்லாம வார்த்தைகளை விடாதீங்க. மரியாதை கெட்டுப் போகும்!''

''முதல்ல உனக்கு மரியாதை இருக்கா? நல்ல மனைவியைப் புரிஞ்சுக்கத் தெரியாத முட்டாள் நீ. உன்னை விட்டு விலகின பிறகுதான் துர்கா வாழ்க்கையில வெளிச்சம் வருது. சுதாவையும் வாழ வைக்க ஒருத்தன் வந்துட்டானே! நீ அண்ணனா இருந்து என்ன கிழிச்சே? இந்த மாதிரி ஒரு அம்மாவும், அக்காவும் கூடவே இருந்தா... நீ பிளாட்பாரத்துக்குத்தான் வரணும்!''

ஆனந்த் பாய்ந்து வராகனை அடித்துவிட, கல்பனா ஆடிப் போனாள்.

''நிறுத்து ஆனந்த். என் கண் முன்னால என் புருஷனை அடிக்க நீ யாரு? புத்தி கெட்டுப் போச்சா ஒனக்கு?''

''வாயை மூடு. இந்த வெட்கம் கெட்ட ஆம்பளைங்க கூட்டம் அவ பின்னால சுத்துது. அவர் எனக்குச் சாபம் தர்றாரா? அடிக்கறதோட நிறுத்த மாட்டேன்... கொல்லுவேன்!''

கல்பனா வேகமாக நெருங்கி, ஆனந்தைப் பளாரென அறைந்தாள்!

''உன் அக்கா புருஷன் அவர். கை நீட்டறியா நாயே?''

''விடு கல்பனா. இதுக்கு மேலயும் இங்கே நீ இருக்கணுமா?''

''மாப்ள... கல்பனாவை எங்கிட்டேயிருந்து பிரிக்காதீங்க.''

''நிறுத்துங்க அத்தே! போலீஸ்ல நான் பிடிபட, என்னை விடுவிச்சு, பணமும் கட்டினவ துர்கா. இதப் பாரு கல்பனா... உன் தங்கச்சி புரிஞ்சுக்கிட்டா. இப்ப நீ என்னோட வரலைனா, விவாகரத்து நோட்டீஸ் வரும்.''

வேகமாக உள்ளே போன கல்பனா... ஐந்தே நிமிடங்களில் பெட்டியுடன் வெளியே வந்தாள்.

''என்னடீ... நீயும் போறியா?''

''அவரையே கை நீட்டி அடிக்கறவன், நாளைக்கு என்னைக் கழுத்தைப் புடிச்சு தள்ள மாட்டான்னு என்ன நிச்சயம்..?''

''துர்காவுக்கு லட்சங்கள் சம்பளம், பங்களா, கார்னு வந்தாச்சு. ஒட்டிக்கப் பார்க்கறியா? உனக்கு வேணும்னா, நீ யாரை வேணும்னாலும் கழட்டி விடுவே. கேவலமானவ நீ.''

வராகன், ஆனந்தை நெருங்கினான்.

''நீ சொன்னதுதான்டா நிஜம். துர்காவோட அத்தனை வசதிகளுக்கும் நிஜமான சொந்தக்காரன் நீ. ஆனா, உன் கேவலமான புத்தியால அவளை நீ நெருங்க முடியல. இந்த அம்மாக்காரி உன்கூட இருக்கற வரைக்கும் உனக்கு நல்லதே நடக்காதுடா!''

இருவரும் ஆவேசமாகக் கிளம்பிப் போக, ராஜம் ஆடிப் போனாள்.

''என் பொண்ணுங்க ரெண்டு பேரையும் எங்கிட்டேயிருந்து பிரிச்சுட்டா... அவ உருப்படமாட்டா!''

ராஜத்தின் கூச்சல் தொடர, அங்கு உட்கார முடியாமல் வெளியேறினான் ஆனந்த்.

''எங்கடா போறே?''

''துர்காகிட்ட போகல. எனக்கு மானமிருக்கு. உன் பொண்ணுங்கள மாதிரி காசுக்காக மனசு மாறிப் போறவன் நான் இல்லை.''

ராஜத்துக்கு சுருக்கென்றது. தலை கலைந்து... உடைகள் கசங்கி... மனநிலை சரியில்லாதவன் போல் கால் போன போக்கில் நடந்தான். எதிரே பைக்கில் - ஆனந்தோடு வேலை செய்த ஹரி.

''ஆனந்த்... என்னடா இப்பிடி வெறிபிடிச்சவன் மாதிரி இருக்கே... என்னாச்சு..?''

''ஓ... ஒண்ணுமில்லை...''

''எல்லாம் கேள்விப்பட்டேன். உன் பொண்டாட்டி துர்கா கார், பங்களானு பெரிய சம்பளத்துல ஒரு கம்பெனிக்கே தலைமைப் பொறுப்பை ஏத்துக்கிட்டதா சொன்னாங்க. கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போயிருந்தா, வாழ்க்கை சொர்க்கமா இருந்திருக்குமே..?''

''அவளோட செருப்பைத் துடைக்கச் சொல்றியா?''

''தாம்பத்யம்னா என்னா... கொஞ்சம் விட்டுக் கொடுத்து, வளைஞ்சு கொடுத்து வாழ்ந்தா நல்லதுதானே?''

''எதை விட்டுத் தரணும்? அதான் அவளைச் சுத்தி ஒரு ஆம்பளைங்க கூட்டமே இருக்கே. பக்கத் துல இருந்து பணிவிடை வேற செய்யணுமா?''

ஹரியைத் தள்ளிவிட்டு ஆனந்த் நடக்க, மீண்டும் மடக்கினான்.

''மச்சான்... உன் சங்கடம் புரியுது. முதல்ல நீ ரிலாக்ஸ் பண்ணணும்!''

ஒரு பாருக்குள் அழைத்துச் சென்றான்.

''இங்கே ஏன் கூட்டிட்டு வந்தே?''

''உன் டென்ஷனை குறைக்கத்தான். குடிக்கறதுல தப்பே இல்லை. இப்போதைக்கு நீ சந்தோஷப்படணும்னா, இதுதான் மருந்து.''

அவன் உள் மனசு சிரித்தது. 'ஆபீஸ்ல எப்படியெல்லாம் என்னை அவமானப்படுத்தியிருக்கே. மகனே... நீ அசிங்கப்படணும்டா.’

ஆனந்தை படிப்படியாக வசப்படுத்தி ஊற்றிக் கொடுக்க, ஆனந்த் போதைக்குள் முழுமையாக இறங்க, அழுகையும் ஆத்திரமுமாக வெடித்தான்.

''இன்னிக்கு இதுபோதும். வா... உன்னை வீட்ல விட்டுட்டு நான் போறேன்'' என்றவாறே வெளியே அழைத்து வந்தவனுக்கு போன் வந்தது.

''ஓ.கே... வந்துர்றேன்டா! ஸாரி ஆனந்த்... அவசர வேலை. நீயே வீட்டுக்குப் போயிடு.''

முழு போதையில் இருந்த ஆனந்த், கால்கள் பின்ன, வாய் மட்டும் உளறலில் இருக்க, நடக்கத் தொடங்கினான். பலபேர் வாய்க்கு வந்தபடி திட்டியபடியே கடந்தார்கள். வேகமாக வந்த அந்தக் கார் பிரேக் போட, ஆனந்த் மேல் லேசாக இடித்ததில் விழுந்தான். சின்னதாக ஒரு கூட்டம் சேர, மல்லாந்து கிடந்தான் ஆனந்த். காரிலிருந்து கொலுசுப் பாதங்கள் சாலையில் பதிந்தன. ஆனந்த் மயங்கியிருக்க,

''அவரைத் தூக்கி கார்ல போடுங்க... நான் பார்த்துக்கறேன்'' என்றது தேன் குரல். ஆனந்த் காரில் கிடத்தப்பட்டான். அவள் காரை எடுத்தாள்.

யாரவள்?!

- தொடருங்கள் தோழிகளே...
ஆடைகள் உதவி: பி.எம்.சில்க்ஸ்,
மயிலாப்பூர், சென்னை.

சூட்கேஸ் பரிசு!

''நீங்கதான் இந்தமுறை இயக்குநர் நாற்காலியைப் பிடிச்சிருக்கீங்க'' என்ற நம் குரல் கேட்டதும், சந்தோஷத்தைக் கூட பெயருக்கு ஏற்றாற்போல் சாந்தமாகவே வெளிப்படுத்தினார் மதுரை சாந்தினி.

''நான் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துல வேலை பார்க்கிறேன். அவள் விகடன் என் ஃப்ரெண்டு மாதிரி. 'அவள்’ சொல்ற பல நல்ல விஷயங்களை நான் கடைப்பிடிச்சு பார்த்திருக்கேன். டிப்ஸ் தொடங்கி, சமையல் வரை 'அவள்' என் வழிகாட்டி. 'அவள் கொடுக்குற அத்தனை பரிசுகளையும் அள்ளிட்டு வந்திருக்கோம்... இன்னும் இந்த துர்கா டைரக்டர் சேர் மட்டும் கிடைக்கலையே’னு வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தேன். அந்த வருத்தம் அவளுக்கு புரிஞ்சுடுச்சு... இயக்குநர் நாற்காலி கிடைச்சிருச்சு... ஐ லவ் யூ அவள்'' என்று அமைதியாகக் கூறி, மகிழ்ந்தார் 'பி.எஸ்.என்.எல்.' சாந்தினி. வாழ்த்துக்கள்!

இவருக்கு அன்புப் பரிசாக 'வி.ஐ.பி சூட்கேஸ்’ அனுப்பி வைக்கப்படுகிறது.

வாசகிகளுக்கு சூப்பர் பரிசுப் போட்டி

இந்தஅத்தியாயத்தைப் படித்து முடித்ததுமே... அடுத்த அத்தியாயம் எப்படி என்பதை தீர்மானியுங்கள். அதை அப்படியே மனதில் வடித்துக் கொண்டாலும் சரி, எழுதி வைத்துக் கொண்டாலும் சரி... 044-66808023 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் பெயர், ஊரை முதலில் சொல்லிவிட்டு உங்கள் குரலிலேயே கதை திருப்பத்தை பதிவு செய்யுங்கள். மிகச்சிறந்த கதைத் திருப்பத்தை வைத்து அடுத்த அத்தியாயத்தை நகர்த்துவார் தேவிபாலா. அத்தகைய எபிசோடை சூப்பராக படைக்கும் வாசகிக்கு சூட்கேஸ் பரிசு! இதழ் வெளிவரும் வாரத்தின் சனிக்கிழமை அன்று மாலைக்குள் கதைத் திருப்பத்தை பதிவு செய்ய மறக்காதீர்கள்!