நடிப்பு : ஐஸ்வர்யா
கலை : ஸ்யாம்
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா
இயக்கம் : நீங்களேதான்

முழு போதையில் இருந்த ஆனந்த், சாலையில் மல்லாந்து கிடந்தான். காரிலிருந்து கொலுசுப் பாதங்கள் சாலையில் பதிந்தன. ஆனந்த் மயங்கியிருக்க, ''அவரைத் தூக்கி கார்ல போடுங்க... நான் பார்த்துக்கறேன்'' என்றது தேன் குரல். ஆனந்த் காரில் கிடத்தப்பட்டான். அவள் காரை எடுத்தாள். யாரவள்?!

கடந்த எபிசோட், இந்தக் கேள்வியோடு முடிந்திருக்க, புது கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்த அத்தனை தோழிகளும் முண்டியடித்துக் கொண்டு புதுப்புது கேரக்டர்களை களத்தில் இறக்க, அசந்துதான் போயிருக்கிறோம். அத்தனை சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்!

சென்னை - கௌசல்யா, முட்லூர் - வசந்தி... இவர்களிருவரும், 'வந்தவள் துர்காதான்' என்று யோசித்திருக்கிறார்கள்!

திருச்சி - மிதுளா, ஷீலா; பெங்களூரூ - ராஜலட்சுமி, மைலாப்பூர் - உஷா, கனகா... 'அது, ஆனந்த்தின் மாமா மகள்' என உறவில் சுற்றி வருகின்றனர் இந்தத் தோழிகள்!

மதுரை - உஷா, டாக்டர் மீனாட்சி... முறையே 'மாதவி', 'திலகா' என இரு கேரக்டரை அறிமுகப் படுத்தி, அவர்கள் கல்லூரித் தோழிகள் என்கிறார்கள். வழக்கமான கதையாகிவிட்டதே!

தஞ்சாவூர் - ரெ.செந்தாமரை செல்வி, மும்பை - ஆர்.மீனாலதா... இந்த இருவரும், வழக்கம் போல பழிவாங்கும் எதிர்மறைப் பெண்களாக 'சுஜா', 'ரேகா' என இருவரை அறிமுகப் படுத்துகிறார்கள்.

கும்பகோணம் - எஸ். ஜெயலட்சுமி... இந்தத் தோழி அறிமுகப்படுத்தும் ப்ரியா, சுதாவை மணக்கப் போகும் போலீஸ்காரனைக் காதலித்தவள் என்பது நல்ல முடிச்சு. ஆனால், சென்டர் டிராக்கிலிருந்து விலகுகிறது.

சென்னையைச் சேர்ந்த ராஜி கணேசன்... 'தீபிகா' என்கிற கதாபாத்திரத்தை கொண்டு வருகிறார். இளமையான, அழகான, படித்த, பணக்காரப் பெண்ணாக அறிமுகப்படுத்துகிறார். தீபிகா பெற்றவர்களின் செல்ல மகள்... ஆனந்த்திடம் ஒருதலைக் காதலில் இருந்தவள். அழகான அடுத்த கதாநாயகியை உள்ளே கொண்டு வந்த இவருக்குத்தான் இந்த எபிசோட் இயக்குநர் நாற்காலி. கைதட்டுங்கள்!

அந்த பிரமாண்ட பங்களா வாசலில் கார் வந்து நிற்க, கேட் திறந்து செக்யூரிட்டி சல்யூட் அடிக்க, கார் போர்டிகோவில் போய் நின்றது. அழகான கொலுசு கால்களு டன் தீபிகா இறங்க, அம்மா வெளியே வந்தாள்.

''என்னம்மா லேட்டு?''

''அம்மா... வேலைக்காரங்கள கூப்பிடு.''

அம்மா குரல் கொடுக்க, நாலு பேர் ஓடி வர, தீபிகா கார் கதவைத் திறந்தாள். ஆனந்த் மயக்கம் தெளியாமல் படுத்திருந்தான்.

''இவரை உள்ளே கொண்டு போய் படுக்க வைங்க!''

அம்மாவின் கண்களில் கேள்விக்குறி. வேலையாட்கள், ஆனந்தை அலேக்காகத் தூக்கி ஹால் சோபாவில் கிடத்தினார்கள். மாடியிலிருந்து இறங்கி வந்த தனசேகரன், ''யாரம்மா இது?'' என்றார் தீபிகாவிடம்.

''நீங்களே பாருங்கப்பா!''

நெருங்கிக் குனிந்தார்.

''பார்த்த முகமா இருக்கு. தப்பான வாசனை வருது. எதுக்கு இந்த ஆளை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தே?''

தீபிகா திரும்பிப் பார்க்க, வேலையாட்கள் விலகிப் போக, அம்மா விசாலம் முகத்தில் கலவரம்.

''குடிபோதையில ரோட்டுல தாறுமாறா நடந்து என் கார் முன்னால வந்து விழுந்தார். வேற யாராவதா இருந்தா, நான் காரை எடுத்திருப் பேன். ஆனந்த்தை அப்படி விடமுடியுமா டாடீ?''

தனசேகரன் முகத்தில் அதிர்ச்சி.

''ஆ... ஆனந்தா இது?''

''அந்த முகத்தை நீங்க யார் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன்பா.''

''தீபிகா!'' - அதட்டினாள் விசாலம்.

''உன் பொண்ணுக்கு பொய் சொல்ல நீ கத்துக் கொடுக்கலேம்மா. அப்படி நீ செஞ்சுருந்தா, முதல் காதலை மறந்துட்டதா நானும் பொய் சொல்லியிருப்பேனே!''

தனசேகரன் முகத்தில் வேதனை.

''வெளிநாட்டு வாழ்க்கை போதும்... இந்தியாவுக்கே வந்துடலாம்னு போன வாரம்தான் வந்தோம்... அது தப்பாப் போச்சுங்க...'' என்று விசாலம் குரல் தேய, மல்லாந்து படுத்திருக்கும் ஆனந்த் முகத்தையே பார்த்தாள் தீபிகா.

இதே பங்களா. ஏழு வருடங்களுக்கு முன் - அந்த மார்ச் 23 - மறக்க முடியாத நாள். வாசலில் கார் வந்து நிற்க, தனசேகரன் முதலில் இறங்கி, கார் கதவைத் திறந்து விட, ஆனந்த் மருண்ட விழிகளுடன் இறங்கினான்.

''உள்ளே வாங்க ஆனந்த்.''

''எதுக்காக என்னை இங்கே கூட்டிட்டு வந்திருக்கீங்க?''

''சொல்றேன்...''

மாடியின் நடுக்கூடத்தில் பட்டுத்திரை மூடிய ஓர் அமைப்பு. அவர் அதை விலக்க, தாய்ப்பால் குடிக்கும் குழந்தை. பரவச முகத்துடன் தாய்.

''இந்த ஓவியம்... எப்படி இங்கே?''

''லலித்கலா அகாடமியிலிருந்து இதை விலைக்கு வாங்கினது என் பொண்ணு தீபிகாதான். ஏலத்துக்கு இது வந்தப்ப, பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கிட்டா. உங்களோட பரம ரசிகை. வாம்மா வெளியே!''

தீபிகா அழகு சொட்ட வந்து நின்றாள்.

''வணக்கம்!''

''ஓ... இதை வாங்கினது நீங்கதானா?''

''உங்க ஓவியங்கள் பலதையும் வாங்கியிருக்கேன். அதுக்காக எங்க வீட்ல ஒரு தனி ரூமே இருக்கு'' என அவனை அழைத்துப் போய் கதவைத் திறக்க, அறை முழுக்க ஆனந்த்தின் ஓவியங்கள். அவன் திக்குமுக்காடிப் போனான். அந்த முகத்தில் மின்னி மறையும் பல்வேறு உணர்ச்சி களை அணு அணுவாக ரசித்தாள் தீபிகா.நினைவுகளில் இருந்து சட்டெனக் கலைந்தாள்.

'அந்த முகமா இந்த முகம்? போதையில் மயங்கி, துவண்டு, கலைந்து, ஒரு பிச்சைக்காரனைப் போல. என்னாச்சு ஆனந்த் உங்களுக்கு?’ - தீபிகாவின் கண்கள் கலங்க, மீண்டும் நினைவுகள் நெஞ்சுக்குள் வந்தன.

ஒரு வருடம் கடந்த பிறகு, மறுபடியும் மார்ச் 23 - இதே பங்களா.

''வாங்க ஆனந்த்!'' என தீபிகா அழைக்க, உள்ளே நுழைந்தான் ஆனந்த். தனசேகரனும், விசாலமும் காத்திருந்தார்கள்.

''எதுக்கு வரச் சொன்னீங்க?''

''ஒரு வருஷமா எங்க தீபிகா, உங்களோட பழகறா. நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம். இனிமே பேச வேண்டிய நேரம் வந்தாச்சு தம்பி!''

''புரியல!''

''கோடிக்கணக்கான எங்களோட சொத்துக்களுக்கு ஒரே வாரிசு தீபிகாதான். அவ எதைக் கேட்டாலும் நாங்க வாங்கித் தருவோம்!''

''இதுல நான் எங்கே வந்தேன்?''

''அவ கேக்கறதே உங்களைத்தானே?''

''நான் என்ன ஓவியமா?''

''உயிரோவியம்! தூரிகையை பிடிக்கற இந்த விரல்கள், பொன் தாலியை ஏந்தி, எங்க பொண்ணு கழுத்துல கட்டணும். ஓவியங்களை படைக்கற இந்த பிரம்மா, ஓர் உயிரையும் என் மகள் வயித்துல உருவாக்கணும். உங்க மனைவியா மாற அவ ஆசைப்படறா. முறைப் படி உங்க வீட்டுக்கு வந்து சம்பந்தம் பேசறோம்!''

ஆனந்த் முகம் மாறியது. படக்கென தீபிகாவின் பக்கம் திரும்பினான்.

''நான் உன்னைக் காதலிக்கறதா எப்பவாவது உங்கிட்ட சொல்லி இருக்கேனா தீபிகா?''

''சொல்லணுமா! உங்க கண்கள்ல ஓடற நிரந்தரச் சிரிப்பும், முகத்துல உள்ள வெளிச்சமும், எங்கிட்ட பேசற அன்பான வார்த்தைகளும், எப்ப நான் கூப்பிட்டாலும் ஓடி வர்றதும் போதாதா?''

''தீபிகா... இதெல்லாமே நெஜம் தான். ஆனா, என்னோட தீவிர ரசிகையா நீ இருக்கற காரணமா, உன்கிட்ட நான் வெச்ச தூய்மை யான நட்பு அது. ஒரு படைப்பாளி, தன்னை ஆராதிக்கற ரசிகையை மதிக்கறது தப்பா?''

''தம்பி... அந்த ரசிகை, மனைவி யானா, வாழ்நாள் முழுக்க ஆனந்த மில்லையா?''

''இல்லீங்க! தீபிகாவை நான் அப்படி ஒரு கண்ணோட்டத்துல பார்க்கல!''

''சரி... இனி பார்க்கலாமே?''

''ஸாரி தீபிகா... அது நிச்சயமா முடியாது. மனசு, கழட்டிப் போடற சட்டை இல்லை!''

''தம்பி... நீங்க கல்யாணம் ஆகாதவர்...''

''இதுவரைக்கும். இனி அது நடக்கப் போகுது. துர்கானு ஒரு பெண் நிச்சயமாயாச்சு!''

''நிச்சயம்தானே தம்பி? அவ அந்தஸ்து என்ன?''

''எங்களை மாதிரி நடுத்தர வர்க்கம்.''

''எங்க தீபிகா கோடீஸ்வரி. அத்தனைக்கும் அதிபதி இனி நீங்க தான். என்ன குறை? இந்த நொடியே உங்க மனசை மாத்திக்கக் கூடாதா?''

தனசேகரனும், விசாலமும் மாறி மாறிப் பேசினார்கள்.

''ஓவியர் தண்டபாணியைத் தெரியுமா தீபிகா?''

''ம்... கேள்விப்பட்டிருக்கேன்.''

''பல சமயம் என்னைவிட பிரமா தமா ஓவியம் வரைவான். அவனை நீ கல்யாணம் செஞ்சுக்கலாமே?''

தீபிகா விசுக்கென நிமிர்ந்தாள்.

''என் மனசுல உங்களுக்கு மட்டும் தான் இடம் ஆனந்த். அந்த மனசை கேவலப்படுத்தாதீங்க. ஓவியம் வரையற எல்லாரையும் நான் காதலிச்சுட முடியாது. மனசுக்குப் புடிச்சவனைத்தான் கை பிடிக்க முடியும். புரியுதா?''

''இது உனக்கு மட்டுமில்லை தீபிகா... எனக்கும் பொருந்தும். கோடிகள் உங்கப்பாகிட்ட இருக்க லாம். நீ பேரழகியா இருக்கலாம். வற்றாத ஜீவநதியா காதல் உன்கிட்ட பெருக்கெடுக்கலாம். ஆனா, என் மனசுக்குத் துர்காவைத்தானே புடிச்சிருக்கு?''

அத்தனை பேரும் நிலைகுலைந்தார்கள்!

''தம்பி...!''

''அப்பா விடுங்க... எதை வேணும்னாலும் யாசகமா கேக்க லாம். வாழ்க்கையை அப்படி வாங்கினா, அது கேவலமாயிடும்பா. ஸாரி ஆனந்த்... மன்னிச்சிடுங்க!''

ஆனந்த் அவளை உற்றுப் பார்த்தான்.

''துர்கா என் மனைவியாகலாம். ஆனா, எப்பவுமே எனக்கு ரசிகை நீ மட்டும்தான் தீபிகா. அந்த இடத்தை யாருக்கும் நான் தர மாட்டேன்.''

''எனக்கு இது பெரிய கௌரவம் ஆனந்த்.''

மீண்டும் நினைவு கலைந்தாள் தீபிகா. ஆனந்த் மெள்ள முனகினான்.

''இவனை இங்கே ஏம்மா கொண்டு வந்தே?''

''அப்பா... ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத உத்தம புருஷன் ஆனந்த் ஒரு காலத்துல. அவர் இப்படி கேவலமாக காரணம் என்ன?''

''யாருக்குத் தெரியும் தீபிகா? அவன் மறுத்ததும் வெளிநாட்டுக்குப் போன நாம, இப்பத்தானே வர்றோம்?''

''போதையும், மயக்கமும் தெளியட்டும். அவரை எங்கே சேர்க்கணுமோ, அங்கே சேர்த்துடலாம்.''

''நீ சாப்பிடலையேம்மா?''

''சாப்பிடற மனநிலையில நானில்லைப்பா.''

தீபிகா உள்ளே போய்விட்டாள். தனசேகரனின் அருகில் விசாலம் வந்தாள்.

''என்னங்க?''

''சொல்லு.''

''இந்த ஏழு வருஷங்கள்ல நம்ம பொண்ணு வாழ்க்கையில நடக்கக் கூடாத எல்லாமே நடந்தாச்சு. அவ தெளிஞ்சு, ஒரு வழியா உங்க பிஸினஸ் எல்லாத்தையும் ஏத்துக்கிட்ட இந்த நேரத்துல, ஆனந்தோட வரவு, நல்லதா... கெட்டதா?''

''எனக்கும் புரியல விசாலம். தெய்வம் ஒரு கணக்கைப் போட்டிருக்கும். அதோட விடை... உனக்கும் எனக்கும் எப்படித் தெரியும்?''

அதே நேரம் வீட்டில் ராஜம் தவித்துக் கொண் டிருந்தாள். 'கல்பனாவும் கோவப்பட்டு, மாப் பிள்ளையோட போயிட்டா. அந்த ஆத்திரத்தில் வெளியே போன ஆனந்த் வீடு திரும்பவே இல்லையே?’

நேரம் இரவு 11.

'கடவுளே... எனக்குள்ள ஒரே ஆதரவு என் பிள்ளைதான். அவனையும் எங்கிட்டேயிருந்து பிரிக்கப் போறியா?’

நள்ளிரவு ஆகிவிட, தாளமாட்டாமல் நடேசனின் செல்போனுக்கு அழைத்தாள்.

'இவ எதுக்கு இந்த நேரத்துல கூப்பிடறா?’ என்றபடியே பட்டனைத் தட்டினார்.

''என்னங்க... கோவமா வெளியில போன ஆனந்த். வீடு திரும்பவேயில்லை. நான் தனியா இருக்கேன்.''

''உன் திமிருக்கு இது தேவைதான்.''

நடேசனின் பேச்சுக்குரல் காதில் ஒலித்தது,

''உன் பிள்ளை வீடு திரும்பலைனா, எனக்கு ஏண்டீ போன் பண்றே? நானா அவனைக் கடத்தி வெச்சுருக்கேன்?''

''அப்படிச் சொல்லாதீங்க... ரோட்ல ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தா?''

''அது விதிடீ. செஞ்ச பாவம். உத்தமியை பழி சுமத்தினா, உயிருக்கு உலைதான்.''

துர்காவுக்கு நெஞ்சுக்குள் பதறியது.

''என்ன பேசறீங்க..?'' என்று ராஜம் அலற, நடேசன் இணைப்பைத் துண்டித்தார். துர்கா எழுந்து வந்து விவரம் கேட்க, முதலில் பேச மறுத்த நடேசன், வெறுப்புடனே விவரம் சொன் னார். துர்கா முகத்தில் சன்னமான கலவரம்.

''ராஜம், ஆனந்த் ரெண்டு பேரையும் ஒதுக்கின பிறகுதான் உன் வாழ்க்கையில புது வெளிச்சம் வந்திருக்கு. நீயே விஷப்பூச்சிகளை வீட்டுக்குள்ளே அனுமதிக்காதே துர்கா. போய்ப் படு.''

சுதாவும் பேச்சுக்குரல் கேட்டு எழுந்தாள். ''மாமா... அவர் மேல உள்ள பாசத்தால இதை நான் சொல்லல. ஆனா, விவரம் தெரிஞ்சும் மௌனமா இருந்துட்டோம்னு நமக்கொரு பழிச் சொல் எதுக்கு? அன்வர்கிட்ட இப்பவே பேசறேன்'' என்றவள் போன் போட்டாள்.

''அக்கா... நீ கவலைப்படாதே. நமக்கு ஆட்கள் இருக்காங்க. ஒரு மணி நேரத்துல தகவலை சேகரிச்சுட்டு, கான்டாக்ட் பண் றேன்'' என்ற அன்வர், நள்ளிரவு மூன்று மணியை நெருங்க, பைக்கில் வந்து இறங்கினான்.

''அந்த ஹரி, ஆனந்த் சாரை மூச்சுமுட்ட குடிக்க வெச்சு, பாதியில கழட்டி விட்டுட்டு போயிருக்கான். வண்ணாரப் பேட்டை மகாராணி தியேட்டர் பக்கத்துல இவர் கார்ல அடிபட இருந்தப்போ, யாரோ ஒரு பொண்ணு தன் கார்ல இவரை ஏத்திக்கிட்டுப் போயிருக்கா.''

''பொண்ணா?'' என்றார் நடேசன் குழப்பமாக.

''உயிருக்கு ஆபத்தில்லை. ஆனந்த் சார் அம்மாவுக்கு தகவலைக் கொடுத்துடுங்க. காலையில போலீஸ்ல புகார் கொடுத்துடலாம். நம்ம செந்தில் இருக்காரே... கவலையில்லை.''

''அவர் உயிரோட இருக்காரே... அது போதும்!'' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட படி துர்கா உள்ளே சென்றாள். நடேசன் ஆச்சர்யமாக அவளைப் பார்த்தார். ''என்னம்மா... இன்னமும் துர்கா மனசுல ஆனந்துக்கு இடமிருக்கா?'' என்றார் சுதாவிடம்.

''அடிப்படையில அவங்களும் ஒரு பெண் தானே?'' என்று முந்திக் கொண்டு பதில் தந்தான் அன்வர்.

''அதுக்காக ஆனந்த்கூட இனி சேர்ந்து வாழ முடியுமா..?''

''முடியும்ப்பா. தன் தப்புகளை உணர்ந்து, அண்ணி கிட்ட மன்னிப்புக் கேட்டா, நிச்சயமா மறுபடியும் வாழ்க்கை மலரும்.''

''சரி... நான் புறப்படறேன் சுதா. அக்காவை ஜாக் கிரதையா பார்த்துக்கோ. நாளைக்கு செந்தில்கிட்ட பேசலாம்'' என்று அன்வர் விடைபெற்றான். சுதா உள்ளே வந்தாள். குழந்தை அஞ்சுவை அணைத்தபடி துர்கா ஒருக்களித்துப் படுத்திருந்தாள். ஆனால், துர்கா உறங்கவேயில்லை. அந்தப் புது பங்களாவில் அன்றிரவு யாருமே உறங்கவில்லை.

அதிகாலை - இருட்டுப் பிரியாத வேளை - பங்களா வாசலில் குடுகுடுப்பைக்காரன்! ''எல்லாத் துலேயும் ஜெயிச்சுக்கிட்டு வர்ற அம்மணி, தாம்பத்ய வாழ்க்கையில தோக்கப் போகுது. உனக்கு இனி நிம்மதி தொலையப் போகுது... தொலையப் போகுது!''

- அவனது குரல் தேய, துர்கா படக்கென படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். முகத்தில் வியர்வை கொப்பளித்த நேரம்,

''அண்ணி..!'' - இருளைக் கிழித்துக் கொண்டு சுதாவின் அலறல் கேட்டது!

அடுத்து என்ன..?

- தொடருங்கள் தோழிகளே...
ஆடைகள் உதவி: பி.எம்.சில்க்ஸ்,
மயிலாப்பூர், சென்னை.

சூட்கேஸ் பரிசு!

''ஐயோ... எனக்குத்தானா இயக்குநர் நாற்காலி?! இருங்க... என் ஹஸ்பண்டை கிள்ளிப் பார்த்துட்டு சொல்றேன்'' என்ற ராஜி, 'ஐயோ, வலிக்குது’ என்ற கணவரின் சத்தத்துக்குப் பிறகு 'க்ளுக்' என்று சிரித்தவர்,

''குட்டீஸ் குறும்பு, வாசகிகள் கைமணம், என் டைரின்னு எல்லாப் பக்கத்துலயும் நான் புகுந்து விளையாடி இருக்கேன். ஆனா, தலையில கிரீடம் வெச்ச மாதிரி இருக்கு... இயக்குநர் நாற்காலி கிடைச்சதும்!

என் மகனும், மரு மகளும் என்கரேஜ் பண்ணிட்டே இருப்பாங்க. என் ஹஸ்பண்டும் என்கூட சேர்ந்து தொடரை வாசிக்கிறார். ஆக, மொத்தக் குடும்பமும் துர்காவை கொண்டாடுது. இப்ப துர்கா எங்களைக் கொண்டாடிட்டா. தேங்க்ஸ் எ லாட்!'' என்று மூச்சுவிடாமல் அவர் பேசியதில் நமக்குத்தான் மூச்சு வாங்கியது.

வாழ்த்துக்கள்!

இவருக்கு அன்புப் பரிசாக 'வி.ஐ.பி. சூட்கேஸ்’ அனுப்பி வைக்கப்படுகிறது.

வாசகிகளுக்கு சூப்பர் பரிசுப் போட்டி

இந்தஅத்தியாயத்தைப் படித்து முடித்ததுமே... அடுத்த அத்தியாயம் எப்படி என்பதை தீர்மானியுங்கள். அதை அப்படியே மனதில் வடித்துக் கொண்டாலும் சரி, எழுதி வைத்துக் கொண்டாலும் சரி... 044-66808023 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் பெயர், ஊரை முதலில் சொல்லிவிட்டு உங்கள் குரலிலேயே கதை திருப்பத்தை பதிவு செய்யுங்கள். மிகச்சிறந்த கதைத் திருப்பத்தை வைத்து அடுத்த அத்தியாயத்தை நகர்த்துவார் தேவிபாலா. அத்தகைய எபிசோடை சூப்பராக படைக்கும் வாசகிக்கு சூட்கேஸ் பரிசு! இதழ் வெளிவரும் வாரத்தின் சனிக்கிழமை அன்று மாலைக்குள் கதைத் திருப்பத்தை பதிவு செய்ய மறக்காதீர்கள் !