நடிப்பு : ஐஸ்வர்யா
கலை : ஸ்யாம்
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா
இயக்கம் : நீங்களேதான்

''எல்லாத்துலயும் ஜெயிச்சுக்கிட்டு வர்ற அம்மணி, தாம்பத்ய வாழ்க்கையில தோக்கப் போகுது. உனக்கு இனி நிம்மதி தொலையப் போகுது... தொலையப் போகுது!''

- அதிகாலையில் குடுகுடுப்பைக்காரன் சொன்ன வார்த்தைகளால் துர்கா கலக்கம்... 'அண்ணி’ என்று சுதாவின் அலறல்! அடுத்தது என்ன? என்று முடிந்திருந்தது கடந்த எபிசோட். அடுத்த 'எபிசோட்', டாப் கியரில் பரபரக்க வேண்டும் என இங்கே கலக்குகிறார்கள் வாசகிகள்!

சென்னை - உஷா, ஜெரினாகாந்த், சேலம் - விஜயலட்சுமி ஆகிய மூவரும் நடேசன், ராஜம், அஞ்சு என மாறி மாறி ஆஸ்பத்திரியில் சேர்த்து வழக்கமான திருப்பத்தையே தருகிறார்கள்!

தஞ்சாவூர் - செந்தாமரை செல்வி, சென்னை - மாயா, கௌசல்யா.... இந்த மூவரும், ஆனந்த் மாஜி ஓவியன் என்பதை வைத்து, புதுக்காதல் கதைக்கு விதை போட முயற்சிக்கிறார்கள்!

சென்னை - ஜானகி ரங்கநாதன், மதுரை - மீனாட்சி பட்டாபிராமன், விஜயலட்சுமி ஆகிய இந்த மூன்று சகோதரிகளும், 'வேறு பெண்ணுடன் அண்ணனுக்குத் தொடர்பு என்பதாக சுதாவின் கனவு' என முடிச்சுப் போடுகிறார்கள். இது, 'திஷீக்ஷீநீமீபீ’ ஆக இருக்கிறது!

சென்னை சுபா ராஜ்குமார்... துர்காவை ராஜம் பழிவாங்கத் துடிக்கிறார். அதை தீபிகா மூலமாக நிறைவேற்றும் யோசனைக்குள் போகிறார் இந்தத் தோழி. இது இப்போதைக்கு வேண்டுமா?

மதுரை - உஷா விநாயகமூர்த்தி... இந்தச் சகோதரி சுதாவின் அலறலைப் பொருட்படுத்தவில்லை. ஆனந்த், தீபிகாவை கையில் எடுத்துக் கொண்டு, ஆங்காங்கே பரபரப்பு கிளப்புகிறார். அதுவே இவரை எபிசோட் இயக்குநர் நாற்காலியில் உட்கார வைக்கிறது... வாழ்த்துக்கள் தோழியே!

''அண்ணி!'' என்ற சுதாவின் அலறல் கேட்டு, வேகமாக எழுந்து வந்தாள் துர்கா. குடுகுடுப்பைக்காரனின் வார்த்தைகளை நடேசனும் கேட்டு ஒரு மாதிரி ஆடிப் போயிருந்தார். இருவரும் உள்ளே வர, சுதா படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்தாள். கண்கள் மூடியிருக்க, உடம்பு முழுக்க வியர்வையில் தெப்பமாக நனைந்து மழையில் நனைந்த பறவை போல நடுங்கிக் கொண்டிருந்தாள்.

''சுதா... என்னாச்சு... ஏதாவது கனவு கண்டியா?''

''ஆமா அண்ணி!'' - குரல் நடுங்க, சுதாவுக்கு அழுகை பீறிட்டது.

''என்ன கனவு?''

சுதா சொல்ல வாயெடுத்து, ஒரு மாதிரி தவித்து, மலங்க மலங்க விழித்தாள்.

''சொல்லுடி...''

''தெளிவா தெரியல. ஏதோ கெட்ட கனவு...''

''சரி விடு... நான் குடிக்கத் தண்ணி கொண்டு வர்றேன்'' என்றபடி துர்கா நகர... நடேசன் சுதாவிடம் வந்தார்.

''சுதா... என்ன கனவு?''

''உங்களுக்குத் தனியா சொல்றேன்பா. அதிகாலை கண்ட கனவு பலிக்குமா?''

துர்கா குடிக்கத் தண்ணீர் தந்து சுதா நெற்றியில் விபூதியும் வைத்து விட்டாள்.

''படு சுதா!''

''நீ போ துர்கா. குழந்தை தனியா இருக்கு. நான் பாத்துக்கறேன்'' என்றார் நடேசன்.

''சரி மாமா'' என்றபடி வெளியேறினாள்.

''ம்... சொல்லும்மா... என்ன கனவு?''

''அண்ணனை கொலை செஞ்சுட்டதா, அண்ணியை செந்தில் கைது பண்றார்பா!''

- முடிக்க முடியாமல் சுதா அழுதாள்.

''பைத்தியம். ஆனந்த் மேல நமக்கெல்லாம் கோபம். அது, வேற மாதிரி உனக்குள்ளே வெடிச்சுருக்கு. துர்காகிட்ட உளறி கிளறி அவளை சங்கடப்படுத்திடாதே!''

தைரியமாக அவளைப் படுக்க வைத்துவிட்டு, வெளியே வந்த நடேசனுக்குள் கலக்கம்...

'நல்ல நிலைமைக்கு வந்துகொண்டிருக்கும் துர்காவின் வாழ்வில் எந்த ஒரு விபரீதமும் நேர்ந்துவிடக் கூடாது!'

அதேநேரம் தீபிகாவின் பங்களாவில் ஆனந்த் கண் விழித்தான். போதை முற்றிலுமாகத் தெளிந்திருக்க, எழுந்து உட்கார்ந்தான்.

''நான் எங்கே இருக்கேன்?'' - சுற்றிலும் அவன் பார்க்க,

''ஆனந்த்! நீங்க எழுந்தாச்சா?''

''நீ... தீபிகா... இல்ல...? நான் எப்படி இங்கே?''

தனசேகரனும், விசாலமும் வெளியே வர, தீபிகா, ஆனந்த் அருகில் வந்து உட்கார்ந்தாள்.

''ஸாரி ஆனந்த்... ஏழு வருஷங்கள் கழிச்சு உங்களை இத்தனை மோசமா நான் சந்திச்சிருக்க வேண்டாம்!''

''தீபிகா!''

''குடிபோதையில ரோட்ல கிடந்தீங்க. மனசு பொறுக்காம இங்கே கொண்டு வந்தேன்!''

ஆனந்த் யோசித்தான். ஹரியுடன் குடித்தது நினைவுக்கு வந்தது. அவமானமாக இருந்தது.

''என்னாச்சு ஆனந்த்? எத்தனை அற்புதமான கலைஞன் நீங்க! ஒரு வைரம் புழுதியில புரள வேண்டிய தேவை என்ன?''

ஆனந்த் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்!

''உனக்கு இழைச்ச துரோகத்துக்கு தெய்வம் கொடுத்த தண்டனையா இருக்கலாம் தீபிகா!''

''ஆனந்த்!''

''ரசிகையா ஆரம்பிச்சு, காதலியா மாறி, மனைவியாக நீ விரும்பினே. உங்கப்பா - அம்மா ஒரு சொர்க்கத்தை என் காலடியில வெச்சுட்டு, பவ்யமா நின்னாங்க. சகலத்தையும் எட்டி உதைச்சுட்டு நடந்ததுக்கான தண்டனை!''

''துர்கானு ஒரு பெண்ணைக் கல்யாணம் செஞ் சுக்கப் போறதா சொன்னீங்களே ஆனந்த்?''

''அதுதான் என் வாழ்க்கையில நேர்ந்த விபத்து தீபிகா! கல்யாணம் நடந்தது. இப்ப அஞ்சு வயசுல ஒரு பெண் குழந்தை இருக்கு. ஆனா, ரெண்டு பேரும் இப்போ பிரிஞ்சுட்டோம்!''

''ஏன்?''

''துர்காவுக்கு புருஷனைவிட ஊருக்கு உழைக்கறது உசத்தியா இருக்கு. ஏராளமான ஆண்கள் அவளோட வாழ்க்கையில இடம் புடிச்சுருக்காங்க. இப்ப பெரிய பதவி, பங்களா, கார்னு அவ ரேஞ்சே வேற. வேலையில்லாத இந்த வெத்துவேட்ட அவ மதிப்பாளா? எங்கம்மா தவிர, குடும்பத்துல அத்தனை பேரும் அவ பணத்துக்கு, அந்தஸ்துக்கு விலை போயிட்டாங்க.''

தீபிகாவுக்கு வேதனையாக இருந்தது. ஆனந்த் படக்கென அவள் கைகளைப் பிடித்தான்.

''தீபிகா... இந்த ஏழு வருஷத்துல நீ செட்டில் ஆகியிருப்பே... ஸாரி! இப்பகூட உன் கைகளை நான் புடிச்சதுக்குக் காரணம், என்னோட ரசிகைங்கற உரிமையிலதான்! புருஷன் எங்கேயிருக்கார்? எத்தனை குழந்தைகள்?''

தீபிகா... அப்பா, அம்மாவைப் பார்த்தாள். அம்மா ஏதோ சொல்ல வாய்திறக்க, தீபிகா முந்திக் கொண்டாள்!

''ஆனந்த்... எல்லாம் விவரமா சொல்றேன். விடியத் தொடங்கியாச்சு. டிரெஸ்ஸெல்லாம் கசங்கியிருக்கு. குளிச்சுட்டு வந்துடுங்க!''

''சரி தீபிகா!''

ஆனந்த் குளிக்கப் போனான். தீபிகா உள்ளே வந்து பீரோவைத் திறந்தாள். பளிச்சென ஒரு பேன்ட், ஷர்ட்டை வெளியே எடுத்தாள். விசாலம் பின்னால் வந்தாள்.

''மாப்பிளையோட டிரெஸ்ஸையா?''

''அதுல தப்பில்லம்மா!''

''மனைவி மேல் வெறுப்பும் கசப்புமா வந்திருக்கிற ஆனந்த்கூட உன் நட்பு தொடரணுமா?''

''அம்மா... அவளுக்கு முன்னயே, ஒரு தோழியா ஆனந்தோட வாழ்க்கையில நான் இருக்கேன்!''

''அதுக்குச் சொல்லல...''

உள்ளே வந்த தனசேகரன், ''விசாலம்... விடு... நம்ம பொண்ணு எதைச் செஞ்சாலும் அதுல அர்த்தமிருக்கும்'' என்றார்.

தீபிகா அந்த உடையுடன் வெளியேற, விசாலம் கலக்கத் துடன் நிமிர்ந்தாள்.

''நாம போட்ட தப்பான ஒரு கணக்குக்கு பலியாகி நிக்கிறாளே தீபிகா? அந்தப் பயம் என்னை உலுக்குதுங்க!''

''மெதுவாப் பேசு. அவசர விமர்சனங்கள் வேண்டாம்!''

ஆனந்த் குளித்து விட்டு வர, அந்த உடையைக் கொடுத்தாள் தீபிகா!

''இது யாரு டிரெஸ்? உங்கப்பாவோடதா? அவர் என்னைவிட குண்டாச்சே?''

''போட்டுக்குங்க!''

ஆனந்த் அணிந்து கொண்டான்.

''அளவெடுத்து தைச்ச மாதிரி இருக்கு!''

வேலைக்காரன் காபி கொண்டு வந்தான்.

''தூரிகையைத் தொட்டு எத்தனை வருஷங்களாச்சு?''

''ஒரு கலைஞன் செத்தாச்சு தீபிகா.''

''தப்பு. கலைஞன் தூங்கிட்டு இருக்கான். ஆழமான தூக்கம். எழுப்பத்தான் நான் வந்தாச்சே!''

விசுக்கென கண்களை ஆனந்த் திருப்ப, ''அப்பா!'' என்றழைத்தாள் தீபிகா.

''வந்துட்டேன்மா...''

''நம்ம கம்பெனியில ஆட்-ஏஜென்ஸி இருக்கில்லையா? அதோட பொறுப்பை ஆனந்த் ஏத்துக்கட்டும். விளம்பர டிசைன்கள் இனி புதுசா உருவாகட்டும். பழைய ஓவியங்களும் புத்துணர்ச்சி பெற்று வெளியில வரட்டும் ஆனந்த்.''

பரவசமாகப் பார்த்தான்!

''உங்களுக்கு மாசம் லட்ச ரூபாய் சம்பளம். கார், மற்ற வசதிகளும் உண்டு!'’

''தீபிகா... குப்பையில கிடந்த என்னை வெளியில நீ எடுத்துட்டே!''

அவனை டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்று, பரிமாறினாள்.

''சரி... நான் புறப்படறேன் தீபிகா.''

''உங்க வீட்ல ட்ராப் பண்ணச் சொல்றேன். அம்மா கூடத்தானே இருக்கீங்க!''

''ஆமா.''

''அப்பா... காலண்டரை எடுங்க!'' என்றவுடன் தனசேகரன் காலண்டருடன் வந்தார்.

''நாளை மறுநாள், அற்புதமான நாள். அன்னிக்கு ஜாயின் பண்ணிடுங்க.''

டிரைவர் வந்து வணங்கினான்.

''தீபிகா... என்கூட நீயும் கொஞ்சம் வர முடியுமா?''

''எதுக்கு?''

''காரணம் இருக்கு... ப்ளீஸ்!''

பளிச்சென உடை உடுத்தி வெளியே வந்தாள்.

''அப்பா... நான் போயிட்டு அரை மணி நேரத்துல வந்துடறேன்!''

இருவரும் காரில் ஏறினார்கள்.

''உங்க வீடு எங்கே இருக்கு ஆனந்த்?''

''இப்ப நாம என் வீட்டுக்குப் போகல தீபிகா!''

''பின்ன? வேறெங்கே போறோம்?''

''துர்காவோட புது பங்களாவுக்கு!''

''எதுக்கு ஆனந்த்?''

''இந்த ஆனந்த் மேல நம்பிக்கை இருந்தா, எந்தக் கேள்வியும் கேட்காம வா!''

அவள் பேசவில்லை. கார் ஓடத் தொடங்கியது.

அதே நேரம், துர்கா தன் வீட்டில் பரபரப்பாக தயாராகி, கம்பெனிக்குப் புறப்பட்டுக் கொண்டுஇருந்தாள். போன் அடித்தது. எடுத்தாள்.

''அக்கா... நான் செந்தில் பேசறேன்.''

''சொல்லுங்க செந்தில்.''

''அன்வர் பேசினார்... உங்க வீட்டுக்காரரைப் பற்றின தகவல் ஏதாவது தெரிஞ்சுதா?''

''அவசரப்பட வேண்டாம் செந்தில். கொஞ்சம் பார்த்துட்டு... வரலைனா, தகவல் தர்றேன்.''

''சரிக்கா.''

அஞ்சுவை ஸ்கூலில் கொண்டுபோய் விட நடேசன் தயாராக இருந்தார். துர்கா புறப்பட்டுக் கொண்டிருக்க, வாசலில் கார் தயார்.

''சுதா... இன்னிக்கு நிறைய புரோகிராம் இருக்கு. வர்றதுக்கு லேட்டாகும். நீங்கள்லாம் சாப்பிட்டு படுத்துருங்க.''

சாமி கும்பிட்டு துர்கா வாசலுக்கு வர, அந்த வெளிநாட்டுக் கார் வந்து நின்றது. அதிலிருந்து முதலில் ஆனந்த் இறங்கினான். கூடவே தீபிகா பளிச்சென இறங்கினாள்.

துர்காவின் பின்னால் நடேசன், சுதா வந்து நிற்க, மாறி மாறி பார்வைகள் இடம் மாறின.

''உள்ளே வாங்க!'' என்றாள் துர்கா நாகரிகம் கருதி.

''வீட்டுக்குள்ள வரணும்னு இங்க நான் வரல. இவ என் பரம ரசிகை. ஒரு காலத்துல என் ஓவியத்து மேல பைத்தியமா இருந்து, எனக்கு மனைவியாகணும்னு துடிச்சவ!''

''தெரியும்! தீபிகாதானே? நீங்க சொல்லிஇருக்கீங்க!''

- துர்கா பளிச்சென பதில் சொல்ல, தீபிகா கண்களை அகல விரித்தாள்!

''ஓ... குடிபோதையில தீபிகா கார் முன்னாலதான் விழுந்து கிடந்தீங்களா? நேத்திக்கு ராத்திரியே எங்களுக்குத் தகவல் வந்தாச்சு. உள்ளே வாங்க தீபிகா!''

- இயல்பாக அழைத்தாள் துர்கா. தீபிகாவுக்கு தர்மசங்கடமாக இருந்தது.

''ஒரு காபி சாப்பிட்டுப் போகலாம் தீபிகா.''

''வேண்டாம். தீபிகா வெளியில எதுவும் சாப்பிட மாட்டா. அவ கம்பெனியில ஆட் ஏஜென்ஸி இன்சார்ஜா என்னை நியமிச்சிருக்கா. லட்ச ரூபாய் சம்பளம். தவிர காரும் உண்டு. அதைச் சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்!''

நடேசன் பற்களைக் கடித்தபடி ஒரு அடி முன்னால் எடுத்து வைக்க, துர்கா அவரை மெள்ள தொட்டாள். பிறகு ஆனந்த் பக்கம் திரும்பினாள்.

''வாழ்த்துக்கள்!''

''விழுந்தவன் யாரா இருந்தாலும் ஒரு நாள் எழுந்து நிப்பான். அவனை கை தூக்கி விடவும் கடவுள் யாரையாவது அனுப்புவார்!''

''ஏய் நிறுத்துடா!''

''மாமா!''

''இனிமேலும் என் வாய்க்கு பூட்டு போடாதே துர்கா. இதப்பாருடா... ஒரு நல்ல மனைவியை எல்லாவிதத்திலும் அசிங்கப்படுத்திட்டு, நீயும் குடிகாரனாகி, தெருவுல கிடந்தப்ப, உன் பழைய தோழி வந்து அடைக்கலம் குடுத்திருக்கா. இப்ப தத்துவம் பேசறியா?''

''மாமா வேண்டாம்... நீங்க உள்ள போங்க. ஸாரி தீபிகா... அவர் உணர்ச்சி வசப்படறதை நீங்க தப்பா எடுத்துக்க வேண்டாம்!''

''வா தீபிகா... வாழ்ந்து காட்டுவோம்!''

வேகமாக ஆனந்த் காருக்குள் ஏற, தீபிகா ஒரு நொடி தடுமாறி நின்றாள். நடேசனும், சுதாவும் உள்ளே போய்விட, ஒரு சில நொடிகள் தீபிகாவின் விழிகளும், துர்காவின் கண்களும் உரசிக் கொண்டு, நிலைத்து நிற்க, சரக்கென தீபிகா திரும்பி காருக்குள் நுழைய, கார் புறப்பட்டுச் சென்றது.

''என்னம்மா இதெல்லாம்? இவனை காணலனு ராஜம் தகவல் குடுத்தப்ப, நேத்து ராத்திரி உருகினியே..? இவனை ஒருக்காலும் மன்னிக்கக் கூடாதம்மா... யாரிந்த புதுப்பணக்காரி?''

''யாரா இருந்தா நமக்கென்ன மாமா?''

''எதுக்காக இவளைக் கூட்டிட்டு இங்கே வந்து நிக்கறான்? நீ விவாகரத்து பண்ணும்மா!''

''மாமா... பதற்றப்படாதீங்க.''

''ஒரு பெண் குழந்தை இருக்கு. வயிறு எரியுது!''

அவர் மடிந்து உட்கார்ந்தார். கண்ணீர் கொப்பளித்தது. துர்கா அருகில் வந்தாள். அவர் தோளில் கை பதித்தாள்.

''நான் உங்ககூட இருக்கேனில்லை?''

''ஆனா, உன்கூட கடைசி வரைக்கும் யாரும்மா இருக்கப் போறாங்க? லட்ச ரூபா சம்பளமாம்... அவ காலுக்கு இவன் செருப்பாகப் போறான். பாத்துட்டே இரு!''

''சுதா... அப்பாவை சமாதானப்படுத்து. எனக்கு ஆபீஸுக்கு நேரமாச்சு'' என்ற துர்கா, காரில் புறப்பட்டுச் சென்றாள்.

''அப்பா... நீங்க வீட்ல இருங்க. அஞ்சுவை நான் ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடறேன்.''

''சரிம்மா.''

அதே நேரம் ஆனந்த் வீட்டு வாசலில் தீபிகாவின் கார் வந்து நிற்க, ஆனந்த் இறங்கினான்.

''வா தீபிகா... எங்கம்மாவுக்கு உன்னை அறிமுகப்படுத்தறேன். உன்னைப் பார்த்தா, அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க!''

''வேண்டாம் ஆனந்த். நீங்க போங்க.''

''வா தீபிகா...''

''இல்லை எனக்கு மனசே சரியில்ல...''

''துர்கா உன் மூடைக் கெடுத்துட்டாளா? எங்கப்பா ஒரு பைத்தியம்.''

ராஜம் வெளியே வந்து விட்டாள்.

''பை ஆனந்த். டிரைவர்... வண்டியை எடு!''

- தீபிகா புறப்பட்டு விட்டாள். ஆனந்துக்கு ஒரு மாதிரி முகத்தில் அடித்த மாதிரி இருந்தது. ஆனாலும் தீபிகாவின் மனநிலை நியாயம் என்றும் பட்டது.

''யாருடா ஆனந்த் அந்தப் பொண்ணு... ராத்திரி நீ எங்கே இருந்தே?''

''உள்ளே வா... விவரமா சொல்றேன்!''

தீபிகா காரில் டென்ஷனுடன் பயணித்தாள். கடற்கரை சாலையில் காரை நிறுத்தச் செய்து, இறங்கி மணலில் நடந்தாள். ஒதுக்குப்புறமாக உட்கார்ந்தாள். மனிதர்கள் யாரும் அங்கே இல்லை. அலைகள் கரையை வேக வேகமாக வந்து முத்தமிட, தீபிகா முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டு உடம்பு குலுங்க அழத் தொடங்கினாள்!

எதற்காக இந்த அழுகை?!

தொடருங்கள் தோழிகளே...
ஆடைகள் உதவி: பி.எம்.சில்க்ஸ்,
மயிலாப்பூர், சென்னை

சூட்கேஸ் பரிசு!

'''நான் உஷா பேசுறேங்க... ஹையோ! எனக்குத்தான் பரிசா? நிஜமாவா சொல்றீங்க... ஹையோ! எங்க சொந்த ஊர் காரைக்குடிக்கு வந்திருக்கும்போது ஸ்வீட் தகவல் சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க'' என்று மூச்சிரைக்கப் பேசினார் மதுரையைச் சேர்ந்த இல்லத்தரசி உஷா. ''ஒருதடவைகூட மிஸ் பண்ணாம கதை சொல்லிட்டே இருந்தேன். அதுக்கு இப்ப கைமேல பலன் கிடைச்சுருச்சு. என் ரெண்டு பசங்களுமே இப்ப பக்கத்தில இல்லையே. உடனே அவங்ககிட்ட சொல்லணும்'' என்று பரபரத்தார் சந்தோஷத்துடன். வாழ்த்துக்கள்!

இவருக்கு அன்புப் பரிசாக 'விஐ.பி. சூட்கேஸ்’ அனுப்பி வைக்கப்படுகிறது.

வாசகிகளுக்கு சூப்பர் பரிசுப் போட்டி

இந்தஅத்தியாயத்தைப் படித்து முடித்ததுமே... அடுத்த அத்தியாயம் எப்படி என்பதை தீர்மானியுங்கள். அதை அப்படியே மனதில் வடித்துக் கொண்டாலும் சரி, எழுதி வைத்துக் கொண்டாலும் சரி... 044-66808023 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் பெயர், ஊரை முதலில் சொல்லிவிட்டு உங்கள் குரலிலேயே கதை திருப்பத்தை பதிவு செய்யுங்கள். மிகச்சிறந்த கதைத் திருப்பத்தை வைத்து அடுத்த அத்தியாயத்தை நகர்த்துவார் தேவிபாலா. அத்தகைய எபிசோடை சூப்பராக படைக்கும் வாசகிக்கு சூட்கேஸ் பரிசு! இதழ் வெளிவரும் வாரத்தின் சனிக்கிழமை அன்று மாலைக்குள் கதைத் திருப்பத்தை பதிவு செய்ய மறக்காதீர்கள்!