நடிப்பு : ஐஸ்வர்யா
கலை : ஸ்யாம்
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா
இயக்கம் : நீங்களேதான்

கடற்கரையில் ஒதுக்குப்புறமாக உட்கார்ந்த தீபிகா, முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டு உடம்பு குலுங்க அழத் தொடங்கினாள். எதற்காக இந்த அழுகை?!

- இப்படி முடிந்திருந்தது கடந்த எபிசோட். அடுத்த எபிசோட் இயக்குநர் நாற்காலியைப் பிடிக்கும் போட்டியில் வழக்கம்போல் விதவிதமாக யோசித்திருக்கிறார்கள் வாசகிகள், இப்படி -

சென்னை - மங்களம், மதுரை - திலகா, விஜயலட்சுமி, பாளையங்கோட்டை - சுசீலா, ஆவடி - பிரியா... இந்த ஐந்து தோழிகளும், 'தீபிகாவின் கணவன் மரணம் அடைந்ததால், வாழ்க்கையை வெறுத்து, வீடு திரும்பிவிட்டாள். இப்போது பழைய நினைவுகள் முட்டிக் கொண்டு நிற்க, அழுது தீர்க்கிறாள்' என்கிறார்கள்!

முகப்பேர் - சுபா... 'தீபிகாவின் மாஜி கணவனுக்கு ஆண்மையில்லை. அதனால் தற்கொலை செய்து கொண்டான். அந்த நினைவில் தீபிகா அழுகிறாள்' என்று அதிரடியாக கதையை நகர்த்தப் பார்க்கிறார் இந்தத் தோழி!

கூடுவாஞ்சேரி - செல்லம்... இந்தத் தோழி, ''பணத்தில்தான் கணவனுக்கு குறி. அதனால், அவனை துர்கா கொன்றுவிட்டாள்'' என்று குண்டு போட்டு வேறு ரூட்டுக்குக் கொண்டு போகப் பார்க்கிறார்!

பள்ளிப்பாளையம் - கஸ்தூரிபாய்... 'விபத்து, மரணம், விதவை...' என்று கோவையாக கதை சொல்கிறார் இந்த தோழி. ஆனால், இந்தப் பாணி, ரொம்பவும் பழையதாக இருக்கிறதே!

சேலத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி... 'வெளிநாட்டில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட கணவனை தண்டித்துவிட்டு, தன்னந்தனியாக தாயகம் திரும்பியவள் தீபிகா' என புது ரூட்டில் வெளிச்சம் காட்டும் இந்த வாசகியே... அடுத்த எபிசோட் இயக்குநர் நாற்காலியை அலங்கரிக்கிறார். வாழ்த்துக்கள் தோழியே!

பின்குறிப்பு: இன்னும் ஆழமான, வித்தியாசமான, பளிச்சென்ற திருப்பங்களையும் வாசகிகள் படைக்க முடியும். அதைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் சகோதரிகளே. செய்வீர்கள்தானே!

தீபிகா விசும்பி அழத் தொடங்கினாள். அலைகள் வேகமாக கரைக்கு வந்து கொண்டிருந்தன. நினைவுகள் பின்னோக்கின.

ஆனந்த்தின் காதல் தனக்கு இல்லை என்று தெரிந்த நொடியில், இந்தியாவில் இருக்கப் பிடிக்காமல் வெளிநாட்டுக்குப் போய்விட துடித்தாள் தீபிகா. தனசேகரனும், விசாலமும் மகளுக்காகவே வாழ்வதால், இங்குள்ள வர்த்தகத்தை பொறுப்பானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, மகளுடன் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுவிட்டார்கள். மூன்று வருட காலம் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல், படிப்பில் முழு கவனம் செலுத்தி எம்.பி.ஏ முடித்தாள் தீபிகா.

தனசேகரன் அங்குள்ள தனது வர்த்தக நிறுவனத்தில் முழு மூச்சாக செயல்பட, படிப்பை முடித்த தீபிகாவும் சேர்ந்து கொண்டாள். கூடவே, அப்பாவுக்கு வலதுகரமாக இருந்த சுனிலின் நட்பு ஆரம்பமாகி, அது காதலாகி, ஆனந்தின் நினைவுகள் மெள்ள மங்கி... சுனில், தீபிகாவை முழுமையாக ஆக்கிரமித்து, கல்யாணத்தில் முடிந்தது. தாய், தகப்பன் இல்லாததால் மாமா குடும்பத்தோடு வளர்ந்தவன் சுனில். தீபிகாவின் கணவன் ஆன பிறகு, இவர்கள் வீட்டுடன் ஐக்கியமாகிவிட்டான்.

ஒரு வருடத்தில் தீபிகா கர்ப்பமானாள். 'பூரண ஓய்வெடுக்க வேண்டும்' என்று டாக்டர்கள் சொல்லிவிட்டதால், அலுவலகம் போவதையே நிறுத்திவிட்டாள். புதிதாக எலெக்ட்ரானிக் யூனிட்டை தனசேகரன் உண்டாக்க, அதில்தான் சுனிலும், தீபிகாவும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது... பொறுப்பு முழுக்க சுனிலுக்கு. அவன் வீடு திரும்ப நள்ளிரவுகூட ஆகும். பல நாட்கள் வீட்டுக்கே வர முடியாமல் போக... அப்பாவிடம் புலம்பினாள்.

''என்னம்மா... நீயும் உதவிக்கு இல்லை. மாப்பிள்ளை ஒருத்தர்தானே பாடுபட்டாகணும்?''

தீபிகா அதைப் புரிந்து கொண்டாள். அடிக்கடி லண்டன், ஜெனிவா, ஆஸ்திரேலியா என்று பிற அயல் நாடுகளுக்கு பறந்து கொண்டிருந்த சுனிலின் உழைப்பைப் பார்த்து அனைவரும் பூரித்துப் போயிருக்கையில், அந்த இடி இறங்கியது!

'சர்வதேச போதை மருந்து கடத்தல் கோஷ்டியில் சுனில் ஒரு முக்கியம் அங்கம்' என்கிற குட்டு வெளிப்பட்டது. தனசேகரனின் எலெக்ட்ரானிக் நிறுவனத்தை முகமூடியாக பயன்படுத்திக் கொண்டு, உள்ளே போதை மருந்து கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்க, பல கோடிகளில் சுனில் புரண்டு கொண்டிருப்பது இன்டர்நேஷனல் போலீஸுக்கு ஆதாரப்பூர்வமாகத் தெரியவந்தது. சுனில் தலைமறைவாகிவிட, தனசேகரனை குடைந்தெடுத்த போலீஸ், கர்ப்பிணி தீபிகாவையும் கைது செய்து, விசாரணை நடத்த, அவமானத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது குடும்பம்.

தந்தையின் வர்த்தகம் முற்றாக முடங்கிப்போன அதிர்ச்சியில் தீபிகாவின் கரு கலைய, விசாலம் படுத்த படுக்கையாக... ஏறத்தாழ இரண்டு வருடங் களுக்குப் பிறகு 'நிரபராதிகள்' என்று நிரூபித்து... அமெரிக்காவை விட்டே மூவரும் புறப்பட்டுவிட்டார்கள்! இன்டர்போல் கஸ்டடியிலேயே சுனில் உயிரை விட்டபோதும், அதைப் பற்றி அதிக வருத்தம்கூட இல்லாத அளவுக்கு, அவனால், அவன் பணத்தாசையால், துரோகத்தால் இவர்கள் துயரப்பட்டிருந்தார்கள்.

பிழையாகிப் போன தன் வாழ்க்கையை எண்ணி தீபிகா அழாத நாளில்லை. இந்த கடற்கரை அழுகையும் அந்தக் கண்ணீரின் நீட்சிதான். இங்கே கூடுதலாக சேர்ந்து கொண்டது... பழைய ஆனந்த்!

அவனை நினைத்தபோது ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும், துர்காவின் கண்ணியம்... தீபிகாவை கணிசமாக பாதித்துவிட்டது. நடேசனின் ஆவேசம், உள்ளே முள்ளாகத் தைத்தது. ஒரு மாதிரி சுதாரித்துக் கொண்டு தீபிகா வீடு திரும்பினாள். விசாலம் கேட்ட முதல் கேள்வி -

''ஆனந்த்தோட நட்பு உனக்கு வேணுமா? ஏற்கெனவே சுனில்னு ஒருத்தனை நம்பி, நாம பட்ட அடி போதாதா? இந்த ஆனந்த்தும் குடிச் சுட்டு ரோட்ல கெடந்திருக்கான். கட்டின மனை வியை விட்டுப் பிரிஞ்சு வாழறான். இன்னொரு சுனிலை உருவாக்கப் போறோமா?''

தனசேகரன் குறுக்கிட்டார்.

''விசாலம்... ஆனந்த் ஒரு கிரிமினல் இல்ல. நல்ல கலைஞன்.''

''புரியுதுங்க. ஆனா, மனைவி மேல உள்ள கோபம்... இந்தப் பக்கம் வேற மாதிரி திரும்பினா?''

தனசேகரன் தீபிகாவைப் பார்த்தார்.

''அப்பா... இப்பவும் ஆனந்த்தோட ரசிகையா மட்டும்தான் இருக்கேன். அந்த அடிப்படையில்தான் இந்த உதவிகள். தூங்கற ஒரு கலைஞனை தட்டி எழுப்பிட்டா, அவனுக்குள்ளே இருக்கற அழுக்குகள் கரைஞ்சு, வெளிச்சம் வந்துடும். வேற எந்த சிந்தனையும் எனக்கில்லை.''

''உனக்கில்லை. அவனுக்கு வந்தா?''

''அப்ப பார்த்துக்கலாம் அம்மா. ஒரு சுனிலால நீங்க ரெண்டு பேரும் பட்ட அவமானங்களை நான் மறக்க மாட்டேன். எப்பவுமே உங்க மகளா மட்டுமே இருக்க ஆசைப்படறேன்.''

தனசேகரன் வந்து மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டார். ''நீ காலம் முழுக்க எங்க மகளா மட்டுமே வாழறதை நாங்க விரும்பலம்மா. உனக்குனு ஒரு வாழ்க்கை உருவாகணும். பழசையெல்லாம் கெட்ட கனவா மறந்துட்டு, நீ திரும்பவும் சிரிக்கணும். அதைப் பார்த்த பிறகுதான்மா நாங்க கண் மூடணும்''

- அழுதுவிட்டார்!

அன்று இரவு, நடேசன் குமுறிக் கொண்டிருந்தார்!

''உன்னை உதறிட்டுப் போன அந்த மனசாட்சி இல்லாதவனுக்கு... லட்ச ரூபாய் சம்பளம், பதவி, ஒரு கோடீஸ்வரியோட தொடர்பு. இது எங்கே போய் முடியும் துர்கா?''

''என்கூட நல்லவிதமா வாழ முடியாத உங்க மகனை, எவளோ ஒரு பழைய காதலி மறுபடியும் உயிர்ப்பிக்க வந்திருக்கா... அது நல்லதுதானே?''

''அண்ணி... உங்களுக்குப் பைத்தியமா?''

- குமுறினாள் சுதா.

''மாமா... இப்ப நான் பெரிய பதவி, லட்சங்கள்ல சம்பளம், பங்களானு இருக்கேன். அன்பு காட்ட நீங்க எல்லாரும் என்கூட. ஆனந்துக்கும் அப்படி ஒரு நட்பு கிடைச்சா தப்பில்லையே? விடுங்க! ஆனந்தைப் பற்றி யோசிச்சது போதும். சுதாவோட கல்யாண ஏற்பாடுகளை மளமளனு கவனிக்கணும். இந்த மாசக் கடைசியில ரெண்டு நல்ல முகூர்த்தங்கள் இருக்கு. சுதாவுக்கு நகைகள், பட்டுச்சேலை எல்லாம் வாங்கணும். மண்டபம் ஃபிக்ஸ் பண்ணணும். பிரமாதமா செய்யணும். செந்தில் வீட்டுக்குப் போய் விவரமா பேசணும். அன்வர், வராகன் அண்ணன், பாலாஜி அத்தான் எல்லாரையும் நம்ம வீட்ல அசெம்பிள் பண்ணி, விவாதிச்சு, பட்ஜெட் போடலாம். ஜாம் ஜாம்னு நடத்தணும் கல்யாணத்தை. செந்தில் வீட்ல முறையா பேசி, பத்திரிகை அடிக்கற சங்கதிகளைப் பேசணும்.''

''சரிம்மா. நீயும், நானும் போகலாமா?''

''நீங்களும், அத்தையும் போறீங்க!''

நடேசன் தடக்கென எழுந்துவிட்டார்.

''கோபப்படாதீங்க. சுதாவுக்கு அம்மா முழுசா இருக்காங்க. உங்ககூட அவங்க வந்து பேசறதுதான் முறை.''

''அப்படி ஒண்ணு நடக்கணும்னா, இந்தக் கல்யாணமே வேண்டாம் துர்கா!''

''ஆமாம் அண்ணி!''

''மாமா... நீங்க வயசுல பெரியவங்க. பதற்றப்படக் கூடாது. நமக்கு இப்ப வீரியத்தைவிட, காரியம் பெரிசு. நீங்க போய் அத்தைகிட்டப் பேசி அவங்களை கூட்டிட்டு வர்றீங்க. ஆரம்பத்துல முரண்டு புடிச்சாலும், தன் மகள்னு வரும்போது வீம்பை விட்டுருவாங்க. அவங்க கோபம் எங்கிட்டத் தான். அது தனி ட்ராக். அந்தக் கோபம், சுதா வாழ்க்கையில பிரதிபலிக்கக் கூடாது மாமா.''

சகலமும் கேட்டபடி அன்வரும், பாலாஜியும் உள்ளே வந்தார்கள்.

''அப்பா... துர்கா சொல்றது நியாயம்தான். இப்ப சுதா கல்யாணம்தான் முக்கியம் நமக்கு. வராகன் அண்ணனையும் கல்பனா அண்ணியோட கூட்டிட்டுப் போங்க. பேசுங்க!''

நடேசன் மனமில்லாமல் சம்மதித்தார். மறுநாள் காலை மூவரும் புறப்பட்டார்கள்.

''சுதா. நீயும் போ. என் கல்யாணத்தை வந்து நடத்திக் கொடும்மானு கேளு.''

தட்டமுடியாமல் சம்மதித்தாள் சுதா. நாலு பேரும் காரில் ஏறினார்கள். அதே நேரம் தீபிகா தந்த புது வேலையில் சேர, ஆனந்த் தயாராகிக் கொண்டிருந்தான். ஷேவ் செய்து, குளித்து, பளிச்சென உடை உடுத்தி ஆனந்த் பழைய உற்சாகத்துடன் வர, ராஜம் பூரித்துப் போயிருந்தாள்.

''அந்த தீபிகா, உன்னை பழைய ஆனந்தா மாத்திட்டா. நானும் உன்கூட வர்றேன். அவளுக்கு நான் நன்றி சொல்லணும். நான் நினைக்கறபடி எல்லாம் நடந்தா, அந்த துர்காவுக்கு சரியான ஒரு பாடம் புகட்டணும்!''

- ராஜம் பற்களைக் கடித்தாள்.

''விடும்மா... நல்ல நேரத்துல அந்த நாசமாப் போனவளைப் பத்தி என்ன பேச்சு?''

ராஜம் அவனை உட்கார வைத்து, சூடான இட்லிகளை கொண்டு வந்து பரிமாறினாள். வாசலில் கார் வந்து நின்றது. நடேசன், சுதா, கல்பனா, வராகன் நாலு பேரும் இறங்க, ''இவங்கள் லாம் எதுக்கு வர்றாங்க?'' என்றாள் ராஜம்.

''என் வாழ்க்கை உயரப் போகுது இல்ல? அதான் ஒட்டிக்க வர்றாங்க!''

''விடுடா... நான் பேசிக்கறேன்!''

நாலு பேரும் உள்ளே வர, கல்பனா அருகில் வந்தாள்.

''அம்மா... சுதா கல்யாணம் நடக்கப் போகுது. அப்பா கூட இருந்து எல்லாத்தையும் நடத்தி வைக்கணும். உன்னை அழைக்கத்தான் நாங்க நாலு பேரும் வந்திருக்கோம்!''

ராஜம் திரும்பி ஆனந்த்தைப் பார்த்தாள்!

''ஆனந்த், என் பிள்ளை. அவனை மதிக்காத யாரையும் நான் மதிக்கறதா இல்லை. அம்மாவை விட்டு புதுசா வந்த துர்காதான் ஒசத்தினு காசுக்காக வெட்கம் கெட்டு ஓடின என் புருஷனும், பொண்ணுங்களும் என்னைப் பொறுத்தவரைக்கும் செத்தாச்சு. நீங்கள்லாம் போகலாம்.''

''பாத்தியா கல்பனா... இதுதான் நடக்கும்னு எனக்குத் தெரியும். துர்கா கேட்கல.''

''அப்பா... நாம போகலாம்!'' என்றாள் சுதா. கல்பனா தடுத்தாள்.

''ஏம்மா இப்படி இருக்கே? இது உன் மகளோட கல்யாணம். இப்பிடியா பேசுவ?''

''யாருடி மகள்? பெத்த தாயை தூக்கி எறிஞ்சிட்டு அந்தக் கேடுகெட்ட துர்காகூட ஓடின யாரும் என் புள்ளைங்க இல்ல.''

ஆனந்த் எழுந்து வந்தான்.

''யாரும் போக வேண்டாம். அம்மா கொஞ்சம் உள்ளே வா!''

''என்னடா?''

ரகசியமாக ஏதோ பேசினான். ராஜம் முகம் மலர்ந்தது!

''முடியுமா?''

''தீபிகா எனக்காக எதையும் செய்வா! நீ பாரேன்!''

- இருவரும் வெளியே வந்தார்கள்!

ஆனந்த் அனைவரையும் ஒருமுறை பார்த் தான்.

''நான் இப்ப பழைய ஆனந்த் இல்லை. ஆயிரம்தான் ஆனாலும், சுதா என் தங்கச்சி. அவ நல்லா வாழணும். அதனால உங்க விருப்பப்படி அம்மா கலந்துக்குவாங்க. நானே வந்து கல்யாணத்தை நடத்தி வைக்கறேன்!''

நான்கு பேரும் புரியாமல் பார்த்தார்கள்.

''செலவுகளை நான் ஏத்துக்கறேன். பட்ஜெட் போடலாம். செந்தில் வீட்ல அப்பா, அம்மா முறையோட பேசட்டும்.''

''தம்பி... இதை நான் எதிர்பாக்கலை!''

- கல்பனா.

''இருக்கா... முழுக்கக் கேளு. நானும், அம்மாவும் வந்து இதை சீரும் சிறப்புமா நடத்துணும்னா, அந்த துர்கா இந்தக் கல்யாணத்துக்கு வரக் கூடாது. எதுலயும் கலந்துக்கக் கூடாது!''

சுதா நெருங்கி வந்தாள்!

''அண்ணி இல்லாம, நீ நடத்தி வெச்சு இந்தக் கல்யாணம் நடக்கணும்னா, எனக்கு இந்தக் கல்யாணமே நடக்க வேண்டாம். வாங்கப்பா!''

வராகன் குறுக்கிட்டார்.

''செந்தில், துர்கா இல்லாம இதுக்கு ஒரு நாளும் சம்மதிக்கமாட்டார்!''

கல்பனா வெறுப்புடன் பார்த்தாள். நடேசன், ஆனந்த் அருகில் வந்தார்.

''ஒரு புதுப் பணக்காரி வந்த தெம்புல திமிரா ஒனக்கு? அவ கோடி கோடியா கொட்டுவானு உங்கம்மா நாக்கைத் தொங்கப் போட்டுட்டு நிக்கறாளா? நான் செந்தில் வீட்டுக்குக் கல்யாணம் பேச தனியாவே போறேன். கேட்டா, என் பொண்டாட்டி செத்தாச்சுனு சொல்றேன்!''

ராஜம் ஆவேசமாக நிமிர, அருகில் வந்தார் நடேசன்.

''எனக்கு அருவருப்பா இருக்குடி. உன் கூட தாம்பத்யம் நடத்தி, மூணு புள்ளைங்களுக்கு அப்பா நான். என் உடம்பை நெருப்புல போட்டு பொசுக்கணும். த்தூ!''

ஆனந்த் ஆவேசமாக அவரை நெருங்கினான்.

''எங்கம்மாவை கேவலப்படுத்தினா, அப்பானுகூட பாக்க மாட்டேன்...''

''என்னடா செய்வே? பேய்க்குப் பொறந்தது பிசாசாத்தான் இருக்கும். வாங்க போகலாம்!''

அவர் வேகமாக நடக்க, மற்ற மூன்று பேரும் அவரைப் பின்பற்றி நடந்தார்கள். ராஜம் கடுப்புடன் நின்றாள்.

''முதல் நாள் வேலையில சேரப் போறேன். நாலு பேருமா வந்து மூட் அவுட் பண்ணிட்டாங்க...''

''விட்டுத் தள்ளுடா. நாளைக்கு நீ பெரிய கோடீஸ்வரன் ஆகும்போது, இதுங்கள்லாம் உன் காலடியில வந்து ஒக்காரும். அப்பக் காட்டறேன் இந்த ராஜம் யாருனு.''

''சரிம்மா!''

அதேநேரம் துர்கா, குழந்தையைத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பி விட்டு, போன நாலு பேரும் என்ன பதிலுடன் வருகிறார்கள் என அறியக் காத்திருந்தாள். அன்வரும் உடன் இருந்தான்!

''அக்கா... உன் மாமியார் திருந்தி, சுதா கல்யாணத்துல கலந்துப்பாங்கனு உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?''

''தெரியல அன்வர். ஆனா, அந்த உறவுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைத் தரணுமில்லையா?''

''நீ மட்டும் எப்படிக்கா இத்தனை தெளிவா, யார் மேலும் பகையில்லாம இருக்கே?''

''எதுக்குப் பகை? என்ன கொண்டு வந்தோம்? எதைக் கொண்டு போகப் போறோம்? நடுவுல எதுக்கு கோப தாபங்கள்?''

- அன்வர் பிரமிப்புடன் பார்த்தான்.

''அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா, நான் உன் மகனா பிறக்கணும்!''

அவன் தலை முடியை செல்லமாகக் கலைத்தாள் துர்கா.

''இப்ப மட்டும் என்னப்பா? நீ என் மகன்தான்! இதுக்காக இன்னொரு ஜென்மம் வரைக்கும் காத்திருக்கணுமா?''

- அன்வர் நெகிழ்ந்து போனான்.

வாசலில் கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியது... தீபிகா! படியேறி மேலே வந்தாள்!

''அக்கா... இவங்க ஏன் வர்றாங்க இங்கே?''

''தெரியலியே அன்வர்!''

என்ன நிகழப்போகிறது இந்த சந்திப்பில்..?!

தொடருங்கள் தோழிகளே...
ஆடைகள் உதவி: பி.எம்.சில்க்ஸ்,
மயிலாப்பூர், சென்னை

போன் காலை பிக்-அப் செய்ததுமே.... ''நான் விஜயலட்சுமிதான் பேசுறேங்க... என்ற ஊரு சேலம்ங்க... 'அவள் விகடன்'ல இருந்துதானே பேசுறீங்க! எனக்குத் தெரியும்... ஏதோ ஒண்ணு மனசுக்குள்ள சொல்லிட்டே இருந்துச்சு... இந்த முறை, பரிசும் இயக்குநர் நாற்காலியும் எனக்குத்தான்னு! அதனாலதான் செல்போனை கையிலயே வெச்சுட்டு இருந்தேங்க. என்னங்க... பரிசு எனக்குத்தானேங்க?'' என்று கொங்கு பாஷையில் ஆச்சர்யப்படுத்திவிட்டார்.

''ஆமாம், நீங்கதான் இந்த எபிசோட் இயக்குநர்'' என்றதும், ''உடனே என் பேரப் புள்ளைங்ககிட்ட சொல்லோணும்'' என்று குஷியான இல்லத்தரசி விஜயலட்சுமி, ''ஆல் தி பெஸ்ட்’' என்று நம்மை வாழ்த்தினார்.

கங்கிராட்ஸ் விஜயலட்சுமி! இவருக்கு அன்புப் பரிசாக 'வி.ஐ.பி. சூட்கேஸ்’ அனுப்பி வைக்கப்படுகிறது.

வாசகிகளுக்கு சூப்பர் பரிசுப் போட்டி

இந்தஅத்தியாயத்தைப் படித்து முடித்ததுமே... அடுத்த அத்தியாயம் எப்படி என்பதை தீர்மானியுங்கள். அதை அப்படியே மனதில் வடித்துக் கொண்டாலும் சரி, எழுதி வைத்துக் கொண்டாலும் சரி... 044-66808023 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் பெயர், ஊரை முதலில் சொல்லிவிட்டு உங்கள் குரலிலேயே கதை திருப்பத்தை பதிவு செய்யுங்கள். மிகச்சிறந்த கதைத் திருப்பத்தை வைத்து அடுத்த அத்தியாயத்தை நகர்த்துவார் தேவிபாலா. அத்தகைய எபிசோடை சூப்பராக படைக்கும் வாசகிக்கு சூட்கேஸ் பரிசு! இதழ் வெளிவரும் வாரத்தின் சனிக்கிழமை அன்று மாலைக்குள் கதைத் திருப்பத்தை பதிவு செய்ய மறக்காதீர்கள்!