மூன்று பூனைக் குட்டிகள் வேண்டி
நானும் நித்யாவும்
நெருக்கமானோம்.

பூனைக் குட்டிகளைப் பிடித்து
மடியில் தூக்கிவைப்பேன் என
நித்யா என்னைச் சுற்றி வந்தாள்.

பூனைக்கு என்ன புவா வேணும்?
பூனைக்கு எப்பப் பசிக்கும்?
பூனை எப்படிப் பாச்சி குடிக்கும்?
அம்மா பூனை எப்ப வெளியே போவும்?
எனக்கும் தெரியாத பதில்களுக்காக
என்னைக் கேள்விகளால் நிரப்பினாள்.

பூனைக் குட்டிகள் வேண்டி
நித்யா என்னை நெருங்கிவர
விரோதத்துடன்
என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது
அம்மா பூனை.

ஒரு சுபமுகூர்த்த வேளையில்
அம்மா பூனையுடன்
குட்டிப் பூனைகள்
வெளியேறின
அறையைவிட்டு.

பூனைக் குட்டிகளைத் தேடிவந்த
நித்யாவுக்கு
சொல்வதற்குப் பதில் இல்லாததால்
பால்மடி புதைத்துக்கொண்டேன்
அவளை ஒரு பூனைக் குட்டியாக்கி.

நித்யா
பூனைக் குட்டிகள்பற்றிய கனவில் இருந்தாள்.
அவளுக்கு
இரண்டு பூனைக் குட்டிகள்
தேவையாயிருந்தன.
ஒன்று அவளுக்கு.
இரண்டாவது அவள் தம்பிக்கு.
தம்பிக்கும் சேர்த்தே
பூனைக் குட்டி கேட்பாள்
எப்பொழுதும்.
பூனைக் குட்டிபற்றிய தீராத ஆர்வமிருந்தாலும்
அம்மா பூனைபற்றிய பயத்திலிருந்தாள்.

அம்மா பூனையை வெளியில் அனுப்ப
என்ன வழி என ஓயாமல் கேட்டாள்.
ரகசியம் புரிந்தது
நித்யாவின் குரலில் வழிவது
அம்மா பூனையாகும் தாகம்.

பூனைக் குட்டிகள்
வெளியேறிய பின்னும்
நித்யா
குட்டிகள் இருந்த இடத்தைத்
தேடி வந்தாள்.
வெள்ள பூன இங்க படுக்கும்.
கருப்புப் பூன அங்க வெளாடும்
பச்ச பூன இங்க குதிக்கும்
அம்மா பூன ஒன்ன மொறைக்கும்
நித்யாவின் வார்த்தைகளில்
ரத்தக் கவுச்சியுடன்
பூனைக் குட்டிகள்
பிறந்து தவழ்கின்றன
மீண்டும் அதே இடத்தில்.

நித்யா
அவள் அப்பாவுடன்
வண்டியில் போகிறாள்.
என்னைப் பார்த்தவுடன்
இரண்டு கைகளையும் விட்டுவிட்டு சிரிப்பு.
கண்கள் முழுக்க
பூனைக் குட்டிகள் பற்றிய கேள்விகள்.
நித்யாவுக்கு நினைவில்
நான் என்னவாக இருப்பேன்?
கண் திறவாமல்
அம்மா முலை முட்டும்
சின்னஞ்சிறிய பூனையானேன் நான்.

குட்டிப் பூன எங்க போச்சு?
அம்மா பூன தூக்கிப்போச்சா?
பூனகிட்ட கூட்டிக்கிட்டுப் போறியா?
பூனையைத் தொட்டுப் பார்க்கலாமா?
அம்மா பூனை
குட்டிப் பூனைக்கு
புவா ஊட்டுமா?
மர்மங்கள் விலக்கும்
கேள்விகளால் என்னைத் துளைக்கும்
நித்யாவை உற்றுப் பார்த்தேன்
நித்யாவின் உடல்
ஒரு பூனைக் குட்டியாகிக்கொண்டிருந்தது!

மூன்று பூனைக் குட்டிகள் வேண்டி
நானும் நித்யாவும்
நெருக்கமானோம்.

பூனைக் குட்டிகளைப் பிடித்து
மடியில் தூக்கிவைப்பேன் என
நித்யா என்னைச் சுற்றி வந்தாள்.

பூனைக்கு என்ன புவா வேணும்?
பூனைக்கு எப்பப் பசிக்கும்?
பூனை எப்படிப் பாச்சி குடிக்கும்?
அம்மா பூனை எப்ப வெளியே போவும்?
எனக்கும் தெரியாத பதில்களுக்காக
என்னைக் கேள்விகளால் நிரப்பினாள்.

பூனைக் குட்டிகள் வேண்டி
நித்யா என்னை நெருங்கிவர
விரோதத்துடன்
என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது
அம்மா பூனை.

ஒரு சுபமுகூர்த்த வேளையில்
அம்மா பூனையுடன்
குட்டிப் பூனைகள்
வெளியேறின
அறையைவிட்டு.

பூனைக் குட்டிகளைத் தேடிவந்த
நித்யாவுக்கு
சொல்வதற்குப் பதில் இல்லாததால்
பால்மடி புதைத்துக்கொண்டேன்
அவளை ஒரு பூனைக் குட்டியாக்கி.

நித்யா
பூனைக் குட்டிகள்பற்றிய கனவில் இருந்தாள்.
அவளுக்கு
இரண்டு பூனைக் குட்டிகள்
தேவையாயிருந்தன.
ஒன்று அவளுக்கு.
இரண்டாவது அவள் தம்பிக்கு.
தம்பிக்கும் சேர்த்தே
பூனைக் குட்டி கேட்பாள்
எப்பொழுதும்.
பூனைக் குட்டிபற்றிய தீராத ஆர்வமிருந்தாலும்
அம்மா பூனைபற்றிய பயத்திலிருந்தாள்.

அம்மா பூனையை வெளியில் அனுப்ப
என்ன வழி என ஓயாமல் கேட்டாள்.
ரகசியம் புரிந்தது
நித்யாவின் குரலில் வழிவது
அம்மா பூனையாகும் தாகம்.

பூனைக் குட்டிகள்
வெளியேறிய பின்னும்
நித்யா
குட்டிகள் இருந்த இடத்தைத்
தேடி வந்தாள்.
வெள்ள பூன இங்க படுக்கும்.
கருப்புப் பூன அங்க வெளாடும்
பச்ச பூன இங்க குதிக்கும்
அம்மா பூன ஒன்ன மொறைக்கும்
நித்யாவின் வார்த்தைகளில்
ரத்தக் கவுச்சியுடன்
பூனைக் குட்டிகள்
பிறந்து தவழ்கின்றன
மீண்டும் அதே இடத்தில்.

நித்யா
அவள் அப்பாவுடன்
வண்டியில் போகிறாள்.
என்னைப் பார்த்தவுடன்
இரண்டு கைகளையும் விட்டுவிட்டு சிரிப்பு.
கண்கள் முழுக்க
பூனைக் குட்டிகள் பற்றிய கேள்விகள்.
நித்யாவுக்கு நினைவில்
நான் என்னவாக இருப்பேன்?
கண் திறவாமல்
அம்மா முலை முட்டும்
சின்னஞ்சிறிய பூனையானேன் நான்.

குட்டிப் பூன எங்க போச்சு?
அம்மா பூன தூக்கிப்போச்சா?
பூனகிட்ட கூட்டிக்கிட்டுப் போறியா?
பூனையைத் தொட்டுப் பார்க்கலாமா?
அம்மா பூனை
குட்டிப் பூனைக்கு
புவா ஊட்டுமா?
மர்மங்கள் விலக்கும்
கேள்விகளால் என்னைத் துளைக்கும்
நித்யாவை உற்றுப் பார்த்தேன்
நித்யாவின் உடல்
ஒரு பூனைக் குட்டியாகிக்கொண்டிருந்தது!