Published:Updated:

வேர்களில் இருந்து முளைக்கும் ஓவியம்!

வேர்களில் இருந்து முளைக்கும் ஓவியம்!

##~##

சென்னை துறைமுகப் போக்குவரத்துத் துறை உதவி கண்காணிப்பாளராகப் பணிபுரிபவர் சேரன். பெருங்களத் தூரில் வசிப்பவர், தன் வேலை நேரம்போக மீதி நேரத்தில் மர வேர்களைச் சேகரித்து அவற்றை வியக்கவைக்கும் சிற்பமாக மாற்றி ஆச்சர்யப்படுத்துகிறார்.

 நாம் சென்றபோது, வீட்டின் முன் பகுதியில் ஒரு மர வேரை உப்புக் காகிதம்கொண்டு தேய்த்து பாலீஷ் செய்துகொண்டு இருந்தார். ''என் அப்பா பாலகிருஷ்ணன் நல்லா ஓவியம் வரைவார். ஓவியனா ஆகணும்கிறதுதான் என் ஆசையும். சின்ன வயசுல அப்பா பலகையில கிளி படத்தை வரைஞ்சு அது மேலயே என்னையும் வரையச் சொல்வார். அப்படித்தான் ஓவியம் பழக்கமாச்சு. முழு நேர ஓவியனா ஆகணும்கிற என் ஆசை நிறைவேறலை. துறைமுக வேலை நேரம்போக, மீதி நேரத்துல ஓவியம் வரையறது, போட்டோ எடுக்குறது, கட்டுரை எழுதுறதுனு நிறைய விஷயங்கள்ல என்னை ஈடுபடுத்திக்கிட்டேன். இந்தச் சமயத்துல ஒருநாள் என் கிரா மத்துல உள்ள கோயில் பக்கத்துல

வேர்களில் இருந்து முளைக்கும் ஓவியம்!

வெட்டிப் போட்டு இருந்த ஒரு வேப்ப மரத்தோட வேர் யதேச்சையா என் கண்ல பட்டுச்சு. அதை உற்றுப் பார்த்தப்ப ஒரு பெண்ணோட உருவம் மாதிரியே தெரிஞ்சுது. அந்த வேரை அப்படியே எடுத்துட்டு வந்து உப்புக் காகிதத்தால தேய்ச்சு ஷைனிங் பண்ணி அதுல வார்னிஷ் அடிச்சு, 'வேம்பு சுயம்பு சுந்தரி’னு பேரும்வெச்சேன். அதைப் பார்த்துட்டு, 'அற்பத்தைக்கூட சிற்பமாக்கிடுறீங்க’னு அக்கம் பக்கத்தில் உள்ளவங்க பாராட்டினாங்க. அந்தப் பாராட்டுதான் எனக்கு ஊக்கம். அன்னைக்கு ஆரம்பிச்ச இந்த வித்தியாசமான மர வேர், மரத் துண்டுகள் தேடுற பயணம் 25 வருஷத்தைத் தாண்டியும் தொடருது'' என்று சிரிக்கிறார்.

இவரிடம் மான், நெருப்புக் கோழி, பாம்பு, சிவலிங்கம், டைனோசர், யானை முகம், பருந்து, குரங்கு, ஆமை, கழுகு, மகுடி, நத்தை, மயில் என 80-க்கும் மேற்பட்ட வித்தியாசமான மரச் சிற்பங்கள் உள்ளன. ''உண்மையைச் சொல்லணும்னா, இதெல்லாம் நான் செதுக் கின சிற்பங்கள் இல்லை. இயற்கை செதுக்கி யவை. நான் ஒரு சாதாரண சேகரிப்பாளன் அவ்வளவுதான். எனக்குக் கிடைக்கிற மர வேர்களை அழகுப்படுத்தி சரியான முறையில் பாதுகாக்குறேன்.

வேர்களில் இருந்து முளைக்கும் ஓவியம்!

நான் சேகரிச்ச மர வேர்களைவெச்சுப் பார்க்கும்போது, ஒரு வேர் மாதிரி இன்னொரு வேர்  இருக்கவே இருக்காதுனு தெரிஞ்சுக் கிட்டேன். இந்தச் சிற்பங்களை விற்றால் ஒவ்வொண்ணும்

வேர்களில் இருந்து முளைக்கும் ஓவியம்!

2 ஆயிரத்தில் இருந்து

வேர்களில் இருந்து முளைக்கும் ஓவியம்!

25 ஆயிரம் வரை விலைபோகும். ஆனால், இதை எல்லாம் நான் விக்கிறதுக்காகச் செய்யலை. விக்கப்போறதும் இல்லை. நான் உயி ரோட இருக்கிறவரை இது எல்லாத்தையும் பாதுகாப்பேன். இந்த மர வேர் சிற்பங்களைச் சேகரிக்கிறதைக் கூடிய சீக்கிரம் லிம்கா சாதனைக்காக விண்ணப்பிக்கப்போறேன். நிச்ச யம் அந்தச் சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பேன்.

வேர்களில் இருந்து முளைக்கும் ஓவியம்!

கிராமங்கள், விறகு கடைகள்னு தேடினாலே இந்த மாதிரி கலை அம்சம் உள்ள ஏராளமான மரங்கள் கிடைக்கும். அஞ்சு, பத்துனு பணம் கொடுத்தால் தந்துடுவாங்க. கலையா நினைச்சு சேகரிக்கத்தான் வாங்குறேன்னு தெரிஞ்சு சிலர் இலவசமாவும் கொடுத்திருக்காங்க. இன்னும் சிலரோ, அதிகமாவும் காசு கேட்டு இருக்காங்க. அப்படி கிடைக்கிற அந்த மரத்தோட தோலை சுரண்டி எடுத்துட்டு அதை உப்புக் காகிதத்தால தேய்ச்சு வார்னிஷ் அடிச்சா போதும் பளபளனு நல்ல சிற்பம் கிடைச்சுடும். 'கறுப்பு கலர்ல இருந்தா நல்லா இருக்குமே’னு தோணுச்சுனா, மரத்தை அடுப்பில் காட்டி வாட்டி கறுப்பு நிறத்தைக் கொண்டுவரலாம். வருங்காலத்துல இந்தக் கலையில ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு இலவசமாப் பயிற்சி அளிக்கலாம்னு இருக்கேன். இதுவரைக்கும் ஆறு பேருக்குப் பயிற்சி கொடுத்து இருக்கேன்'' என்கிறார் சேரன்.

சா.வடிவரசு
படங்கள்:அ.ரஞ்சித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு