Published:Updated:

ஒரே ஓவியத்தில் ஐம்பூதங்கள்!

கோவையில் ஓவிய மேளா

ஒரே ஓவியத்தில் ஐம்பூதங்கள்!

கோவையில் ஓவிய மேளா

Published:Updated:
ஒரே ஓவியத்தில் ஐம்பூதங்கள்!

வீன உடை அணிந்த மீனாட்சியின் கைகளில் நின்றபடி கொஞ்சுகிறது அதே பழைய பச்சைக் கிளி. இரு தலைகளும் ஒரு காலும் உடைய மனிதன் எக்காளமாகச் சிரிக்கிறான். வறண்ட காவிரியின் முன்னே மண்டியிட்டு அமர்ந்து இருக்கும் விவசாயியின் அருகே குவிந்துக்கிடக்கிறது விதை நெல்... சட்டென புரிவதாகவும் இல்லை; ஆனாலும், ஒரு நொடிகூட சிதறாது முழுமையாக ஈர்த்தன அந்த ஓவியங்கள்.

ஒரே ஓவியத்தில் ஐம்பூதங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

சென்னையைச் சேர்ந்த முரளிதரன், நரேந்திரபாபு, பாலசுப்ரமணியன், ஸ்ரீனிவாசன் ஆகிய ஓவியர்கள் இணைந்து சமீபத்தில் கோவையில் ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்தினார்கள். சாரல் மழை போல் லேசாகத் தொடங்கிய மக்களின் வரவேற்பு, சில தினங்களில் அடை மழையாகப் பொழிந்தது ஆரோக்கியமான விஷயம். சிறுவர்கள் முதல் சீனியர் சிட்டிசன்கள் வரை அத்தனை தரப்பு வயதினரும் ரசித்துச் சிலிர்த்த ஓவியங்கள் அங்கே நிறைந்திருந்தன.

இந்த நான்கு ஓவியர்களும் இணைந்து ஒரு கண்காட்சியை நடத்துவது இதுதான் முதல் முறை. இவர்களில் ஒவ்வொருவரின் ஓவிய வகையும் வேறுபட்டது. நால்வரில் சீனியரான முரளிதரன், இந்தியக் கலாசாரத்தின் பழமையான விஷயங்களை நவீன டச் கொடுத்து தீட்டுவதில் வல்லவர். காமதேனு போன்ற புராண கால விலங்குகள், பெண் தெய்வங்கள் போன்றவை அதிகமாக இவருடைய ஓவியங்களில் காணப்படுகின்றன.

அடுத்தவரான நரேந்திரபாபு, தன்னுடைய ஓவியங்களுக்குக் 'கனவுலகம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். விலங்குகள், விந்தை மனிதர்கள், நிறைவேறத் துடிக்கும் ஆசைகள் போன்றவை இவருடைய ஓவியங்களில் ஒளிர்கின்றன. யோகா கலையை அடிப்படையாகக் கொண்டது பாலசுப்ரமணியனின் ஓவியங்கள். 'தாத்ரிக் ஸ்கூல்’ என்று இவருடைய ஓவிய வகை அழைக்கப்படுகிறது. சிறிய வளைவுகள், முக்கோணங்கள், ஒளி வட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டு, ஆழ்ந்த அர்த்தங்களை விளக்குகிறார். ஐம்பூதங்களையும் ஒரே பெயின்டிங்கில் அதிகம் சிரமம் இல்லாமல் படைத்து இருப்பது இவருடைய திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.  

ஒரே ஓவியத்தில் ஐம்பூதங்கள்!

நான்காவது நபரான ஸ்ரீனிவாசனின் ஓவியங்கள், சைவ சித்தாந்த சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்டு தஞ்சாவூர் ஜில்லா விவசாயிகளின் வாழ்வியல், மனநிலை ஆகியவற்றை விளக்குகின்றன. வணிகமயமாகி வறண்டுபோன சமுதாயத்தில், அன்பை மீட்டெடுக்கும் நோக்கில் வரையப்படுகின்றன இவருடைய ஓவியங்கள்.

ஒரே ஓவியத்தில் ஐம்பூதங்கள்!

கோவையைக் கோடை மழை நனைத்திருந்த ஒரு பிற்பகலில் அந்த ஓவியர்களைச் சந்தித்தேன். ''கோவை மக்களுக்குக் கலை ரசனை அதிகம். ஓவியத்தில் குவிந்துக்கிடக்கும் கேரக்டர்களுக்கு நடுவே சிறிய நுணுக்கங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பொதுவாகவே இந்தியாவில் ஓவியர்கள் மற்றும் ஓவியக் கலைக்கான தளம் பெரிதாகி இருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது. 10 வருடங்களுக்கு முன்பு வரை இத்தனை ஓவிய அரங்குகள் கிடையாது. ஆனால், இப்போது ஒவ்வொரு நகரத்திலும் ஓவிய அரங்குகள் பிஸியாக இருக்கின்றன. முன்பு எல்லாம் ஓவியக் கண்காட்சிகளுக்கு வருவது ஒரு ஸ்டேட்டஸுக்கான விஷயமாக மட்டும் இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் இதை ரசிக்க ஆரம்பித்துள்ளார்கள். சந்தோஷமான மாற்றம் இது!'' என்று பூரிக்கிறார்கள்.              

ஒரே ஓவியத்தில் ஐம்பூதங்கள்!

- எஸ்.ஷக்தி
படங்கள்: கே.ஆர்.வெங்கடேஸ்வரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism