நடிப்பு : ஐஸ்வர்யா
கலை : ஸ்யாம்
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா
இயக்கம் : நீங்களேதான்

கத்தியுடன் ஆட்டோவில் ஆனந்த் பயணம்... துர்காவைக் கொல்லும் வெறியுடன் ! என்ன நடக்கப் போகிறது?! என்று முடிந்திருந்த கடந்த எபிசோட், கிளப்பிய பரபரப்பு... வாசகிகளிடம் நன்றாகவே பற்றிக் கொண்டுவிட்டது. ஒவ்வொருவருமே, தனித்தனியாக மெகா சீரியலுக்கு திரைக்கதை அமைத்து இயக்கும் அளவுக்கு... ஆர்வத்துடன் ஆளுக்கொரு ட்விஸ்ட் வைத்து, கதையை நகர்த்த போட்டி போட்டிருக்கிறார்கள் நம் வாசகிகள்!

பெரம்பூர் - ஜெயசித்ரா, பூண்டி - கார்த்திகைச்செல்வி, சென்னை - திலகவதி... கத்தியைத் தொடர்ந்து இந்த மூன்று சகோதரிகளும் ஆஸ்பத்திரிக்குக் கதையைக் கொண்டு போகிறார்கள். ஆனால், வித்தியாசமாக வரவில்லை.

கப்பலூர் - ஜெயசித்ரா, இந்த சகோதரி... முறையே துர்கா, நடேசன் மேல் ஆனந்தின் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்கிறார்கள்.

மயிலாப்பூர் - மீனாட்சி பட்டாபிராமன்... புது கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார். ஆனால், அவ்வளவாக இந்தக் கதையோட்டத்தில் ஒட்டாமல் அது தொங்கிக் கொண்டிருப்பதுதான் சற்று சறுக்குகிறது.

மதுரை - விஜயலட்சுமி.... ஆனந்த் வேஷம் போடுவதாக இவர் ட்விஸ்ட் வைக்கிறார். நன்றாகவே நகர்த்த முயற்சித்திருந்தாலும் விறுவிறுப்பு போதவில்லையே தோழி?

கும்பகோணம் - ஜெயலட்சுமி... சுதாவை ஆனந்தே கடத்துவதாக ட்விஸ்ட் வைக்கிறார்.

பெங்களூரூ - வனிதா, நாகபட்டினம் - கயல்விழி... ஆனந்த் கைது செய்யப்படுகிறான் என்கிற வரையில் கதையை நகர்த்தி வருகிறார்கள். ஆனால்... பெங்களூரூ - அபர்ணா, இதே அணுகுமுறையில்... அதேசமயம், தைரியமாக நல்ல திருப்பத்துடன் கொண்டு போயிருக்கிறார். அதனால், அவரே... இந்த எபிசோட் இயக்குநர் நாற்காலியையும் பிடிக்கிறார்... பாராட்டுக்கள் தோழியே!

துர்கா அலுவலகம் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். மனதுக்குள் ஒரு வேதனை... மின்சாரமாக ஓடிக் கொண்டிருந்தது.

''என்னம்மா... உன் முகமே சரியா இல்லையே?''

''ஆனந்துக்கு ஒரு நல்ல வேலையும், வசதிகளும் தீபிகா மூலமா கிடைச்சுருக்கு. நான் உண்மையைச் சொன்னதால தீபிகா ஆனந்தை வெறுத்து, அதனால ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?''

''ஏற்படணும்மா!''

''மாமா... என்ன சொல்றீங்க?''

''தேவதை மாதிரி இருக்கிற உன்னை, இத்தனை நாள் குடும்ப பாரத்தை சுமந்த ஒரு நல்ல மனைவியை அவன் மதிச்சானா? கேடுகெட்ட ராஜம் பேச்சை நம்பி எப்படியெல்லாம் ஆடினான்? துர்கா... ராஜம் சாகணும். அப்பத்தான் ஆனந்த் திருந்துவான்.''

''வேண்டாம் மாமா.. உங்க வாயால அப்படியெல்லாம் சொல்லாதீங்க...''

''இல்லம்மா... உனக்கு அவன் தந்த தாலிகூட இனி கழுத்துல இருக்க வேண்டாம்னு தோணுது. மாமனாரே இப்படி பேசறாருனு வருத்தப்படாதே. மோசமான புருஷன் கட்டின தாலி, தூக்குக் கயிறுக்கு சமம்!''

அவள் பேசவில்லை!

'தப்பான அவனுக்கு எப்பவும் இரக்கம் காட்டாதே. அது, அவனை நிச்சயமா திருத்தாது. மேற்கொண்டு தப்பு செய்ற துணிச்சலைத்தான் தரும். ஆனந்த் கடுமையா தண்டிக்கப்படணும். நிறைய அவமானப்படணும்மா!’

உள் அறையில் போன் அடித்தது. நடேசன் போய் எடுத்தார்.

''நான் தீபிகா பேசறேன்.''

''ஆனந்த் அப்பா பேசறேன்மா. துர்கா வெளியில நிக்கறா... கூப்பிடட்டுமா?''

''வேண்டாம் அங்கிள்... ஆனந்தோட தோலை உரிச்சு வெளியே துரத்தியாச்சு. துர்காங்கற ஒரு நல்ல தோழிக்கு நான் மரியாதை செலுத்திட்டேன்! சொல்லிடுங்க!''

- விவரமாக நடந்ததைச் சொல்லி, அவள் போனை வைக்க, துர்காவிடம் வந்து அனைத்தையும் சொன்னார் நடேசன்.

''ஐயோ... என்னால எல்லாமே கெட்டுப் போச்சே... தீபிகா அவசரப்பட்டுட்டாளே!''

''இல்லை துர்கா... தீபிகா ஒரு நல்ல நீதிபதி. 'பளிச்’சுனு தண்டிச்சுட்டா. அவ கிடைச்சதும் இவன் போட்ட ஆட்டமும், அவளை வெச்சு உன்னை அசிங்கப்படுத்த ராஜம் நிச்சயமா திட்டம் போட்டிருப்பா... ரெண்டுமே உடைஞ்சு நொறுங்கிப் போச்சு.''

''சரி மாமா... அவருக்கு வெறி இப்ப அதிகமாயிருக்குமே... பயமா இருக்கு மாமா...''

''என்ன பயம்? இதப்பாரு அவனை மட்டும் மன்னிக்காதே. இது போதாது அவனுக்கு.''

போன் அடிக்க... துர்கா எடுத்தாள்.

''வந்துட்டேன். அரைமணி நேரத்துல ஆபீஸ்ல இருப்பேன்'' என்றவள்,

''மாமா... நான் புறப்படறேன். நீங்க எப்பவும் கதவைத் தாள் போட்டுட்டு ஜாக்கிரதையா இருங்க!'' எனக் கூறி, காரில் ஏறிக் கிளம்பினாள். 15 நிமிடங்கள் பயணிக்க, 'பட்’டென ஒரு சப்தம்... கார் சரெக்கென்று நின்றது. டிரைவர் இறங்கிப் பார்த்து, ''பஞ்சர் மேடம். பத்தே நிமிஷத்துல டயரை மாத்திடறேன்'' என்று மும்முரமானார். துர்கா காரைவிட்டு வெளியே இறங்கி, ஆபீஸுக்கு போனில் பேசிக்கொண்டிருக்க, கத்தியுடன் ஏற்கெனவே புறப்பட்ட ஆனந்த், டாஸ்மாக் வந்தான். ஆட்டோவை ஒரு ஓரமாக நிறுத்தச் சொல்லி, சரக்கை முழுமையாக ஏற்றிக் கொண்டான். உள்ளே பற்றி எரிந்த நெருப்பை, மது இன்னும் நன்றாக விசிறிவிட்டது.

'அவமானப்படுத்திட்டியே? எத்தனை பெரிய வாழ்க்கை? பழைய காதலி, பணம், அந்தஸ்துனு பூரிச்சுப் போயிருந்தேனே. எல்லாமே ஒரு நொடியில தரை மட்டமாயிடுச்சே. உன்னை விடமாட்டேன்.’

'உன்னை அசிங்கப்படுத்தினவள சாகடிக்கறேன்னு சொன்னா, நீ சரியான ஆம்பிள!’

- ராஜத்தின் சொற்கள் திரும்பத் திரும்ப ஒலிக்க, வெறி அதிகமானது ஆனந்துக்கு. ஆட்டோவில் ஏறினான். பத்து நிமிடப் பயணத்தில் போதையும், கொலைவெறியும் நன்றாகவே தலைக்கேறியிருந்தன. சாலையோரம் காரில் சாய்ந்தபடி போன் பேசும் துர்காவைப் பார்த்துவிட்டான்!

'துர்காவா?’

கழுத்தை வளைத்து எட்டிப் பார்த்தான்.

'துர்காவேதான்! கிட்டத்தட்ட யாருமில்லாத ரோடுல நினைச்சதை முடிக்க, இதைவிட நல்ல இடம் எப்படி வாய்க்கும்? இந்த ஆட்டோ டிரைவர் ஒரு சாட்சியாகக் கூடாது’

''நிறுத்துப்பா.''

ஆட்டோ கொஞ்ச தூரம் போய் நிற்க, கட் பண்ணி, பணத்தைக் கொடுத்து அனுப்பினான். துர்காவை நோக்கி வர ஆரம்பித்தான். மறைத்து வைத்திருந்த கத்தியை கையில் எடுத்துவிட்டான். துர்கா இன்னமும் ஆனந்த்தைப் பார்க்கவில்லை. டிரைவர் பின்பக்கத்து இடதுபக்க டயரை மாற்றிக் கொண்டிருந்ததால், ஆனந்த் வருவது அவருக்கும் தெரியவில்லை. துர்கா போன் பேச்சை முடித்துவிட்டு நிமிர, 'திக்’ என்றது. வெகு நெருக்கத்தில் ஆனந்த்!

''நீங்களா?''

''இங்கே நீ என்னை எதிர்பார்க்கல இல்ல. அதிர்ச்சியா இருக்கா?''

'குப்’பென்று மதுவின் வாடை வீசியது. துர்கா முகத்தைச் சுருக்கினாள்.

''டிரைவர்... டயரை மாத்தியாச்சா?'' எனக் குரல் கொடுக்க, ''அஞ்சு நிமிஷம் மேடம்!'' என்றார் அவர்.

''ஏண்டீ... தீபிகாகிட்ட போட்டுக் கொடுத்து என் வாழ்க்கையைக் கெடுக்கிறியா? என்னை சொந்தக் கால்ல நிக்க விடாம, ஓடஓட விரட்டறியா?''

''ஆனந்த்... குடிச்சுட்டு வந்து உளறாதீங்க. மத்தவங்க மேல காட்டற கோபத்தை திசை திருப்பி, வாழ்க்கையில உருப்படப் பாருங்க. நான் யாரையும் கெடுக்கல. நீங்க செய்யற தப்புக்கு தெய்வம் தண்டிக்குது!''

''தெய்வம் என்னைத் தண்டிக்குதா? இப்ப உன்னை நான் தண்டிக்க வந்திருக்கேன்டி!''

கத்தியை வெளியே எடுத்தான்.

''ஆனந்த்... அவசரப்படாதீங்க! குடிபோதையில நீங்க எடுக்கற முடிவு, உங்களைத்தான் பாதிக்கும் வேண்டாம்!'' என்று அலறினாள் துர்கா.

''நீ இருந்தா நான் வாழ்க்கையில நிம்மதியா இருக்க முடியாது! நீ செத்து ஒழியணும்!'' கர்ஜித்தான் ஆனந்த்.

சத்தம் கேட்டு, பாய்ந்து வந்த டிரைவர் துர்காவைப் பிடித்துத் தள்ள, ஆனந்தின் கத்தி டிரைவரின் தோளைப் பதம் பார்க்க, அலறியபடி சாய்ந்துவிட்டார்!

அந்த வழியாக ஜீப்பில் பயணித்துக் கொண்டிருந்த செந்தில், துர்காவை பார்த்ததும் அங்கே வந்து பிரேக் அடிக்க... ஆனந்த் ஓட்டம் எடுத்தான். ஆனால், போலீஸ் பாய்ச்சல் முன் அது எடுபடவில்லை. பீதியுடன் துர்கா - கீழே ரத்தம் சொட்ட டிரைவர், செந்திலின் பிடியில் ஆனந்த்!

''அக்கா... என்னாச்சு..?''

''செந்தில் அது வந்து...''

கான்ஸ்டபிள்கள் ஜீப்பை விட்டு இறங்கி ஓடி வந்தார்கள்.

''இந்த ஆளை ஜீப்புல ஏத்துங்க. அந்த டிரைவரை மேடம் கார்ல படுக்க வைங்க. நீ மேடத்தோட வண்டியை எடு. பாலிமர் ஆஸ்பத்திரிக்கு காரை எடுத்துட்டு வா. அக்கா... நீங்க கார்ல வாங்க!''

மளமளவென உத்தரவுகள் பிறப்பிக்கப்பட, துர்கா காரில் ஏற, இரு வாகனங்களும் புறப்பட் டன. துர்கா அதிர்ச்சியில் பேச்சு எழாமல் இருந் தாள். பத்தே நிமிடங்களில் ஆஸ்பத்திரி வாசலில் காரும், ஜீப்பும் நிற்க, அவசர சிகிச்சைப் பிரிவில் டிரைவர் அனுமதிக்கப்பட, டாக்டரைப் பார்த்து விவரங்களைச் சொன்னான் செந்தில். ''ஸ்டேஷன் ஃபார்மாலிட்டிஸ் முடிச்சுட்டு வந்துடறேன்'' என ஒரு கான்ஸ்டபிளை அங்கே நிறுத்தினான்.

''அக்கா... நீங்க கார்ல ஸ்டேஷனுக்கு வாங்க. அங்கே போய்ப் பேசிக்கலாம். அந்த ஆள் குடிச்சுருக்கான். உங்களைக் கொல்ல வந்தானா? எதுக்கு?''

''செந்தில்... நான் நிறையப் பேசணும்!''

''முதல்ல அந்த நாயை லாக்கப்ல தள்ளி முட்டிக்கு முட்டி தட்டணும். அப்புறமா பேசிக்கலாம்... வாங்க.''

அவளைப் பேச விடாமல் காரில் ஏற்றினான். ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்கள். ஆனந்த்தை இறக்கி உள்ளே கொண்டு வர, செந்தில் வேகமாக இறங்கி,

''குடிச்சுட்டு கொலை பண்ணப் போறியா ராஸ்கல்?''

எட்டி உதைத்தான்! துர்கா ஓடி வந்தாள்!

''செந்தில் ப்ளீஸ் வேண்டாம்!''

''இல்லக்கா... இந்த மாதிரி வெறி புடிச்ச நாய்களை நாலு மிதி மிதிச்சாத்தான் சரியாகும். நீங்க கண்டுக்காதீங்க!''

திரும்பவும் ஆனந்தை உதைக்க,

''ஐயோ செந்தில்... சொன்னா கேளுங்களேன்! அவர் யாரு தெரியுமா? சுதாவோட அண்ணன். என் புருஷன்!''

தூக்கிய கைகள் அப்படியே நின்றன செந்திலுக்கு!

''அக்கா!''

ஆனந்தும் அதிர்ச்சியுடன் பார்க்க,

''இவர் யாரைக் கொல்ல வந்தார்? உங்களையா?''

''விடுங்க செந்தில்!''

''அப்படி விட்ற முடியாது. அந்த டிரைவர் தாக்கப்பட்டு இன்னிக்கு அவசர சிகிச்சைப் பிரிவுல இருக்கார். கேஸ் எழுதப்பட்டாத்தான் அவருக்கு டாக்டர் டிரீட்மென்ட் தருவார். இவர் யாரைக் கொல்ல வந்தார்?''

துர்கா பேசவில்லை!

''அக்கா! இந்த சமூகத்துல... பொறுப்பான பதவியில இருக்கறவங்க நீங்க. உங்களை நான் ரொம்ப மதிக்கிறேன். நீங்க நடந்ததை தயவு பண்ணி எனக்குச் சொல்லணும்!''

இப்போதும் துர்கா பேசவில்லை!

''சுதாவுக்கு நான் இழைச்ச ஒரு தப்புக்காக தேடி வந்து மன்னிப்பு கேட்டு, வாழ்க்கையும் தரத் தயாராயிட்டேன். உண்டா? இல்லையா?''

''அதுக்காக எங்க குடும்பமே உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கு செந்தில்!''

''அக்கா, நீங்களோ... இல்லை நானோ, இந்த சமூகத்துல பொறுப்புள்ள பிரஜைகள். சட்டம், ஒழுங்கை பராமரிக்கிற கடமை நமக்குண்டு. நம்ம பந்தம்னு குற்றங்களை கண்டுக்காம விட்டா, அது... சமூகத்துக்கு செய்யற துரோகம். உங்களை மாதிரி ஒரு பொறுப்புள்ள பெண், இந்தத் தப்பைச் செய்யலாமா? ஒரு கொலை நடக்க இருந்திருக்கு. அதையும் குடிபோதையில இந்த ஆள் செய்ய வந்திருக்கார். இப்பவும் நீங்க பேசலைனா... ஸாரிக்கா. உங்க மேலயும் நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்! என்கிட்ட தப்பு இருந்தா, பச்சைக் குழந்தை கால்லகூட நான் விழத் தயார். அதேசமயம் தப்பை என் தாயே செஞ்சுருந்தாக்கூட, மன்னிக்க மாட்டேன்!''

செந்தில் பேசப் பேச, துர்காவுக்கு சிலிர்த்தது! தன் தப்பு புரிந்தது!

''இப்படி வாங்க செந்தில்!''

பதினைந்து நிமிடங்களில் சகலமும் சொல்லி முடித்தாள்.

''கான்ஸ்டபிள்... அந்த ஆளை லாக்கப்ல தள்ளுங்க. கேஸை எழுதிக்கோங்க. சமூகத்துல பொறுப்புள்ள பதவியில் இருக்கிற இந்த துர்கா மேடத்தை தன் சொந்த விரோதம் காரணமா, குடிச்சுட்டு கொலை பண்ண வந்திருக்கான் ஆனந்த். அட்டெம்ப்ட் டு மர்டர். அதுல டிரைவர் காயப்பட்டிருக்கார். எழுதுங்க!''

கேஸ் எழுதப்பட, துர்கா தடுக்கவில்லை! காலையில் நடேசன் சொன்னது காதுக்குள் ஒலித்தது!

'தப்பான அவனுக்கு எப்பவுமே இரக்கம் காட்டாதே. அது, அவனை நிச்சயமா திருத்தாது. ஆனந்த் கடுமையா தண்டிக்கப்படணும். நிறைய அவமானப்படணும்மா!’

ஆனந்த் லாக்கப்பில் அடைக்கப்பட்டான். அவன் முகத்தில இருந்த கொலை வெறி இன்னும் அதிகமாகியிருந்தது. அவமானத்தில் போதை இறங்கியிருந்தது.

''அக்கா... நீங்க புறப்படுங்க.''

துர்கா மெதுவாக நடக்க, ''ஏய்... நில்லுடி!'' என ஆனந்தின் குரல் இடிபோல வந்து பிரேக் போட்டது. செந்தில் படக்கெனத் திரும்பினான். முகத்தில் ஆவேசம். துர்கா திரும்பி வந்தாள்.

''கட்டின புருஷனை ஜெயில்ல போட்டாச்சு. அடுத்தது என்னடீ? தூக்குல தொங்கவிடப் போறியா? உன்னோட பட்டியல்ல நடேசன், அன்வர், பாலாஜி, வராகன்... கடைசியா இப்ப இந்த செந்திலா? ஒரு வேசிக்குப் புருஷனா வாய்ச்சதுக்கு தூக்குல தொங்கறது எனக்கு தண்டனை இல்லடி... கௌரவம்!''

செந்தில் வேகமாக நெருங்கினான்.

''கான்ஸ்டபிள்... கதவைத் திறங்க. இவனை ஒரு காட்டு காட்டினாத்தான் அடங்குவான்!''

''செந்தில் ப்ளீஸ், வேண்டாம்!''

''இந்த நாய்க்கா... ஸாரிக்கா - இரக்கம் காட்டறீங்க? டேய் மனுஷனாடா நீ? உன் நாக்கை வெட்டினாத்தான் என்னடா? நீ ஒருவேளை இவங்களை கொன்னிருந்தா, தூக்குல தொங்கியிருப்பே. உன் மகளுக்கு அப்புறமா எதிர்காலம் இருக்காடா? போதையில புத்தி அழுகிப் போச்சாடா? அக்கா... இதைக் காரணம் காட்டி, உடனே இவனை விவாகரத்து பண்ணிடுங்க!''

துர்கா ஒரு மாதிரி தளர்ந்து போய் நடக்க, செந்தில் கூடவே வந்தான்.

''அக்கா... இந்த மனநிலையில நீங்க ஆபீஸுக்குப் போனா எதுவும் ஓடாது. வீட்டுக்குப் போயிடுங்க.''

''சரி செந்தில்.''

''கொஞ்சம் இருங்க. நானும் உங்க கூட வர்றேன்.''

அவளுடன் செந்திலும் காரில் ஏறிக் கொள்ள, கார் புறப்பட்டது.

''என் மேல உங்களுக்கு வருத்தமாக்கா?''

''எதுக்கு செந்தில்? நமக்கெல்லாம் சமூகத்துல பொறுப்புனு ஒண்ணு உண்டுங்கிறதை நான்கூட கொஞ்சம் மறந்து தடுமாறிட்டேன். எனக்கு அதை உணர்த்திட்ட உங்களுக்கு நான் நன்றி சொல்லணும்.''

துர்கா எதையும் சொல்லாமல் வீட்டுக்குள் செல்ல... சகல விவரங்களையும் செந்தில் சொல்ல, நடேசனும், சுதாவும் கொதித்துப் போனார்கள்.

''நீங்க செஞ்சதுதான் சரி மாப்ள. இதோட அவனை விட்றாதீங்க. தண்டனை கொடுங்க. இவனைத் தூண்டி விட்டவ என் பொண்டாட்டி ராஜம். அவளையும் உள்ளே போடுங்க!''

சுதா அருகில் வந்தாள்.

''சரியான நேரத்துல நீங்க வரலைனா, அண்ணியோட கதி என்னாகியிருக்கும்?''

- அழுதுவிட்டாள்!

''என்ன சுதா நீ? அக்கா மாதிரி நிறையப் பெண்கள் இந்த பூமியில பிறக்கணும். அவங்ககூட வாழ நாமெல்லாம் கொடுத்து வெச்சுருக்கோம். அக்காவோட மனசு ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கு. ஜாக்கிரதையா பார்த்துக்கோ. நான் வர்றேன்.''

செந்தில் புறப்பட்டுவிட்டான். துர்காவுக்கு சமாதானம் சொல்லிவிட்டு நடேசனும், சுதாவும் விலக, துர்கா நேராக பூஜை அறைக்குள் வந்தாள். மனதுக்குள் சுனாமியின் சீற்றத்துக்கு மேல் ஒரு கொந்தளிப்பு.

'உனக்கு அவன் தந்த தாலிகூட இனி கழுத்துல இருக்க வேண்டாம்னு தோணுது துர்கா. கழட்டிடு அதை. மோசமான புருஷன் கட்டின தாலி, தூக்குக் கயிறு.’

'ஒரு வேசிக்குப் புருஷனா வாய்ச்சதுக்கு, தூக்குல தொங்கறது எனக்கு தண்டனை இல்லடி... கௌரவம்!''

'அக்கா... இதைக் காரணம் காட்டி, உடனே இவனை விவாகரத்துப் பண்ணிடுங்க!’

குத்துவிளக்கு எரிந்து கொண்டிருக்க, மகிஷாசுரமர்த்தினியின் படம் - நடுநாயகமாக. மார்பைத் தொட்டுக் கொண்டிருந்த தாலிக்கொடியை கையில் பிடித்தாள் துர்கா! கண்களில் அக்னி!

துர்காவின் முடிவு என்ன..?!

- தொடருங்கள் தோழிகளே...
ஆடைகள் உதவி: பி.எம்.சில்க்ஸ்,
மயிலாப்பூர், சென்னை

சூட்கேஸ் பரிசு

''அடுத்த எபிசோட் டைரக்டராகிடணும்னு... விடாம கதை சொல்லிட்டே இருக்கேன். இந்த முறை 'நீதான் டைரக்டர்'ங்கற நல்ல சேதியைக் கேட்டதும்... என்னைவிட என் ரெண்டு பசங்களும் சந்தோஷமா சிரிக்கறாங்க. ஐ’ம் ஸோ ஹேப்பி!

சென்னை எனக்கு நேட்டிவ்னாலும், டெல்லியில் வளர்ந்து, பெங்களூரில் செட்டில் ஆகியிருக்கேன். என் தமிழ் எப்படி இருக்குமோனு கொஞ்சம் பயம் இருந்துச்சு. செலக்ட் ஆனதும், அந்த பயம்... சந்தோஷமா மாறிடுச்சு. தேங்ஸ் எ லாட் அவள் விகடன்!'' என மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் பெங்களூருவைச் சேர்ந்த அபர்ணா. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

இவருக்கு 'வி.ஐ.பி.’ சூட்கேஸ் அன்புப் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தஅத்தியாயத்தைப் படித்து முடித்ததுமே... அடுத்த அத்தியாயம் எப்படி என்பதை தீர்மானியுங்கள். அதை அப்படியே மனதில் வடித்துக் கொண்டாலும் சரி, எழுதி வைத்துக் கொண்டாலும் சரி... 044-66808023 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் பெயர், ஊரை முதலில் சொல்லிவிட்டு உங்கள் குரலிலேயே கதை திருப்பத்தை பதிவு செய்யுங்கள். மிகச்சிறந்த கதைத் திருப்பத்தை வைத்து அடுத்த அத்தியாயத்தை நகர்த்துவார் தேவிபாலா. அத்தகைய எபிசோடை சூப்பராக படைக்கும் வாசகிக்கு சூட்கேஸ் பரிசு! இதழ் வெளிவரும் வாரத்தின் சனிக்கிழமை அன்று மாலைக்குள் கதைத் திருப்பத்தை பதிவு செய்ய மறக்காதீர்கள்!