Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

Published:Updated:
##~##

லட்சத்தில் ஒருவன்

 ட்சத்தில் ஒருவனின்
இண்டிகா காரின்
ரேடியேட்டர் ஃபேன்தான்
18,000 கிலோ மீட்டரிலேயே
புகைந்துபோகிறது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லட்சத்தில் ஒருவனின்
கடைவாய்ப்பல்
பிடுங்கும்போதுதான்
ஒரு வாரத்துக்கு
நிற்காமல்
ரத்தம் வழிகிறது

லட்சத்தில் ஒருவன்தான்
அடிமைகளுக்கே
அடிமையாய் இருக்கிறான்

லட்சத்தில் ஒருவனுக்குத்தான்
அபூர்வ மலர் கிடைக்கிறது
அது
உதிரும் தருவாயில்.

- வே.பாபு

வன உலா

யணத்தினிடையே
நெடுஞ்சாலை நடுவே
குதித்தோடும் குரங்கை
வேடிக்கை பார்க்கவெனக்
குழந்தையை அதட்டி எழுப்பும்
அம்மாக்கள்
அறிந்திருப்பதில்லை
உறங்கும் குழந்தை
ஒரு வனத்தின் நடுவே
உலவிக்கொண்டிருக்கலாம்
என்பதற்கான
சாத்தியங்கள் பற்றி!

- கே.ஸ்டாலின்

சொல்வனம்

சகுனம்

வன் வீட்டைவிட்டுப் புறப்பட்ட
ஒரு காலை வேளையில்
குறுக்கே வந்தது
குட்டிகளை ஈன்று
இரண்டு நாட்களே ஆன
சாம்பல் நிற தாய்ப் பூனை ஒன்று
பூனை குறுக்கே வந்ததால்
கெட்ட சகுனமெனப் பரபரத்த
அவன்
கோபமுற்றுக் கீழே கிடந்த
கூரான கல்லெடுத்து
பூனை மீது வீச
கல்லடிபட்ட பூனை
துள்ளிக் குதித்துப் பாய்ந்தோடி
சாலையில் விரைந்த
பேருந்துச் சக்கரத்தில் நசுங்கி
துடிதுடிக்க இறந்துபோனது சாலையில்
குருதி உறைய
தாய்ப் பூனையைக் காணாத
குட்டிகள் ஏக்கத்தில் சுணங்கலாம்
பசியால் வாடலாம்
கொஞ்சம் கொஞ்சமாக
இறந்தும்போகலாம்
புறப்பட்டவன் சிறிது நேரம் தாமதித்து
எந்தச் சகுனமுமின்றி
தனது பயணத்தைத் தொடரலாம்
இரை தேடித் தனது இருப்பிடத்திலிருந்து
வெளிப்பட்ட பூனைக்கும்
தனது வீட்டிலிருந்து
பயணம் புறப்பட்ட அவனுக்கும்
யாருக்கு யார் கெட்ட சகுனம்?
அவனுக்குப் பூனையா
பூனைக்கு அவனா?

- பி.எஸ்.குமார்

சொல்வனம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism