வடக்கு ஆப்கானிஸ்தானில் கானாபாத் என்ற கிராமத்தில் நூர் முகமது என்ற ஏழை இருந்தான். அவன் கடவுள் மீது மிகவும் பற்றுக்கொண்டவன். பகல் முழுவதும் வயலில் பாடுபட்டு உழைப்பான். கிடைக்கும் சொற்பத் தொகையைக் கொண்டுபோய் மனைவியிடம் கொடுப்பான். தன் வறுமையை நினைத்துத் துயர்கொள்வான்.

ஒரு நாள் அவன், ''கருணையுடைய கடவுளே, வாழ்நாள் முழுதும் உன்னை வணங்கி வரும் எனக்கு நல்ல வழி காட்டக் கூடாதா? இதோ, என் அடுப்பில் பாதி நாள் பூனை தூங்குகிறது. இந்த அடுப்பில் இருந்து தங்கக் காசுகள் கிடைக்கும்படி செய்ய மாட்டாயா?'' என்று மனம் உருகிப் பிரார்த்தனை செய்தான்.

பிரார்த்தனை முடிந்து, நூர் முகமது மற்ற வேலைகளைப் பார்க்கச் சென்றான். மீண்டும் பிரார்த்தனைக்கான நேரம் வந்தபோது... அவன் தனது அடுப்பில் இருந்து தங்கக் காசுகள் கிடைக்க வேண்டும் என்று மீண்டும் வேண்டிக் கொண்டான்.

ஒரு நாள் நூர் முகமது வயலில் வேலை செய்துகொண்டு இருந்தான். முட் செடிகளை வெட்டி அகற்றும்போது, முள்ளில் சிக்கி, அவன் சட்டை கிழிந்துவிட்டது. அவன் மிகவும் வருத்தப்பட்டான். ஆயினும் அந்த இடத்தில் தொடர்ந்து வெட்டிக்கொண்டே இருந்தான். அப்போது, மண்வெட்டி 'ணங்’ என எதன் மீதோ மோதும் ஓசை கேட்டது. கவனித்துப் பார்த்தபோது நிலத்துக்குள் பழைய செப்புக் குடம் ஒன்று இருந்தது. குடத்துக்குச் சேதம் ஏற்படாமல் அதை மெதுவாக வெளியே எடுத்தான் நூர் முகமது. திறந்து பார்த்தால் குடத்தின் கழுத்து வரை தங்க நாணயங் கள் தக தகவென மின்னின.

ஏழையான நூர் முகமதுக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், அவனது மகிழ்ச்சி சட்டென்று துக்கமாக மாறியது. அவன் கடவுளிடம் மன்றாடினான்...

''கடவுளே! என் வீட்டு அடுப்பில் தங்க நாணயங்கள் கிடைக்க வேண்டும் என்றுதானே பிரார்த்தனை செய்தேன். இந்த வயலில் கிடைத்த தங்கக் காசுகள் எனக்கு வேண்டாம். இதை நீங்களே திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று வேண்டிக்கொண்டான்.

பிறகு குடத்தை அங்கேயே புதைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றான். வயலில் நடந்ததை மனைவியிடம் சொன்னான். கையில் கிடைத்த செல்வத்தை விட்டுவிட்டு வந்த கணவன் மீது மனைவிக்குப் பயங்கரக் கோபம். அவள் முணுமுணுத்தபடியே சாப்பாடு பரிமாறினாள். நூர் முகமது எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டுத் தூங்கிப் போனான்.

புதையலைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருந்த மனைவிக்குத் தூக்கம் வரவில்லை. அடுத்த வீட்டில் இருந்த ஜன் முகமதுவையும் அவன் மனைவியையும் எழுப்பினாள். தன் கணவனுக்குக் கிடைத்த புதையலைப் பற்றிச் சொன்னாள்.

தனக்கு உதவினால் புதையலின் பாதியை ஜன் முகமதுக்குக் கொடுப்பதாக அவள் வாக்குக் கொடுத்தாள். பேராசைக்கார ஜன் முகமது, உடனே வயலுக்குப் புறப்பட்டான். புதையல் இருக்கும் இடத்தையும் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்து விட்டான். குடம் அங்கேயேதான் இருந்தது. ஜன் முகமது பேராவலுடன் குடத்தை எடுத்துத் திறந்தான். அடுத்த நொடி அஞ்சி நடுங்கிவிட்டான். குடம் நிறைய விஷப் பாம்புகள் நெளிந்துகொண்டு இருந்தன. உடனடியாகக் குடத்தை மூடிவிட்டான். பாம்புகளில் ஏதாவது ஒன்று அவனைக் கொத்தி இருந்தால், அவன் உடனடியாக இறந்து இருப்பான்.

'இது நூர் முகமதின் மனைவி செய்த சதி வேலைதான். என்னையும் என் குடும்பத்தையும் அழித்துவிட்டு, என் சொத்துக்களைக் கைப்பற்றும் நோக்கமாக இருக்கும்’ என்று தவறாக யூகித்தான். நூர் முகமதின் மனைவியைப் பழிவாங்க முடிவு செய் தான்.

பிறகு, ஜன் முகமது குடத்தைச் சுமந்துகொண்டு நூர் முகமதுவின் வீட்டை நெருங்கினான். 'ஏமாற்றுக்காரி உள்ளே தூங்கிக்கொண்டு இருக்கிறாள். நம் வேலையை முடிக்க வேண்டியதுதான்’ என்று நினைத்தவாறு வீட்டுக் கூரை மீது ஏறினான். சமையல் அறையின் புகைபோக்கிக் குழாயை நெருங்கி, உள்ளே குடத்தைப் போட்டான்.

''அழிந்து போகட்டும்! பாம்புகள் கடித்து எல்லோரும் தொலைந்து போகட்டும்!'' என்று சபித்தவாறு திருப்தியுடன் கீழே இறங்கி னான் ஜன் முகமது. ஒன்றும் அறியாதவனைப் போலத் தன் வீட்டுக்குச் சென்றான்.

வழக்கம்போல அதிகாலையில் எழுந்தான் நூர் முகமது. குளித்து முடித்துவிட்டுப் பிரார்த்தனை செய்துவிட்டுத் தன் வீட்டு அடுப்பைப் பார்த்தவனுக்கு ஆனந்தமும் ஆச்சரியமும் காத்திருந்தது. அடுப்பு நிறையத் தங்க நாணயங்கள்!

''கடைசியில் கடவுள் கருணை காட்டிவிட்டார்!'' என்று உற்சாகத்துடன் சொன்ன நூர் முகமது, தன் மனைவியை அழைத்து... தங்க நாணயங்களைக் காட்டினான்.

''இதைப் பார்! இதை எல்லாம் நாம் எடுத்துக்கொள்ளலாம். என் அடுப்பில் செல்வம் தந்தால்தான் நான் எடுத்துக் கொள்வேன் என்று கடவுளிடம் வேண்டி இருந்தேன். என் பிரார்த்தனை பலித்தது. கடவுளுக்கு நன்றி!'' என்றான்.

அதன் பிறகு வெகு காலம், நூர் முகமதுவும் அவன் குடும்பத்தினரும் வளமாக வாழ்ந்தார்கள்.