Published:Updated:

ஓல்கா டோகார்ஷுக், பீட்டர் ஹாண்ட்கே... நோபல் இலக்கியவாதிகள்...! யார் இந்தக் கதை சொல்லிகள்?

நோபல்
நோபல்

ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த பீட்டர் ஹாண்ட்கே 76 வயதானவர்.

உலக அரங்கில் மாபெரும் மதிப்பாகக் கருதப்படுவது நோபல் பரிசு. ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற விஞ்ஞானியின் பெயரால் ஒவ்வோர் ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை புரிந்தவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படுகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் மற்ற எல்லா விருதுகளும் வழங்கப்படும். கடந்த மூன்று நாள்களாக மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட துறைகளில் நோபல் பரிசு வென்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இன்றைய தினம் ஸ்வீடனில் 2018 மற்றும் 2019 ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

The Nobel Prize
The Nobel Prize

2018-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு போலந்து நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஓல்கா டோகார்ஷுக்குக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டிற்கான நோபல் பரிசை ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த பீட்டர் ஹாண்ட்கேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓல்கா டோகார்ஷுக்

#MeToo விவகாரம் தொடர்பாக கடந்த வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை. எனவே, இந்த ஆண்டு சென்ற ஆண்டுக்கான விருதும் சேர்த்தே வழங்கப்பட்டுள்ளது. 2018-ம் வருடத்துக்கான இலக்கிய நோபல் விருது போலாந்து நாட்டைச் சேர்ந்த 57 வயது எழுத்தாளர் ஓல்கா டோகார்ஷூக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. "எல்லைகள் கடந்த தேடலையும் பேரார்வத்தையும் வெளிப்படுத்தும் படைப்புகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது'' எனப் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.

Olga Tokarczuk
Olga Tokarczuk
`கோள்கள், பேரண்டம் குறித்த ஆய்வு' - இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூவர்

ஓல்கா எழுதிய “ஃப்ளைட்” என்னும் நவீனப் புனைவுக்காகக் கடந்த ஆண்டு புக்கர் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அவருக்கு நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நோபல் அறிவிக்கப்பட்டதை அடுத்து நோபல் பரிசு கமிட்டியின் சமூக ஊடகத் தளத்திலிருந்து ஓல்காவை அழைத்துப் பேசியிருக்கிறார்கள். அப்போது ''எனக்கு நோபல் பரிசுத் தரப்பட இருப்பதாக 15 நிமிடங்களுக்கு முன்புதான் தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்கள். நான் இன்னும் சுயநினைவுக்குத் திரும்பவில்லை. நிகழ்பவை அத்தனையும் உண்மைதான் என்பதைக் கூட என்னால் நம்பமுடியவில்லை.

ஓல்கா தனது மொழிபெயர்ப்பாளருடன்...
ஓல்கா தனது மொழிபெயர்ப்பாளருடன்...

நான் தற்போது பயணத்தில் இருக்கிறேன். வழியில் எங்காவது ஹோட்டலில் ஒரு அறை எடுத்துத் தங்கி முதலில் என்னை நான் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும்.'' என்று ஒரு குழந்தையைப்போல பதற்றமாகப் பேசியிருக்கிறார் ஓல்கா.

மேலும், “மேற்கு ஐரோப்பாவை மட்டுமே ஐரோப்பாவாகக் கருதும் உலகில் மத்திய ஐரோப்பா பற்றிய என் கதைகளுக்காக இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. நாங்கள் இன்னும் எங்கள் கதைகளை நிறைய பேசுவதற்கான உந்துதலாக இந்தப் பரிசு நிச்சயம் தரும்” என்று தெரிவித்திருக்கிறார் ஓல்கா.

பீட்டர் ஹாண்ட்கே

2019 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பீட்டர் ஹாண்ட்கேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. "தனி மனித அனுபவத்துக்குட்பட்ட பரப்பில் மொழியியல் தன்மையும், புத்திக் கூர்மையும் கொண்ட படைப்புகளைக் கொடுத்தமைக்காக ஹாண்ட்கேவுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது'' என்று நோபல் பரிசு கமிட்டி கூறியுள்ளது.

Peter Handke
Peter Handke
`ரீசார்ஜபிள் உலகை உருவாக்கியவர்கள்'- வேதியியலுக்கான நோபல் பரிசை தட்டிச் சென்ற மூவர்!

ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த பீட்டர் ஹாண்ட்கே 76 வயதானவர். 'பாரிஸ் தேக்காஸ்' (Paris Texas) படத்தின் இயக்குநரான விம் வெண்டர்ஸ் (Wim Wenders) திரைப்படங்களில் பணிபுரிந்திருக்கிறார். ஹாண்ட்கேவின் புகழ்பெற்ற நாவல்கள் பலவும் இதுவரை படமாக்கப்பட்டுள்ளன.

திரைக்கதை எழுதுவதோடு மட்டுமல்லாமல் `தி லெஃப்ட் ஹேண்டட் வுமன்' (The Left-Handed Woman), `தி ஆப்சன்ஸ்' ( The Absence) என்ற இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார் ஹாண்ட்கே. காப்கா விருது உட்பட இலக்கியத்துக்காக பல விருதுகளை வென்றுள்ள பீட்டர் ஹாண்ட்கேவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

118 ஆண்டுகளில் முதல்முறை! - அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட நோபல் பரிசு
பீட்டர் ஹாண்ட்கே வுடன் விம் வெண்டர்ஸ்
பீட்டர் ஹாண்ட்கே வுடன் விம் வெண்டர்ஸ்

"ஒரு தேசம் ஒரு கதைசொல்லியை இழக்கும்போது, அது தனது குழந்தைப் பருவத்தையும் இழக்கிறது." என்ற ஹாண்ட்கேவின் சொற்றொடர் மிகவும் பிரபலமானது.

இரண்டு கதைசொல்லிகளுக்கும் வாழ்த்துகள்.

அடுத்த கட்டுரைக்கு