Published:Updated:

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

Published:Updated:
##~##

மாற்றம்

 ங்கும்
வெயில் பரவிய
ஒரு காலையில்
தாய்க் கிளி
கனிகளைச் சுவைத்துக்
கீழே போட்ட
விதையில் முளைத்த
மரங்களின் கனிகளைச்
சுவைக்கிறது
சேய்க் கிளி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேய்க் கிளிக்கு
செல்லும் இடம் எங்கும்
திகட்டத் திகட்டக்
கனிகள் கிடைக்கின்றன.

தனது சந்ததிக்காக
தானும்
மரங்களையும் கனிகளையும்
தந்துவிட்டு
சேய்க் கிளி
செல்ல வேண்டும்.

தான் சுவைத்துக்
கீழே போட்ட
விதைகளின் துளிர்களைக் காண
பறந்து அலைகிறது
ஒரு பகல் முழுவதும்

சிறிதும் துளிர்விட முடியாமல்
புவியின் மண் பரப்பில்
புதைந்தும் புதையாமலும்
பரவிக்கிடக்கின்றன
அம்மரபணு விதைகள்.

- பி.எஸ்.குமார்

பிஞ்சு

கைகளும் பிஞ்சு
கைகளிலும் பிஞ்சு
வெள்ளரி விற்கும் சிறுமி.

- ஸ்ரீதர்பாரதி

விளையாட்டு

ன் பாடப் புத்தகத்தில் இருக்கிற
படங்களைக் காட்டி
'ஆப்பிள் வேணுமா...’
'கேக் வேணுமா’ என்று
வெறும் கையால் ஊட்டுகிறாள்
பாப்பா.
நானும் விழுங்கி
ஏப்பம்விடுகிறேன்.

கப்பல், விமானம், யானை என்று
வெறும் கையை
என் சட்டைப் பைக்குள் திணித்து
'பத்திரம்’ என்கிறாள்
'சரி’ என்று சிரிக்கிறேன்.

சிறிது நேரத்தில்
திருப்பிக் கேட்டு
ஒவ்வொன்றாய் எடுக்க
யானை மட்டும்
காணவில்லை என்று
அழத் தொடங்குகிறாள்.

சட்டைப் பைக்குள் கைவிட்டு
தேடத் தொடங்குகிறேன் நான்
நிஜமாகவே!

- ஹேமா செல்வராஜ்

வாழ்வனுபவம்

தூரத்தே
கருத்தது மாதிரி தெரிந்த
வானத்தின் மீது நம்பிக்கை வைத்து
அப்போதைய
அனல் காற்றைச் சபிக்காது
தாங்கி நடந்தாள் நாகு பாட்டி

ஒரு மூர்க்கனோடு
காலம் முழுக்க
வாய் பேசாது
வாழ்ந்து முடித்ததைப் போலவே!

- எஸ்.வி.வேணுகோபாலன்

சொல்வனம்!

அறகழூர் அப்பத்தா

காதுத் தண்டட்டிகள்
தோள்களில் குலுங்க
பச்சை குத்திய கரங்களின்
நரம்புகள்
பாம்புகளாய்ப் புடைக்க
வெற்றிலை இடித்து
வெறும் வாயில் குதப்பி
எதிர்ப்படும் எச்சிலை
இரு விரல்கொண்டு
லாகவமாய்
திண்ணையில் அமர்ந்தபடி
தெரு நடுவில் துப்பும்
அறகழூர் அப்பத்தா
தன் எண்பதாம் வயதின்
இறுதியில் இறந்துபோனாள்
ஒரு நாள்.
கிராமத்தின் ஆவணமாய்
இருந்த அவளோடு சேர்ந்து எரிந்து
சாம்பலோடு சாம்பலாயின
சொற்கள் தெறிக்கும்
சொலவடைகளும்
கணக்கில் அடங்காத
கதைப் பாடல்களும்.

- அ.ஸ்ரீதர் பாரதி

சொல்வனம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism