நடிப்பு : ஐஸ்வர்யா
கலை : ஸ்யாம்
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா
இயக்கம் : நீங்களேதான்

''நீ ஒரு சண்டாளி, கொலைகாரி... ஆபாசமான அம்மா! போ! போயிடு!'' என்று ஆனந்த் கூச்சலிட, ரத்த அழுத்தம் சரசரவென ஏற, முகம் கோணி, வாயில் நுரை தள்ள... இரண்டு டாக்டர்கள் ஓடி வந்தனர். ஆனந்த், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லப்பட்டான். கதவின் உச்சியில் அபாயத்தை அறிவிக்கும் சிகப்பு விளக்கு எரிய, ராஜம் நிலைகுலைந்து நின்றாள்!

ஆனந்துக்கு என்ன நேரப் போகிறது?!

- என்று கடந்த எபிசோட் முடிந்திருக்க... இங்கே பல டிவிஸ்ட்டுகளைத் தட்டிவிட்டு, பட்டையைக் கிளப்பியுள்ளனர் தோழிகள்!

மயிலாப்பூர் - உஷா, ஜானகி ரங்கநாதன், ஆலந்தூர் - ஜே.சி. ஜெரினாகாந்த் இந்த மூவரும், நோயாளி ஆனந்துக்கு... வீட்டில் வைத்து இனி துர்கா செய்யப் போகும் பணிவிடைகளை எதிர்பார்க்கிறார்கள்!

ஈரோடு - யசோதா பழனிச்சாமி, மேற்கு மாம்பலம் - பத்மா குமார் இந்த இரு வாசகிகளும், 'கிட்னி பழுது' என்று ஆரம்பித்து, சிறுநீரக தான சென்ட்டிமென்ட்டை கையில் எடுத்துள்ளனர்!

குளித்தலை - எஸ்.மங்கை, புதுப்பட்டி - சுபா ராஜ்குமார்... நிறைய சொல்ல ஆசைப்படுகிறார்கள் இந்தச் சகோதரிகள். ஆனால், இன்னும் தெளிவாக ஓர் இலக்கை நோக்கிச் சேரவில்லை இவர்களுடைய முயற்சி!

மதுரை - பானுமதி... அம்மா, பிள்ளை இருவரையும் மருத்துவமனையில் ஒருசேர அட்மிட் செய்து, ஏகத்துக்கும் சோகரசம் பிழிகிறார்!

சிவகாசி - சுதந்திர தேவி.... ஆனந்த்தை கோமா நிலைக்கு கொண்டு போயிருக்கும் இந்தச் சகோதரி, அவனுக்கு நினைவிருக்கும்போதே துர்காவின் மறுமணப் பேச்சையும் ஆரம்பித்து, கதையில் புரட்சி செய்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் முயற்சித்திருந்தால், நிச்சயம் முதலிடம்தான். பெட்டர் லக் நெக்ஸ் டைம்!

பெங்களூரூவைச் சேர்ந்த பிரியா முகுந்த்... மனநிலை பாதிப்பு - வெளிநாட்டில் சிகிச்சை... என இரண்டு மைனர் பாயின்ட்டுகளைத்தான் சகோதரி.... தொட்டிருக்கிறார். ஆனால், அடுத்த கதையை அவரையும் அறியாமல் ஆரம்பித்திருப்பதன் மூலம்... இந்த எபிசோட் இயக்குநர் நாற்காலியில் ஜம்மென்று ஏறி அமர்கிறார்! வாழ்த்துக்கள் தோழியே!

அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கையில் ஆனந்த் கிடத்தப்பட்டிருக்க... உடலின் பெரும்பாலான பாகங்களில் இருந்து ஒயர்கள் புறப்பட்டு பலவித மான மருத்துவச் சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருக்க, இரண்டு டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள்... அங்கே தீவிரமாக இயங்கிக் கொண்டுஇருந்தனர்!

''அவங்க வீட்டுக்குத் தகவல் சொல்லுங்கம்மா... சீக்கிரம்...''
முதலில் பார்த்த நர்ஸ் வெளியே ஓடி வந்தாள்.
''என்னாச்சு என் பிள்ளைக்கு?''
- ராஜம் அலறினாள்.

''பேசாம இரும்மா. நீ ஏதோ சொல்லித்தான் அவருக்கு இந்த நிலைமை.''

ரிசப்ஷனுக்கு வந்து நம்பர் தேடி நர்ஸ் போன் அடிக்க, எடுத்தது நடேசன். அடுத்த ஒரு மணி நேரத்தில் குடும்பமே மருத்துவமனையில் ஆஜர். ராஜம் கதறி அழுதுக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் குழம்பிப் போனார் நடேசன். தனக்கு போன் செய்த நர்ஸைக் கண்டுபிடித்து, தனியே அழைத்து வந்தார்.

''அந்தம்மா உள்ளே போய், என்ன பேசினாங்கனு தெரியல. அவர் கூச்சல் போட்டார். 'நீ ஒரு சண்டாளி, கொலைகாரி’னு அவர் கத்தினது என் காதுல விழுந்தது. உள்ளே ஓடினப்ப... முகம் கோணி, வாய்ல நுரை தள்ளிக் கிட்டிருந்தது.''

நடேசன் ஆவேசமாகிவிட்டார். கல்பனா, சுதா அருகில் வந்து கேட்க, விவரம் சொன்னார். ராஜத்தை நோக்கி விரைந்தார். சுதா தடுத்தாள்.

''அம்மாவை தண்டிக்க இது நேரமில்லை. அண்ணன் பிழைக்கணும்.''
துர்கா டாக்டரிடம் பேசிக் கொண்டு இருந்தாள். கூடவே அன்வர்.
''ஏழு மணி நேரம் தாண்டணும். ஸாரி... எதுக்கும் நீங்க தயாரா இருக் கணும். கடவுளை நம்புங்க!''
- டாக்டர் பளிச்சென சொல்லி விட்டார்.

வராகன், பாலாஜி, செந்தில் அனைவரும் வந்துவிட... ராஜம், நடேசனை நெருங்கினாள்.

''ஐயோ... எனக்குனு சொல்லிக்க, அவன் ஒருத்தன்தானே இருக்கான். அவனுக்கு ஏதாவது ஒண்ணுனா, உயிர் அப்பவே போயிடும்...''

''பொய் சொல்லாதேடி. யார் செத்தாலும், நீ உயிரோட இருப்பே! என்னவோ பேசி, அவனை சாகடிச்சுட்டா, துர்கா தாலியைப் பறிச்சுடலாமில்லையா..? மகன் செத்தாலும் தப்பில்லை... மருமக தாலி அறுத்தா சந்தோஷம்னு நினைக்கற கேடுகெட்ட அம்மாக்கள் நிறைய இருக்காங்க. உன்னை ஆதரிச்ச பாவத்துக்குத்தான் மரணப்படுக்கையில கிடக்கான்.''

துர்கா அருகில் வந்தாள்.

''மாமா... நான் கோயிலுக்குப் போயிட்டு வந்துடறேன்.''

''சாகணும்னு வேண்டிக்கப் போறியா?''

''பாத்தியம்மா? இப்பக்கூட உங்கிட்ட உள்ள பகை, இவள விட்டு போகல. இனியும் இவள விட்டு வைக்கலாமா?''

துர்கா பேசவேயில்லை. சுதா அருகில் வந்தாள்.

''அப்பா... நீங்களும் அண்ணிகூடப் போங்க.''

''சரிம்மா.''

இருவரும் வெளியேற, சுதாவிடம் செந்தில் வந்தான்.

''சுதா... நிலநடுக்கம் உண்டானப்ப, தன் உயிரைக் காப்பாத்திக்க உங்கம்மா ஓடினாங்க இல்லையா? அங்கேதான் உங்கண்ணனுக்கு உச்ச கட்ட அதிர்ச்சி. 'இந்த அம்மாவுக்காகவா துர் காவை கொலை செய்ற வரைக்கும் போனோம்?'னு உள்ளுக்குள்ள உடைஞ்சுருக்கார். இப்பவும் ஏதோ தப்பா பேச, தாள முடியாம கத்தியிருக்கார்.''

அன்வர் அருகில் வந்தான்.

''ஆமாம் செந்தில்... நிச்சயமா ஆனந்த் சார் திருந்திட்டார்!''

''என்ன லாபம்? உயிருக்கு போராடறானே எங்கண்ணன்?''

கல்பனா நெருங்கினாள்.

''ஆனந்த் பிழைச்சுப்பான். துர்கா இப்ப கோயிலுக்குப் போயிருக்கா. ஒரு நல்ல மனைவி யோட பிரார்த்தனை வீண் போகாது.''

வராகன் அருகில் வந்தார்.

''முதல்ல உங்கம்மாவை நாடு கடத்தணும். ஆனந்த் கண்ல அவங்க படவே கூடாது.''

இவர்கள் கூடிப் பேசுவதை ஒரு ஓரமாக உட்கார்ந்து ராஜம் பார்த்துக் கொண்டிருக்க... கல்பனா, சுதா இருவரும் அவளை நெருங்கி னார்கள்.

''இங்கே உனக்கென்ன வேலை? வீட்டுக்குப் புறப்படு.''

''என் பிள்ளை பிழைக்கணும். அவனைப் பார்த்துட்டுத்தான் நான் போவேன்.''

''உனக்கு வெக்கமாயில்லை? அவனே உன்னை வாய்க்கு வந்தபடி திட்டின பிறகுதான் இந்த நிலை வந்திருக்கு. புருஷன், புள்ளைங்க எல்லாரும் வெறுத்த பிறகும், எப்படி உயிரோட இருக்கே?''

''நான் பெத்த பொண்ணுங்களாடீ நீங்க?''

''இதப்பாரும்மா... அம்மாக்கள் எத்தனை விஷத்தைக் கக்கினாலும் அமுதம்னு பொண்ணுங்க ஏந்திக்கற காலம் முடிஞ்சாச்சு. இனி நியாயத்தை ஏத்துக்கற காலம். நீ தனியாத்தான் வாழணும். மருமகள பழி வாங்கற மாமியாரா நீ இன்னும் நீடிச்சா... நரகத்துக்குத்தான் போவே!''

''உங்களையெல்லாம் அவ மாத்திட்டா. என்னை ஆனந்த் பாத்துக்கலனா, சும்மா விடமாட்டேன். அவன் பிழைச்சு எழுந்து வந்து, நீங்கள்லாம் தூண்டிவிட்டு அவன் என்னை உதறினா, பிள்ளை பாத்துக்கலனு போலீஸ்ல புகார் குடுப்பேன். துர்காவையும் இழுப்பேன்.''

கல்பனா, சுதா மிரண்டு போனார்கள். சுதா வந்து சகலமும் செந்திலிடம் சொன்னாள்.

''எங்கம்மா மேல ஏதாவது கேஸ் புக் பண்ணி, உள்ளே போட முடியுமானு பாருங்க. அவங்க வெளில இருந்தா, விபரீதம்.''

அதேநேரம் டாக்டர் வெளியே வர, செந்திலும், அன்வரும் அவரை நெருங்கினார்கள்.

''எல்லாமே கொலாப்ஸ் ஆகியிருக்கு. உணர்ச்சியோட உச்சத்துக்கு போய் கூச்சல் போட்டிருக்கார். அதனால நாங்கள்லாம் நெனச்சுப் பாக்க முடியாத உச்சத்தை ரத்த அழுத்தம் தொட்டிருக்கு. மூளைக்கு ரத்தம் சரியா போகல. பிழைக்கறதே ரொம்பக் கஷ்டம். பிழைச்சாலும் பழைய ஆனந்தா இருக்க முடியாது. இதயம், சிறு நீரகங்கள் பழுதாகலாம். கோமா நிலைக்குக்கூட போகலாம். கடவுளை வேண்டிக்கோங்க!''

அனைவரும் வெளியே வர, கோயிலிலிருந்து துர்கா, நடேசன் திரும்ப, அன்வர் விவரத்தைச் சொன்னான். துர்கா ஒரு மாதிரி இறுகிப் போயிருந்தாள்.

''சரி... வீட்டுக்குப் போலாம்க்கா.''

''அம்மாவை இங்கிருந்து அப்புறப்படுத்தணும். ரொம்ப கிரிமினலா பேசறாங்கப்பா.''

''அதை நான் பாத்துக்கறேன்'' என்ற செந்தில், ராஜத்திடம் வந்தான்.

''இதப்பாருங்க... இங்கே யாரும் இருக்கக் கூடாதுனு டாக்டர் சொல்லிட்டார். வீட்ல நான் கொண்டு போய் விடறேன் வாங்க.''

''நான் வரல.''

''ஆனந்த்தோட இந்த நிலைமைக்கு நீங்கதான் காரணம்னு டாக்டரை புகார் தரச் சொல்வேன். நர்ஸ் சாட்சி. உங்களை, உள்ளே போட்டு, பெண் போலீஸை விட்டு நாலு தட்டு தட்டினாத்தான் சரியாகும்.''

ராஜம் மிரண்டாள்.

''சரி... நான் போறேன்.''

''ஜீப்புல ஏறுங்க. வீட்ல உங்களை விட்டுட்டு நான் போறேன்.''

கட்டாயப்படுத்தி ஏற்றினான். சகலத்தையும் இரண்டு நர்ஸ்கள் பார்த்துக் கொண்டிருக்க... டாக்டரிடமிருந்து அழைப்பு. இருவரும் உள்ளே ஓடினார்கள்.

''ஆனந்த் பக்கத்துலேயே நீங்க இருக்கணும். ஒரு சின்ன அசைவு தெரிஞ்சாக்கூட உடனே எனக்குச் சொல்லணும்.''

''சரி டாக்டர்.''

மற்றவர்கள் வீட்டுக்கு வந்துவிட, அஞ்சு, துர்காவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஏதோ பேச, அஞ்சுவை உள்ளே அழைத்துப் போனாள் சுதா. நடேசன், அன்வர், வராகன் மூவரும் துர்கா அருகில் வந்து உட்கார, கல்பனாவும் உடனிருந் தாள்.

''இதப்பாரு துர்கா... யதார்த்தம் என்னானு இப்பப் பேசியாகணும். அவன் பிழைக்கறதே கஷ்டம். பிழைச்சாலும் முழுமையா இருக்க வாய்ப்பு இல்லைனு டாக்டர் சொல்லியாச்சு. ஸாரிம்மா... அவன் போயிடறதே நல்லது துர்கா!''

அவள் பேசவில்லை!

''ஒரு ஜடமா இருக்கறவனைக் கட்டிட்டு போராட முடியாது. உனக்குனு ஏராளமான கடமைகள் இருக்கு. பெண் குழந்தையை ஆளாக் கணும். உன்னை நம்பி நாங்க எல்லாரும் இருக் கோம். பெரிய நிறுவனத்துக்கு நீ அதிகாரி. கோடிக்கணக்கான பிஸினஸ். ஒரு நல்ல குடும்பத் தலைவியாவும், சமூகப் பொறுப்புள்ள ஒரு மனுஷியாவும் நீ வாழ... இந்தப் புருஷன் தடையா இருக்கக்கூடாது துர்கா!''

கல்பனா, சுதா இருவருமே அதை ஆமோதித் தனர்.

''என்ன வந்தாலும் ஏத்துப்போம். நாங்க சொல் றதை கொஞ்சம் கேளு துர்கா!'' என்றார் நடேசன். துர்காவின் வாயிலிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை!

ஏறத்தாழ 24 மணி நேரம் ஓடிவிட... ஆஸ்பத்திரியிலிருந்து அழைப்பு. டாக்டர் வரச் சொன்னார். எல்லாரும் கூடிவிட்டார்கள்.

''துர்கா... ஆனந்த் பிழைச்சாச்சு!''

''அப்படியா டாக்டர்?!''

- துர்காவின் குரலில் அத்தனை சந்தோஷம்.

''ஆனா... மூளை பாதிக்கப்பட்டிருக்குனு தோணுது. யாரையும் அடையாளம் தெரியல. ஒரு மாதிரி நிலைச்ச பார்வை பார்க்கறார்.''

''கோமாவா டாக்டர்?''

- செந்தில்.

''கோமா இல்லை. எல்லா இயக்கமும் இயல்பா வந்தாச்சு. ஆனா, மூளை அடங்கியிருக்குனு தோணுது. அதுக்கான ஸ்பெஷல் ஸ்கேன் எல்லாம் எடுக்கச் சொல்லியிருக்கோம். ரெண்டு பேர் மட்டும் உள்ள வாங்க.''

துர்காவும் நடேசனும் மட்டும் உள்ளே வந் தார்கள். சாய்ந்து உட்கார வைக்கப்பட்டிருந்தான் ஆனந்த்.

''ஆனந்த்... நான் துர்கா வந்திருக்கேன்!''

திரும்பவேயில்லை!

நடேசன் நெருங்கித் தொட்டு, ஏதோ கேட்க, ஸ்பரிசத்தில் திரும்பியவன், அறிமுகம் இல்லாதவரைப் போலப் பார்த்தான். அடுத்தடுத்து சுதா, கல்பனா, அஞ்சுவைக் கூட அழைத்து வந்துவிட்டார்கள். பலனே இல்லை. ராஜத்தை வரவழைக்கலாம் என நினைத்து, செந்தில் போய் அழைத்துவர, ராஜம் அழுது கொண்டே உள்ளே வர, இப்போது மட்டும் முகத்தில் ஒரு வெறி - நரம்புகளில் இறுக்கம்! உடம்பு நடுக்கம் - அதைத் தொடர்ந்து மயக்கம்!

டாக்டர், நடேசனிடம் வந்தார்!

''பாதிப்பு அந்தம்மாவால. அந்த வைப்ரேஷன் மட்டும் இருக்கு மனசுல!''

''இப்ப என்ன செய்யலாம்?''

''ஒரு வாரம் ட்ரீட்மென்ட் கொடுக்கறோம். ட்ராக்ஷன், ஷாக் எல்லாம் தந்து பாக்கறோம்.''

துர்கா அருகில் வந்து, ''எத்தனை செலவானாலும் பரவால்லை டாக்டர்...'' என்றாள்.

ஒரு வார காலம் குடும்பமே ஆஸ்பத்திரிக்கும், வீட்டுக்குமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். ஆனந்த் எழுந்து உட்கார்ந்து விட்டான். உணவு உள்ளே போனது. ஆனால், மூளைக் கலக்கம் மாறவே இல்லை. சிலசமயம் அழுகை, சிலசமயம் இறுக்கம் - பெரும்பாலும் பயம்... சிலசமயம் மூர்க்கம் என எல்லாமே இருந்தது. ஒரு வாரம் கழித்து டாக்டர் அழைத்தார்.

''இனிமே இங்கே வெச்சுக்க முடியாது. எங்க எல்லைகளை அவர் தாண்டறார். ஒண்ணு, மென்ட்டல் ஆஸ்பத்திரில சேர்க்கணும். நான் லெட்டர் தர்றேன். அல்லது வீட்ல வெச்சு பாக்கணும். என்ன செய்யப் போறீங்க?''

வெளியே வந்தார்கள். ராஜம் நின்றாள்.

''துர்கா... புள்ளையை விட்டு இவதான் பிரிய மாட்டாளே. மூளை கலங்கின மகனை இவ பாத்துக்கட்டும்!'' என்றார் நடேசன்.

''எனக்கென்ன தலையெழுத்து?''

''பாத்தியா?''

''விடுங்க மாமா. வீட்ல போய்ப் பேசிக்கலாம்.''

வீட்டில் அனைவரும் கூடியிருந்தார்கள்.

''துர்கா... நீ என்னம்மா சொல்ற?''

''மென்ட்டல் ஆஸ்பத்திரில அவரைச் சேர்த் துடலாம் மாமா.''

அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.

''மாமா... நான் மட்டும் தனி நபர்னா, வீட்ல வெச்சு பார்த்துப்பேன். இங்கே நிலைமை அதல்ல. அஞ்சுவை ஆளாக்கணும். சுதா கல்யாணம் நல்லபடியா நடக்கணும். நானும் வேலைக்குப் போனாத்தான் குடும்பம் வாழும். இந்த நிலைமை யில அவரை எப்படி வீட்ல வச்சுக்க முடியும்?''

- பரிதாபமாகக் கேட்ட துர்கா தொடர்ந்தாள்.

''சரி... மென்ட்டல் ஆஸ்பத்திரிக்கு லெட்டர் வாங்கிடலாம். ஆனந்த் குணமாகட்டும். செலவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.''

விஷயம் கேள்விப்பட்டு, அன்று மாலை தீபிகா வந்தாள். பரிதாபப்பட்டாள்.

''சுயபுத்தி இல்லாத ஒரு ஆம்பளை எப்படி சீரழிவான்னு ஆனந்தைப் பார்த்து இந்த உலகம் தெரிஞ்சுக்கட்டும். வெளிநாட்லகூட ட்ரீட் மென்ட் எடுக்கலாம் துர்கா.''

''முயற்சி பண்ணுங்க தீபிகா.''

''அத்தனை பணம் செலவழிக்க வேண்டாம் துர்கா'' என்றான் வராகன்.

''சார்... செலவை நான் ஏத்துக்கறேன்... துர்கா வுக்காக!'' என்று தீபிகா சொல்ல, துர்கா நெகிழ்ந்தாள்.

மறுநாள் ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டரிடம் லெட்டர் வாங்கி, ஆனந்தை டிஸ்சார்ஜ் செய்து, மென்ட்டல் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனார்கள். கூடவே துர்கா, நடேசன், அன்வர், செந்தில் போனார்கள். அங்கு டாக்டர் நாதமுனி - ஐம்பது வயது இருக்கலாம்... அவர் கடிதம் வாங்கிப் பார்த்தார். ஒன்று விடாமல் எல்லா விவரங்களையும் சொன்னார் நடேசன்.

''ஒரு அம்மா காரணமா... நாசமான பிள்ளையா? சரி... நான் இங்கே வெச்சு ட்ரீட்மென்ட் குடுக்கறேன்மா. குணப்படுத்தப் பாக்கலாம்.''

ஆனந்துக்கு ஒரு தனியறை ஒதுக்கப்பட்டது. உள்ளே கொண்டுபோய்விட, 'இருக்க மாட்டேன்' என முரட்டுத்தனம் செய்தான். பிறகு டாக்டர் லேசாக மிரட்ட, பயந்து அழத் தொடங்கினான். துர்கா வேதனைப்பட்டாள்.

''நீங்கள்லாம் போய் வேலையைப் பாருங்க. நாங்க பாத்துக்கறோம்'' என்று டாக்டர் வழியனுப்ப, அனைவரும் திரும்பினார்கள். அன்று இரவு துர்கா சாப்பிடவேயில்லை. அழுதாள்!

''என்னம்மா துர்கா?''

''இப்படி ஒரு வாழ்க்கை யாருக்கும் வரக் கூடாது மாமா...''

''நாம விதைச்சா, நாம அறுத்துத்தானே ஆகணும் துர்கா? நீ அவனை மறக்கக் கத்துக் கணும் துர்கா. உன்னோட அடுத்தகட்ட வாழ்வுக்கு நீ தயாராகணும்!''

அவள் பேசவில்லை. அஞ்சுவை அணைத்தபடி படுத்துவிட்டாள்.

இரவு பதினொரு மணிக்கு போன் அடித்தது. துர்கா ரிசீவரை எடுத்தாள்.

''நான் டாக்டர் நாதமுனி பேசறேன்மா...''

''என்ன டாக்டர்?''

''ஆனந்த் இங்கேயிருந்து தப்பிச்சிட்டார்மா... ஆஸ்பத்திரியே டென்ஷனா இருக்கு!''

துர்கா ஆடிப் போனாள்! உடனே செந்திலுக்கு போன் செய்தாள்!

ஆனந்த் எங்கே போனான்?!

- தொடருங்கள் தோழிகளே...
ஆடைகள் உதவி: பி.எம்.சில்க்ஸ்,
மயிலாப்பூர், சென்னை

''கடைக்கு புக் வர்ற அன்னிக்கே.... என் கைக்கும் வந்துடணும். முதல்ல 'துர்கா’வை வாசிச்சு முடிச்சாத்தான்... 'அப்பாடா’னு நிம்மதியா இருக்கும். ஆனா... என் கிரியேட்டிவிட்டி என்னைத் தூங்க விடாம தொல்லை பண்ணும். போன் செய்து, 'துர்கா’ கதை சொன்னவுடன்தான் அமைதியாகும் மனசு. அந்தளவுக்கு ஐ லவ் திஸ் சீரியல்'' - மூச்சு விடாமல் பேசுகிறார் பெங்களூரூவாசியான, இல்லத்தரசி பிரியா முகுந்த்.

''நார்த் இண்டியாவில் படிச்சு வளர்ந்தாலும், தமிழ் கத்துக்கிட்டது இப்படி கதைகள் மூலமாத்தான்'' என்று நெகிழ்ந்தார். வாழ்த்துக்கள் பிரியா!

இவருக்கு 'வி.ஐ.பி. சூட்கேஸ்’ அன்புப் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

வாசகிகளுக்கு சூப்பர் பரிசுப் போட்டி

இந்தஅத்தியாயத்தைப் படித்து முடித்ததுமே... அடுத்த அத்தியாயம் எப்படி என்பதை தீர்மானியுங்கள். அதை அப்படியே மனதில் வடித்துக் கொண்டாலும் சரி, எழுதி வைத்துக் கொண்டாலும் சரி... 044-66808023 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் பெயர், ஊரை முதலில் சொல்லிவிட்டு உங்கள் குரலிலேயே கதை திருப்பத்தை பதிவு செய்யுங்கள். மிகச்சிறந்த கதைத் திருப்பத்தை வைத்து அடுத்த அத்தியாயத்தை நகர்த்துவார் தேவிபாலா. அத்தகைய எபிசோடை சூப்பராக படைக்கும் வாசகிக்கு சூட்கேஸ் பரிசு! இதழ் வெளிவரும் வாரத்தின் சனிக்கிழமை அன்று மாலைக்குள் கதைத் திருப்பத்தை பதிவு செய்ய மறக்காதீர்கள்!