Published:Updated:

சின்னப் பாட்டியும் சூப்பர் காகமும் !

சின்னப் பாட்டியும் சூப்பர் காகமும் !

சின்னப் பாட்டியும் சூப்பர் காகமும் !

சின்னப் பாட்டியும் சூப்பர் காகமும் !

Published:Updated:
சின்னப் பாட்டியும் சூப்பர் காகமும் !

''ஓர் ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருந்தாங்க' என்று கதை சொல்லத் தொடங்கினார் தாத்தா சிங்காரவேல்.

பேரன் பரத்தும் பேத்தி பவ்யாவும், ''தாத்தா! அந்தக் கதை எங்களுக்குத் தெரியும். வேற சொல்லுங்க'' என்றார்கள். தாத்தாவுக்கு என்னவோபோல ஆயிடுச்சு. ''சரி! அதையே மாற்றி இன்னொரு கதை சொல்லட்டுமா?'' என்று கேட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடனே பவ்யா, ''தாத்தா! முதல் கதையில், காக்கா ஏமாந்தது. அடுத்த கதையில் காக்கா புத்திசாலியா நடக்கவே, நரி ஏமாந்துப் போச்சு. அதுவும் எங்களுக்குத் தெரியும்!'' என்றாள்.

##~##

''அட! என்னங்கப்பா... உங்களோடு வம்பாப் போச்சு. சரி! இன்னொரு சின்னப் பாட்டி கதை சொல்றேன்'' என்றார் தாத்தா.

அதற்குப் பரத், ''எதுவா இருந்தாலும் சுருக்கமாகச் சொல்லுங்க. இல்லன்னா, நாங்க இடத்தைக் காலி பண்ணிடுவோம்'' என்று மிரட்டினான். ''சரி, சொல்றேன்'' என்ற தாத்தா, சொல்ல ஆரம்பித்தார்.

''குழந்தைகளா! ஒரு சின்னப் பாட்டி வடை சுடத் தயாரானாங்க. அடுப்பு எரியலே. ஏன்னா... ஈர விறகு! பாட்டி ஊதாங்குழல் எடுத்து 'ஊ... ஊ’ ன்னு ஊதுனாங்க. ம் ஹூம்! அப்பவும் புகைதான் வந்துச்சு. அப்போ, மரத்து மேல வந்து உட்கார்ந்த ஒரு காகம், 'கா... கா’ எனக் கத்திச்சு. பாட்டிக்குக் கோபம்!

''ஏய்... திருட்டுப் பயலே! வடையைச் சுடறதுக்கு முன்னாடியே வந்துட்டியா? என் அக்கா மாதிரி நான் ஏமாறமாட்டேன். தெரிஞ்சுக்க'' என்றார் பாட்டி.

சின்னப் பாட்டியும் சூப்பர் காகமும் !

அதற்குக் காகம், ''பாட்டி... நிப்பாட்டு! நான்  திருட வரலை. ஹெல்ப் பண்ண வந்திருக்கேன்.  உன்னைப் பார்த்தா எனக்குப் பாவமா இருக்கு. இந்த மரத்துல காய்ஞ்சு போயிருக்கிற சுள்ளிக் குச்சிகளை ஒடிச்சுப் போடறேன். அதை அடுப்பிலே வைச்சுப்பாரு!'' என்றது. காகம் சொன்ன மாதிரி செய்தாங்க. அடுப்பு எரிஞ்சது. பாட்டிக்கு சந்தோஷம்!

''ஆஹா! திருட்டுத்தனத்தை விட்டுட்டு உழைச்சுப் பிழைக்க உனக்கு ஆசை வந்திருக்கு. வெரிகுட்! நான் எப்பவும் முதல் வடையைப் பிள்ளையாருக்கு வைப்பேன். இனிமே உனக்குதான்'' என்றபடி, வடையைத் தூக்கிப்போட்டார். அதைக் கவ்விக் கொண்ட காகம், ''உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைச்சது. மனசும் சந்தோஷத்துல நிறைஞ்சது'' என்று பாடியது.

இதை எல்லாம் ஒளிஞ்சு நின்னு பார்த்த நரி, 'என்னது உழைக்கறதா? சே!சே! இந்த வடை புளிக்கும்’ என்று சொல்லிட்டுப் போயிடுச்சு. கதை எப்பூடி?'' என்று கேட்டார் தாத்தா.

''சூப்பர்! கலக்கிட்டீங்க தாத்தா!'' என்றார்கள் பரத்தும் பவ்யாவும்.
 -க.பிரதீபா - (IX),
ஏ.கே.டி.அகாடமி மெட்ரிக் பள்ளி,
கள்ளக்குறிச்சி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism